*எனக்கு தொழில் ரொமான்ஸ்*தி ரை விமர்சனம
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்கியுள்ள
எனக்கு ரொமான்ஸ் தொழில் படத்தில் அசோக் செல்வன்
அவந்திகா நாயகியாகவும் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி
பக்ஸ்
உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்
. இப்படத்தை திருமலை தயாரித்துள்ளார்
*[அசோக் செல்வன்*
திரையுலகில் இயக்குனராக வரவேண்டும் என முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். இவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் அவந்திகா மிஷ்ரா வை கண்டவுடன் காதல் கொள்கிறார் அவந்திகா ஒரு மருத்துவமனை செவிலியராக பணிபுரிகிறார் அசோக் செல்வன் துணை இயக்குனராக பணியாற்றிய காண்டாமிருகம் என்னும் திரைப்படம் அட்டர்பிளாப் ஆகிறது
இதனால் ஒரு ஆட்டோக்காரன் அசோக் செல்வனிடம் சண்டைக்கு வர அவந்திகா அங்கு உதவி செய்கிறார் இந்த இடத்தில் அசோக் செல்வனுக்குகாதல் மலர்கிறது
அதை அவந்திகாவிடம் சொல்லப் போகும் பொழுது அவந்திகா எனக்கு அந்த எண்ணமே இல்லை நான் டெல்லி போக வேண்டும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று சொல்கிறார் உடனே அசோக் செல்வன் சோகத்தில் மூழ்கி விடுகிறார்
அந்த சமயத்தில் தன்னுடைய தோழியான சரண்யா கர்ப்பமாகி விடுகிறார் அதற்கு காரணம் அமெரிக்கா சென்ற காதலன் என்று அசோக் செல்வனிடம் சரண்யா சொல்லி அந்த கர்ப்பத்தை கலைக்க வேண்டும் நீ கணவனாக டாக்டரிடம் வரவேண்டும் என்று அழைத்துச் செல்கிறார் மருத்துவமனையில் சரண்யாவையும் அசோக் செல்வனையும் கணவன் மனைவியாக பார்த்த அவந்திகாவின் தோழி பானு, அவந்திகாவிடம் சொல்ல அதன் பிறகு இருவர் காதலும் பிரேக் ஆகிறது
அதன் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ?
அசோக் செல்வனின் இயக்குனர் கனவு நிறைவேறியதா ?
அவந்திகா டெல்லி சென்றாரா? அல்லது சென்னையிலே தங்கி அசோக் செல்வனை காதலித்தாரா?
சரண்யாவின் அமெரிக்க சென்ற காதலன் சென்னைக்கு திரும்பி வந்தாரா? அசோக் செல்வனின் காதலை காப்பாற்றினாரா?
அசோக் செல்வனின் அம்மா ஊர்வசியும் அப்பா அழகம் பெருமாளும் அசோக் செல்வனின் காதலிக்கு திருமண அனுமதி கொடுத்தார்களா? அல்லது மறுத்தார்களா?
இப்படி பல கேள்விகளுக்கு இடைவேளைக்குப் பிறகு பதில் சொல்கிறது இந்த படம் .
படம் முழுக்க இடைவெளி இல்லாமல் காமெடியால் கலகலப்பாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் அவருக்கு வாழ்த்துக்கள்
[: *அவந்திகா*
[
: அழகான தேவதையாக காட்சி தருகிறார் அவர் வரும் காட்சிகளில் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பது போல அவருடைய ஒப்பனை ஆடை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது
குடும்ப பொறுப்புகளை உணர்ந்த நல்ல செவிலியராக வருகிறார்
காதல் காட்சிகளில் கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பாடல் காட்சிகளில் ரம்யமாக தெரிகிறார்
கிளைமாக்ஸ் காட்சியில்
அசோக் செல்வனுக்கு முத்தக் காட்சியில் வெளுத்து வாங்கி இருக்கிறார் அவந்திகா
[ *ஊர்வசி*
ஊர்வசி வரும் காட்சிகள் அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது கலகலப்புக்கு ஊர்வசி என்று சொல்லலாம் அசோக் செல்வனின் அம்மாவாக வந்து நன்றாக நடித்து பெயரை தட்டி செல்கிறார்
: அதேபோல படவா கோபி, அழகம்பெருமாள், மற்றும் பக்ஸ், இவர்கள் நடிப்பும் கலகலப்பாக ரசிக்க வைக்கிறது
இசை நிவாஸ் கே பிரசன்னா
பின்னணி இசை படுத்துள்ளலாக இருக்கிறது பாடல்கள் ரசிக்க வைக்கிறது
*இயக்குனர்*
கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பாலாஜி கேசவன் இவரின் காமெடி நன்றாக வருகிறது கலகலப்பாக படத்தைக் கொண்டு செல்ல இவரின் சிந்தனை சிறப்பாக இருக்கிறது
*கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு
கண்களுக்கு குளுமையாக இருக்கிறது
*ஜெர்மோ ஆலன் படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்
*ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன் அருமையாக வடிவமைத்திருக்கிறார் அவந்திகாவின் வீடு, கிளைமாக்ஸ் அந்த கல்யாண வீடு, பாடல் காட்சிகள் ,என அசத்தி இருக்கிறார்
*மோகன் ராஜாவின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது
*நடனம்: தஸ்தா
சிறப்பாக பயிற்சி கொடுத்திருக்கிறார்
*காஸ்டியூம் டிசைனர் பிரவீன் ராஜா அவந்திகாவை அழகாக காட்டியிருக்கிறார்
அசோக் செல்வனுக்கு ஆடை வடிவமைப்பு அழகாக இருக்கிறது
அசோக்செல்வனின் தோழி சரண்யாவுக்கு ஆடை வடிவமைப்பு அம்சமாக இருக்கிறது மொத்தத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் காஸ்ட்யூம் டிசைனர் கன் கவர் உடைகளை கொடுத்திருக்கிறார் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது
*குப்புசாமி ஒப்பணையாளராக பணிபுரிந்து இருக்கிறார் எல்லோரையும் அழகாக காட்டி இருக்கிறார் படத்தில் வரும் அனைவரின் ஒப்பனையும் நன்றாக இருக்கிறது
*மற்றும் படத்தின் பணி புரிந்த டெக்னிஷுயன்கள்*
Audiography : G.Tharanipathy
Stills : D.Ramamurthy
VFX & DI : Kalasa Studios
Colourist : Raghuraman
SFX : Rajasekar.K
Designs : Navin Kumar
Production Executive : T.Ganeshan
PRO : Sathish AIM
Produced by : M.Thirumalai
VFX Producer : Narreshkumar Babu
என அனைவரின் பங்கும் சிறப்பாக வந்திருக்கிறது படம் இரண்டு மணி நேரம் கலகலப்பாக செல்கிறது மொத்தத்தில் ஒரு வெற்றிப் படத்துக்கான அறிகுறி இந்த படத்தில் இருக்கிறது
