அன்சன் பால், ரெபாஜான் மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், ராஜா, சுஜாதா பஞ்சு , வெற்றி வேல், கிஷோர் & மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்துள்ளனர்.
வித்தியாசமான காதல் படத்தை தந்த
தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்தப் படத்தில் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க
: படத்தின் கதை களம்
நாயகன்(அன்சன்) ஜீவா செபாஸ்டின் ஒரு கோடீஸ்வரரின் மகன்
வேலை வெட்டிக்கு போகாமல் நண்பர்களுடன் ஜாலியாக காலம் கடத்தி வருகிறார்
நாயகி ஐஸ்வர்யா(ரெபா) இவர் வெளிநாட்டுக்கு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்பது இவருக்கு கனவு
நாயகியை நாயகன் ஒரு மழை நாளில் பார்க்கிறான் அவள் மீது காதல் கொள்கிறான்
நாயகியிடம் காதலை சொல்லும் பொழுது எனக்கு வேற வேலை இருக்கிறது என்று நாயகி மறுக்கிறாள்
அதன்பிறகு நாயகன் ஜீவாவின் செயல், நடவடிக்கைகள் தன் தங்கைக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து காப்பாற்றிய அந்த உதவிய நல்ல எண்ணம், இவைகளை கண்டு நாயகிக்கு நாயகன் மீது காதல் வருகிறது
அந்தக் காதலை சொல்ல நினைக்கும் பொழுது ஒரு விபத்து நடக்கிறது .
அந்த விபத்தில் இருவரும் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் கள் .
அதன் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதைக்களம்
: : நாயகன் அன்சன் பால்
இவரது நடிப்பில் உருவாகியுள்ள 5-வது தமிழ் திரைப்படம்
“மழையில் நனைகிறேன்”
இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மழையில் நனைகிறேன்’.
அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் அன்சன் பால்
இடைவேளை வரை காதலிக்காக உருகுவது இடைவேளைக்குப் பிறகு காதலிக்காக மது உட்பட, எல்லாவற்றையும் தியாகம் செய்து, மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பது என நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் .
அப்பாவிடம் டீக்கடையில் பேசும் பொழுது அம்மாவை மிஸ் பண்ணுகிறேன் என்றுசொல்லும் காட்சியாகட்டும் …
மனைவி போடும் கண்டிப்பு கேட்டு அவரை தொடாமல் அழுது உருகும் காட்சியாகட்டும் …..
காதலி தன்னை விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டு
பைக் கண்ணாடி வழியாக
புன் சிரிப்பை உதிர்ப்பது ஆகட்டும்
உன் காதல் போதும் பாடலுக்கு அருமையாக நடனத்தை வழங்கி இருப்பதாகட்டும்
தான் சம்பாதித்த பணத்தை மனைவியிடம் கொடுத்து சந்தோசப்படும் போதும் பலவிதமான முகபாவணையில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது
தமிழ் சினிமாவில் இவருக்கு சிறப்பான ஒரு எதிர்காலம் இருக்கிறது
ஆஜானு பாகுவாக இருப்பதால் சண்டைக் காட்சிகளிலும் நன்றாக நடித்து இருக்கிறார்
சோகக் காட்சிகளும் அழுது நடிப்பதிலும் நன்றாக நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் அன்சன்
: நாயகி ரெபா
மேல் படிப்புக்காக யுஎஸ் என்று எம் எஸ் படிக்க வேண்டும் என்று விரும்புகின்ற கதாபாத்திரம் காதலன் காதலை சொல்ல வரும்போது எனக்கு அப்படி எனக்கு எண்ணமில்லை என்று சொல்லும் காட்சியாகட்டும் …
மெல்ல மெல்ல ஜீவா மீது காதல் வந்து பைக்கில் அமர்ந்து செல்லும் பொழுது அவரை தொடலாமா? தொடக்கூடாதா? என்று தவிப்பு காட்டும் காட்சிகளாகட்டும்….
இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க ஒரு கண்டிப்பு மிக்க மனைவியாக மாறி, கணவனை நல் வழிப் படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வைக்க துடிக்கும் மனைவியாக அருமையாக நடித்தி ருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் மழையில் காதலனுக்காக, உருகும் காட்சிகளும் மனதில் இடம் பிடிக்கிறது ரெபாவுக்கு சபாஷ் போடலாம்
ரெபோவுக்கு இது முக்கியமான படமாக இருக்கும், உள்ளுக்குள் காதல் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்
வாழும்போது சொல்லாத காதலை வாழ்க்கை முடிந்த பிறகு சொல்வதாக இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதம் தமிழ் சினிமாவுக்கு புதிது
நாயகன் ஜீவாவின் அப்பா ஜோசப் ஆக வரும்(மேத்யூ வர்கீஸ்) நடிப்பு நன்றாக இருக்கிறது நாயகியின் அப்பாவாக வரும் ராஜா நடிப்பு நன்றாக இருக்கிறது
நாயகனின் அம்மாவாக வரும் அனுபமா குமார் மகனுக்காக ஏங்கும் அந்த ஏக்கத்தில் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்
: அண்ணாமலையாக நடித்திருக்கும் வெற்றிவேல் நடிப்பு அருமையாக இருக்கிறது
நாயகனுக்கும், நாயகிக்கும், உதவி செய்யும் அந்த கதாபாத்திரம் அவர் நடித்த படங்களிலேயே இந்த படம் சிறப்பான படம் என்று குறிப்பிட்டு சொல்லலாம்
நாயகியின் தங்கை சுஜாதா பஞ்சு ,
நாயகனுக்கு உதவி செய்யும் நண்பராக வருபவர்
என எல்லோரும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்கள்
ரசிக்க வைக்கிறது இசை
விஷ்ணு பிரசாத் இசையில் ‘நாட்கள் அழகாய் மாறி போகுதே’ என்ற பாடலும்
“உன் காதல் போதும்”
பாடலும் மற்றும் பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது
சூப்பர் ஒளிப்பதிவு
கல்யான் ஒளிப்பதிவு அருமை
உன் காதல் போதும் என்ற பாடலுக்கு அருமையான லொகேஷனில் அருமையாக பாடலை படமாக்கி இருக்கிறார்
மற்றும் ஒரே ஷாட்டில் அனுபமா குமார் , வர்கீஸ் இருவரும் அவர்களது வீட்டில் மகனுக்காக ஏக்கத்தோடு பேசும் காட்சியிலிருந்து கேமரா அப்படியே மேலே வந்து இங்கே ஹவுசிங் யூனிட் வீட்டில் குடியிருக்கும் அன்சர், ரெபா இருவரும் பேசும் காட்சியை ஒரே ஷாட்டில் சிறப்பாக படமாக்கி இருப்பார் அற்புதமான ஷாட்
மற்றும் காதல் காட்சிகளுக்காக அவர் தேர்வு செய்யப்பட்ட லொகேஷன்கள் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
பாடல்களை அனுபவித்து படமாக்கி இருக்கிறார் காதலர்களை அழகாக காட்டி இருக்கிறார்
: கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சுரேஷ்
படத்தில் ரசிப்பதற்கு பல காட்சிகள் இருக்கிறது உதாரணத்திற்கு ….
நாயகி, காதலனிடம் காதலை சொல்ல தவிக்கும் காட்சி …
பைக்கில் செல்லும் பொழுது நாயகனை தொடலாமா? வேண்டாமா? என்று நாயகி, தயங்கி தயங்கி ,கையை கொண்டு செல்லும் காட்சி…..
தங்கள் காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்த பின் இருவரும் என்ன ஆவார்கள்? என்று எதிர்பார்ப்பை உண்டாக்கி அவர்களுக்கு ஒரு பாசிட்டிவ் வைஃபை உருவாக்கிய பல காட்சிகள்….
