அகத்தியா திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

இயக்குனர் பா.விஜய் இயக்கியுள்ள படம் “அகத்தியா”
இந்த படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன்
சார்லி செந்தில்
ரோகிணி மற்றும் ஹாலிவுட் நடிகர்கள்
நடித்துள்ளனர்.

இப்படம், ஃபேன்டஸி-ஹாரர்
படமாக வந்திருக்கிறது
கற்பனை, கலந்து திகில் காட்சிகள் ஆழமான, உணர்ச்சிகரமான காட்சிகள்
என படத்தை பிரம்மாண்டமான முறையில் உருவாக்கியிருக்கிறார்கள்
கண்கவரும் காட்சியமைப்புகள், மனதைக் கவரும் இசையமைப்பு மற்றும் தீவிரமான கதையுடன் ஒரு எட்ஜ்-ஆஃப்-தி-சீட் த்ரில்லர் படமாக வந்திருக்கிறது நிச்சயம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே. ஐசரி கணேஷ், மற்றும் WAM India நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனீஸ் அர்ஜுன் தேவ் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள் இத்திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை.

.: கதை களம்

ஆர்ட் டைரக்டர் அகத்தியா தனது முதல் படத்திற்கு கையில் இருந்த பணத்தை எல்லாம் போட்டு ஒரு பங்களாவில் அரங்கம் அமைக்கிறார் அதே சமயம் படத்தில் நடிக்கும் நாயகனும் நாயகியும் திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் போய்விட சூட்டிங் கேன்சல் ஆகிறது அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அகத்தியா அதேபங்களாவை
லீசுக்கு வாங்கி பேய் பங்களாவாக மாற்றி மக்களுக்கு பார்வையிட்டு பணம் சம்பாதிக்கிறார்

ஆனால் அந்த பங்களாவுக்குள் அமானுஷ்ய சக்தி இருப்பதை அகத்தியாவும் வீணாவும் அறிகிறார்கள் ஒரு பிலிம் ரோல் கிடைக்கிறது அதை எடுத்து போட்டு பார்க்கும் பொழுது 1940 இல் டேனியல், மற்றும் அவரது தங்கை , மனைவி என காட்சி விரிகிறது

அதில் சித்த மருத்துவர் ஆன
சித்தார்த்
( அர்ஜுன்) வருகிறார் அவர் தனது லட்சியத்தை அடைவதற்காக கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கிறார் டேனியல் தங்கையை யும் விரும்புகிறார்
ஒரு இந்தியன் வெள்ளைக்காரன் தங்கையை காதலிப்பதை விடுவானா ?
ஒரு தமிழன் சித்த மருத்துவத்தில் மருந்துகள் கண்டுபிடித்து உலக அளவில் பெயர் வாங்க வெள்ளைக்காரன் விடுவானா ?
அந்த மருந்து எடுத்துக் கொண்டு சென்று பிரதமரிடம் இவர் பாராட்டு பெற்றாரா சித்தார்த் ?

அகத்தியன் தாய்க்கு ஏற்பட்ட அந்த கொடிய நோயை சித்த மருத்துவம் தீர்த்ததா?

பல கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறது அகத்தியா

பேய் படங்கள் வரிசையில் இந்த படமும் இருக்கிறது என்று சொன்னாலும் இதில் தனித்துவம் சித்த மருத்துவத்தின் பெருமையை தமிழர்கள் விட்டுச் சென்ற மூலிகை ஆராய்ச்சியும் படத்தை உச்சத்தில் கொண்டு வைக்கிறது
என்பதை சொல்லும் படம் அகத்தியா

அகத்தியா’ படத்தின் கதை . அதை ஜனரஞ்சகப்படுதியவிதம
ஒரு பீரியடும், நடப்புக் காலகட்டமும் சேர்ந்து சொன்ன விதம்
1940 காலகட்டத்துக்கும் இன்றைய 2025-க்கும் இடைப்பட்ட ஒரு பயணமாக இந்த ‘அகத்தியா’ வந்துள்ளது

