Cast: Upendra, Reeshma Nanaiah, Murali Sharma, Achyuth Kumar, Ravi Shankar
Director: Upendra
Producer: Manoharan – Sreekanth
Music: Ajaneesh Loknath
Banner: Lahari Films – Venus Enterrtainers
இயக்குனர் உபேந்திரா இந்த படத்தில் தைரியமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார்.
“UI ஒரு வித்தியாசமான படம்
தனித்துவமான கதை
எது நம்மைஇன்றைய உலகை அழிவின் பாதைக்கு அழைத்து கொண்டு செல்கிறது என்பதை உபேந்திரா கலைப்படைப்பாக கொடுத்திருக்கிறார் உண்மையிலும் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும்பஇந்திய சினிமாவில் வித்தியாசமான ஒன்றை நமக்கு கொடுத்து இருக்கிறார சில நேரங்களில் படத்தில் குழப்பம் நீடிக்கிறது பல இடங்களில் ஆச்சரியமாக இருக்கிறது
மேலும், படத்தின் பின்னணி இசை, காட்சிகள்,தொழில்நுட்ப அம்சங்கள் என ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் வகையில் உள்ளன. இப்படம் சிறப்பான படமாக உள்ளது.
இப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
உபேந்திரா இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘யு.ஐ’ சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் படமாக
உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்
இப்படத்தில், ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர்.
அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
கதை களம்
ஆதாம் ஏவால் ஆப்பிள் சாப்பிடுவதில் இருந்து படம் ஆரம்பித்து கல்கி அவதாரம் என்று பெயரில் ஊரை ஏமாற்றி பிழைக்கும் போலி சாமியார் வரை ஒவ்வொரு காட்சியிலும் தோலுரித்துக் காட்டுகிறது இப்படம்
வலுவான கதைக்களத்துடன் ஆரம்பிக்கும் படம் இரண்டாம் பாதியில் கதை அதன பிறகு வேறு ஒரு திரையில் செல்கிறது
படம் ஆரம்பித்த உடன் படத்துக்குள் ஒரு படம்
ரசிகர்கள் படம் பார்க்கிறார்
படம் ஒரு மாதிரியாக போகிறது
படம் பார்த்துவிட்டு வரும் ரவுடி தன் மனைவியை நண்பனுக்கே விட்டுக் கொடுக்கிறான்
கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலி கழட்டி கொடுக்கிறான்
செல்போனை கழட்டி கொடுக்கிறான் பணத்தை கொடுக்கிறான்
அடுத்து கணவனும் மனைவியும் படம் பார்த்து விட்டு வருகிறார்கள் மனைவி தன் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி கனவுடன் கொடுத்துவிட்டு இருவரும் சந்தோஷமாக விடை பெறுகிறார்கள்
அடுத்து இரண்டு பெண்கள் படம் பார்த்துவிட்டு வந்து இருவரும் ஒருவரை ஒருவர் ஆர தழுவி கொள்கிறார்கள்
இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது நாமம் என்ற படம்
நாமம் அடையாளத்தை தலைப்பாக கொண்டு திரைப்படம் ஒன்று வெளியாகிறது. அப்படத்தை பார்த்தவர்களில் பலர் உடனே மனமாற்றம் ஏற்பட்டு இயல்பை மீறி நடந்துகொள்வதுடன் மீண்டும் படத்தை பார்க்க செல்கிறார்கள்.
மற்றொரு புறம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கடுமையான போராட்டங்கள் நடக்கின்றன. பிரபல விமர்சகர் எப்படி இப்படத்திற்கு விமர்சனம் செய்வது என்று குழம்பி, படத்தை எடுத்த இயக்குநரையே பார்க்க செல்கிறார்
அங்கு இயக்குநர் எடுக்க நினைத்து வேண்டாம் என உதறிய கதை விமர்சகர் கையில் கிடைக்க, அதனை அவர் படிப்பது படமாக விரிகிறது. இறுதியில் விமர்சகருக்கும், நமக்கும் விடை கிடைத்ததா என்பதே இப்படத்தின் கதை.
வித்தியாசமான கதைகளை வித்தியாசமான கோணத்தில் படமாக எடுக்கும் உபேந்திரா இப்படத்தை இயக்கியுள்ளார். சமூகம், அரசியலை கலந்து சொல்லக்கூடிய டிஸ்டோபியன் ஜானரில் வெளியாகியுள்ள Ui படத்தின் பிரதான கதை எதார்த்த நடைமுறையை கிண்டலாக சொல்வது தான்.
ஏவால் ஆப்பிளை சாப்பிட்டதால் உலகம் எப்படி மாறியது என்பதில் இருந்து கதை தொடங்குகிறது. பின்னர் கல்கி அவதாரம் வந்துவிட்டால் அடுத்த கட்டத்திற்கு உலகம் எப்படி செல்லும் என கற்பனையாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
அதாவது கடவுள், சாதி, மதம் நம்பிக்கைகளால் மக்களுக்குள் எப்படி எல்லாம் பிரிவினை ஏற்பட்டுள்ளது என்பது காட்சிகள் வாயிலாகவும், வசனங்கள் வழியாகவும் கடத்தியிருக்கும் உபேந்திராவுக்கு ஒரு சல்யூட்.
ஆனாலும் கதை ஆரம்பிக்க சிறிது நேரம் பிடிப்பது அயற்சி. மக்களை வைத்து எப்படி அரசியல் செய்யப்படுகிறது என்பதையும், திரைப்படங்களில் அதையே காட்டி எப்படி பணம் பார்க்கிறார்கள் என்பதையும் தைரியமாக கூறியிருக்கிறார் இயக்குநர். விஷுவலாக பிரம்மாண்டமாக தெரியும் படத்தை அஜனீஷ் லோகேஷின் இசை தாங்கி நிற்கிறது.
திரைக்கதையில் மேஜிக் என படம்
ஜெயிக்கிறது Ui.
இருட்டு அறையில் இருந்து உபேந்திரா தப்பிக்கும் அந்த காட்சி விறுவிறுப்பாக இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத ஆட்களுடன் அவர் மோதுவது உண்மையிலேயே திகில் ஏற்படுத்துகிறது
கதை
திரைக்கதை
பிரம்மாண்டம
என எல்லாமே படத்தில் ரசிக்க வைக்கிறது நிச்சயமாக இது ஒரு பாராட்ட வேண்டிய புதுமையான படம் தான்
நாலு பைட்டு நாலு பாட்டு ஒரு டாஸ்மார்க் காமெடி என்று நீங்கள் எதிர்பார்த்தால் நிச்சயம் அது இந்த படத்தில் இருக்காது
வித்தியாசமான எதிர்கால சிந்தனை சமூக அக்கிரமங்களையும் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குனர் உபேந்திரா
நாயகியாக நடித்து இருக்கும் ரேஷ்மா நானையா, உபேந்திராவை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
அவர் வரும் காட்சிகள் க்யூட்டாக இருக்கிறது
நாயகன் உபேந்திரா
இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ஒருவர் நல்லவர் ஒருவர் கெட்டவர்
என்ன வித்தியாசமான படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் கேமரா மேன், அவரின் ஒளிப்பதிவு, இசையமைப்பு ,
ஆர் டைரக்டரின் உழைப்பு, ஒப்பனையாளரின் வடிவமைப்பு, இயக்கம், ஒப்பனையாளர், திரைக்கதை என எல்லாமே சிறப்பாக வந்திருக்கிறது
