குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கி உள்ள படம் மகாராஜா ஒரு வெற்றி படத்துக்கு தேவையான கதையை எழுதி இயக்கி இருக்கிறார் கதையை கொண்டு சென்ற விதம் அருமை
இப்படத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ்
அருள்தாஸ், சிங்கம்புலி, சூப்பர் குட் சுப்பிரமணி, முனீஸ் காந்த், பாய்ஸ் மணிகண்டன், வினோத் சாகர்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘லக்ஷ்மி யை கண்டுபிடிச்சு கொடுங்க’ என காவல் நிலையம் வருகிறார் விஜய் சேதுபதி.
யார் அந்த லட்சுமி
என போலீசார் கேட்க கைகளை அசைத்து ஜாடையில் குப்பை தொட்டி என்கிறார்
வெகுளித்தனமான முகம் உறுதியான இடும்பு பிடி ,
போலீஸ் ஸ்டேஷனில் மல்லு கட்டி கொண்டு நிற்கும் சவரக்கத்தி தொழிலாளி என்ன
சொல்லப் போகிறார் என்பதை போலீஸ் மட்டுமல்ல படம் பார்க்கும் நாமும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
நடந்தது என்ன ?ஏகத்துக்கும் எகிர வைக்கிறார் விஜய் சேதுபதி
நட்டி போலீஸ் அதிகாரியாக வருகிறார்
“ஒருத்தன் லட்சத்துல லஞ்சம் கொடுக்குறான்னா, கோடியில எதையோ பதுக்குறான்னு அர்த்தம்” என்று சொல்லும் ஒருகதா பாத்திரம் முடிவில் கைதட்டல் வாங்குகிறார்
அனுராக் காஷ்யப்பின் தெனாவட்டு, உடல்மொழி, ஈர்க்கிறது.
அவர் பார்வையில் உள்ள தீர்க்கம் கொடூர முகம் தன் மனைவிஅபிராமி மற்றும் தன் மகள் குழந்தை அம்முவை உயிருக்குயிராய் நேசிக்கும் பாசம்
என நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில் படத்தை தூக்கி நிறுத்துகிறார் அனுராக் காஷ்யப் வெல்டன்
இவர்கள் இருவருக்குமான காட்சிகள் மிக சொற்பம் தான் ஆனால் படம் முழுக்க இவர்கள் இருவரும் யார் என்று தெரியாமலே மோதிக் கொள்ளும் அந்த திரைக்கதை மாயாஜாலம் தான் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது
எளிய மனிதராக காட்சிப்படுத்தபட்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார் குறிப்பாக, இறுதியில் ஆக்ரோஷத்துடன் வெடிக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் கவர்கிறார்.
ஒளிப்பதிவு புருஷோத்தமன் ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமான ஒளிப்பதிவை வழங்கி இருக்கிறார்
லைட்டிங், பின்னணி இசை சூப்பர்
சண்டை பயிற்சியாளர் அனல் அரசு
அனல் தெரிக்கிறது அதுவும் இடைவேளைக்கு முன் வரும் அந்த சண்டைக்காட்சி அவ்வளவு வெறித்தனம் கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் சண்டை காட்சி யும் வெகு பிரமாதம்
இந்த படத்திற்கு இசை . காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது செம மிரட்டல்
இந்தாண்டின் சிறந்த திரைப்படம் மகாராஜா , படத்தின் திரைக்கதை அனைத்துவிதத்திலும் சிறப்பாக வந்துள்ளது, இயக்குநர் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து மிரட்டியுள்ளார். தனது முதல் படமான குரங்கு பொம்மை போல, மகாராஜாவிலும் எதிர்பார்க்க முடியாத கிளைமாக்ஸ்
வைத்து உள்ளார்
படத்தின் இரண்டாம் பாதியில் நட்டியும் நடிப்பில் மாஸ் காட்டுகிறார். இவர்களுடன் சிங்கம் புலி, முனிஷ்காந்த், அருள்தாஸ், அபிராமி ஆகியோரும் நடிப்பில் கவனம் ஈர்க்கின்றனர். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கின்றன.
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
சலூன் கடை வைத்திருக்கும் நாயகன் அந்த நாயகனுக்கு ஒரு பிரச்சனை தன்னுடைய குப்பைத்தொட்டி காண வில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் கொடுக்கிறார் புகாரை ஏற்காத அருள் தாஸ் அவரை விரட்டி விட விஜய் சேதுபதி உண்மையிலேயே குப்பைத்தொட்டி காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாரா ?என்று போலீசாருக்கு ஒரு சந்தேகம்!
நட்டியிடம் விஜய் சேதுபதி அழைத்து வருகிறார்கள் நட்டியும்விஜய் சேதுபதி சொல்வதைக் கேட்டு கடுப்பில் அவரை வெளியே அனுப்ப சொல்கிறார் ஆனால் விஜய் சேதுபதி போலீஸ் ஸ்டேஷனை உண்டு இல்லை என்று பண்ணுவதை பார்த்து போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்கள் நடுங்க இப்படி விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை ஆரம்பத்திலிருந்து இடைவேளை வரை எவ்வளவு ஸ்ட்ராங்காக உறுதியாக காட்ட மட்டுமே கவனம் செலுத்தி இருக்கிறார் இயக்குனர்.
