தூவல் திரை விமர்சனம் ரேட்டிங் 3-5/5

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைக்களம்

எதார்த்தமான மனிதர்களின் உணர்வுபூர்வமான நடிப்பாற்றல்

இந்த படத்தில் முடிவில் ஒரு சின்ன குழந்தை மூலம் மனித நேயத்தை பேசி இருக்கிறார் இயக்குனர் அவருக்கு நமது பாராட்டுக்கள்

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

ஊத்தங்கரை அருகே உள்ள ஆறுகள் சார்ந்த ஒரு கிராமம்
கிருஷ்ண கிரி அணையில் இருந்து சாத்தனூர் அணைக்குசெல்லும் நீர்வரத்து அதன் ஆற்றோர கிராமத்தில் நடக்கும் கதை
ஆறும் மீனும் தான் கதை களம்

அந்த கிராமத்தில் இளைஞர்கள் மீன் பிடி தொழில் செய்வதும் சிலர் சாராயம் காய்ச்சுவதும்

சிலர் பன்றிகளுக்கு வெடிகுண்டு வீசி அந்த பன்றியை அறுத்து சாப்பிடுவது

என்று வாழ்கிறார்கள் கிராமத்தில் எப்பொழுதும் இருக்கும் அந்த சாராயக்கடை அதனால் குடும்பம் அழியுது என்று இயக்குனர் சமூகப் பார்வையும் படத்தில் பேசி இருக்கிறார்

ஒரு சின்ன குழந்தை மீனுக்காக படம் முழுவதும் ஏங்குவதும் அதை வளர்க்கத்துடிப்பதும்
அப்படி படாத பாடுபட்டு கிடைத்த அந்த மீனை மீண்டும் ஆற்றிலே கொண்டு விடுவது என்ற மனித நேயத்தை பேசி இருக்கிறார் இயக்குனர்

மழை வரும் பொழுது அந்த கிராமமே ஓலை குடிசையிலும் மற்றும் சின்னஞ்சிறு வீட்டிலும் அவதிப்படுவதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்

ஆறும் மீனும் இவைகள் தான் கதைக்களம் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை இப்படி ஒரு கதை இருக்கும் என்பதே நமக்கு தெரியாது அந்த இயக்குனர் அந்த கிராமத்துக்கே சென்று ஒரு வாழ்வியல் சினிமாவை படமாக கொடுத்திருக்கிறார்

இந்த படத்தில் காதல் இருக்கிறது துரோகம் இருக்கிறது வாழ்வதற்காக துடிக்கும் அந்த இளைஞர்களின் போராட்டம் இருக்கிறது அதைக் கெடுக்க நினைக்கும் சகுனியும் ஒருவர் இருக்கிறார் ஏழைகள் உழைப்பை உறிஞ்சி அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் வனத்துறை அதிகாரியும் இருக்கிறார் இப்படி எல்லாம் கலந்து ஒரு கமர்சியல் படத்திற்கான எல்லா அம்சங்களையும் இந்த படம் தாங்கி வந்திருக்கிறது

40 விருதுகளை வாங்கி உள்ள இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி மலர்

இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வரும்பொழுது அதற்கு நாம் கொடுக்கும் ஆதரவு பல தமிழ் சினிமாவில் நல்ல படங்களை வருவதற்கு வழிவகுக்கும் அந்த வகையில் இந்த படத்தை உச்சி முகர்ந்து கொண்டாடுவோம் தூவல் தூண்டிலைப் போல அனைவரையும் தியேட்டருக்கு அழைத்து வரும் என்று நம்புவோம்

இப்படத்தை தயாரித்துள்ளது – சைகர் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்தை பாராட்டலாம் வாழ்த்துக்கள்

இப்படத்தில் தயாரிப்பாளர்

ராஜ்குமார் – ( சங்கர் – வன அதிகாரி )
வனத்துறை அதிகாரியாக மிரட்டலாக நடித்திருக்கிறார் மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருப்பதால் தாடி வளர்த்துக் கொண்டு பணத்துக்காக எதையும் செய்யும் கதாபாத்திரம் மிடுக்காகவும் மிரட்டல் ஆகவும் நடித்திருக்கிறார இனி அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும்

சிவம் – ( சிவம் – வில்லன் )

ஊருக்கு வெடி மருந்துகள் சப்ளை செய்யும் வில்லன் கதாபாத்திரம் நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார் எந்த வகையில் பணம் சம்பாதிப்பது என்று ஒவ்வொருவரிடமும் தெரிந்து கொண்டு அதற்காக முயற்சி எடுப்பதும்
கிளைமாக்ஸ் காட்சியில் தான் வைத்த வெடியால்
பல மீன்கள் செத்து மிதப்பது போல இவரும் அந்த ஆற்றில் விழுந்து இறந்து போவது
நல்ல படிப்பினை

