* விடுதலை 2 விமர்சனம்*

ரேட்டிங் 4/ 5

விஜய் சேதுபதி யின் விஸ்வரூப நடிப்பு இப்படத்தில் வியக்க வைக்கிறது
தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

படத்தின் முதல் பாகம் எங்கு முடிந்ததோ, அங்கு இருந்து படம் தொடங்குகிறது. நிகழ்கால காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. அது விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிக்குள் செல்ல செல்ல . கதை மிகவும் ஆழமாக செல்கிறது
ஒரு கட்டத்தில் ஆர்வத்தை தூண்டும் வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது

விஜய சேதுபதி

பெருமாள் வாத்தியாராக படம் முழுக்க நிறைந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பள்ளியில் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் சாதாரண வாத்தியாராக தொடங்கி மக்கள் படை தலைவராக அவர் மாறுவதற்கான காலம் வரை நடிப்பில் தன் முதிர்ச்சியை காட்டியிருக்கிறார். கம்யூனிச பாதையை அவர் தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்த அந்த ஒரு சம்பவத்தை படத்தின் தொடக்கத்திலேயே காட்டி பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்கள்.

கென் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார்

நடிகர்கள் சூரி, மஞ்சுவாரியர், சேத்தன், ராஜீவ் மேனன்
போஸ் வெங்கட்,
கிஷோர், கௌதம் வாசுதேவ மேனன்,
இயக்குனர் பாலாஜி சக்திவேல், இளவரசு
என தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

கதை களம்

கருப்பன் மனைவியை பலாத்காரம் செய்யும் போஸ் வெங்கட்டின் அப்பா, இதனால் கருப்பன் கொதித்தெழுந்து, அவரை வெட்டி சாய்க்கிறார் தன் அப்பாவை கொன்ற கருப்பனை ஊர் மக்கள் முன்னால் அடித்து உதைத்து சாகடிக்கிறார் போஸ் வெங்கட்
இதனால் வாத்தியார் பெருமாள் கருப்பனுக்கு ஏற்பட்ட அநீதி கண்டு கொதித்தெழுகிறார்

விஜய் சேதுபதி நக்சலைட் ஆக மக்கள் போராளியாக மாறியதற்கான ஆரம்ப புள்ளி இது தான் இதற்குப் பிறகு மஞ்சுவாரியரை கண்டது,
எங்கெங்கு அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் தட்டி கேட்டு மக்கள் தலைவனாக உருவெடுப்பது, பிறகு ரயிலுக்கு வெடிக் குண்டு வைப்பது ,என படம் முழுக்க பெருமாள் வாத்தியாரை பற்றி
விரிவாக சொல்கிறது படம்.

சர்க்கரை ஆலையில் நடக்கும் பிரச்சனையில் மக்கள் பிரச்சனைக்காக போராடுவது ,

தோழர் கிஷோர் மரணத்துக்காக எல்லோரையும் வெட்டி சாய்ப்பது, என்று விறுவிறுப்பாக செல்கிறது

சூரி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதுவதாக கதை ஆரம்பிக்கப்பட்டு,
, தன் அம்மாவிடம் நான் உயிரோடு இருந்தால் வருகிறேன் என்று சொல்லி முடிப்பதாக கதை முடிகிறது
இது விடுதலை 3ம்பாகத்துக்கான லீடு

இயக்குனர் வெற்றிமாறன்

வெற்றிமாறன் இந்த படத்திற்காக நீண்ட பயணம் செய்து மக்களையும் மக்களுக்கு உண்டான தலைவரையும்
எப்படி காலம் உருவாக்குகிறது என்பதை துல்லியமாக படம் எடுத்திருக்கிறார் திராவிடம்,, தமிழ் தேசியம், கம்யூனிஸம்
மக்களுக்கான போராட்டம், சாதிய அமைப்பு, நிலசுவான்தாரர்களின் உழைப்பு சுரண்டல், ஊதிய உயர்வு அடக்குமுறை, மற்றும் பெண்ணிய சித்தாந்தம், என
அரசியலை வலுவாக பேசியுள்ளார்
இயக்குனர் வெற்றிமாறன்
படத்தில்
முழுமையான வசனங்களும் படத்தில் ஆழமான நடிப்பும் அருமையான படப்பிடிப்பும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது
துணைவன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது ‘விடுதலை’2 படத்தின் இரண்டாம் பாகத்தில்

