ஃபயர் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

பிரபல பிசியோதெரபி மருத்துவர் காசியை ஆரம்பக் காட்சியில் ஒரு மர்ம நபர் தலையில் அடிக்கிறார்
அதன் பின் காணாமல் போகிறார் மகனை காணவில்லை என்றுகாசியின் தந்தை காவல்துறை அதிகாரி சரவணன் இடம புகார் மனு கொடுக்கிறார்

சரவணன் காசி எப்படி காணாமல் போனார்
என்ன நடந்தது காசிக்கு யார்யாருடன் தொடர்பு இருந்தது என்பதை கண்டுபிடிக்க துப்பறிகிறார்

காட்சிகள் விரிய அதிர்ச்சியான சம்பவங்கள் அவருக்கு நமக்கும் தான்…..

மாவு கடை மீனாட்சி, பிரியா, அனிதா, துர்கா, மற்றும் பல குடும்பப் பெண்மணிகள் கல்லூரி மாணவிகள் மருத்துவர், வழக்கறிஞர், இப்படி பல பெண்கள் இவர்கள் எல்லாம்
காசி வளையத்துக்குள்
சிக்கி இருக்கும் உண்மை தெரிய வருகிறது

இன்டர்வல் பிளாக்கில் சரவணன் உயிரோட்டிருக்கிறார் என்று போன் கால் வருகிறது துர்காவின் தாத்தா நான் தான் சரவணனை கொன்றேன்
என்று சரணடைகிறார் என்ன நடந்தது என்பதை பரபரப்பாக விறுவிறுப்பாக எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சொல்லி இருக்கிறது ஃபயர் இரண்டாம் பாதியில் நான்கு அழகிகளின் அட்டகாசமான அசத்தலான கவர்ச்சி காட்சிகளுடன் பற்றிக் கொள்கிறது

முடிவில் காசி என்ன ஆனார் ?என்பது கடைசி வரை சஸ்பென்ஸாக கொண்டு சென்று படத்தை ரசிக்க வைத் திருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர்

திறமையானவர்களுக்கு, மதிப்பும் அங்கீகாரமும் நிச்சயம் கிடைத்துவிடும். விளையாட்டு, அரசியல், சினிமா என எந்தத் துறையானாலும் எந்த இடமானாலும் திறமைக்குரிய மரியாதை அவர்களைத் தேடி வருவதில் சற்று காலதாமதம் ஆனாலும், கட்டாயம் வந்தே தீரும். இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்பவர், ஜே எஸ் சதீஷ் குமார்
இவரின் தங்கமீன்கள் ,’. `அண்டாவ காணோம்’ ,என இவரது முந்தைய படங்கள் முத்தான தயாரிப்பாகும்

இந்த படத்தில் இயக்குனராகவும் ஜெயித்திருக்கிறார்

ஜே .எஸ். கே தயாரிப்பாளராக இயக்குனராக நடிகராக இருந்தாலும் படத்தில் தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதேபோல பாலாஜி முருகதாஸுக்கும் கொடுத்திருக்கிறார்
அதுதான் இந்த படத்துக்கு வெற்றி யாக அமைந்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு

தான் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே ஜே எஸ் கே ஆகிவிடுவார் என்பது உலகறிந்த உண்மை. இளம் தலைமுறையினர் பலரையும் `வாழை’ திரைப்படத்தின் மூலம் ஜே எஸ் கே ரசிக்க வைத்தார் .

இந்தப் படத்தில் ஒரு  காவல் துறை அதிகாரி யார் கச்சிதமாக நடித்திருக்கிறார்
நடிகராக மனதில் நிற்கிறார்
.

வலுவான திரைக்கதைக்குக் கூடுதல் வலுசேர்ப்பதாக அமைந்தது, டி கே பின்னணி இசை. மதுரகவி மற்றும் ரா பாடல் வரிகளை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது
அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இருந்தன

. சென்னை, ராமேஸ்வரம் பீச் வீடுஎன நகரங்களையும் அதன் அழகியலோடு படம்பிடித்துக் காண்பித்தது கேமரா.ஒளிப்பதிவாளர் சதீஷ்

பொதுவாகவே, இந்த மாதிரி திரைப்படங்கள் A சென்டர் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் எனப் பரவலான ஒரு கண்ணோட்டம் உண்டு. ஆனால், அவை அனைத்தையும் உடைக்கும்விதமாக அனைத்து தரப்பு ரசிகர்-ரசிகைகளுக்கும் பிடித்தமான திரைப்படமாக அமைந்தது ஃபயர்’.

இந்த படத்தில் பெண் கதாபாத்திரங்களை அவர்களை துகிலுரிய வைத்தது கதைக்காக தான் என்பதை இயக்குநர் நியாயபடுத்தி இருக்கிறார் பெண்களை ஆபாச வீடியோ எடுப்பவன் எப்படி பெண்களின் உடலை மூடிகவர்ச்சி இல்லாதவர்களாக காட்டுவான். முதல் படத்திலேயே சோசியல் மெசேஜ் படமாக அமைந்துள்ளது

பெண்களைப் பெற்ற ஒவ்வொரு தாயும் தந்தையும் இந்த படத்தை காண வேண்டும் அதே சமயம் எல்லா பெண்களும் ஆண்கள் இடத்தில் உஷாராக இருக்க வேண்டும் எதிலும் சலனப்பட்டு தப்பு செய்து தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளக் கூடாது என்ற நல்ல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்

பாலாஜி முருகதாஸ்

இதில் பாலாஜி முருகதாஸ், காசியாக வாழ்ந்திருக்கிறார் பல பெண்கள் உடன் சல்லாபம் செய்து சந்தோஷமாக காசியாக நடித்திருக்கிறார்

கட்டான உடல் கட்டு கலையாண முகம், அமைதியான பேச்சு, பெண்களை கவரும் வசீகரம்
பாலாஜி முருகதாஸ் லட்டு சாப்பிடுவது போல் இந்த கதாபாத்திரம் அமைந்திருக்கிறது காசியாக மனுஷன் வாழ்ந்திருக்கிறார்

மாவுகடை மீனாட்சி
ரக்‌ஷிதா மகாலட்சுமி,

மாவு கடை மீனாட்சி ஆக நல்ல உணர்ச்சிகரமான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார் அந்த பாடல் காட்சி மெதுவாய் மெதுவாய் இளைஞர்களை உசுப்பேத்தி அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டியிருக்கிறார்

துர்கா
சாந்தினி தமிழரசன்

பாசமுள்ள தாத்தாவின் பேத்தியாக துர்காவாக வெளியுலகம் தெரியாத ஏமாளியாக காசியிடம் ஏமாந்து
கதறும் காட்சிகள் சிறப்பு
இது போன்ற பெண்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதற்கு இந்த துர்கா கதாபாத்திரம் உதாரணம்

பிரியா
சாக் ஷி அகர்வால்,

செமையான நடிப்பு உடற்பயிற்சி செய்யும் பொழுது இளைஞர்களை உசுப்பேற்றுகிறார்
ஏமாந்து விட்டு கண்ணீர் விட்டு அழுது விட்டு பாலாஜி முருகதாஸை பழிவாங்க திட்டமிடும் சாக்ஷி நிச்சயம் பாராட்டுக்குரியவர்

அனிதா
காயத்ரி ஷா,

இவர் இலங்கை பெண்மணி இந்த படத்திற்காக மிக அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார் நிச்சயம் பாராட்ட வேண்டிய கதாபாத்திரம் அனிதா என்ற கதாபாத்திரம் இவரால் பேசப்படும்

மற்றும்

சுரேஷ் சக்கரவர்த்தி,

கர்ணா என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க போலீஸ் அதிகாரி சரவணனுடன் கண்டுபிடிக்க கூட வருகிறார் இவருடைய நடிப்பு மிகவும் ரசிக்க வைத்தது

சிங்கம் புலி

அமைச்சர் திருமூர்த்தி ஆக அலப்பறை செய்கிறார் என்ன தினா வெட்டு அமைச்சருக்கே உரிய அந்த கெத்து கடைசியா காட்சியில் கூட செம அலப்பறை செய்திருக்கிறார் சிங்கம்புலி இந்த படத்தில் நன்றாக நடித்தி ருக்கிறார

தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இதன் கதையை உருவாக்கி
இயக்குநர் ஜீவா வசனம் எழுதியிருக்கிறார்.
வசனங்கள் ரசிக்க வைக்கிறது எச்சரிக்கையாக இருக்கிறது பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதை உணர்த்துகிறது

தங்கபாப்பாவாக நடித்த அந்த குழந்தைக்கு சாந்தினி தமிழரசன் தாத்தாவுக்கும் பாலாஜி முருகதாஸ் அப்பாவாக நடித்த தயாளன் அவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தது

பிரேம்குமாரின் படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தது விறுவிறுப்பாக படத்தை எடிட் செய்திருக்கிறார்

சுசி தேவராஜ் அரங்க அமைப்புகளை அமைத்திருக்கிறார் பாலாஜி பிசியோதெரபி மருத்துவமனை, ரட்சிதாவின் மாவு கடை, ஜிம் ,என எல்லா இடங்களிலும் இவர் கைவரும் நன்றாக தெரிகிறது

தினேஷ் காசி
சண்டை பயிற்சி அமர்ந்திருக்கிறார் ஒரே சண்டைக்காட்சி என்றாலும் நன்றாக இருக்கிறது
தினா ரோசாரியா காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்து இருக்கிறார்

பாடல்களை மதுர கவியும் ரா அவர்களும் எழுதி இருக்கிறார்கள் பாடல் வரிகளில் ரசித்து வைக்கிறது

மானஸ் நடன பயிற்சி அமைத்திருக்கிறார் அந்த கல்யாண பாடல் கலை கட்டுகிறது

மற்றும் இப்படத்துக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் கள்

இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் அவர் ஒரு படத்தை மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற வித்தையை தெரிந்து வைத்திருக்கிறார் படம் மக்களிடம் பேசப்பட்டு வருகிறது மிகப்பெரிய வெற்றியடையும்