பாராசூட் விமர்சனம்

ரேட்டிங் 4/5

இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் ‘பாராசூட்’. ‘குக்கு வித் கோமாளி’ புகழ் கனி. கிருஷ்ணா குலசேகரன், காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் கதையை ஸ்ரீவருண் எழுதியுள்ளார்.

தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இதன் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

குடும்பத்தில் நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் வெளியே செல்லும் கணவன் தொழிலில் ஏகப்பட்ட போட்டி இருக்கலாம்
அதை எல்லாம் விட்டுவிட்டு வீட்டுக்கு வரும் பொழுது மனைவி மீதும் குழந்தைகள் மீதும் அன்பாக இருக்க வேண்டும் அதிகாரம் செய்தால் கோபப்பட்டால் குடும்பம் என்ன ஆகும் என்பது தான் கதை களம்

கிஷோர் வருமானம் பத்தாமல் சிலிண்டர் போட்டுவிட்டு இருவது ரூபாய் டிப்ஸ் கேட்டதற்கு ஏன்டா இப்படி பிச்சை எடுக்கிறார்கள் என்று கேட்கிறார் வீட்டுக்காரன் அந்த கோபத்தில் வீட்டுக்கு வந்து குழந்தைகள்
மீது மனைவி மீது கோப படுகிறார்

குழந்தைகள்
பெயில் மார்க் வாங்கியதை கண்டு கோபப்படுகிறார்

பக்கத்து வீட்டு காளி வெங்கட் கார் நிறுத்த வரும்போது அவர் மீது கோபப்படுகிறார் இப்படி அவருக்கு கோபமோ கோபம் இதனால் எந்த விஷயத்தையும் சொல்லத் தயங்குகிறார் அவரது மனைவி லட்சுமி

காவல் நிலையத்தில் டி பிரமோஷன் ஆகி இருக்கும் கிருஷ்ணா மேலதிகாரியிடம் திட்டுகளை வாங்கிக்கொண்டு
குழப்பத்தில் வேலை செய்கிறார்

போலீஸ்காரன் மேல் கை வைத்ததற்காக பெரும்புள்ளியின் மகனின் பைக்கை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தது கஸ்டடியில் வைக்கிறார் இதனால் அவருக்கு மேல் அதிகாரியிடம் இருந்து நெருக்கடி வருகிறது

இந்த சமயத்தில் கிஷோர் கோபத்தால் குழந்தைகள் இரண்டும் வீட்டை விட்டு போக குழந்தைகளை தேடும் பொறுப்பும் அந்த பைக்கை தேடும் பொறுப்பும் கிருஷ்ணாவுக்கு வருகிறது பைக் கடத்தியவர்கள் பெங்களூர் பக்கம் சென்று விட அங்கு
தேடி பெங்களூருக்கு போகிறார்கள் கிஷோரும, கிருஷ்ணாவும்,
கணியும்,
காளி வெங்கட் டும்

அங்கு காவிரி நீர் பிரச்சனைக்கு கலவரம் நடந்து கொண்டிருக்கிறது அடுத்து என்ன நடக்கும் என்று கதை எதிர்பார்ப்பில் போய்க் கொண்டிருக்கிறது இப்படி ஒரு நல்ல கதையை கிருஷ்ணா தயாரித்திருக்கும் ஹாட்ஸ்டார் அவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்

சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்தோட்டம் உள்ள கதையாக இந்த வெப் சீரிஸ் வந்திருக்கிறது
[

Kishore as சண்முகம்
என்ற பெயரில் எடுத்திருக்கிறார் வீட்டுக்கு வீடு சிலிண்டர் சப்ளை செய்யும் சிலிண்டர் மேன் ஆக நடித்திருக்கிறார்

இவரைப் பற்றி யாராவது குறை சொன்னாலும் தவறாக நடந்தாலும் சுருக்கு என்று கோபப்படும் கதாபாத்திரம் தங்கள் குழந்தைகளை அளவுக்கு மீறிய தகுதிக்கு மீறிய பள்ளியில் சேர்த்துவிட்டு அதிக வாடகை கொடுத்து அள்ளல் படுகிறார்
இவரது குழந்தைகள் தவறு செய்து விட்டால் பிரம்பால் வெளு வெளு என வெளுத்து வாங்கிடுவார் இதனால் குழந்தைகள் அவரிடம் பயந்து நடுங்கி அருகில் வரவே அஞ்சுவார்கள் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் கிஷோர் வெளுத்து வாங்கி இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் மகனை கட்டிப்பிடித்து நான் தவறு செய்து விட்டேன் என்று அழும்போது கைதட்டல் பெறுகிறார்

Krishna Kulasekaran as Kiruba

இவர் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வருகிறார் அதே ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்து விட்டு டி ப்ரோமோஷனல் பதவி இறக்கம் செய்யப்பட்டு அங்கு இருக்கும் நடிகர் மாரிமுத்துவிடம் அவமானப்பட்டு அடங்கி நடக்கும் கதாபாத்திரம்

இவரது மனைவி ஒரு கன்னடத்துக்காரர் 8 வருடமாக குழந்தை இல்லாமல் மனைவி குழந்தைக்கு தாயாக இப்பொழுது இவருக்கு சில நெருக்கடிகள் வருகிறது இவர் பெரிய இடத்துப் பிள்ளையை பைக்கு பிடுங்கி ஸ்டேஷனில் வைக்கிறார் அதை இவர் பதவிக்கு ஆபத்தாக முடிகிறது அதே சமயம் குழந்தைகளுக்கு கிஷோரும், கணியம் வரும்பொழுது இரண்டையும் தேடி பெங்களூர் பயணப்படும் கதாபாத்திரம் *சிறப்பாக நடித்திருக்கிறார்

Kani as Lakshmi

கனி லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் குடும்பப் பெண்ணாக ஒரு மிடில் கிளாஸ் மனைவியை ஞாபகப்படுத்துகிறார் அருமையான நடிப்பு கணவனிடம் பயந்து நடுங்குவது குழந்தைகளிடம் பாசம் காட்டுவது குழந்தைகள் காணாமல் போனதும் துடிப்பது என நன்றாக நடித்துகிறார் அருமையான தேர்வு கிளைமாக்ஸ் காட்சியில் குழந்தைகளை கண்டவுடன் உருகி அழும் காட்சி மனதை கரையை வைத்து விடுகிறது

Kaali Venkat as Charles
காளி வெங்கட், கிஷோர், கனி இவர்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் இவருக்கு தலைக்கு விக்கு தயாரிக்கும் தொழில்

குழந்தைகள் காணாமல் போனதும் தானாக வந்து உதவுவது என நல்ல கதாபாத்திரத்தில் நெஞ்சில் இடம் பிடிக்கிறார்

Iyal as Rudra
இயல் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் சுட்டி குழந்தையாக படிப்பிலும் பாஸ் மார்க் வாங்குகிறார் நடிப்பிலும் பாஸ் மார்க் வாங்குகிறார் பட்டம் கேட்டு தன் அண்ணனை சேற்றில் விழ வைத்து கிஷோரிடம் அடி வாங்கி, வைப்பதும் பிறந்த நாள் என்று டூவீலரில் ரவுண்டு போகலாம் என்று ஆசை காட்டி சிரமப்பட வைப்பதுமாக இயல் ரசிக்க வைத்திருக்கிறாள் நல்ல நடிப்பு

Shakthi as Varun

சக்தி வருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அப்பாவுக்கு பயந்த பிள்ளையாக சுட்டித்தனம் செய்யும் சுட்டி குழந்தையாக நடித்திருக்கிறார் தவறு செய்து விட்டு அப்பாவிடம் பிரம்படி வாங்கிக் கொண்டு காலோடு மூத்திரம் போகும் காட்சியிலும் அப்பாவுக்கு பயந்து கொண்டு டூவீலரை தேடி பெங்களூருக்கு பயணம் செய்வதும் என சிறப்பாக நடித்திருக்கிறார்

