🎥 கங்குவா 🦅விமர்சனம்

ரேட்டிங் 4-5/5

எதிர் கொள்வோம்…
எதிரியை கொள்வோம்…]👇🏾-👇🏾*
*Suriya (42’nd Film)
*Bobby Deol,
*Disha Patani,
*jagapathi Babu,
*Natarajan *Subramaniam,
*Yogi Babu,
*Redin Kingsley,
*kovai Sarala,
*Anandaraj,
*K. S. Ravikumar
and also Joined
Junior Artist/ Character Artist & other’s…

கங்குவா பிரமாண்டத்தின் உச்சம்

காட்டுக்குள் ரோமானிய படையெடுப்பு : 1070 களில் பெருமாச்சி , மலை கிராம மக்களுக்கு நட்டி செய்யும் துரோகம், என படம் ஆரம்பித்து…. நகரத்தில் 2024 ல் பிரான்சிஸ் சூர்யா என்று என இரண்டு வெவ்வேறு கதாபாத்திரத்தில் நூற்றாண்டில் கதை நகர்கிறது. சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்

பிரான்சிஸ் ஒரு பவுன்ட்டி ஹன்டர். 1070ல் இருக்கும் சூர்யா ஒரு பழங்குடியின போர்வீரன். அவரை காட்டும் போது தூய தமிழில் விவரிக்கிறார்கள். 1070ல் இருந்த 5 கிராமங்களை பற்றி காட்டுகிறார்கள்.

இரண்டு கதைகளும் எவ்வளவு வித்தியாசங்கள் எவ்வளவு மேனரிசங்கள், வெளுத்து வாங்கி இருக்கிறார் சூர்யா

.டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார், பாகுபலி,
கே ஜி எஃப் என பிரம்மாண்டத்துக்கு ஹாலிவுட் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களை உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது. ” ” இதோ.. நம்மிடமே ஒரு அழுத்தமான அற்புதமான உதாரணம் படம் இருக்கிறது…

சூர்யா வின் கங்குவா இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனையோ மகா சாகசக் கதைகள் புதைந்து கிடக்கின்றன. தோண்டத் தோண்ட கிடைக்கும் கதைகளுக்கு நிகராக எத்தனை அதியுச்சக் கற்பனைகளும் , அந்த அழுத்தமான நம்பிக்கைதான் இந்த கங்குவா “!
இதை உருவாக்கியவர் புரொடக்ஷன் டிசைனர் மிலன்
இயக்குனர் சிவா & டீம்

அவர்களுக்கு ஒரு சல்யூட்

கங்கு வா வில் இயக்குனர் சிவா காட்டியிருக்கும் பிரம்மாண்டம் கதையோடும் காட்சிகளோடும் இயல்பாகப் பொருந்திப் போவதால் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறோமே தவிர, பிரம்மாண்டத்தை மட்டும் தனித்துப் பார்க்க முடியவில்லை. உலகிலேயே பிரமாண்டமானது, அழகு மிக்கது இயற்கைதான். அந்த இயற்கையை குரூதி கலந்து நெருக்கமாக நெருப்போடு
இன்னும் பேரழகுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள் சிவாவும் அவரது ஒளிப்பதிவாளர் வெற்றி வேல் பழனி சாமி டீமும்

தாய்லாந்து அருவியை நேரில் பார்க்கும் போது கூட வராத ஆச்சர்யமும் ஆனந்தமும் இந்தப் படத்தில் கிடைத்தது. என்று சொல்லும் அளவுக்கு
இந்த பிரமாண்டமான நீர்வீழ்ச்சி, மற்றும் முதலையுடன் சண்டை காட்சி, என அந்த தாய்லாந்து காட்சிகள் ரசிக்க வைக்கிறது

கடல் சார்ந்த காட்சிகள், பிரம்மாண்டமான செட்டுக்கள் ,

காடுகள் , போர்க் கருவிகளும் ,போர்ப் படைகளும்,… ஒரு கால எந்திரத்தில் பயணித்து காலத்துக்கே போன உணர்வைத் தந்தன. எங்கும் சிறு பிசிறு கூட தெரியாத அளவுக்கு அத்தனை நேர்த்தியாக காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார்கள் ஏ.. அப்பா.. எத்தனை தத்ரூபமான ரத்தமும் சதையும் தெறிக்கும் மாபெரும் யுத்தகளம்! இந்தப் படத்தில் நடித்த யாரும் அந்தப் பாத்திரத்தை மீறி இம்மியளவுக்குக் கூட மிகையாக நடிக்கவில்லை.