அனுபமா குமார் மகனை நினைத்து ஏங்கி உருகும் காட்சி
நாயகி குணமடைந்து நாயகனுக்கு
காதலை சொல்ல போன் செய்யும் காட்சி…
படத்தில் ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்று இயக்குனர் உணர்த்தியுள்ள காட்சிகள்
நாயகன், அப்பாவும் அம்மாவும்
நாயகனுக்கு திருமணம் செய்ய பேசிக் கொண்டிருக்கும் பொழுது நாயகனும்
நாயகியும் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல் திருமணம் செய்து கொண்டு அவர்கள் முன் வந்து நிற்கும் காட்சி
மணமக்களாக நாயகன் பெற்றோர் திகைக்கும் காட்சி
நாயகியின் காதலை உணர்ந்து விட்டுக் கொடுக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களை பெற்றவர்கள் ஏற்க மறுத்தாலும் நண்பன் அடைக்கலம் தந்து அவர்களுக்கு, வழிகாட்டியாக இருக்கும் அந்த காட்சிகள் ….
நாயகன் குடித்துவிட்டு வரும்பொழுது, நாயகி உன்னை குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை நீயாக எப்பொழுது விட்டு விடுகிறாயோ அப்பொழுது விட்டுவிடு என்று சொல்லும் காட்சி…
நாயகனிடம், நாயகி
சொல்லும் வசனமான
“இங்கே நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்களை மீட் பண்ணுவது தான் லேட்டாக ஆகிறது” என்று சொல்லும் காட்சி
நாயகனிடம்
அண்ணாமலை பேசும் வசனமான
“ஆயிரம் கார் வாங்குவாய் என்று நினைத்தேன் ஆனால் ஐயங்கார் வாங்கி வந்திருக்கிறாய்” என்று வெற்றிவேல் அண்ணாமலை பேசும் காட்சி ..
யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் கிளைமாக்ஸ் காட்சி
என பல இடங்களில் இயக்குனர் தன் முத்திரையை பதித்திருக்கிறார்
இடைவேளைக்கு பிறகு மாமுலான கதை தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில் இல்லை இது ஒரு வித்தியாசமான படம் என்று கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் முத்திரை பதித்திருக்கிறார் வாழ்த்துக்கள்
ஹேப்பி எண்டிங்காக முடித்து இருந்தாலும் படம் இன்னும் சிறப்பாக பேசப்பட்டிருக்கும்
படத்திற்கு வசனம் எழுதிய விஜி அண்ட் கவின் பாண்டியன் இருவருக்கும் வாழ்த்துக்கள் வசனங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது.
வெங்கடேசனின் படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது இருந்தாலும் ஒரு பத்து நிமிடங்களை குறைத்திருக்கலாம்.
காஸ்டியூமர் அருமையாக வடிவமைத்து இருக்கிறார்
பாடல்கள் எழுதி உள்ள
முத்தமிழ், மற்றும்
லலிதானந்த் இருவரின் வரிகள் ரசிக்க வைக்கிறது
மகேந்திரனின் ஆர்ட் டைரக்டர் பணி அருமையாக இருக்கிறது
ஹரியின், சன்டை பயிற்சியும்
ரமேஷின் ,நடன அமைப்பு
சிறப்பாக இருக்கிறது
கண்களுக்கு இதமாக ஒப்பனை செய்து இருக்கிறார் ரவி.
மக்கள் தொடர்பாளராக
சுரேஷ் சந்திரா அவர்கள்
அப்துல் நாசர் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
மொத்தத்தில் காதல் கதையை கொண்ட இந்த படம்
போல பல காதல் கதைகளைப் பார்த்திருந்தாலும் இது அதிலிருந்து வித்தி யாசமாக இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிப் பேசப்படுவதாக இருக்கிறது
மழைக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பு இருப்பதால் தானோ மழையில்
நினைகிறேன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
போல கவிதை தனமான தலைப்பு
மழையில் தொடங்கும் படம் மழையிலேயே முடிகிறது
ரசிகர்களின் ஆதரவு மழையும் இந்த படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்
அடிதடி சண்டைக்காட்சிகளை கொண்ட படங்களாக பார்த்த நமக்கு இந்த காதல் படம் ஒரு ஆறுதல்
