தீபாவளி போனஸ் திரை விமர்சனம்

ரேட்டிங் 3 :5/ 5

கதை களம்

மதுரையில் உள்ள நிலையூர் என்ற கிராமத்தில் கைத்தறி நகரைச் சேர்ந்த கணவனும் மனைவியும் விக்ராந்த் (ரவி) ரித்விகா (கீதா)

இவரின் ஒரே மகன் சச்சின் (ஹரீஸ்) வாழ்ந்து வருகின்றனர்

விக்ராந்த் ,அந்த ஊரில் உள்ள கொரியரில் வேலை செய்கிறார் ரித்விகா, அங்கு ஒரு வீட்டில் வேலை செய்கிறார் மகன் பள்ளிக்கு போகிறான் ரித்திவிகாவின் கனவு .

எப்படியாவது தன் கணவருக்கு நல்ல ஹெல்மெட் வாங்கி தர வேண்டும் என்று எண்ணுகிறார் விக்ராந்த் தன் மனைவிக்கும் மகனுக்கும் தீபாவளி போனஸ் வாங்கி நல்ல துணி வாங்கி அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்

ஆனால் போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போனஸ் கொடுப்பது தள்ளிப் போகிறது அதே சமயம் ரித்விகா வேலை செய்யும் இடத்தில் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வந்து கணவனுக்கு ஹெல்மெட்வாங்க முயற்சி செய்து முடியாமல் போக  அந்த பணத்தோடு வீட்டிலிருந்த 600 ரூபாய் எடுத்துக் கொண்டு சென்று தீபாவளி பர்சஸ் செய்கிறார்கள்

மகன் கேட்ட ஷீவை வாங்கி தர முடியாமல் விக்ராந்த் கடைக்காரரிடம் கெஞ்சி வாங்கி வருகிறார்  அந்த காட்சி மனதை தொட்டது

அடுத்த நாள் போனஸ் ஸ்டிரைக்கால் வேலையும் போகிறது தன் நண்பன் செல்வம் அழைப்பால் மனைவியிடம் சொல்லாமல் துணி விற்கப் போகிறார் அந்த இடத்தில் போலீஸ் வந்து விக்ராந்தை கைது செய்து கொண்டு போகிறார் இதற்கு பிறகு என்ன நடந்தது?

கணவனை காணாமல் ரித்திகா தவிப்பது !

அப்பா இல்லாமல் மகன் அழுவதும்! என இடைவேளை வருகிறது அதற்குப் பின் நடக்கும் கதை உருக்கமாக இருக்கிறது

விக்ராந்த்

வி என்ற கதாபாத்திரத்தில் மனுஷன் செமையாக வாழ்ந்திருக்கிறார் மனைவி குழந்தைகளுக்கு தன்னால் எதுவும் வாங்கித் தர முடியவில்லை என்ற ஏக்கத்தில் கண்ணீர் கூட விட முடியாமல் மனதுக்குள்ளே பொங்குவதும் துணி விற்க போன இடத்தில் எதுவும் செய்யாத தன்னை போலீஸ் அழைத்து கொண்டு செல்லும் போதும்

தியேட்டரில் டிக்கெட் வாங்க ஹெல்மெட்டை கூவி கூவி விற்கும் போதும் மகனுக்காக ஷீ கடைக்காரரிடம் போய் கெஞ்சுவது

என அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்

போலீஸ் ஸ்டேஷனில் தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து மேஜை மீது வைத்து இது என்னுடைய பணம் அல்ல என்று சொல்லும் போதும் தன்னை மாட்டி விட்டவரிடம் பணம் வாங்க மறுப்பது என அந்த கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது

அவரின் டயலாக் டெலிவரி உடல் மொழி ரவி என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது

 ரித்விகா

படத்தின் ஜீவனாடி இவர்தான் 18 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார்

கீதாவாக சராசரி பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார் தன் கணவருக்காக ஹெல்மெட் வாங்க ஆயிரம் ரூபாய்க்காக கெஞ்சும் போதும் கணவனை காணாமல் இரவு முழுக்க தேடும்போது கணவனை ஓர கண்ணால் பார்த்து புன்னகை செய்வதும் உம் என்று இருக்காதே எல்லாம் சரியாகிவிடும் என்று கணவனுக்கு ஆறுதல் சொல்லும் பொழுது ரித்விகா நடிப்பில் மிளிர்கிறார்

ஒரு ஏழை குடும்பத் தலைவி எப்படி இருப்பாரோ அப்படியே சாந்தமாக அச்சு அசளாக பொருந்தி இருக்கிறார் ரித்திகாவுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