முதல் பாகத்தில் மக்களுக்கு எதிராக அதிகார வர்க்கம் கிளப்பும் பிரச்சினைகளை எதிர்த்து மக்கள் படை தன் எதிர்ப்பை பதிவு செய்யும். மக்கள் படைத்தலைவரான பெருமாள் வாத்தியாரை பிடிப்பது காவல்துறைக்கு சவாலான விஷயமாக அமையும். அதைத்தாண்டி, பெருமாள் வாத்தியாரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தும். அதில் பெருமாள் வாத்தியார் தன்னைப் பற்றியும் மக்கள் படை பற்றியும் சொல்வதோடு முதல் பாகம் முடிவடையும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகமும் ஆரம்பிக்கிறது. அதாவது, இந்த பாகத்தில் மக்கள் படை உருவான கதை, கம்யூனிச பாதையை வாத்தியார் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? காவல்துறைக்கும் மக்கள் படைக்கும் நடக்கும் மோதலில் ஜெயித்தது யார்? பெருமாள் வாத்தியாருக்கு என்ன ஆயிற்று இது போன்ற கேள்விகளுக்கான பதில்தான் ’விடுதலை பாகம்2’.

“மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர் கதாபாத்திரம் ஆரம்பத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என களம் கண்டாலும் பெருமாள் வாத்தியாருடனான திருமணத்திற்குப் பிறகு குடும்பம், குழந்தை என சுருங்கி விடுகிறது அல்லது அவருக்கான அழுத்தமான காட்சிகள் குறைவு என்பது ஏமாற்றம். பட்டியலின மக்கள் மீது நடக்கும் வன்முறை, அதற்கு அவர்களது எதிர்வினை, பட்டியல் சாதியினர் உயர்சாதி பெண்களை காதலிக்கும்போது வைக்கப்படும் விமர்சனத்திற்கான பதில், அதிகார துஷ்பிரயோகம் போன்ற விஷயங்களை சமரசமில்லாத திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்.

இளையராஜாவுடைய பின்னணி இசையும், தெனம் தெனமும் பாடலும் இதம். ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும் சூழலுக்கேற்ப அவர்களுடைய மனமாற்றமும் காட்சிப்படுத்திய விதம் சுவாரஸ்யம். .
இந்த படத்தில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஆர்ட் டைரக்டரின் பணி, காஸ்ட்யூமர், ஒப்பனையாளர், என எல்லாமே கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

இந்த படத்தில் நடித்த நடிகையர்

:VijaySethupathi, Manju Warrier, Soori, Kishore, Bhavani Sre, Gautam Vasudev, Rajiv Menon, Bose Venkat, Vincent Ashokan, Anurag Kashyap, Ilavarasu, Balaji Sakthivel, Saravana Subbiah, Tamizh, Chetan, Aryan, Munnar, Ramesh, Pavel Navageethan, Sardar Sathya, Ken Karunas.

என அனைவரும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள்

இந்த வெற்றி படத்துக்காக சிறந்த முறையில் உழைத்த டெக்னீசியன் கள்

: Director : Vetri Maaran
Music Director : Ilaiyaraaja
Producer : Elred Kumar
Cinematography: R. Velraj
Basic Idea: ‘Vengaichami’ written by Thangam
Based on a Short Story : Jeyamohan
Editing : R. Ramar
Art Director : Jacki
Stunt : Stun Siva , Peter Hein, Prabhu Jacky
Lyricist (Poruthadhu Podhum) : Yugabharathi
Production Controller : SP. Chokkalingam
Executive Producer : G. Magesh
Co- Producer : V. Manikandan
Dolby Atmos Mix : T. Udaykumar
Sound Design : Prathap
VFX Head : R. Hariharasudhan
Colourist : Glen Castinho
DI : Infinity Media
Costumer : R. Muruganandham
Costume Designer : Uthara Menon
Make-Up : B. Raja
Stills : M. Baskar Prasanth
PRO : Suresh Chandra,
Abdul Nazar
என அனைவருக்கும் வாழ்த்துக்கள் விடுதலை 2 வெற்றி படமாக வந்துள்ளது

பெருமாள் வாத்தியார்
மக்களில் ஒருவர், மக்களின் தலைவர், எங்கெல்லாம் அநீதி மக்களுக்கு இழைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் ஒரு பெருமாள் வாத்தியார் உருவாவார்
பெயர் மாற்றம் இருக்குமே தவிர, அனைவருமே பெருமாள் வாத்தியார் தான் சமரசம் இல்லாத ஒரு நல்ல படைப்பை தந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கும், விஜய் சேதுபதி அவர்களுக்கும் ,சூரி அவர்களுக்கும், மஞ்சு வாரியார் அவர்களுக்கு, படத்தில் நடித்த அத்தனை நடிகர்கள் நடிகர்களுக்கும் டெக்னிஷீயன்களுக்கும் வாழ்த்துக்கள்