சூர்யா, பாபி சன்டை காட்சிகள்

திசா பதானி கவர்ச்சிக்கு ,ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு காமெடி க்கு கருணாஸ் எமோஷனல் என ஒவ்வொருவருமே பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

திஷாபதானி அழகையும் கவர்ச்சி பாராட்டி இன்னும் நாலு பாரா எழுதலாம்.

ஒளிப்பதிவாளரின் தோளில் கைபோட்டுக் கொண்டே வேலை வாங்கியிருப்பார் போலிருக்கிறது இயக்குநர்.சிவா

காடுகள் மலைகள் மற்றும் மேகங்கள் சர்வதேச படப்பிடிப்பு என
ஒவ்வொரு காட்சியிலும், இப்படி ஒரு கோணத்திலும் இதைப் பார்க்க முடியுமா என்ற பிரமிப்பு மேலோங்குகிறது.

. 2. 34 மணி நேரப் படம்… ஆனால் ‘என்னங்க.. படம் அதுக்குள்ள முடிஞ்சிருச்சே… அந்த இன்னொரு பார்ட் காட்சிகளையும் சேர்த்தே ரிலீஸ் பண்ணிருக்கலாம்!’ என்று சிலர் அடித்த கமெண்ட்தான் இந்தப் படத்துக்குக் கிடைத்த உச்சபட்ச பாராட்டாக இருக்கும் என நம்புகிறேன். நூறாண்டு கண்ட இந்திய சினிமாவுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் இயக்குனர் சிவா

பாபி தியோல்

, எள்ளல் சிரிப்பிலும் கடுப்புப் பார்வையிலுமே நடித்து தன் இருப்பைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார். பாபி தியோல் அவர் கர்ஜிக்கும் கர்ஜனைகள் சிங்கத்துக்கு ஒப்பானவை தலையை சாய்த்து அந்த ஒற்றைப் பார்வையால் தன் கொடூரத்தை முழுவதுமாக வெளிகாட்டி அப்ளாஸ் வாங்கி இருக்கிறார்

சூர்யா

கங்குவா ,பிரான்சிஸ், என இரண்டு வேடங்கள் பிரான்சிஸ், வேடத்தில் செம துள்ளல், செம உற்சாகம் ,அதே போல கங்குவா கதாபாத்திரத்தில் மனிதநேயம் ,சின்ன குழந்தைக்காக தன் இனத்தையே பகைத்துக் கொள்ளும் அந்த கருணை மனம், இப்படி பல காட்சிகளில் நம்மை அசத்தி இருக்கிறார் சூர்யா. அவருக்கு அமைந்திருக்கும் கம்பீரமான வேடம். முகத்திலேயே கம்பீரத்தைக் காட்டுவதோடு வீரர்களை எதிர்கொண்டு கொல்லும் காட்சிகளிலும் ரசிக்கவைத்திருக்கிறார்.

கடைசி அரை மணி நேரம் சண்டைக் காட்சிகள் பரபரப்பாக இருக்கிறது கடுமையாக உழைத்திருக்கிறார் சூர்யா, அவருக்கு இந்த படம் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்
வீரம், கருணை, மனித நேயம், உற்சாகம் ,என மனுஷன் வாழ்ந்திருக்கிறார்

கார்த்தி

கடைசி ஒரு பத்து நிமிடம் வந்தாலும் மிரட்டி இருக்கிறார் மனுஷன் என்னமா நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் வெல்டன் கார்த்தி, இரண்டாவது பாகத்தில் செம மிரட்டல் ஆக இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது.

இடைவேளைக்குப் பிறகு வருகிற போர்க்காட்சிகள், இதுவரை வந்த போர்க் காட்சிகளின் உச்சம் என்று சொல்லுமளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சூர்யாவரும்போது ஒரே கைதட்டல் . இன்னொரு பக்கம

அப்பாவி கொடுவாவை கேடயமாக அந்த இன மக்கள் விரட்டும் போது
சூர்யா எடுக்கும் முடிவு உண்மையான வீரர்களுக்கான இலக்கணம். போர்க்காட்சிகள் நெருப்பில் இடையே நடப்பது போல் காட்டியிருப்பது, படத்தை தமிழுக்கு நெருக்கமாக்கிக் காட்டுகிறது.