மாஸ்டர் நிவாஸ் – ( குட்டி)

ஆரம்பத்தில் ஒரு மீனை பிடித்து அதை வளர்க்க நினைக்கும் இந்த குட்டி கடைசி வரை மீன்பிடிப்பதற்காக புழுக்களைத் தேடி அலைவதும் பின்னர் ஒரு மீன் கிடைத்தவுடன் கிளைமாக்ஸில் ஆற்றில் கொண்டு போய் விடுவது மனிதநேயமான காட்சி

இளையா ( இளையா – காதலன்)

இவர்தான் படத்தின் நாயகன் காதலுடன் டூயட் மீன்பிடிக்கும் போது சாகசம் என படத்தில் எதார்த்தமான நடிப்பை வழங்கி ரசிக்க வைத்திருக்கிறார்

ராஜ்வேல் ( மாமா )

கிருஷ்ணா ( கிருஷ்ணா ) என்ற வேடத்தில் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்
இயக்குனர் நடிப்பை நன்றாகவே நடித்திருக்கிறார்

மற்றும் கோபி அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் நிறைய பேர் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் அனைவரும் நண்பர்களாக கலாய்த்து கொண்டு மீன் பிடிக்கும் காட்சியில் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்

தொழில்நுட்ப கலைஞர்கள்:

கதை, திரைக்கதை, வசனம் ,இயக்கம் – ராஜவேல் கிருஷ்ணா.

இவர் விழா என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தை சார்ந்தவர்

வாழ்வின் எதார்த்தத்தை அருமையாக படமாக்கி இருக்கிறார்

பிரம்மாண்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்களை கொட்டி படத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஒரு அருமையான இதுவரை தமிழ் சினிமா காணாத ஒரு கதைக்களத்தை நம் கண் முன் கொண்டு வந்து வைத்திருக்கிறார் ஜீவன் உள்ள கதாபாத்திரங்கள் என்று அந்த கிராம மக்களின் வாழ்வியலை அழகாக படம் எடுத்துக் காட்டி இருக்கிறார் சிறந்த இயக்குனருக்கான விருதுகள் காத்திருக்கிறது

ஒளிப்பதிவு – S.A. தர்வேஸ்

இடி மின்னலுடன் வரும் அந்த காட்சியாகட்டும் ஆறு பெருக்கெடுத்து ஓடிவரும் காட்சியாகட்டும்
காதலன் காதலி பசுமையான இடத்தில் டூயட் பாடுவதும்

ஆற்றுக்குள் இளைஞர்கள் கலாய்த்தபடியே மீன் பிடிப்பது என எல்லா இடத்திலும் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது

இசை – படமாசதீஷ்

இவர் ஊட்டியை சேர்ந்தவர் இந்த படத்திற்கு எதார்த்தமான அருமையான இசையை கொடுத்திருக்கிறார் வேல்முருகன் பாடும் அந்த டூயட் பாடல் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது

எடிட்டிங் – ராம்கோபி

கச்சிதமான படத்தொகுப்பு படத்தை அடுத்து என்ன என்று சொல்லும் அளவுக்கு ஒரு வாழ்வியல் படத்தை அருமையாக செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர்

கலை – ஜெயகுமார்

ஆர்ட் டைரக்டரின் கைவனத்தில் அந்த சாரி கட்டுவது அதாவது மூங்கில்களை ஆற்றில் கட்டி மீன்களை அதற்குள் விளைவைக்கும் அந்த யுத்தி ஆர் டைரக்டரின் கைவண்ணத்தில் அழகாக அமைந்திருக்கிறது மற்ற எல்லா இடங்களிலும் அவரது கை வண்ணம் நன்றாக தெரிகிறது

பாடல்கள் – மோகன் ராஜா .

இரண்டு பாடல்கள் தான் என்றாலும் பாடல்கள் ரசிக்க வைக்கிறது

மக்கள் தொடர்பாளர் மனவை புவன்

இது தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி மலர் ஆடம்பரம் இல்லாத ஒப்பனை இல்லாத ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு அமைதியான வாழ்வியல் சார்ந்த கதைக்களம் இப்படி ஒரு கதை தமிழ் சினிமாவுக்கு புதிது 40 விருதுகள் வாங்கி உள்ள இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது நமது எண்ணம் வாழ்த்துக்கள்