லக்கி பாஸ்கர் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடிப்பில், சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லக்கி பாஸ்கர்’ மிகப்பெரிய வெற்றி பட்டியலில் இடம் பிடித்துள்ளது

படத்தின் கதைக்களம் துல்கர் சல்மானின் நடிப்பும் ஆர்ட் டைரக்டரின் கைவண்ணமும்
ஜீ வி பிரகாஷ் இசையமைப்பு bடைரக்டரின் அற்புதமான இயக்கமும் படத்தொகுப்பாளரின் புத்திசாலித்தனமான படத்தொகுப்பும் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது ஒரு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அந்த படம் நமக்குள் ஒரு உந்துதல் சக்தியை தர வேண்டும் ஒரு பாசிட்டிவான வைபை ஏற்படுத்த வேண்டும் அதை இந்த படம் ஏற்படுத்துகிறது நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள்

துல்கர் சல்மான். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் பாஸ்கர் என்பதால் அதை சுற்றி கதை நடக்கிறது.

தப்பை தப்பே இல்லாமல் தப்பு செய்தால் எப்படியும் தப்பிக்கலாம் என்ற வங்கி அதிகாரியின் கதை

ராம்கி அவருடைய கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது

துல்கர் மகனாக ரித்விக் நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிப்பால் நம்மைகவர்ந்திழுக்கிறார்

.. பாஸ்கரின் உலகம் மிகவும் நேர்மறையானவை,

தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக போராடும் ஒரு சாதாரண நடுத்தர வர்க்க வங்கியாளரான பாஸ்கரின் கதை
ஆரம்பக் காட்சிகளில் பணம் இல்லாமல் பாஸ்கர் பலரிடமும் அவமானத்தை சந்திக்கிறார் உறவுகள் ஏளனமாக பார்க்கிறார்கள் பணமில்லாமல் இங்கு வாழவே முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் பாஸ்கர்

அதன் பின்னர்
. அவர் ஒரு பெரிய அதிர்ஷ்டத்தை அடையும் போது, அவர் அதை ரகசியமாக வைக்க முடிவு செய்கிறார், இது எதிர்பாராத திருப்பங்களுக்கும் சவால்களுக்கும் வழிவகுக்கிறது
அது என்ன பாஸ்கர் லக்கி பாஸ்கராக மாறினாரா ?பணம் சம்பாதித்தாரா ?தன் குடும்பத்தை கரை சேர்த்தாரா? பணமில்லாமல் உதாசீனப்படுத்தும் இந்த உலகத்தை வென்று காட்டினாரா? என்பது தான் லக்கி பாஸ்கர்

வங்கிப் பின்னணியில் உருவாகும் இப்படம் வங்கியில் நடக்கும் மோசடிகளை தோலுரித்துக் காட்டுகிறது ஐயாயிரம் கோடி பத்தாயிரம் கோடி என்று கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போகும் சில நபர்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது

சனிக்கிழமை பணத்தை எடுத்துவிட்டு திங்கட்கிழமை பேங்கில் கொண்டு போய் வைப்பதால் அந்த இரண்டு நாளில் எவ்வளவு லாபம் ஏற்ற முடியும் பங்கு சந்தையில் எப்படி முதலீடு போட்டால் பணம் கிடைக்கும் என்பதை எல்லாம் துல்லியமாக காட்டுகிறது இப்படம்

படம் முழுக்க பாசிட்டிவ் வைபவ் பரவி கிடைக்கிறது
துல்கர் சல்மான் வரும் காட்சிகள் செம பாசிட்டிவாக இருக்கிறது

இப்படத்தில் துல்கர் சல்மான்,

லக்கி பாஸ்கராக அற்புதமான நடிப்பு வெளிப்படுத்துகிறார் அவர் நடை உடல் மொழி டயலாக் டெலிவரி படம் இல்லாமல் தவிக்கும் போதும் பணம் வந்த பிறகு தெனாவட்டாக அசால்டாக கையாளும் துணிச்சலும் அந்த கம்பீரமான பார்வையில் வெல்டன் சொல்ல வைக்கிறது

மீனாட்சி சவுத்ரி ,

படத்தின் நாயகி சுமதி என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் மனைவியாக நடித்திருக்கிறார் குடும்பத் தலைவியாக உறவுகள் தன்னை உதாசீனப்படுத்தும் போதும் கணவன் ஏதோ தவறு செய்கிறான் என்று தெரிய வரும்போது தட்டி கேட்பது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

ஆயிஷா கான், ஹைப்பர் ஆதி , ராஜ்குமார் காசிரெட்டி மற்றும் பி. சாய் குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர்

அனைவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கிறது கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார் 1990

காலகட்டத்தை நம்முள் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது கேமரா அருமையான ஒளிப்பதிவு

நவீன் நூலி படத்தொகுப்பு செய்து உள்ளார்

படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது காட்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக அருமையாக எடிட்டிங் செய்திருக்கிறார் துல்கர் சல்மான் தன்னைப் பற்றி சொல்லும் பொழுது மீண்டும் பின்னோக்கி சென்று அந்த காட்சிகளை விவரிக்கும் விதம் அருமை

அசல் ஒலிப்பதிவு செய்துள்ளார் வெல்டன்
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்