கார்க்கியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன.

படத்திற்கு CG யும் கலர் கரெக்ஷன் சிறப்பு
இசை

டி. எஸ் .பி இசையில் உருவான பாடல்கள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் படத்தின் வேகத்துக்குத் தடைபோட வில்லை
பின்னணிஇசையில் அவர் திரைக்கதைக்கு இணையாகப் பயணித்திருக்கிறார் என்று சொல்லலாம்.
செம மிரட்டல் இசை

இயக்குனர் சிவா

வீரம், கோபம் உள்ளிட்ட உணர்வுகளைக் காட்சியழகோடு சேர்த்துக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் மையக்கதை புதிதல்ல என்றாலும் காட்சிகள் வடிவமைப்பில் ரசிகர்களுக்குப் புதியஅனுபவங்களைக் கொடுத்திருக்கும் வகையில் படமாக்கப்பட்டள்ளதுது
ஒவ்வொரு காட்சியிலும்
கடும் உழைப்பை தந்திருக்கிறார் இயக்குனர் சிவா மூன்று வருட போராட்டம் இரவு பகல் பாராமல் உழைத்து தனது அருமையான இயக்கத்தின் மூலம் வெற்றி பெற்று இருக்கிறார்

இந்திய ரஷ்ய எல்லையில் மருத்துவ ஆய்வகத்தில் ரகசியமாக குழந்தைகளை வைத்து ஆராய்ச்சி ஒன்று நடப்பதும். இந்த ஆய்வகத்தில் ஜீடா என்கிற ஒரு சிறுவன் தப்பி கோவாவிற்குச் செல்வதும்.

காவல்துறையால் தேடப்படும் குற்றவாளிகளை பிடித்து தரும் பவுண்டி ஹண்டர்களாக ஸ்டைலான என்ட்ரி கொடுக்கும் சூர்யாவும் திஷா பதானியும். இயக்குனர் கற்பனை சுவராஸ்யமான பகுதி .

இந்தியாவில் படையெடுக்க முடிவு செய்யும் ரோமானியர்கள் தங்கள் படைகள் ஓய்வெடுக்க ஐந்தீவை தேர்ந்தெடுப்பதும்

பெருமாச்சி , அரத்தி , வெண்காடு , மண்டைக்காடு , என ஐந்து இனமக்கள் வாழ்ந்து வரும் தீவு ஐந்தீவு. பெருமாச்சி தீவில் வசிக்கும் மக்களை கொன்று நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிடும் ரோமானியர்கள் படையெடுப்பு செம விறுவிறுப்பான பகுதி
இப்படி ஒவ்வொரு பகுதிகளையும் பிரித்து பிரித்து படத்திற்கு பிரம்மாண்டத்தை சேர்த்திருக்கிறார்கள்

இயக்குனர் சிவா அவருக்கு பாராட்டுக்கள் .

படத்தொகுப்பில் காட்சிகளை கோர்வையாக வழங்கி பெருமைப் படுத்தியுள்ளார் எடிட்டர்

படத்தின் ப்ரோடக்‌ஷன் டிசைனர் மிலன் மற்றும் அவர் மனைவிக்கு தனி பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். சின்ன சின்ன பொருட்கள் முதல் ஆயுதங்கள் , கிராமம் என ஒரு முழு உலகத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் இசையும், ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் , ஆர்ட் டைரக்டரின் அர்ப்பணிப்பு, சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தரத்தின் வித்தியாசமான ஐடியாக்களும், படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது

இயக்குனர் சிவா அவர்களுக்கும், இந்த கூட்டணிக்கும் வாழ்த்துக்கள்.

மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ் சந்திரா அவர்களுக்கும் , அப்துல் நாசர் அவர்களுக்கும், வாழ்த்துக்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தமைக்கு

மொத்தத்தில் இந்த கங்கு வா தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படைப்பு

Executive Producer: A.G. Raja
Studio Green CEO G. Dhananjeyan
Co-Producer: Neha Gnanavelraja
Produced by : K.E. Gnanavelraj
Studio Green CEO G. Dhananjeyan
Co-Producer: Neha Gnanavelraja
Produced by : K.E. Gnanavelraja | Vamsi-Pramod
Banner : Studio Green | UV Creations

அனைவருக்கும் வாழ்த்துக்கள் படத்தை வெற்றி படமாக தந்ததற்கு

தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படைப்பு “கங்கு வா “