மகாராஜா திரைப்பட விழாவில் நித்திலன், விஜய் சேதுபதியுடன் புஷ்பநாதன் படம் குறித்து இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம் கூறும்போது, “எப்போதும் காதலிக்கும் போது ஒருவருக்கொருவர் அவர்களது குறை நிறைகள் தெரியாது. பிளஸ் மட்டுமே தெரியும். ஈர்ப்புணர்வும் அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு சேர்ந்து இருக்கும் நேரம் அதிகம் என்பதால் அவர்களின் நிஜமான குணங்கள் தெரிய ஆரம்பிக்கும். பொருளாதார சமூக காரணங்கள் சேர்ந்து ஏதோ ஒரு விதத்தில் இருவருக்குமான ஈர்ப்பு குறைய காரணமாக அமைந்து விடும்.

இதை நான் லீனியர் பாணியில் சொல்லியிருக்கிறோம். இளைஞர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு புரிதல் கொடுக்கக்கூடிய கொண்டாட்டமான படமாக இது இருக்கும். இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் ஆகியோர் பாராட்டினார்கள். குறிப்பாக இயக்குநர் அமீர் ஒரு சில திருத்தங்கள் கூறியதுடன் இன்றைய சூழலில் குடும்பங்களுடன் பார்க்கக்கூடிய இதுபோன்ற ஒரு படம் தான் வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீஸை நோக்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தை வி & டோனி இன்டர்நேஷனல் மற்றும் கேபிள் சங்கர் எண்டர்டைன்மென்ட் சார்பில் லால் தேவசகாயம் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் உலகமெங்கும் வெளியிடுகிறார்கள்.