லக்கி பாஸ்கர் என்ற பாடல் மெலோடி பாடலும் அருமை பின்னணி இசை மிரட்டி இருக்கிறார் படத்தில் மிகப்பெரிய பலம் இசை

. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்
பாராட்டுக்கள் வெற்றி படமாக தந்ததற்கு

இந்தப் படம், செழுமையான காட்சியமைப்புகள் மற்றும் வசீகரிக்கும் ஒலிப்பதிவு ஆகியவற்றுடன் அழுத்தமான கதையை வழங்கி இருக்கிறது

ஹைலைட்ஸ்

[பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’ என்று திட்டமிடும் ஒருவர் தான் லக்கி பாஸ்கர் அவரின் வியூகங்கள்!
வியக்க வைக்கிறது

சமூகத்தால் விரட்டப்படும் ஒருவர் அதே சமூகத்தை ஏமாற்றும் கிரிமினலாக உருவாகும் ஒன்ஸ்மோர் ஒன்லைன்தான். ஆனால், அதில் தமிழகத்தின் ‘வொயிட் காலர் ஃப்ராடு’களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கும் டீட்டெய்லிங்… அசத்தல்!

படத்தின் பெரும் பலமும் பெரும் பங்குக் கைதட்டலும் குவிப்பவை… வசனங்களே! ’,?’, ‘, ஒரு வகையில ஒவ்வொரு வசனமும். ஒவ்வொன்றிலும் அவ்வளவு தந்திரம் இடையிடையே, ‘
கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்த முத்திரை பதிக்கிறார் நாயகி பெரிய விழிகள், பெரிய கன்னம், மருண்ட பார்வை… என்று முகமொழியிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுகிறார். தமிழ்த் திரைக்கு ஒரு புது ராணி! குடும்ப வரவு

அரசாங்க பணத்தை சூறையாடும் அசகாயத் தொழிலதிபர்கள், கறுப்பு பணத்தை ஒயிட் ஆக்கும் லாட்டரி, ‘மூன்று கார்களைகோவா கொண்டு செல்லும் புத்திசாலித்தனம் என… படத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கதாபாத்திரத்திலும் அத்தனை அசல்… அத்தனை அசத்தல்!

அறிமுகத் தோரணைகளுக்குப் பிறகு துல்கரிடம் ஒவ்வொரு கேரக்டரும் எப்படியும் ஏமாந்துவிடுவார்கள் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும், அது எப்படி என்பதில் கடைசித் திருப்பம் வரை சுவாரஸ்யம் சேர்த்து ‘லப்டப்’ எகிறவைத்திருக்கிறது ஸ்மார்ட் ஸ்கிரீன்ப்ளே! பிரமாண்ட செட் அசத்தல் லொகேஷன்கள் பழகிய முகங்கள் இல்லை… ஆனாலும் விதவித ஆங்கிள்களில், வித்தியாச வியூக்களில் கண்களை நிறைக்கிறது நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு.

மூளையை உஷாராக செய்யும் திரை கதை பாலீஷ் பேச்சுகள், பங்கு சந்தை போலித்தனம், கும்பலாக ஏமாற ஆள் சேர்ப்பது அல்லது கும்பல் இருந்தால் ஏமாறத் தயாராக இருப்பது, மெகதா வங்கி காட்டேரி வங்கி டீல் ஆட்டம்… எனச் செய்திகளும் சைக்காலஜியுமாகப் படம் நெடுக உண்மையின் பணவர்த்தனை

ஜீ வீ பின்னணி இசை… சேஸிங் ரேஸிங். படத்தின் பின்பாதியைப் பெருமளவு நிரப்பும் துல்கர் மீனாட்சி காதல் காட்சிகள், ஈரமும் ஈர்ப்புமாகப் பதிவாக்கி இருக்கிறது

ஏமாற்றியவனைப் போலவே, ஏமாற்றுபவனும் நிம்மதியாக இருக்க மாட்டான் என்று புரிய வைத்த, ‘படம்

தனுஷ் நடித்து வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
வெல்டன்

சாய்குமாரும் தனது கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் வலுசேர்த்துள்ளார்

1989 முதல் 1992 ஆம் ஆண்டுவரயிலான காலகட்டத்தில் கதை நடப்பதும், அதற்கு ஏற்றாற்போல் காட்சியமைப்புகள் இருப்பதும் நம்மை 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறது.

துல்கர் சல்மானின் நடிப்பு

விறுவிறுப்பான திரைக்கதை

சுவாரஸ்யமான காட்சிகள்

துல்கரின் அப்பா அண்ணன் கடைசியில் மகனுக்கு உதவும் அந்த காட்சிகள் செம

பணம் இருந்தால் அமெரிக்கா இல்லை செவ்வாய் கிரகத்தில் கூட ஈசியாக குடியேறலாம் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறது திரைக்கதை

மூளை மட்டும் சார்பாக இருந்தால் எப்போது வேண்டுமானால் ஜெயிப்பதற்கு நாம் தயாராக இருக்கலாம் என்ற பாசிட்டிவ் கதையை விறுவிறுப்பு குறையாமல் தந்ததற்காக பாராட்டலாம்

மொத்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக பார்த்து ரசிக்கலாம் இந்த “லக்கி பாஸ்கர்”-ஐ.

மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அவர்களுக்கும்
அப்துல் நாசர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்