தண்டேல் | Thandel திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

நடிகர்கள்

நாக சைதன்யா – ராஜு
சாய் பல்லவி – சத்யா
பிரகாஷ் பெலவாடி – பாகிஸ்தான் சிறை அதிகாரி
திவ்யா பிள்ளை – சந்திராக்கா
ராவ் ரமேஷ்
கருணாகரன்
‘ஆடுகளம்’ நரேன்
பப்லு பிருத்விராஜ்
மைம் கோபி
கல்ப லதா
கல்யாணி நடராஜன்
மகேஷ் அச்சந்தா
கிஷோர் ராஜு வசிஷ்டா

தொழில்நுட்ப கலைஞர்கள்:

எழுத்து & இயக்கம் : சந்து மொண்டேட்டி
ஒளிப்பதிவு : ஷ்யாம் தத் ( ISC)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
படத்தொகுப்பு : நவீன் நூலி
கதை : கார்த்திக் தீடா
தயாரிப்பு நிறுவனம் : கீதா ஆர்ட்ஸ்
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்

*கதை களம்

சாய் பல்லவி கருணாகரன் திருமண ஒப்பந்தத்தில் காட்சி ஆரம்பிக்கிறது

அடடே! கருணாகரனுக்கு சாய் பல்லவி ஜோடியா ?
என்ற எதிர்பார்ப்பில் படம் தொடங்குகிறது

அதன் பிறகு சாய் பல்லவி, கருணாகரனிடம் தனக்கும் ராஜுவுக்கும் ,எப்படி காதல் உருவானது
என்று பிளாஸ் பேக்கில் கதை சொல்லுகிறார்

சாய் பல்லவி, நாக சைதன்யா இருவரும்
சின்ன வயதில் இருந்தே
உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
ஒரே ஊரை சேர்ந்தவர்கள்
இதில் நாக சைதன்யா
நல்ல உள்ளம் கொண்டவராக தப்பை தட்டிக் கேட்பவராக மனிதநேயமிக்கவராக இருப்பதை கண்டு சாய் பல்லவி ராஜுவை விரும்புகிறார்

அதன் பிறகு தண்டேல் ஆக இருக்கும் நரேன் நாகசைதன் யாவை
தண்டேல்(தலைவன்) ஆக்குகிறார்
பொறுப்பேற்று 9 மாதம் குஜராத் தாண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க போக மீதம் 3 மாதம் ஊருக்கு வருகிறார்.

இதில் ஒரு முறை சாய் பல்லவி எவ்வளவு சொல்லியும் நாக சைதன்யா கடலுக்கு மீன் பிடிக்க செல்ல, அப்போது பெரும் புயல் உண்டாகிறது.

அந்த புயலில் ஒருவரை காப்பாற்ற நாக சைதன்யா செல்ல, தெரியாமல் படகு பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல, அனைவரையும் பாகிஸ்தான் அரசாங்கம் கைது செய்கிறது.

பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து நாக சைதன்யா தப்பித்து இந்தியா வந்து சாய் பல்லவியை கரம் பிடித்தாரா?

சாய் பல்லவி, நாக சைதன்யா வை காப்பாற்றினாரா?

கருணாகரனுக்கும் சாய் பல்லவிக்கும் திருமணம் நடந்ததா?
என்பது கதை

நாக சைதன்யா

தண்டேல் என்றால்
கப்பல் தலைவன் லீடர் என்று பொருள் இந்த படத்தில் நாயகனாக நாக சைதன்யா லீடராகநடித்திருக்கிறார்
நல்ல நடிப்பு ஒரு தலைவனுக்கு உண்டான தகுதியும் தப்பை தட்டிக் கேட்கும் அந்த வீரா ஆவேசமும்
சாய்பல்லவி புஜ்ஜூ தங்கம் என்று உறுகி உறுகி காதலிப்பதும் பாகிஸ்தான் சிறையில் இந்திய தேசத்தை சிறுமைப்படுத்தும் தீவிரவாதிகளை தட்டிக் கேட்பதும் என ஒரு மாஸ் ஹீரோவாக அற்புதமாக நடித்திருக்கிறார்
நாக சைதன்யா 2009 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெற்றி பெற்றவர் அவருடைய வாழ்க்கையில் தண்டேல் படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தில் நடித்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளார் 100 கோடி இந்த படத்தின் பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது எனவே நாக சைதன்யாவுக்கு இது ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது

: “சாய் பல்லவி

: சாய் பல்லவி தெலுங்கு, தமிழ் , மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்யப்பை பெற்றவர் அவரது நடனத்திற்கு அவரது புன்சிரிப்புக்கு பல ரசிகர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள் இந்த படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில்
அழுது ,ஆர்ப்பரித்து, சந்தோஷத்தில் காதலனுடன் கைகோர்த்து, காதலன் பிரிவுக்கு பிறகு ,கண்ணீர் வடித்து காதலனை காப்பாற்ற போராடி, என பலவிதமான முக பாவனைகளுடன் சத்யாவாக வாழ்ந்திருக்கிறார் நடிப்பில்
வெளுத்து வாங்கி இருக்கிறார்
இந்த படத்தில்
நாக சைதன்யா வும், சாய்பல்லவியும், ஆடும் நமோ நமச்சிவாயா என்ற பாடலில் சாய் பல்லவியும், நாக சைதன்யா ,
இருவரும் போட்டி போட்டு நடனம் ஆடி இருக்கிறார்கள்
இந்த பாடலில் மட்டும் 900 நடனக் கலைஞர்கள் பங்கு பெற்று பாடலை சிறப்பாக்கி இருக்கிறார்கள்
நாலு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டு ள்ளது
சாய் பல்லவிக்கு அமரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றி படம் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது

நாக சைதன்யாவும் , சாய்பல்லவி ,காதல் காட்சிகளில் அவ்வளவு எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்

கதையை
கார்த்திக் தீ டா எழுதியிருக்கிறார்
அவருக்கான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர்

இந்த படத்திற்கான திரைக்கதை, எழுதியிருப்பவர் சந்து மொண்டாட்டி இவர் இதற்கு முன் கார்த்திகேயா ,பிளடி மேரி ,கார்த்திகேயா 2 ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் கார்த்திகேயா 2 என்பது இந்திய மொழி அனைவராலும் பாராட்டப்பட்டது 15 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 118 கோடி ரூபாய் வசூல் செய்தது
அதேபோல இப்படம் வசூலில் சாதனை படைக்கும்
இயக்குனர் சந்து மொண்டாடி ஒரு கமர்சியல் , காதல் படத்தை தேசபக்தியோடு, கொடுத்தால் மக்கள் மிகவும் ரசிப்பார்கள் என்பதை புரிந்து படத்தை கொடுத்திருக்கிறார் இது ஒரு உண்மையான கதை என்பதால் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது மீனவர்களின் வலியையும், வேதனையையும், சொல்லி இருக்கிறார் இயக்குனர்

மற்ற கலைஞர்கள
ஆடுகளம் நரேன்நடிப்பு அருமை,
கருணாகரன் நடிப்பு ரசிக்க வைக்கிறது,
பாகிஸ்தான் சிறை அதிகாரி பிரகாஷ் பெலவாடி மனித நேயம் கொண்டவராக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்
சாய் பல்லவி தந்தையாக
பப் லுபிரித்திவிராஜ் அவர் ஏன் கடலுக்கு செல்லவில்லை என்று சாய் பல்லவி யிடம் சொல்லும் அந்த ஒரு காட்சி உருக்கம்
படத்தில் யாரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் .

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது

Cinematographer: Shamdat (ISC)

இவரின் ஒளிப்பதிவில் கடல் சார்ந்த காட்சிகளும் பாகிஸ்தான் படப்பிடிப்பு விசாகப்பட்டினம் அழகையும் அள்ளி வந்திருக்கிறது.
அந்த மச்ச தேசம் ஊரையும் கலங்கரை விளக்கும் கண்ணாடிகள் போல கண்ணுக்குள் விற்கும் காட்சிகள் குஜராத் துறைமுகத்தை அழகாக படம் ஆகிறது கடல் அலைகளுக்குள் நாக சைதன்யா மற்றும் 22 மீனவர்கள்
சிக்கிக்கொள்ளும் அந்த காட்சியும் அற்புதமாக படமாக்கி இருக்கிறார்

நவீன் நூலின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் லேக்காகவில்லை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறது படத்தொகுப்பு

வி .ஜே .சேகர்
நடன பயிற்சி அமைத்திருக்கிறார் நமோ நாராயணா பாடலுக்கு அற்புதமான நடனத்தை கொடுத்திருக்கிறார் ரசிக்க வைக்கிறது

Fights: Supreme Sundar,
சுப்ரீம் சுந்தர்
சண்டை காட்சிகள் அவர் கொடுத்திருக்கும் பயிற்சிகள் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது
நாக சைதன்யா சண்டை காட்சியில் கலக்கி இருக்கிறார் அதற்கு சுப்ரீம் சுந்தர் பயிற்சி கொடுத்திருக்கிறார் அருமையாக இருக்கிறது
சுப்ரீம் சுந்தரோடு வெங்கட் ,விக்ரமோர், இருவரும் இணைந்து சண்டை பயிற்சி அளித்திருக்கிறார்கள்

தமிழுக்கு பாடல்களை விவேகா, எழுதி இருக்கிறார் பாடல்கள் அதன் வரிகள் ரசிக்க வைக்கிறது
மற்றும் ஆர்ட் டைரக்டர் டி.ஐ.
வி. எப்
எக்ஸ்,
ஒப்பனையாளர்கள், காஸ்ட்யூமர் ,என எல்லோரும் பங்கும் இந்த படத்திற்கு உதவி செய்திருக்கிறது
மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள்
படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்

இப்படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழில் வாங்கி வெளியிட்ட ட்ரீம் வாரியார் நிறுவனம் மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தண்டேல் “வெற்றி பட்டியலில்
கொண்டாடுகிறார்கள் மக்கள்
இப்படத்திற்கு விருதுகள் 👍🏿நிச்சயம்💕
உண்மையான காதல் வென்றே தீரும்