ஹரிஷ்

அடுத்து குழந்தை ஹரிஷ் இவர் சச்சின் என்ற கதாபாத்திரத்தில் ஒரு மாதம் மதுரை பாசை பேசி டிரைனிங் எடுத்து இருக்கிறார் நன்றாக நடித்திருக்கிறார் குழந்தையின் நடிப்பு வெல்டன்

பள்ளியில் ஆசிரியை எல்லோரும் தீபாவளிக்கு என்னென்ன புது துணிகள் எடுக்கப் போகிறீர்கள் என்னென்ன பலகாரம் உங்கள் வீட்டில் என்று கேட்கும் பொழுது சச்சின் எல்லோரும் சொல்வதைக் கேட்டு டேபிள் மீது பரிதாபமாக படுத்து இருக்கும் பொழுது மனது நமக்கும் கலங்குகிறது

எனக்கு ஏம்மா சச்சின்  சந்திரபோஸ் என்று பெயர் வைத்தீர்கள் என்று கேட்கும் பொழுது சுட்டித்தனம்

ஹரிஷ் அப்பா கணேஷ் அவரும் ஒரு வேடத்தில் வந்து நன்றாக நடித்து இருக்கிறார்

நடன இயக்குனர் நிஜார் ஷீ கடைக்காரராகவும் நடன இயக்குனராகும் நன்றாக நடித்திகிறார்

தயாரிப்பாளர்

 Production Company : Sri Ankali Parameswari Production

Producers : Deepak Kumar Tala

முதல் படம் நல்ல தரமான கதையாக இருக்க வேண்டும் நேச்சுரலாக இருக்க வேண்டும் என்று இந்த கதையை தேர்வு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் தீபக் டாலா இவர் அங்காளம்மன் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து நிறைய பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் அதோடு 3000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருகிறார் தீபாவளி சமயத்தில்தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து இந்த தீபாவளி வாரத்தில் தீபாவளி போனசை ரிலீஸ் செய்துள்ளார் இந்த படம் மிக பெரிய வெற்றியடையும்

ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக அவரை பாராட்டலாம

Director : Jeyabal

இவர் மதுரையைச் சார்ந்தவர் 13 ஆண்டுகளாக இயக்குனர் ஆவதற்கு போராடி இந்த படத்தை எடுத்திருக்கிறார் ஸ்டுடென்ட் ஆந்தம் என்ற ஒரு ஆல்பத்தை உருவாக்கி இதை 73 நாடுகளில் குழந்தைகள் இவரது ஆல்பத்தை பாடிக் கொண்டிருக்கிறார்கள்

எளிய மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் போராட்டத்தை எதார்த்தமாக சித்தரித்திருக்கிறார் தீபாவளி வந்து விட்டால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் படும் துன்பங்கள் கடனை வாங்கி குழந்தைகளை சந்தோஷப்படுத்த நினைக்கும் அவர்கள் கனவு பெரும் போராட்டமாக தான் இருக்கிறது அதை ஒரு கதையாக படம் பார்க்க நம்மை யும்சில காட்சிகளில் கலங்க வைத்து விட்டார்

விக்ராந்தையும், ரித்விகாவையும், சச்சினையும், சிறப்பாக நடிக்க வைத்து நல்ல இயக்குனர் என்று பெயரை தட்டிச் சென்றிருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

படத்தின் டயலாக் ரைட்டரும் இவர்தான் வசனங்கள் சிறப்பாக இருக்கிறது

Release Partner: Action and Reaction Jenish

ஜெனிஷ் அவர்கள் சின்ன திரைப்படங்களை தகுதியான திரையரங்கில் ரிலீஸ் செய்து வசூலுக்கு எந்த விதமான குறைவும் இல்லாமல் வாங்கி தருபவர் ஆடியோ ரைட்ஸ் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் ஓவர்சீஸ் வியாபாரம் என எல்லாவற்றிலும் உதவி செய்யும் நல்ல குணம் கொண்டவர் இந்த படத்தையும் மக்களிடம் சிறப்பாக  சேர்ப்பார் என்று நம்பலாம்

Music : Maria Jerald

தூத்துக்குடியை சார்ந்த மெரியா ஜெரால்ட்  இயக்குனரின் நண்பர் அதனால் இயக்குனர் கேட்டபடி அருமையான பாடல்களை இசை அமைத்து கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன் பாடும் அந்த பாடலும் ஓபனிங் பாடல் ஆன அந்தோணி தாசன் பாடலும் அக்ஷயா பாடிய எங்கோ போனாயோ என்ற பாடலும் மிகவும் ரசிக்க வைக்கிறது பின்னணி இசையும் சில இடங்களில் அமைதியாகவும் சில இடங்களில் உருகவும் வைக்கிறது இசையமைப்பாளருக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது

இவரே பாடலும் எழுதி இருக்கிறார் சிறப்பாக இருக்கிறது இவரோடு மகா எழுதிய பாடலும் ரசிக்க வைக்கிறது

DOP : Gautham Sethuram

ஒளிப்பதிவு படத்திற்கு மிக்க பலமாக வந்திருக்கிறது எதார்த்தமான கதையில் இயல்பை மீறாமல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் இரவில் மதுரை அழகையும் இந்த ரயில்வே பாலத்தையும் காட்டும் போதும் ரித்விகா ,விக்ராந்த் வீட்டை காட்டும் போதும் எல்லா இடங்களிலும் கேமரா பளிச் என்று இருக்கிறது துணிக்கடையில் பெரும் கூட்டத்துக்கு இடையே சிறப்பாக ஒளி பதிவு செய்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

அவருடன் உதவி கேமிரா மேன் ஆக செயல் பட்ட சதீஷ்குமாருக்கும் வாழ்த்துக்கள்

Editor : Parthiv Murugan

படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது கதையை விட்டு வேறெங்கும் செல்லாமல் பட தொகுப்பில் சீரான வேகத்தை காட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் லெனின் அவர்கள் உதவியுடன்

முருகன் அவர்கள் சிறப்பான படத்தொகுப்பு கொடுத்திருக்கிறார்

Art Director: Arun & DB Team

ஆர்ட் டைரக்டரின் பங்களிப்பு நன்றாக இருக்கிறது கொரியர் ஆபீஸ் மற்றும் அந்த மக்கள் கூடும் அந்தக் கடைகள் சினிமா திரையரங்கில் பேனர்கள் ரசிகர்கள் ஆரவாரம் இப்படி எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் பங்கு நன்றாக இருக்கிறது

Costume Designer: Jeyabal J

இயக்குனரே காஸ்ட்மராக பணி புரிந்திருக்கிறார் எல்லோருக்கும் கச்சிதமான ஆடை வடிவமைப்பு எந்த இடத்தில் எதார்த்தத்தை மீறாமல் எல்லோருக்கும் கவனமாக உடைகளை தேர்வு செய்து பார்ப்பதற்கு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்

Choreography: Nizhar Khan

நடன காட்சி அதிகம் இல்லை என்றாலும் ஓப்பனிங் பாடலி வரும் அந்தப் பாடலிலும் மற்றும் தீபாவளி இரவு என்று வரும் பாடல் காட்சிகள் நன்றாக நடன அமைப்பாளர் ஆக பணி புரிந்துள்ளார்

Makeup : Prashath

கதாபாத்திரங்கள் குறைவாக இருந்தாலும் ஒப்பனை நிறைவாக இருக்கிறது இயற்கையாக இருக்கிறது ரசிக்கும்படி இருக்கிறது

மக்கள் தொடர்பாளர்கள்

சுரேஷ் &தர்மா இவர் களுக்கு வாழ்த்துக்கள்

படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்று குறிக்கோள் உடன் செயல் பட்டு உழைத்து இருக்கிறார்கள்

மொத்தத்தில் இந்த தீபாவளி போனஸ் படம் எப்படி இருக்கிறது? எளிய மனிதரின் உணர்வுகளை தொட்ட

காக்கா முட்டை, கடைசி விவசாயி, போன்ற படங்களில் இந்த படமும் சேரும் எந்த இடத்திலும் சினிமா தனம் இல்லாமல்

ஹீரோ 5 பேரை அடிக்க முடியாது என்று இயல்பான சண்டைக் காட்சிகள் வைத்து படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் பாசிட்டிவாக காட்டி படம் முடியும் பொழுது 2000 ரூபாய்க்கு விற்கும் அந்த மோட்டார் சைக்கிள் பத்தாயிரம் ரூபாய்க்கு போகும் என்று கணவன் மனைவியும் கணக்கு போடும் அந்த வெகுளித்தனமும் ரசிக்க வைக்கிறது தீபாவளி போனஸ் நிச்சயமாக ரசிக்க வைக்கிறது நம் பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு சம்பவத்தை பார்த்தது போல் இருக்கிறது

இயக்குனர், தயாரிப்பாளருக்கும் ,பணிபுரிந்த அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்