திரு.மாணிக்கம் திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/ 5

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம். நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்
படத்தின் பலம்
ஒளிப்பதிவு

கதை களம்

கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே இருக்கும் குமிழியில் லாட்டரி கடை நடத்தி வருகிறார் மாணிக்கம் (சமுத்திரக்கனி)
இவரின் மனைவி அனன்யா இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இரண்டாவது குழந்தை சரியாக பேச முடியாத தால் சிகிச்சை எடுத்து வருகிறார்கள் அதற்கு பணம் தேவை படுகிறது

பூம்பாறை கிராமத்தில் வசித்து வருபவர் இயக்குனர் பாரதிராஜா இவர் முதுமையில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்
இவரது மனைவி வடிவுக்கரசி இவர்களுக்கு ஒரு மகள் ரேஷ்மா ரேஷ்மாவை, திருமணம் செய்து கொடுத்த இடத்தில் வரதட்சணை கொடுமையால் வாட்டி வதைத்து பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் இப்போது ரேஷ்மா தாய்மை அடைந்து கணவனை பிரிந்து வாடுகிறார் மகளை காப்பாற்ற முடியவில்லை என்று பாரதிராஜா மனவருத்ததில் இருக்கிறார்

பாரதிராஜா குமிழிக்கு செல்லும் பொழுது சமுத்திரக்கனி கடையில் லாட்டரி சீட்டு வாங்குகிறார் அவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டு காணாமல் போய்விட காசு இல்லை இங்கேயே இருக்கட்டும் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு பாரதிராஜா போய்விடுகிறார் அந்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது

இப்போது அந்த லாட்டரி சீட்டு யாருக்கு சொந்தம் சமுத்திரக்கனிக்கா? இயக்குனர் பாரதிராஜாவுக்கா? இதுதான் கதைக்களம்
அந்த பணம் யாருக்கு சேர்ந்தது என்பதை
மனிதம் தேவை என
சொல்லி இருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி

சமுத்திரக்கனி

எந்தவித மனிதாபிமானமும் இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு இடையே வாழும் ஓர் எளிய மனிதராக சமுத்திரகனி. “இந்தப் படத்தில் நாயகனாக திரு.மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நேர்மையை மட்டுமே வலியுறுத்தி நடித்திருக்கிறார்

சாதாரண மனிதராக இருக்கும் மாணிக்கம் என்பவர், எப்படி மரியாதைக்கு உரியவராக, திரு.மாணிக்கமாக மாறுகிறார் என்பதை யதார்த்தமான காட்சிகளோடு திரையில் தன் நடிப்பின் மூலம் காட்டி இருக்கிறார்

, ‘திரு’ என்ற அடையாளத்தை அடைவது அவ்வளவு எளிதான காரியம் இல் லை அதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும் அந்த நல்ல மனதுக்கு சொந்தக்காரராக சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார்.

“ஒருவர் செய்யும் செயல், வாழும் வாழ்க்கையின் மூலமாகத்தான் அந்த அடையாளம் கிடைக்கும் என்றும் ஒவ்வொரு தனி மனிதனும் தன் பெயருக்கு முன்னால் ‘திரு’ என்ற அடையாளத்தை சேர்த்துக் கொள்வதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தன் கதாபாத்திரத்தின் மூலம் உணர வைத்திருக்கிறார் விருதுகள் காத்திருக்கிறது”.

“பணம், பொருள், செல்வாக்கு ஆகியவை ஒரு மனிதனை மரியாதைக்கு உரியவராக மாற்றாது. பணம் என்பது பாதை மாதிரி என்றால், மரியாதை என்பது வெளிச்சம் போன்றது. வெளிச்சம் இல்லாத பாதையில் பயணம் செய்ய முடியாது.என்பதை இப்படத்தில் நிரூபித்து இருக்கிறார்

சமுத்திரக்கனிக்கு அதிக வசனங்கள் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு படத்திலும் நிறைய கருத்துகளைப் பேசுவார் சமுத்திரக்கனி. ஆனால், இந்தப் படத்தில் அவருக்கு மொத்தமே அரை பக்க வசனங்கள் தான்

அதேசமயம் கொஞ்சமாகப் பேசினாலும் அந்த வசனங்கள் அழுத்தமாக இருக்கிறது
“கதைப்படி அவர் அதிகம் பேசமாட்டார். அவர் செல்லும் பாதை மட்டுமே பேசப்படும். தன்னைப் பற்றி அவர் எதுவும் பேசமாட்டார். ஆனால் மற்றவர்கள்தான் அவரைப் பற்றி அதிகம் பேசுவார்கள் என்று இந்த கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமாக உயர்ந்து நிற்கிறார்