இயக்குநர் பா.விஜய். பாடலாசிரியர், நடிகர் என இதற்குமுன் ‘ஸ்ட்ராபெர்ரி’, ‘ஆருத்ரா’ படங்களை இயக்கியவர், இப்போது ஜீவா – அர்ஜுன் கூட்டணியில் ‘அகத்தியா’வைச் செதுக்கியிருக்கிறார். அற்புதமாக வந்திருக்கிறது தமிழகத்தின் மூலிகை மற்றும் சித்த மருத்துவத்தை இதைவிட பெருமையாக வேறு யாரும் சொன்னதாக நமக்கு ஞாபகம் இல்லை
:ஆர்ட்
டைரக்டர் அகத்தியவாக நாட்டுக்காக விடுதலைக்காக போராடும் நாஞ்சி என இரண்டு கதாபாத்திரத்தில் ஜீவா செமையாக நடித்திருக்கிறார் காதலுக்கு அதிக வேலையில் என்றாலும் தாயிடம் அன்பு செலுத்தி பேயுடன் போராடி நாட்டுக்காக போராடும் ஜீவா கதாபாத்திரம் சிறப்பு
:வீனா என்ற கதாபாத்திரத்தில் ராசி கண்ணா
ஜீவாவுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்
அர்ஜுன் சார்ஜா
மற்றும் ரெடின்கிங்ஸ்லீ
யோகி பாபு
ராதா ரவி
அனைவரும் கொடுத்த பார்த்திரத்தில் சிறப்பாக நடித்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் சித்தார்த் என்ற மூலிகை மருத்துவராக பணம் முழுக்க வந்து கம்பீரமாக படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்

Edward Sonnenblick , Matylda

இருவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது

இயக்குனர்
பா .விஜய் இன்று நாட்டுக்கு தேவையான ஒரு நல்ல கருத்தை கதையாக வடிவமைத்து எழுதி இருக்கிறார் நாம் மறந்து போன மூலிகை மருத்துவம் சித்த மருத்துவங்களில் பெருமையை இதைவிட வேற எந்த படத்தில் இவ்வளவு அருமையாக சொல்லிவிட முடியாது தேசப்பற்று தாயின் பக்தி வெள்ளைக்காரர்கள் இந்தியாவை நடத்திய விதம் என எல்லாம் திரைக்கதையாக வடிவமைத்து கச்சிதமாக இருக்கிறார்
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் வைக்கும் விஜயலட்சுமி மூலிகை பாடலும் என் இனிய பொன் நிலாவே பாடல் ரசிக்க வைக்கிறது
தீபக் குமார் பாண்டியன் ஒளிப்பதிவு கடுமையாக உழைத்திருக்கிறார் வி .எப் .எக்ஸ் காட்சிகளுடன் சேர்ந்து கேமரா படம் முழுக்க விளையாடி யிருக்கிறது
ஒளிப்பதிவு இந்த படத்திற்கு பலம்

சான் லோகேஷின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது

பி. சண்முகம் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் பேய் அரங்கம் சூப்பராக இருக்கிறது அந்த பேய் மாளிகையின் பேய் வருகைக்குப் பிறகும் அதற்கு முன்பும் என இரண்டு வகையான தோற்றத்தில் அற்புதமாக காட்டியிருக்கிறார் அரங்கமைப்பு சூப்பர

நடன பயிற்சியாளராக ஸ்ரீதர் பங்காற்றி இருக்கிறார் நடனம் ரசிக்க வைக்கிறது

பல்லவி சிங்,
மற்றும்
டினாரோஸாரியோ,
பங்கு சிறப்பாக இருக்கிறது
மற்றும் இந்த படத்தில் வெற்றிக்கு உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்

DI : iGene
Sound Mixing : Tapas Nayak
Lyrics : Pa.Vijay
Chief Associate Director : S.Guru Surya
Executive Producers : Ashwin Kumar
Creative producer : Prabu
Publicity Designer : Dinesh Ashok
Marketing and Promotions: iHorse

PRO: Nikil Murugan

என அனைவரின் பங்கும் சிறப்பாக இருக்கிறது ஒரு வெற்றி படத்தை தரமான படமாக கொடுத்திருக்கிறார்கள்

மொத்தத்தில் அகத்தியர் ஹாரர் மற்றும் நாட்டுக்கு தேவையான சித்த மருத்துவம் தாய்மையின் பாசம்
இதை எல்லா வகையிலும் சிறப்பாக சொல்லி இருக்கிறது படம் நிச்சயம் வெற்றி பெறும்