நடிகர்கள்
அபிராமி- சாவித்திரி என்ற கதாபாத்திரத்தில்
துப்புரவு பணியாளராக திருநங்கை தீக்ஷாவின் அம்மாவாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
தலைவாசல் விஜய் (நாதன்)
என்ற கதாபாத்திரத்தில் ஜாதி வெறி பிடித்த மனிதராக தன்னுடைய சமூகம் தான் பெரிது என்று வீண் ஜம்பம் பிடித்த வறட்டு மனிதராக வருகிறார்
ராஜாஜி – (அருள் ஜோதி)
என்ற கதாபாத்திரத்தில் அபிராமியின் முன்னாள் காதலராக வந்து நம் மனதில் இடம் பிடிக்கிறார்
அவர் வரும் காட்சிகள் எல்லாம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் ரசிக்க வைக்கிறது
கனிகா – (கெளசி)
ஒரு நேர்மையான புரட்சி பெண்ணாக பெண்களை
முன்னேற்றத் துடிக்கும் பெண்ணியவாதியாக ஓரிரு காட்சிகள் வந்தாலும் மனதை தொட்டுச் செல்கிறார்
ஷான் – (கதிர்)
கதிர் என்ற கதாபாத்திரம் இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக சமுதாயச் சாடல்களை தோலுரிக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது அவர் நடிப்பு அவர் பார்வை எல்லாமே அற்புதம்
கம்பீரமான பார்வை
கல்கி – (இஸ்மாயில் )
இஸ்மாயில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கல்கி கலக்கியிருக்கிறார்
பவித்ரா( லக்ஷ்மி – அனிதா)
சாதி வெறி பிடித்த அப்பாவுக்கு சவுக்கடி கொடுக்கும் வண்ணம் தான் விரும்பிய காதலனை தேடி செல்லும் இந்த கதாபாத்திரம் பெண் கள் பேச வைக்கிறது
அஞ்சலி நாயர் -( மதி)
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக தவறுகளை அனுசரித்து போகாத புரட்சி பெண்ணாக பொங்கி எழுந்து அவர் கொடுக்கும் தீர்ப்பு அவர் நடிப்பு எல்லாமே அஸத்தல் ரகம்
நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் அஞ்சலி நாயர்
PGS- மூர்த்தி
கந்து வட்டிக்காரராக வந்து தராராக பணம் வசூலிக்க அவர் எடுக்கும் முடிவால் படம் பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்து போகிறார்கள் சமூகத்தில் நடக்கும் இன்றைய சராசரி கந்துவட்டி கார்களை நிஜமாக பிரதிபலித்திருக்கிறார் பி ஜி எஸ்
அரோல் டி சங்கர் – சுப்ரமணி
தங்களுக்கு வாரிசு வரும் என்று எந்த எல்லைக்கும் போக துடிக்கும் வசதி படைத்த மனிதனாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் ரசிக்க வைக்கிறது ஒரு நடிப்பு
கதை களம்.
சென்னையில், கூவம் ஆற்றங்கரையில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கிருஷ்ணராஜாவால் ஆத்திரத்தில் சுடப்பட்ட 9 வயது தினேஷின் வாழ்க்கை சோகமாக முடிகிறது. போலீஸ் விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அடையாளம் காண முடியாமல் குழப்பம் ஏற்படுகிறது. கிருஷ்ணராஜா ஆற்றில் துப்பாக்கியை அப்புறப்படுத்துகிறார், ஆனால் சிலருக்கு அதன் கண்டுபிடிப்புகள் எதிர்பாராத விளைவுகளுடன் நிகழ்வுகளின் சங்கிலியை அமைக்கின்றன.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது
இயக்குனர் பிரசாத் முருகன் நான்கு கதைகளை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்
நான்கு கதைகளிலும் தனித்துவம் இருக்கிறது கதைகள் மனிதர்களின் உள்ளுணர்வு நாட்டம் எல்லாம் புதிய களம்
1, தனது மனைவியைவிட்டு விட்டு இன்னொருவனுடன் தொடர்பு கொள்ளும் ஹோமோ செக்ஸில் ஈடுபடும் கணவன்
வாரிசு வேண்டும் என்பதற்காக செய்யக்கூடாத தவறு செய்யும் மாமனார், மாமியார், இதைக் கண்டு ஒரு புரட்சி புயலாக அஞ்சலி நாயர் எப்படி பொங்கி எழுகிறார் என்பது ஒரு கதை
2 அடுத்து பரத், அவர் ஒரு மோசமான தவறை புரிந்து , சிதைவு மனம் மூலம் வருத்தத்தின் வாழும் கதை அவரை பின்தொடர்கிறது அவர் விரும்பும்மனைவி அனைத்தையும் இழந்த பிறகு உயிருக்கு போராடுவதையும் அதனால் தவறு செய்ய புறப்படுகிறார் பரத் என்று காட்டப்படுவதும் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒருவன் ஹீரோவாவதும் வில்லன் ஆவதுஎப்படி என்பதை காட்டும் கதை
3 அடுத்து
அதிகாரத்துவ போதையால் தலைவாசல் விஜய் ஜாதி வெறி பிடித்த குருட்டுத் துறவியாக
மனித உயிரைக் குடிக்க துடிக்கும் ஒரு கொலைகார தந்தையாக காட்டப்படுகிறார் இன்று நாட்டில் இது போன்ற கதாபாத்திரங்கள் இருப்பதை இயக்குனர் சூசகமாக உணர்த்தி இருக்கிறார்