அவர் ஏன் நேர்மையாக வாழ வேண்டும் என்று தன் இளைய மகளிடம் பிளாஸ்பேக் காட்சியில் சொல்லும் பொழுது நாசருக்கும் அவருக்கும் உள்ள அந்த பாசப்பிணைப்பு நெஞ்சை உலுக்குகிறது படத்தின் வெற்றிக்கு அந்த காட்சிகள் அடித்தளமாக அமைகிறது

அனன்யா

அனன்யா சமுத்திரக்கனி மனைவியாக ஒரு குடும்பத் தலைவியாக அருமையாக நடித்தி ருக்கிறார் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக தன் கணவனுக்கு கிடைத்த அந்த ஒன்றரை கோடி ரூபாய் தன் குடும்பத்துக்கு வர வேண்டும் என்று தன் தம்பியிடம் ஏவி விடுவது தன் பெரியப்பா இளவரசுவிடம் சொல்லி கெஞ்சுவது சமுத்திரக்கனியை இந்த லாட்டரி சீட்டு நம் வீட்டுக்கு கொண்டு வா என்று சொல்வது எல்லாம் பொறுப்பான ஒரு குடும்பத் தலைவியாக அருமையாக உணர்ந்து நடித்திருக்கிறார் அனன்யா

மற்ற கதாபாத்திரங்கள்

இயக்குனர் பாரதிராஜா

ஒன்று இரண்டு காட்சிகள் வந்தாலும் படத்தின் ஆணிவேராக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்

தம்பி ராமையா

லண்டன் ரிட்டன் ஆக வெளுத்து வாங்கி இருக்கிறார்

இளவரசு

அனன்யாவின் பெரியப்பாவாக வந்து ஷேர் மார்க்கெட், கிரிஸ்ட்டோ கரன்சி, இவர்களைப் பற்றி பேசி அனன்யாவுக்கு துணை நிற்கிறார்

நாசர்

இவர் சின்ன வயது மாணிக்கத்துக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் இவர் வரும் காட்சிகள் படத்தில் அவ்வளவு அழுத்தமாகவும் படத்திற்கு தேவையாகவும் இருக்கிறது நாசர் நடிப்பு அசத்தல்

சின்னிஜெயந்த்

சர்ச் பாதராக வருகிறார் நல்ல நடிப்பு

வடிவுக்கரசி

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மனைவியாக வந்து வயதான காலத்தில் அவருக்கு துணை நிற்கிறார்

சாம்ஸ்

சமுத்திரகனி இயக்குனர் இமயம் பாரதிராஜாவை தேடிச்செல்லும் பஸ்ஸுக்கு டிரைவராக வந்து செம காமெடி செய்திருக்கிறார்

ஸ்ரீமன்

இவர் யானையிடம் மாட்டிக் கொண்டு பஸ் டிரைவராக செம அலப்பறை செய்திருக்கிறார்

மற்றும் படத்தில் நடித்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்

இசை
: விஷால் சந்திரசேகர்

இசையில் பாடலும் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது

குணா வின் படத்தொகுப்பு படத்திற்கு கச்சிதமாக இருக்கிறது

ஆர்ட் டைரக்டர் ஷாகு

அருமையான செட் ஒர்க் செய்து இருக்கிறார்

எடிட்டர் சூப்பர்வைசர் ராஜா சேதுபதி

நன்றாக இருக்கிறது

ஜி சுரேஷ்குமார்

ஒப்பனை எல்லா கதாபாத்திரங்களுக்கும் நன்றாக இருக்கிறது

ஆடை வடிவமைப்பாளர் முருகன்

அனன்யா, சமுத்திரக்கனி, மற்ற எல்லோருக்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது

சண்டை பயிற்சி தினேஷ் காசி

பர பரபரப்பான திரைக்கதை க்கு உதவி செய்து உள்ளது அவர் பங்கு

கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர்கள்

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
இயக்குனர்

: .ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்
நீதி, நேர்மை, நியாயம் ,தர்மம், இவைகள் திரு. மாணிக்கம் படத்தின் மூலம் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது இது போன்ற படங்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர்
சதீஷ் AIM.
இந்த டீம் க்கு வாழ்த்துக்கள்