விஜய் சேதுபதி என்ன சொல்ல வருகிறார் என்ன செய்கிறார் என்பது இடைவேளை க்கு பிறகு சொல்லப்படும் கதையில் சிங்கம் புலி அனுராக் காஷ்யப் பாய்ஸ் மணிகண்டன் வினோத் வருகிறார்கள் அவர்கள் ஏன் வருகிறார்கள் அவர்களுக்கும் விஜய் சேதுபதியும் என்ன தொடர்பு என்பதை சொல்கிறது இந்த படம்
இந்த படத்தின் கதையை எந்த படத்தில் இருந்து சொன்னாலும் அது தெரிந்துவிடும் என்பதால் மிக கவனமாக நாமும் இந்த விமர்சனத்தில் கையாள வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு காட்சியும் யூகிக்க முடியாத அளவுக்கு இயக்குனர் செதுக்கி இருக்கிறார் ஒவ்வொருவரின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது விஜய் சேதுபதி இளமை வயது முதல் ஒரு குழந்தைக்கு தந்தையாகும் வரை காட்டப்படுகிறார் அவருடைய மேனரிசம் அவருடைய ஒப்பனை எல்லாமே ரசிக்க வைக்கிறது அதற்கடுத்தபடியாக இந்த படத்தில் நட்டி போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஆரம்பத்தில் பணத்துக்காக ஆசைப்படும் வில்லனாக அவரைக் காட்டப்பட்டாலும் பின்னால் மனிதநேயம் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியாக வந்து மனதில் பதிகிறார் மம்தா மோகன் தாஸ், அபிராமி, இருவரும் சப்போட்டிங் கேரக்டரில் நடித்திருக்கிறார்கள் விஜய் சேதுபதிக்கு உதவி செய்பவராக வருகிறார் அபிராமி தன்னுடைய கணவன் ஒரு குற்றவாளி என தெரிந்த பிறகு அவரை வெறுக்கும் கதாபாத்திரத்தில் உயர்ந்து நிற்கிறார் இதையடுத்து இந்த படத்தில் பேசப்படுபவர் மணிகண்டன் இவர் பாய்ஸ்படத்தில் ஒரு டீன் ஏஜ் நடிகராக வந்த மணிகண்டன் இந்த படத்தில் ஒரு கொடூரமான முகத்துடன் வருகிறார் குருரமான நடிப்பு வாழ்த்துக்கள் மணிகண்டன்
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எழுந்து நின்று கைதட்டும் அளவுக்கு கிளைமாக்ஸ் காட்சி அருமையாக இருக்கிறது ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை என்ன நடக்கிறது கதை எங்கே போகிறது விஜய் சேதுபதி? யார் அனுராதா காஷ்யப் யார்? மணிகண்டன் யார்? என்று கேள்வி மேல் கேள்வி எழுகிறது! எல்லாவற்றிற்கும் இடைவேளைக்கு பிறகு பதில் வருகிறது பாரதிராஜா ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார் முனிஸ்காந்த் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியாக வந்து மனதில் நிற்கிறார் சிங்கப்புலி எத்தனையோ படங்களில் அவரை பார்த்திருப்போம் காமெடி என்ற பெயரில் அவர் கழுத்தறுப்பார் இந்த படத்தில் உருப்படியாக நடித்தி ருக்கிறார் சிங்கம் புலிக்கு வாழ்த்துக்கள்
ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள் நிச்சயம் ஒரு வெற்றி படத்துக்குண்டான அத்தனை பார்முலாவும் டெக்னீசியன் குழுவில் இருந்து வந்திருக்கிறது படத்தில் ஒப்பனையாளர்களும் சரி எல்லோருமே ஒரு நல்ல வெற்றி படத்தை கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் கள் ஒரு நல்ல கதை நிச்சயமாக எல்லோரையும் உள்வாங்கிக் கொள்ளும் நல்ல படைப்பை கண்முன்னே கொண்டு வந்து கொடுக்கும் அந்த வகையில் இயக்குனர் நித்திலன் அருமையான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்
2017ல் குரங்கு பொம்மை என்ற படத்தை கொடுத்த இவர் 7 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல சினிமாவை கொடுத்திருக்கிறார் பத்திரிகையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள் ரசிகர்கள் அதே போல கைதட்டி ரசிப்பார்கள்
சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.தயாரிப்பாளருக்கு
வாழ்த்துக்கள் ஒரு நல்ல கதையை தேர்வு செய்து கொடுத்ததற்காக முதல் பாதி முழுக்க ஒரு டார்க் காமெடி படம் போலவே போய்க்கொண்டு இருந்த படம் இன்டர்வெல் பிளாக் லிருந்து கதையின் போக்கு மாறி விடுகிறது
கடைசி இருபது நிமிசம் ஸ்க்ரீன் ப்ளேவின் உச்சம். மொத்த படத்தின் ஸ்க்ரீன் ப்ளேவும் செம ஸ்மார்ட் என்பது வேற! படத்தில் நடித்த அத்தனை பேரும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள்.
சேதுவுக்கோ, இயக்குனருக்கோ தேசிய விருது நிச்சயம். வாழ்த்துகள் டீம்…
பெண் பிள்ளைகளைப் பெற்ற மகாராஜாக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். டோண்ட் மிஸ் இட்.இந்த படத்தின் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்த தொகுப்பாளர், அரங்க அமைப்பாளர், ஒப்பனையாளர், மற்றும் கலர் கரெக்ஷன், டி ஐ ,
என பணிபுரிந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்கள்
அம்முவாக நடித்திருக்கும் அந்த பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறது
இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ள மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா சாருக்கு நாசர் சாருக்கும் வாழ்த்துக்கள்.
மகாராஜா அரண்மனை ஆட்சி அதிகாரம் எதுவும் இல்லாமல் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்சி செய்கிறார்.
