மாணிக்க வித்யா இயக்கத்தில் உமாபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் பித்தளை மாத்தி படத்தின் விமர்சனம்.
Casting : Umapathy Ramaiah, Samskruthi, Thambi Ramaiah, Bala Saravanan, Vinudha Lal
Directed By : Manika Vidya
Music By : Moses
Produced By : Sri Saravana Film Arts – G.Saravanaa
செம காமெடி கலகலப்பான படம்
வாகனம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வரும் நாயகன் உமாபதி ராமையாவுக்கு, சலவை மற்றும் உலர் சலவை நிறுவனம் நடத்தி வரும் நாயகி சம்ஸ்கிருதி மீது காதல் வருகிறது. பிறக நாயகன் மூலமாகவே நாயகிக்கு பிரச்சனை வர, அந்த பிரச்சனையில் இருந்து நாயகன் நாயகியை எப்படி காப்பாற்றுகிறார், என்பதை காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது தான் பித்தளை மாத்தி படத்தின் கதை.
காதல் கலகலப்பாக விறுவிறுப்பாக இருக்கிறது படம்
நாயகன் உமாபதி ராமையா சண்டைக்காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் உற்சாகத்தோடு செயல்படுகிறவர், நடிப்பிலும் குறையில்லாமல் தன் வேலையை செய்திருக்கிறார்.
நடனம் சன்டை காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்
நாயகி சம்ஸ்கிருதி இளமை ததும்பும் அழகோடு ரசிகர்களை கவர்வதோடு, தனது துள்ளல் நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடிக்கிறார்.பாடல்காட்சியில் செம அழகு
இளைஞர்கள் விருப்பங்கள் அதிகம் இருக்கும்
உமாபதியின் அப்பாவாக நடித்திருக்கும் அவரது ஒரிஜினல் அப்பாவான தம்பி ராமையா, தனது ரெகுலர் காமெடியோடு பயணித்திருக்கிறார்.
வில்லியாக நடித்திருக்கும் வினுதா லால் அதிரடியான நடிப்பால் அமர்க்களப்படுத்துகிறார். பால சரவணனின் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு நம்மை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.
தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, விதுலேகா, சேரன் ராஜ் என அனைவரும் கொடுத்த வேலை சரியாக செய்து விட்டு போகிறார்கள். சில காட்சிகளில் வரும் மதுரை முத்து, ஜார்ஜ் ஆகியோரது காட்சிகளால் ஓரளவு சிரிக்க முடிகிறது.
மோசஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறும் பயணித்துள்ளது. எஸ்.என்.வெங்கட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
பாடல் காட்சிகள் நடன காட்சிகள் காமெடி என எல்லாமே கலந்து கட்டி படமாக்கி இருக்கிறார் இயக்குனர்
வழக்கமான கதை தான் என்றாலும், அதை காமெடி உள்ளிட்ட கமர்ஷியல் மசாலாவை கலந்து பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் மாணிக்க வித்யா, பாராட்டலாம்
தயாரிப்பாளர் சரவணன் ஒரு நல்ல படத்தை தயாரித்து கொடுத்ததற்காக பாராட்டலாம் அவரது முயற்சி வெற்றி பெற கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது பித்தளை மாத்தி இளைஞர்களை தியேட்டருக்கு வரவழைக்கும்