Bava Chelladurai
பவா செல்லதுரை கணியன் அப்பா குழந்தைகளின் தாத்தாவாக நடித்திருக்கிறார் இவரும் குழந்தைகளை தேடி அலைவதுமாக சிறப்பாக நடித்திருக்கிறார்

இப்படி இந்த பாராசூட் வெப் தொடரில் நடித்திருக்கும் மாரிமுத்து, வேல்முருகன், இயக்குனர் ராசு ரஞ்சித் மற்றும் எல்லோரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

i: *Disney+ Hotstar Presents Hotstar Specials “Parachute”

இந்த வெப் சீரியஸை தயாரித்து இருப்பது சிறப்பு
நல்ல குடும்பப் பாங்கான தொடரை தயாரித்து இருக்கிறார்கள்

Produced by – Tribal Horse Entertainment

இராசு ரஞ்சித் இயக்கி
இருக்கிறார்

இவர் ஒரு சிறப்பான நேரத்திலும் நடித்திருக்கிறார்

குழந்தைகளை மையமாய் வைத்து பெற்றோர்கள் அன்பாக இருக்க வேண்டும் என்று இந்த சமுதாய நோக்கத்திற்கு தொடரை இயக்கியிருக்கிறார்

முதல் எபிசோடு கதையின் நாயகன் நாயகி அடிமைப்படுத்தி இரண்டாவது எபிசோடில் கிஷோரின் கோபத்தையும் குழந்தைகள் பயத்தையும், குடும்பப் பெண்கள் கணவன் கோபமாக இருந்தால் எதையுமேமனம்விட்டு பேச முடியாது என்பதை வலியுறுத்தி இயக்கி இருக்கிறார் மூன்றாவது எபிசோடு குழந்தைகள் காணாமல் போக அதன் பிறகு என்ன நடக்கும் என்றும் காவல் நிலையத்தில் நடக்கும் அமளி துமளி களை
காட்டி இருக்கிறார் நான்காவது எபிசோடில்
முப்பது லட்சம்
ரூபாய் மதிப்புள்ள பைக் கடத்தப்படுவதும் என செம பரபரப்பாக காட்டியிருக்கிறார்

ஐந்தாவது எபிசோட்டில் தமிழ்நாட்டுக்கும் பெங்களூருக்கும் தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தி குழந்தைகளும் பெங்களூர் பக்கம் போவதை போல் காட்டி கலவரம் ஏற்படுவதை காரணமாக காட்டி என்ன நடக்குமோ என்ற பீதி ஏற்படுத்தும் கடைசியில் ஒரு நல்ல ஒரு நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்
நல்ல ஒரு முயற்சி வாழ்த்துக்கள்

யுவன் சங்கர் ராஜாவின் மூன்று பாடல்களும் பின்னணி செய்யும் ரசிக்க வைக்கிறது

வருண் எழுதிய கதை சமுதாயத்திற்கு இன்று பெற்றோர்களுக்கு தேவைப்படும் விதத்தில் எழுதி இருக்கிறார்

ஓம் நாராயணன் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது இரவுக்குள் காட்டுக்குள் குழந்தைகளை வைத்து படமாக்கி இருக்கிறார் குழந்தைகள் நகரத்தில் அலைவதையும் நன்றாக படமாக்கி இருக்கிறார்

ரிச்சர்ட் கவின் படத்தொகுப்பு சீராக இருக்கிறது பரபரப்பாக கதை போகும் அளவுக்கு நன்றாக செதுக்கி இருக்கிறார்

ரம்யன் தான் ஆர்ட் டைரக்டர்
சிறப்பாக செய்து இருக்கிறார்
கிளைமாக்ஸ் கட்சியில் ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் சிறப்பாக இருக்கிறது

டேஞ்சர் மணி ஆக்சன் காட்சிகளுக்கும் பரபரப்பாக வடிவமைத்திருக்கிறார் கிளைமாக்ஸ் கட்சியெல்லாம் அவர் கைவண்ணம் நன்றாக இருக்கிறது

*மொத்தத்தில் பாராசூட் குடும்ப
தொடராக வந்திருக்கிறது
அனைவரும் ரசிக்கும் வண்ணம் வெற்றி தொடராக நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்