பெஸ்ட் டைட்டில் சீன், பெஸ்ட் கிளைமாக்ஸ், பெஸ்ட் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கம்
ராயன் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக வந்திருக்கிறது . இப்படத்தின் கதையை 14 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டாராம் தனுஷ். இதைத்தான் முதல் படமாக அவர் இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இப்போது இந்த படத்தின் வெளியீடு சரியாக இருக்கிறது
. அவரின் 50 வது திரைப்படமாகவும் அமைந்திருக்கும் இந்தப்படத்தில் அவருடன் இணைந்து சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
கதை களம் என்ன
பெற்றோர் இல்லாமல் தனது தன் தம்பிகளான சந்தீப் கிஷான், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை வளர்த்து வருகிறார்.
கேங்ஸ்டர் வளையத்துக்குள்
சிக்க கூடாது என்று பொருமையாக அமைதியாக தன் தம்பிகளுக்கு அறிவுரை சொல்லி வளர்த்து வருகிறார்
ஆனால் காலம் நாம் நினைப்பது போல் நடப்பதில்லை வாழ்க்கை சில நேரம் திசை மாறி போக உறவுகள் காரணமாக அமைந்து விடுவது உண்டு அப்படி தன் தம்பியால் முத்துவேல்ராயனால் தனுஷ் குடும்பத்துக்கு ஏற்பட்ட விபரீதம் என்ன கேங்ஸ்டர் ஆன எஸ் ஜே சூர்யா வுக்கும், சரவணன் இருவருக்கும் இடையே தனுஷ் எப்படி சிக்குகிறார் அதிலிருந்து மீண்டு வந்தாரா தன் தம்பி தங்கைகளை காப்பாற்றினாரா? செல்வராகவன் உதவி செய்யும் அந்த நல்ல மனிதரை காப்பாற்றினாரா? போலீஸ் அதிகாரியான பிரகாஷ்ராஜ் சூழ்ச்சியில் தனுஷ் எப்படி சிக்கினார் அதிலிருந்து மீண்டாரா தனுசை
என்கவுண்டர் செய்ய நினைக்கும் பிரகாச ராஜிடம் இருந்து தனுஷ் எப்படி தப்பினார்? தங்கை துர்கா அவர் திருமணத்தை நடத்தி வைத்தார் இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த ராயன் திரைப்படம்
படம் ரத்தக்களறியாக வெறித்தனமாக உள்ளது.
இரண்டாம் பாதி வெறித்தனத்தின் உச்சம். டைட்டில் கார்டு மற்றும் தனுஷின் எண்ட்ரி மெர்சலாக உள்ளது. இண்டர்வெல், கிளைமாக்ஸ் காட்சிகள் அனல் பறக்கிறது
சும்மா கிழி கிழி: இப்படத்தில் தனுஷ் ஒரு புது அவதாரம் எடுத்து திரும்பவும் வந்துள்ளார். இரண்டாம் பாதி சும்மா கிழிகிழினு கிழிச்சிட்டாரு
. ஏ. ஆர்.ரஹ்மானின் பிஜிஎம் அட்டகாசமா இருக்கு.
குறிப்பாக உசுரே பாடல் வேறு ஒரு உலகத்திற்கே நம்மை கொண்டு சென்றுவிட்டது. இந்த படத்தை தனுஷின் நடிப்புக்காக பார்க்கலாம். தனுஷ் எப்படிப்பட்ட நடிகர் என்று நமக்கு தெரியும், அசுரன் படத்திலேயே தனது அசுரத்தனமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இந்த படத்தில் வேற வேற லெவல்….
. தனுஷ் நடித்த புதுப்பேட்டை, வடசென்னை படத்தை தாண்டி ராயன் படம் இருக்கு, தனுஷின் திரைப்பயணத்தில் இந்த படம் தவிர்க்க முடியாத படமாக மாறி இருக்கு, நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் ஜெயித்துவிட்டார் தனுஷ்.
வாழ்த்துக்கள் ராயரே
ஏஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. தனுஷின் நடிப்பை தாண்டி எஸ்ஜே சூர்யா திரையில் தெறிக்க விட்டு பார்த்து செதுக்கிய தனுஷ்! திரையரங்கில் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!
தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கின்றார். தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறிய தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகின்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து தன்னுடைய 50வது திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்தும் வெற்றி கோட்டையில் கொடி நட்டு உள்ளார்
படத்தின் திரைக்கதை ஜெட் வேகத்தில் போகிறது ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் கதை எழுதி இருக்கிறார் தனுஷ்
ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட மூஞ்சு, ராயன் ரம்பல் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
தனுஷ். தம்பிகளாக சந்தீப் மற்றும் காளிதாஸ்,
இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர் அண்ணனிடம் பவ்யமாக நடப்பது எதிரிகளை விலாசுவது காதலியிடம் சந்தேகம் ரொமான்ஸ் செய்வது காளிதாஸ் கடைசி தம்பியாக கச்சிதமாக நடித்திருக்கிறார் இருவருக்கும் செம பொருத்தம்
தங்கையாக துஷாரா தனக்கு கொடுக்கப்பட்ட கதா பாத்திரத்தை துல்லியமாக கடத்தி இருக்கிறார்கள்
துர்கா என்ற கதாபாத்திரத்தில் பாசமலராக அண்ணனுக்கு ஒன்று என்றால் உயிரையே கொடுக்கும் அன்பு தங்கையாக நம் மனதில் இடம் பிடிக்கிறார் இப்படி ஒரு தங்கை இருந்தால் எந்த அண்ணனும் ஜெயிப்பான் பாசத்தோடு வாழ்வான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அண்ணன் தங்கை பாசப்பினைப்பை இந்த படத்தில் பார்க்க முடிந்தது வாழ்த்துக்கள் துஷாரா
போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜு
என்ன ஒரு நரித்தனம் என்ன ஒரு சூழ்ச்சி தன் அப்பாவை கொன்றவர்களை எப்படி இவர் சம்பந்தப்படாமலே தீர்த்து கட்டுகிறார் என்பது சுவராசியமான எபிசோடு இந்த காட்சிக்கு பிரகாஷ்ராஜ் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை படத்தில் இமயம் போல் எழுந்து நிற்கிறார் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கூட அவர் நடிப்பு அற்புதமாக இருக்கிறது
வில்லனாக எஸ். ஜே. சூர்யாவும், சரவணனும்,
நடிப்பில் நெஞ்சில் நடுக்கத்தை உண்டாக்கி இருக்கிறார்கள்
பாஸ்ட் புட் ஹோட்டல் நடத்தி, அண்ணனாக மட்டுமல்லாமல், ஒரு அப்பாவாகவும் இருந்து, தன் இரு தம்பிகளையும், தங்கையையும் கண்ணும் கருத்துமாக பார்த்து வளர்த்து வருகிறான் காத்தவராயன்.
இதுதான் மெயின் கதையாக இருந்தாலும்
இதற்கிடையே, அவனின் இரண்டாவது தம்பி முத்து குடித்து விட்டு, அடுத்தடுத்து பிரச்சினைகளை இழுத்து வருகிறான். அப்படி வரும் ஒரு பிரச்சினையில், ஏரியாவில் முக்கிய புள்ளி ஒருவனின் மகன் கொல்லப்படுகிறான்.
இது இரண்டாவது மெயின் கதையாக இருந்தாலும்
அதற்கு பழி தீர்க்க அந்த கும்பல் முத்துவை கொலை செய்வதற்கு முன்பாக, ராயன் அந்த கும்பலை ஒட்டு மொத்தமாக முடித்து விடுகிறான்.
இது கதை தொடங்குவதற்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்லும் அளவுக்கு தெளிவாக இருக்கிறது அடுத்து
அவன் எடுத்த கத்தி அவனை எங்கு கொண்டு நிறுத்தியது?.. இறுதியில் அவன் செய்தது என்ன?
இதற்கிடையில், பெரும் திட்டத்துடன் களமிறங்கும் போலீஸ் அதிகாரி செய்தது என்ன? இந்த களேபரத்திற்கு நடுவே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ராயன் தங்கை கல்யாணம் நடந்ததா? என்பதை சரியாக முடிச்சுகள் போட்டு அவிழ்த்து உள்ளார் இயக்குனர் தனுஷ்
நடை, உடை, பாவனை என அனைத்திலும் கறார் அண்ணனாகவும், உறவுக்கு ஒன்று என்றால் திமிறி எழும் அசுரனாகவும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் நடிகர் தனுஷ்.
அண்ணன் செல்வராகவனுக்கு தனுஷ் செலுத்திய கவனம் படத்தில் ஹைலைட்டாக தெரிகிறது. செல்வராகவனின் நடிப்பு ஆரம்பத்தில் அடைக்கலம் கொடுப்பதில் இருந்து கடைசி வரை கைதட்டல்களை அள்ளுகிறது
: படத்தின் ஆர்ட் டைரக்டர் கடுமையான உழைத்து இருக்கிறார் அவரின் பங்களிப்பு படத்தில் நன்றாக தெரிகிறது
அடுத்து காஸ்டியூமர், மேக்கப் மேன், கலர் கரெக்ஷன் ,சிஜி, மற்றும் சண்டைக் காட்சிகள் என அனல் பறக்கிறது
ஒவ்வொரு காட்சியிலும் கதையோடு கேமரா ஒன்றி போயிருக்கிறது
வடசென்னை கோரமுகம் கொண்ட ஏரியா என்பதை கேமரா தன் கோணத்திலேயே வைத்து பயமுறுத்துகிறார்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
எந்த இடத்திலும் லேக் ஆகாமல் கதையை கச்சிதமாக கொண்டு சென்றதில் படத்தொகுப்பாளரின் பங்கு பாராட்டத்தக்கது
கதை வசனம் எழுதி இருக்கிறார் தனுஷ் பாராட்டுக்குரிய இயக்கம்
நல்ல கதையை தேர்வு செய்திருக்கிறார் வெற்றி நிச்சயம்
