சூது கவ்வும் 2 (நாடும் நாட்டு மக்களும்) திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/ 5

மிர்ச்சி சிவா,, ஹரிசா ,ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரகு, யோகி, அருள்தாஸ், கல்கி ,கவி ,ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் சூது கவ்வும் 2 படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

இப்படத்தை திருக்குமரன் எண்டர் டெயிண்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி.வி. குமார், தங்கராஜ், தயாரித்திருக்கிறார்கள்.

2013ம் ஆண்டு நலன் குமாராசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், ஷில்பா ஷெட்டி நடித்து வெளியான திரைப்படம் சூதுகவ்வும்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் சூது கவ்வும் 2

சூது கவ்வும் முதல் பாகத்தின் இறுதியில் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கருணாகரன், இரண்டாம் பாகத்தில் நிதி அமைச்சராக 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்து வருகிறார்.

கோமாவுக்கு சென்ற சந்திரசேகர் மீண்டும் கண் விழிக்கும் பொழுது அங்கு நடக்கும் அட்டூழியங்கள் கண்டு பொதுச் செல்கிறார் இதனால் ராதாரவிக்கு சவால் விடுகிறார்

ஊழல் செய்து மட்டுமே நிதி அமைச்சராக இருக்கும் கருணாகரன் ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கிறார். அவரிடம் இருக்கும் பணம் ராதாரவி உடையது அதை எப்படி எடுத்துக் கொடுத்தார் என்பதுதான் திரை கதை ஜாலம்

முதல் பாகத்தில் எப்படி விஜய் சேதுபதி கடத்தல் தொழில் செய்து வந்தாரோ, அதே போல் இரண்டாம் பாகத்தில் தனக்கென்று சில கொள்கை, கோட்பாடுகளை கொண்டு கடத்தல் தொழில் செய்து வருகிறார் மிர்ச்சி சிவா.

அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் கருணாகரனை, மிர்ச்சி சிவா கடத்த, அதன்பின் என்ன நடந்தது? எதற்காக கருணாகரனை மிர்ச்சி சிவா கடத்தினார்? தனக்கு ஏற்பட்ட சிக்கலில் இருந்த கருணாகரன் எப்படி வெளியே வந்தார் என்பதே படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக வரும் மிர்ச்சி சிவா மற்றும் அவருடைய கேங்கில் இருக்கும் கல்கி, மற்றும் கவி செய்யும் நகைச்சுவை, சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது நகைச்சுவையை அழகாக வடிவமைத்து இருந்தார் இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன்.. திரைக்கதையும் ரசிக்கும்படியாக இருக்கிறது

அரசியல் குறித்து இடம்பெற்றிருந்த வசனங்கள்

நகைச்சுவை காட்சிகள் ரசிக்க வைக்கிறது

படம் சொல்லும் சேதி என்ன?

ஃபிராடுத்தனம் பண்றது ஈஸி இல்ல. அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும்.
என்பதை நகைச்சுவை உணர்வோடு சொல்கிறது

கார்த்திக் கே .தில்லை

ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ். ஒரு சாதாரண அறையில் ஆரம்பித்து… இருட்டறை வெள்ளை நிறத்தில் இருந்து என நெடும் பயணம் மேற்கொள்ளும் கேமரா… நன்றாகவே கலக்கி இருக்கிறது. காமெடிக்கு உடல் அசைவுகள், டயலாக் இவற்றோடு பின்னணி இசையும் .. ஹரி எஸ் ஆர் ஜோர்தான். அப்படி ஒரு மியூசிக்கை படைத்திருக்கிறார்
எட்வின் லூவிஸ்

நல்ல படம்னா… அது இப்படித்தான் இருக்கும்’ என்று இங்கே கல்வெட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் பழைய கணக்குகளையெல்லாம் உடைக்கிறது இந்தப் படம். பெரிதாக பேசப்படவேண்டிய கருத்துக்கள்… மனதைத் தொடும் சம்பவங்கள்… என்று எதுவுமே இல்லை. அதேபோல… கதையையோ, கதாபாத்திரங்களின் போக்கையோ எந்த இடத்திலும் யூகிக்கவும் முடியவில்லை. ஆனாலும், படம் முழுக்கவே ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

பஞ்ச்: மற்றும் திரைக்கதைதான் நிஜ ஹீரோ
பஞ்ச்: குடும்பத்தோட போங்க… குபீர்னு சிரிங்க!

அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மிர்சி சிவா. இதுவரை தான் நடித்த படங்களில் நாயகியைக் கட்டிப் பிடித்து நடிக்காத குறையை, இந்த படத்தில் நாயகியை மடியில் அமர்த்தி கொண்டே படம் முழுவதும் பயணித்து நிவர்த்தி செய்திருக்கிறார். மடியில் துள்ளும் அந்த நிழல் கேரக்டர்… சில நேரங்களில் போர் அடிப்பதையும் சொல்லியே ஆக வேண்டும்!

நேர்மையாக அரசியல் செய்ய வேண்டும் என்று சொல்லும் வாகை சந்திரசேகர்

மகன் நிதி அமைச்சர் ஆக இருந்து கொண்டு ஊழல் செய்வதை பொறுக்காமல் மகனுக்கு எதிராக நீதி சொல்லும் எம் எஸ் பாஸ்கர் இலவச ங்களை அள்ளி கொடுத்து முதலமைச்சரான ராதாரவி

சிவாவின் கைக்கூலியாக வரும் கல்கி மற்றும் கவி

இயக்குனராக வரும் அருள்தாஸ்

தேவராஜாக வரும் காவல்துறை அதிகாரி கராத்தே கார்த்தி

எல்லோரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வழங்கி இருக்கிறார்கள்

பாடல்களுக்கு எட்வின் லூவிஸ் விஸ்வநாதன் அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார்

அஸ்வின் படத்தொகுப்பு அழகாக பணி புரிந்திருக்கிறார் படம் விறுவிறுப்பாக செல்வதற்கு அவர்தான் காரணம்

வரதன் ,,ஆண்டிஸ், பார்த்திபன் பாடல்கள் எழுதி இருக்கிறார் கள்

படத்தில் நடித்திருக்கும் அனைவரின் காஸ்ட்யூம் கவனத்தை பெறுகிறது காஸ்ட்யூம் டிசைனராக ஸ்வேதா தங்கராஜ்

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள்
மக்களிடம் கொண்டு
படத்தை சிறப்பாக
சேர்த்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

அரசியல் குறித்து இடம்பெற்றிருந்த வசனங்கள், அதில் வந்த நகைச்சுவையை இயக்குனர் எஸ் ஜே அர்ஜுன் அழகாக வடிவமைத்திருந்தார். படத்திற்கு பலம் சேர்த்திருக்கும். திரைக்கதை தான். முதல் பாகம் வெற்றி பெற காரணமே அதில் இருந்த புதுமை, பின்னணி இசை

இந்த படத்தில் அது கொஞ்சம் மிஸ்ஸிங் என்பது உண்மைதான்

இருந்தாலும் சிவாவின் டைமிங் காமெடி, கருணாகரனின் சிறப்பான காமெடி,
கராத்தே கார்த்தியின் அசுரத்தனமான உழைப்பு

எம் எஸ் பாஸ்கரின் குணசித்திரநடிப்பு

இயக்குனரின் சாமர்த்தியமான திரைக்கதை எல்லாமே ரசிக்க வைக்கிறது நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் சூது கவ்வும் 2