பூர்வீகம் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”.

இப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

கதைச்சுருக்கம் :

நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம் .இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிலுக்காகவும் முழுமையாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் . நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் ஆரம்பக் காட்சியில் போஸ் வெங்கட் ‘தனது மூன்று சகோதரிகளுடன் சண்டை போடுகிறார்
தன் மகனை நகரத்தில் படிக்க வைத்து அங்கேயே ஒரு மணமகளை தேர்வு செய்து திருமணம் செய்து வைப்பேன் நீங்க எல்லாம் ஆட்டுமந்தைகள் போல இதே ஊரில் வாழ்ந்து வருகிறீர்கள் உங்களிடம் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சொல்லி
தன் மகனை தன் 3 சகோதரிகளுக்கும் கட்டிக் கொடுக்க மறுக்கிறார்

இதனால் வெகுண்டு எழேந்த மூன்று சகோதரிகளும் போஸ் வெங்கட், உடன் சண்டை போட்டுக் கொண்டு பிரிகிறார்கள்

போஸ் வெங்கட்டுக்கு அந்த மூன்று சகோதரிகளுக்கும் அப்பாவாக இருக்கும் சங்கிலி முருகன் தன் அப்பா இளவரசு போட்டோ முன் நின்று 1950களில்அப்போது நாம் எப்படி வாழ்ந்தோம் இப்போது உறவுகள் இப்படி சீர்கெட்டு விட்டதே என்று புலம்புகிறார்

அப்போது பிளாஷ்பேக்காக காட்சிகள் வருகிறது நாயகன் கதிர் சங்கிலி முருகன்
இளமை கதாபாத்திரத்தில் வருகிறார் அவருக்கு ஜோடியாக மியா ஸ்ரீ இருவரும் திருமணம் செய்து அன்யோன்யம் மிக்க
தம்பதிகளாக வலம் வருகிறார்கள் இவர்கள் முதலிரவு பெரும் சர்ச்சையாகி அதன் பின் நடக்கிறது

கதிரின் அப்பாவாக இளவரசு, மியா வின் அப்பாவாக பசங்க சிவகுமார், இவர்கள் எல்லோருடைய நடிப்பு அவ்வளவு இயல்பாக இருக்கிறது

அதன் பிறகு போஸ் வெங்கட், தன்மகன்
கண்ணனை நகரத்தில் படிக்க வைத்து அங்கேயே சூசன் திருமணம் செய்து வைக்கிறார் அதன் பிறகு நகரத்துக்கு சென்ற
கண்ணன் தன் அம்மா அப்பாவோட சேர்ந்து வாழ்ந்தாரா? முதுமையான காலத்தில்
போஸ் வெங்கட்டுக்கும் ஸ்ரீ ரஞ்சனிக்கும் துணையாக இருந்தாரா? போஸ் வெங்கட்டின் பேரன் என்னவானார்? என்பது தான் படத்தின் மையக்கதை
..
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது… ஆனால் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும்… ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் மேலும்… படித்தவனோ பாமரனோ… அரசனோ ஆண்டியோ… யாராக இருந்தாலும் அவன் வாரத்தில் ஒரு நாளாவது விவசாயத்தில் ஈடுபடவேண்டும்… இப்படி ஒவ்வொருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் வளம் பெருகும்.. வாழ்வும் சிறக்கும்.. இதைத்தான் பூர்வீகம் திரைப்படத்தில் வெகு ஆழமாக கூறியிருக்கிறார்கள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் அழகிய படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர் .

இப்படத்தில் கதாநாயகனாக கதிர், நடித்துள்ளார். கதாநாயகியாக மியாஶ்ரீ நடித்துள்ளார். போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீ ரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்

நாயகன் கதிர்
: சங்கிலி முருகன் இளமைக்கால தோற்றத்தில் கதிர் சிவனாண்டியாக வரும் பொழுது கிராமத்து வெள்ளந்தியான மனிதராக அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் தன் மனைவியுடன் சேர தவிப்பதும் விவசாய நிலம் பறிபோவதை காண சகிக்காமல் வில்லன் களுடன்மோதுவது
எனதரமான நடிப்பு

அடுத்து போஸ் வெங்கட்டின் மகன் கண்ணனாக நகரத்துக்கு வந்த பிறகு அங்கு மைனா வில்லி சூசனைதிருமணம் செய்து அப்பா, அம்மாவை, கைவிடும் கதாபாத்திரத்தில் அருமையான நடிகை வழங்கி இருக்கிறார் இரண்டு தோற்றத்திலும் கதிர் வெளுத்து வாங்கியிருக்கிறார்

: நாயகி மியா ஸ்ரீ

: பேச்சி என்ற கதாபாத்திரத்தில் கணவனே தன்னை தொடக்கூடாது என்று முரண்டு பிடிக்கும் கிராமத்து பெண்வேடத்தில் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் தன் அப்பா அம்மாவை பிரிய முடியாமல் ஆட்டுக்குட்டியான கருப்பனை கூடவே புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வது என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் மியா ஸ்ரீ

போஸ் வெங்கட்
படத்தில் போஸ் வெங்கட் நடிப்பு அருமையாக இருக்கிறது
சங்கிலி முருகன் மகனாக வந்து சாராயம் காய்ச்சும் வில்லனை ஒதுக்கி வைப்பது தன் மகனுக்காக சொத்துக்களை எல்லாம் எழுதி தருவது மருமகளால் உதாசீனப்படுத்தப்பட்டு ஸ்ரீரஞ்சனியுடன் சென்னையிலிருந்து மதுரைக்கு லாரியில் வருவது, கிளைமாக்ஸ் காட்சியில் ,தன் பேரனை மதுக்கடையில் பார்த்தவுடன் உயிர் விடுவது என உயிரோட்டமான நடிப்பை கொடுத்திருக்கிறார் போஸ் வெங்கட்
மற்ற நடிகர்கள் & நடிகைகள

இளவரசு ,நடிப்பு நன்றாக இருக்கிறது ஒய் எஸ் டி சேகர், மற்றும் சூசன் ,ஸ்ரீ ரஞ்சனி ,ஷாஸ்னா,
பசங்க சிவகுமார்
ஆகியோர் நடிப்பு நன்றாக இருக்கிறது

மற்றும் இப்படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள்
i: இசை அமைப்பாளரின்
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்
பாடல்கள் ரசிக்க வைக்கிறது

ஒளிப்பதிவாளர் பசுமையான வயற்காட்டையும் நகரத்தின் வனப்பையும்
அழகாக படம் ஆக்கி இருக்கிறார்

படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்

அரங்கமைப்பு, காஸ்ட்யூமர், மற்றும் டி ஐ ,எல்லாம் கச்சிதமாக இருக்கிறது

இயக்குனர் மதுரை சேர்ந்தவர் என்பதால் மதுரை அந்நியமங்கலம் மக்களை இதில் நடிக்க வைத்திருக்கிறார் பல காட்சிகள் உயிரோட்டமாக இருக்கிறது இன்றைய வாழ்வாதாரமான விவசாயத்தை குறிப்பாக கூட்டுக் குடும்பத்தை பேசியிருக்கிறது இந்த படம் .

வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் கவனம் தேவை உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் சண்டை சச்சரவோடு வாழ்ந்து முடிந்து விட்டு கடைசியில் வருந்தி என்ன பயன்
அதேபோல பெற்ற தாய் தந்தையரை அவர் இருக்கும் காலத்திலே அரவணைத்து பிள்ளைகள் செல்ல வேண்டும் என்ற படிப்பினையும் இந்த படம் உணர்த்துகிறது மொத்தத்தில் இந்த பூர்வீகம் உங்களை திரும்பி பார்க்க வைக்கும்
மனம் உருகச் செய்யும்
கண்களில் நீர் பணிக்க செய்யும்
இது ஒரு அக்மார்க் குடும்ப படம் குடும்பத்தோடு சென்று திரையில் காணலாம் இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் தரத்தை உயர்த்தி காட்டும் எனவே இப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற வேண்டியது தமிழ் சினிமாவின் கட்டாயம்