நல்ல குடும்பத்திற்கு எதிராக நிறுத்துகிறது
அவர் கதாபாத்திரம்
– இதயத்தில் மனித மின்றி ஷான், மற்றும் தலைவாசல் விஜி,
இருவருக்கும்
காருக்குள் நடக்கும் அந்த உரையாடல் பல விஷயங்களை புட்டு புட்டு வைக்கிறது
காதல் செல்வாக்கால் தடுக்க அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது சமூகத்தின் ஒரு குற்றம். ஸ்கிரிப்டில் சொல் லபட்டிருக்கும்” ஆழ்ந்த கவலையளிக்கிறது முடிவு சோகமானது,
ஷான் என்னும் கதிருக்கு, அவர் தந்த தண்டனை
எப்போதும்
நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகள் மட்டுமே நமது விதியின் திறவுகோலை வைத்திருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார்
தலைவாசல் விஜய்
4 . நான்காவது கதை மிகவும் வித்தியாசமான நுழைவு, ” ஒரு கதைக்குள் ஒரு கதை, வேண்டுமென்றே முடிக்கப்படாதது, இந்த வித்தியாசமான விசித்திரக் கதைகளிலிருந்து, தீக்குளிக்கும் தீவனம்,
திருநங்கை தீக்ஷாவின் கதை
நான் கெட்டுப் போய் விட்டேனா ?அம்மா என்று அபிராமியிடம் அவர் அழும் பொழுது திருநங்கைகளுக்கு இந்த சமூகம் எப்படிப்பட்ட கட்டமைப்பை விதித்திருக்கிறது அவர்களை எந்த மனப்பான்மையில் பார்க்கிறது கடன் வாங்கிய அம்மாவுக்கு தண்டனை தர திருநங்கை தான் கிடைத்தாரா? என்ற கேள்வி எழுகிறது அவர்களுக்கான பாதுகாப்பு இங்கே எப்படி இருக்கிறது
என்று கேள்வி எழுப்பப்படுகிறது
நடு இரவில் சுகத்தை அனுபவித்து விட்டு பணம் கொடுக்காமல் தள்ளி விட்டு போகிறான் ஒருவன் திருநங்கையின் கூக்குரல் ஓயாமல் முற்றுகை இடுகிறது நம் காதுகளில்
நமது நாட்டின் ஒரு கட்டுக்கதையை உருவாக்குகிறார்கள்
திருநங்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதை உடைக்க விரும்புகிறார் அபிராமி அந்த எபிசோடு அருமையான படிப்பினையும் சமூக மாற்றத்தையும் கண் முன் காட்டுகிறது
: அனைவரும் திருநங்கைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது இல்லையென்றால் நாங்கள் ஒன்றும் இல்லை. என்று சொல்வது போல் ஆகிவிடும்” மனரீதியாக நலிவடையும்
அபிராமி, பரத், அஞ்சலி நாயர் ,
திருநங்கை தீக்ஷிதர,
தலைவாசல் விஜய்,
இவர்கள் கதாபாத்திரம் தினந்தோறும் நாம் தெருக்களில் அக்கம் பக்கம் வீடுகளில் பார்த்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் தான் அதனால் தான் நமக்கு மனதுக்குள் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது இந்த படத்தின் மீது
இதில் நடித்தவர்கள்
நடிப்பு, அவர்களது
உடல் மொழியால் அதிர்வூட்டும் விழிகளால் உணர்ச்சி பாவங்களின் முகபாவனையால் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கிறார்கள் ஆனாலும் படம் முழுக்க மனிதர்களின் வன்மம் ஆங்காங்கே திணிக்கப்படவில்லை ரத்தம் சதவீதமாக இறுகப்பற்றி நம்மை துவம்சம் செய்கிறது அதுதான் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி
இந்த சமூக கட்டமைப்பில் நீங்கள் கட்டுப்படுத்தப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படாமல் இருக்கலாம் – நீங்கள் பார்க்க வேண்டிய ஒன்று – மனிதம்
மனிதர்களை நேசியுங்கள் அன்பபை விதையுங்கள் என்பதை இந்த நான்கு ட்விலைட் சோன் எபிசோடுகள் உணர்த்தும்
மிகச் சிறந்தவை
அஞ்சலி நாயர் வாழ்க்கையில் நடக்கும் கதை ஒவ்வொரு கதையும் நம்மை பயமுறுத்தும் தொனியில் இயங்குகிறது, படம் முடிவடையும் வரை படிப்படியாக தீவிரத்தை அதிகரிக்கிறது . மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் நவீனமான முறையில் கருத்தரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிது,
நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார்
பின்னணி இசை நன்றாக இருக்கிறது பாடல்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது
. படத்தின் வசனத்தையும் பாடல்களையும் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்
வசனங்கள் பாராட்ட வைக்கிறது
படிப்பு பாடமாக இருக்க வேண்டும் படித்து முடித்த பிறகு அது பாலமாக இருக்க வேண்டும் என்பது
மகன் படுக்கும் இடத்தில் மாமனார் வந்து படுப்பானா? என்று அஞ்சலி நாயர் பேசும் வசனம்
கற்பு என்பது உடம்பில் இல்லை மனதில் இருக்கிறது என்று அபிராமி பேசும் வசனம்….
