அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி
அடுத்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஏழாவது படமான “ஏழு மலை ஏழு கடல்”
படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நடைபெற்றது.
மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கின்றார்.
கற்றது தமிழ், பேரன்பு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி.
மேலும் இந்தப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலை வடிவமைப்பை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். மக்கள் தொடர்பு : A. ஜான்
தரமான படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்ற இயக்குநர் ராமின் இந்த புதிய படைப்பும் தேசிய விருதை வரவழைத்து தரும் என எதிர்பார்க்கலாம்
படத்தின் ரீலீஸ் தேதி யை விரைவில் அறிவிக்க உள்ளது படக்குழு படம் வெற்றி பெற கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது
