இந்த ஆவணபடமானது. . காதல், திருமணம் உள்ளிட்ட நயனின் வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ளது
இந்த ஆவணப்படத்தில், நயன், விக் னேஷ் சிவன் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம்
படப்பிடிப்பில் உருவான காதல் கதையும் படமாக்கப்பட்டிருக்கிறது, ,
நயன்தாராவும் அவரது அம்மாவும் கொண்டிருந்த பாசப்பிணைப்பையும்
நயன்தாரா அவரது அப்பா மீது கொண்டிருந்த அன்பையும்

இயக்குனர் சத்யன் அந்தி காடு நயன்தாராவை அறிமுகப்படுத்த அவரிடம் கேட்டபோது என்ன நடந்தது என்பதை பற்றியும்
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நடந்த காதல் சுவராஸ்யமான பகுதி நடிகை ராதிகாவும் பகிர்ந்திருக்கிறார்
மற்றும் இந்த ஆவணப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அவர்களும்
தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர் அட்லியும்
அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை வைத்து பில்லா படத்தை எடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தனும்
நயன்தாரா விக்னேஷ் சிவன் பற்றி அன்பான வெளிப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்
நயன்தாராவுக்கு பிடித்த உணவு அவர் என்ன சாப்பிடுவார்? விக்னேஷ் அவன் என்ன சாப்பிடுவார் என்பதெல்லாம் சுவாரசியமாக படமாக்கப்பட்டு இருக்கிறது
விக்னேஷ் சிவன் அம்மா காவல்துறை அதிகாரியாக இருக்கும் மீனாகுமாரி அவர்கள் நயன்தாராவை கட்டி அணைத்து அன்பைப் பொழியும் அந்த காட்சிகள் மகிழ்ச்சியாக இருக்கிறது

நயன்தாராவும் விக்னேஷ் சிவன் காதலிக்க தொடங்கிய போது ஊடகங்களில் வந்த மீம்ஸ்களை பற்றி விக்னேஷ் சிவன்
“நாகூர் பேட்டை பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு கிடைக்காதா என்ன?
என்று
கூறியது மிகவும் இயல்பாகவும் ரசிக்க தக்க வகையில்
படம் படமாக்கப்பட்டிருந்தது
திருமணத்தின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், இந்திய சூப்பர் ஸ்டார் சாருக் கான் ,
இசையமைப்பாளர் அனிருத், விஜய் டிவி தொகுப்பாளனி டிடி,
இயக்குனர் சத்தியன் அந்தி காடு,
என எல்லோரும் வந்து வாழ்த்தியது பெருமை தக்க தருணம்
ஐயா படத்திற்கு நயன்தாரா அவர்களை ஒப்பந்தம் செய்தது அது பற்றி கவிதாலயா பிலிம் சேர்ந்து இயக்குனர் கே பாலச்சந்தர் அவரது மகள் சொன்னதுஅந்த எபிசோடு மிகவும் நன்றாக இருந்தது
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் விக் னேஷ் சிவன் எப்படி நடந்து கொண்டார்
என்பதையும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இதுவரை பற்றியும் பேசியதும் ஒரு மதிப்பு மிக்க உரையாக இருந்தது

இயக்குனர் நெல்சன், விக்னேஷ் சிவன் மீது உரிமையோடு அன்பாக பேசியதுமிகவும் ரசிக்க வைத்தது
இப்படி எல்லாம் கலந்த இந்த நயன்தாரா திருமண நிகழ்ச்சி சூப்பர்
மிஸ் பண்ணிடாதீங்க அனைவரும் காணக்கூடிய வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது ரசிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கிறது உங்களை நிச்சயம் சந்தோசப்படுத்தும் மகிழ்ச்சி படுத்தும் தமிழ் சினிமாவின் பேரழகியாக திகழும் நயன்தாராவின் அற்புதமான இந்த தொகுப்பு ரசிக்க வைத்தது
நயன்தாரா
: தமிழ் சினிமாவில்
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்
.அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட பு
படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பேரழகி யாக இடம் பிடித்தார்
மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.
காதல் திருமணமாக விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த மாதம் 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா.
சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்த 20 சிவாச்சாரியர்கள் வேதமத்திரங்கள் முழுங்க திருமணத்தை நடத்தி வைத்தனர்.
ஆடம்பரம்மாக செய்யப்பட்ட திருமணத்திற்கு கோடிக்கணக்கில் நயன்தாராவுக்கு செலவாகியிருக்கும் என்று பேசப்பட்டு வந்தது
தற்போது
நெட் பிளிக்ஸில் வெளியாகிஇருக்கும் ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ ஆவணப்படத்தை ஏராளமான ரசிகர்களும், நல விரும்பிகளும் ரசித்து பார்க்கிறார்கள். இதில் . காதல், திருமணம் உள்ளிட்ட நயனின் வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், நயன், விக் னேஷ் சிவன் வாழ்வின் மகத்துவமான காதலை
கவித்துவமான முறையில் படமாக்கி இருக்கிறார்கள்
விக்னேஷ் சிவன் குழந்தைகளை கொஞ்சும் பொழுது அவரும் ஒரு குழந்தையாக மகிழ்வான தருணத்தில் இருந்தது மனசுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது
அனைவரும் காண வேண்டிய இந்த ஆவணப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பது உறுதி
மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ் சந்திரா சார் அவர்கள் அப்துல் நாசர் சார் அவர்கள்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களும் இயக்குனர் விக்னேஷ் அண்ணன் அவர்களும் பல்லாண்டு வாழ வாழ்த்தும் கிளாசிக் சினிமா🙏
.