சாதியாவது மயிராவது …..என்று ஷான் பேசும் வசனம்….
போலீஸ்காரங்க பணத்துக்காகவும் பதவி இருப்பவர்களுக்கு பேசுவாங்க ஏழைகளுக்கு எப்பொழுது பேசியிருக்கிறார்கள் என்று ராஜாஜி பேசும் வசனம்……
கைதட்டல் பெறுகிறது
.ஹைபர் லிங்க் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் பிரசாத் முருகன
படத்தில் எல்லா அம்சங்களையும் சிறப்பாக கொடுத்து இருக்கிறார் கடன் வாங்கிக் கொண்டு தவிக்கும் ஏழை மக்களை பற்றியும்
நோய் வந்த பிறகு அதை காப்பாற்ற துடிக்கும் ஏழைகளின் மனநிலையும்
திருநங்கைகளை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும்
வசதி படித்தவர்கள் தங்களுக்கு வாரிசு வர வேண்டும் என்பதற்காக எத்தகைய தீங்கை செய்கிறார்கள் என்பதையும் அருமையாக படமாக்கி இருக்கிறார்
ஒளிப்பதிவு ; காளிதாஸ் மற்றும் கண்ணன்
படத்திற்கு தேவையான ஒளிப்பதிவு அழகாக படமாக்கி இருக்கிறார் பரத் வரும் காட்சிகளில் ஒரு டார்க் மூடு அஞ்சலி நாயக வரும் காட்சிகளை ஒரு பிசினஸ் அபிராமி வரும் காட்சிகளில் ஒரு அனுதாபம் இது எல்லாமே கேமரா அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது
படத்தொகுப்பு ; ‘ராட்சசன்’ புகழ் சான் லோகேஷ்
படத்தின் பலம் படத்தொகுப்பு தான் ஒவ்வொரு கதைக்கும் லிங்க் கொடுப்பது போல ஒவ்வொரு காட்சியும் நன்றாக வேலை செய்து இருக்கிறார் படம் விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
கலை இயக்குநர் ; நட்ராஜ்
ஆர்ட் கைவண்ணம் பல இடங்களில் பளிச்சென்று தெரிகிறது
சண்டைக்காட்சிகளில் சுகன் அசத்தி இருக்கிறார்
ஆடை வடிவமைப்பு ; ரிஸ்வானா
படத்தின் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற உடையை தேர்வு செய்து கொடுத்திருக்கிறார் பாராட்டுக்கள்
லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர்
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: KSK செல்வகுமார்
சிறப்பான நிர்வாகம் படத்தில் வேலு என்ற காவல்துறை அதிகாரியாக வந்து கலக்கி இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்
மக்கள் தொடர்பு ;; KSK செல்வா, மணி மதன்.
மக்களிடம் இருவரும் கொண்டு போய் சேர்த்ததற்காக இவர்களை பாராட்டலாம்
மொத்தத்தில் இந்த படம் திருநங்கைகளின் கனவுகளையும் அவர்களை வாழ விடாமல் செய்யும் மனிதர்களின் குணத்தையும் தங்கள் ஜாதி கௌரவத்திற்காக கொலை செய்ய துடிக்கும் சண்டாளர்களையும்
தோலுரித்துக் காட்டுகிறது
மக்கள் தொடர்பாளராக இருந்து தற்போது கேப்டன் ஆசியால் தயாரிப்பாளராக இருக்கும் எம்பி ஆனந்த் இன்னும் பல படங்களை தயாரித்து மேலும் உயர வேண்டும் என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது நிச்சயம் காண வேண்டிய படைப்பு இந்த படம்
