_சுந்தர்.சி தன்னுடைய முந்தைய ‘அரண்மனை’ சீரிஸ் படங்களில் இருந்த கவர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை தவிர்த்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இலக்காக கொண்டு உருவாக்கிய இப்படம் கோடைக்கால விடுமுறையால் பலன் கொடுத்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், உலகம் முழுவதும் 19 நாட்களில் ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டில் இந்த ஆண்டு ‘கேப்டன் மில்லர்’ படத்துக்குப் பிறகு ரூ.100 கோடியை வசூலித்து படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘அரண்மனை 4’. தமண்ணா, ராசி கண்ணா இருவரும் படம் முடிந்து ஆடும் கவர்ச்சி நடன காட்சிகள் பாடலாக வெளிவந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்தது அந்த பாடல் காட்சிகள் கூட படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது
