படத்தில் தயாரிப்பாருக்கு கதை சொல்ல வருகிறார் அறிமுக இயக்குனராக விக்னேஷ் கார்த்திக் வித்தியாசமான கதை சொல்லி அசத்திவிட வேண்டும் என்று அவர் நான்கு கதைகளை சொல்கிறார் தயாரிப்பாளரும் பத்து நிமிடம் தான் டைம் தருவேன் அதற்குள் என்னை அசத்துமாறு கதை சொல் என்று கேட்கிறார் விக்னேஷ் கார்த்திக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் நாமும் நிமிர்ந்து உட்காருகிறோம் என்ன சொல்ல போகிறார்என்று
ஒரு பழைய பங்களா அதற்குள் நான்கு பேர் ஒரு பேய் அப்படி எல்லாம் சொல்லாமல் சமூகம் இன்று எப்படி மாறி வருகிறது இளைஞர்கள் மனநிலை எப்படி இருக்கிறது இது இப்படி எல்லாம் அப்படி நடந்திருந்தால் என்னவாக இருக்கும் என்ற வித்தியாசமான கோணத்தில் அருமையான புதுமையான ரசிக்க வைக்கும் இளமையான ஒரு நல்ல கதைகள் சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்
அதன் முதல் கதை என்ன வாங்க பார்க்கலாம். ஆதித்யா பாஸ்கர் கௌரி கிஷன் இருவரும் காதலித்து பெரியவர்கள் சம்மதத்தோடு திருமணம் நடக்கிறது ஆனால் அந்த திருமணம் புதுமையான முறையில் நடக்கிறது பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவதை மாற்றி ஆணுக்குப் பென் தாலி கட்டினால் பொண்ணு வீட்டு மாப்பிள்ளை ஆக மாமியார் மாமனார் வீட்டுக்கு போனால் அங்கே மாமனாருக்கும் மருமகனுக்கும் நடக்கும் சண்டை ஆண் காலை முதல் மாலை வரை சமையல் வேலை செய்து வீட்டு வேலை செய்துவிட்டு எப்படி டயர்டாக தூங்க வருவாரோ அது போல் நடந்தால் எப்படி இருக்கும் என்று ஆதித்யா பாஸ்கர் கனவு காண்கிறார் அவ்வளவு அற்புதமான இன்ட்ரஸ்டிங்கான ஏரியா இருவரும் பிரித்து மேய்ந்து விடுகிறார்கள் இருவரிடத்திலும் இளமை புதுமை ரசிக்க வைக்கும் முதல் கதை
இரண்டாவது கதை காதலிக்கும் இருவர் அண்ணன் தங்கையாக மாறிவிட்டால் என்ன நடக்கும சூப்பர் இருவரும் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார்கள் காதலிக்கும் இருவரும் அண்ணன் தங்கை உறவாக மாறிவிட்டால் தற்கொலை தான் தீர்வு அல்லது இந்த சமுதாயம் ஏற்குமா என்று நம்மிடமே கேள்வி கேட்க வைத்து கதை சொல்லி இருக்கும் பாணி புதுமை.
மூன்றாவது கதை செம வித்தியாசம் ஆம்பள ஐட்டமாக நாயகன் மாறினால் என்ன நடக்கும் அவரது காதலியாக ஜனனி ஐயர் இருவரும் நடிப்பு ஸ்கோர் செய்திருக்கிறார்கள் நாயகனுக்கு எவ்வளவு நெருக்கடிகள் சூழ்நிலைகள் அம்மாவையே தவறாக எண்ண வேண்டிய கட்டாயம் கடைசியில் ஜனனி ஐயர் நாயகனின் பாய் பிரண்டையே படுக்கைக்கு அழைக்கும் விபரீதம் இப்படி அந்த ஏரியா மிகவும் ரசிக்க வைக்கிறது இன்று இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என்பதை விக்னேஷ் கார்த்திக் ஆணி தரமாக எடுத்து சொல்லி இருக்கிறார் ரசிக்க வைக்கும் ஏரியா
நான்காவது கதை, தொலைக்காட்சியில் வரும் கேம் ஷோக்கள் குழந்தைகள் மீது மனதளவில் எவ்வளவு பெரிய வன்முறையை திணிக்கின்றன என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. இந்த நான்காவது கதை , மனதிற்கு மிக நெருக்கமாகவும் நாம் பெற வேண்டிய விழிப்புணர்வு பற்றியும் பேசுகிறது. இதில் கலையரசன் கச்சிதமாக ஆட்டோ டிரைவராக பொருந்தி போகிறார் அவரது மனைவியாக நடித்திருப்பவர் நன்றாக நடித்திருக்கிறார் ஏழ்மையிலிருந்து வசதியான சூழ்நிலைக்கு அவர்கள் மாறும் போது அந்த மனோபாவம் அந்த முகமலர்ச்சி எவ்வளவு ரசிக்க வைக்கிறது அந்த அளவுக்கு குழந்தைகளுக்கு விபரீதங்களும் காத்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் கிளைமாக்ஸ் எமோஷனல் டிராமாவாக நான்காவது கதை நான்குமே ரசிக்க வைத்திருக்கிறது இன்றைய காலகட்டத்திற்கு தேவையான படமாக இந்த படம் வந்திருக்கிறது இந்த படத்தில் காதல் இருக்கிறது கணவன் மனைவி அன்பு இருக்கிறது குழந்தையின் தாய்மை பாசம் இருக்கிறது அந்த குழந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஏங்கும் ஒரு அம்மாவின் மனநிலை இருக்கிறது ஒரு பொறுப் புள்ள சமூக ஆட்டோ டிரைவரின் கதை இருக்கிறது தன் மகள் மீது திணிக்கப்பட்ட கொடூரம் வன்மம் இதைக் கண்டு களங்கும் அந்த காட்சி நன்றாக இருக்கிறது மொத்தத்தில் இந்த ஹாட் ஸ்பாட் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் அரங்க அமைப்பாளர்களுக்கும் இசையமைப்பாளருக்கும் படத்தொகுப்பு என பணிபுரிந்த அனைவருக்கும் இப்படம் வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லலாம்
