இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘பிதா’! படம் விறுவிறுப்பாக வும் கடத்தல் தொழிலை மையப்படுத்திய பரபரப்பாக எடுக்க பட்டுள்ளது வாழ்த்துக்கள்
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ். ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்காக அவருக்கு பாராட்டுக்கள்
காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் இருந்து எப்படி காப்பாற்றுகிறான்
என்பது ஒன்லைன்
நான்கு வருடமாக காதலித்த காதலி பிரிந்து போனதால் அந்த காதலன் கொலை செய்யும் அளவுக்கு எப்படி மாறுகிறான்
என்பது இன்னொரு கிளை கதை
தொழில் அதிபர்கள் வீட்டில் டிரைவராக வேலை செய்பவர்கள் பெரிய தொழிலதிபர்களிடம் எப்படி ஏமாற்றி நடந்து கொள்கிறார்கள்
தொழிலதிபரின் மனைவி மற்றும் அவரது குடும்பம் இவர்கள் எப்படி உஷாராக இருக்க வேண்டும் ஏமாற்றும் நபர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் சொல்கிறது இந்த படம்
ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர்
ரெட் ஹில்ஸ் அருகே ஐம்பதாயிரம் பேர் பங்கேற்ற அந்த திருவிழா கூட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு பரபரப்பாக இயங்கி படமாக்கி இருக்கிறார்இயக்குனர் எஸ்.சுகன்
. அவரது மகன் தர்ஷீத் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக தன் அக்காவை எப்படி காப்பாற்றுகிறார் புதுசாலித்தனமாக என்பதை அற்புதமாக நடிக்க வைத்திருக்கிறார்
ஆதேஷ் பாலாவும் அவரது கூட்டாளிகளான சாங்ஸ் மற்றும் மாரீசன் இவர்கள் மூவரும் படம் முழுக்க வந்து தப்பு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும் உயிரோடு வாழ முடியாது என்ற ஒப்பற்ற கருத்தை துல்லியமாக சொல்லி இருக்கிறார்கள் மூவரும் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர கடத்தல்
, கோயில் திருவிழா நண்பர்கள் நான்கு பேர் குடிப்பது, கடத்தப்பட்ட தொழிலதிபர் மனைவி கணவனை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கிறார்
வில்லன் வேலை செய்யும் சாம்ஸ் மற்றும் மாரீசன் இவர்களின் நரித்தனம் என்ன
என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார் எஸ்.சுகன்.
ஆதேஷ் பாலா, வில்லனாக வந்து மிரட்டுகிறார்
25 கோடி பணம் வேண்டும் என்று அவர் ஏக்கத்துடன் பதற்றப்படுவதும் தன் கூட்டாளிகள் முட்டாள்கள் போல நடந்து கொள்வதும் படம் முழுக்க ஒரே டென்ஷன் மையமாக ஆதேஷ்பாலா தன் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
அடுத்து சாம்ஸ், இவர்தான் இந்த படத்தின் மெயின் கதாபாத்திரம் லூசுத்தனமாக ஆதேஸ் பாலாவின் மைத்துனனாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் தன் கோணங்கித்தனத்தால் சிரிக்க வைக்கிறார் நல்ல காமெடி நடிகர் இவருக்கு வாழ்த்துக்கள்
மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், மற்றும் அனு கிருஷ்ணா, பிதாலட்சுமியாக படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்திருக்கிறார் அவர் பரந்த உள்ளத்திற்கு பாராட்டுக்கள்
ரெஹனா, வில்லியாக வந்து மிரட்டுகிறார் கடைசி நேரத்தில் இவர் காட்டும் அதிரடி டுவிஸ்ட் அடங்காத ஆட்டம்
மாரீஸ் ராஜா, சாம்ஸ் இருவரும் சேர்ந்து கவுண்டமணி செந்தில் போல கல கலப்பை ஏற்படுத்துகிறார்கள்அருள்மணி இவர்தான் தொழிலதிபர் 25 கோடி ரூபாய் நண்பர் கொடுத்ததை வீட்டில் வைப்பதால் அவர் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது
இப்படி எல்லா கதாபாத்திரங்களும் கதையோடு ஒட்டி வருவது சிறப்பு
எஸ்.சுகன் விறுவிறுப்பாக மங்காத்தா, சூது கவ்வும் பாணியில் இயக்கியுள்ளார்.
23 மணி நேரத்தில் இப்படி ஒரு விருவிருப்பான கிரைம் திரில்லர் ஜானரில் படமாக்குவது மிகவும் சிரமம் அதை சிரமப்பட்டு எல்லோரிடம் வேலை வாங்கி சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறார் இயக்குனர்
வசனம் பாபா கென்னடி,
வசனம் ரசிக்க வைக்கிறது
ஒளிப்பதிவு இளையராஜா,
திருவிழா கூட்டம் பிரமாண்டமான முறையில் படமாக்கி இருக்கிறார்
இசை நரேஷ்,
பின்னணி செய்யும் இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது
எடிட்டர் ஸ்ரீவர்சன்,
கச்சிதமான படத்தொகுப்பு
கலை கே.பி.நந்து,
ஒரே வீட்டில் கதையை நடப்பதால் அந்த வீட்டை நன்றாக வடிவமைத்திருக்கிறார் ஆர் ட்டைரக்டர்
மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்,
மக்களிடம் எந்த அளவுக்கு இந்தப் படத்தை கொண்டு போய் சேர்க்க முடியுமா அந்த அளவுக்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் மக்கள் தொடர்பாளர் அவருக்கு வாழ்த்துக்கள்
தயாரிப்பு எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ்,
ஒரு நல்ல படத்தை நல்ல கருத்தை திரையில் சொல்லி பாராட்டை பெறுகிறார்கள் தயாரிப்பாளர்கள்
‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ ஜெனீஷ், இந்த படத்தை வெளியிடுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள் தமிழ் சினிமாவில் தரமான படங்களை ஆதரிக்கும் ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை ஆதரிப்பார்கள்
