CAST
Yogi babu as Kumaran
Gouri G Kishan as Lakshmi
M.S.baskar as Muthaiya
Chinni jeyandh as Narayanan
Madhumitha as Vijaya
Sha Ra as Raja
Jessi as Irwin Domas
Kullapuli Leela as Muthumari
Akshath as Mahesh
.
கதைக்களம்:
1943ம் ஆண்டு கதைக்களம்
ஹிட்லரின் ஆதரவு நாடாக இருந்த ஜப்பான் குண்டு மழை பொழிந்து மற்றவர்களை அச்சுறுத்தி வந்த சூழலில், சென்னை ஆறு மாதம் முடங்கி கிடக்கிறது கடற்கரையோரம் உள்ள வெள்ளையர்களின் முகாமில் தீடீரென குண்டு வீசப்போகிறார்கள் ஜப்பான் விமானம் பறக்கிறது
என்ற தகவல் அடுத்து, மக்கள் பதற்றத்தில் தப்பியோடுகின்றனர்.
அந்த முகாமில் கைதியாக உள்ள தனது தம்பியை விடுவித்து அழைத்துச் செல்லும் மீனவர் குமரனும், அவனது பாட்டியும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்களது படகில் கடலுக்குள் தப்பிச் செல்கின்றனர். அப்போது 6 பேர் எம் எஸ் பாஸ்கர், மதுமிதா,சின்னி ஜெயந்த்,கௌரி,சாம்ஸ் , உட்பட 6 பேர் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் ஏறிக்கொள்கின்றனர்.அந்தப் படகு நடுகடலை நோக்கி புறப்படுகிறது
நடுக்கடலில் உயிர் பயத்தில் 9 பேர் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் சந்திக்கும் இடர் என்ன? அந்த பேரிடரில் இருந்து அவர்கள் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் என்ன? படகில் இருக்கும் தீவிரவாதி யார்? உயிர் பிழைப்பதற்காக ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மிருக குணம் அவர்களை எப்படி மாற்றுகிறது? அந்த தீவிரவாதியிடம் இருந்து எப்படி தப்பித்தனர்?
இதற்கு இடையில் நான் மெட்ராஸ்காரன், என்று யோகி பாபு மாறுதட்டிக் கொள்வது, நான் மயிலாப்பூர் காரன் என்று சின்னிஜெயந்த், பெருமை பேசிக்கொள்வதும்
நையாண்டி அரசியல்
இதற்கிடையே வெள்ளைக்காரன் ஒருவன் படகில் ஏறிக்கொள்ள
கதை சூடு பிடிக்கிறது எம் .எஸ். பாஸ்கர் தீவிரவாதி யார் என்று துப்பறியும் கோணத்தில் தான் ஒரு சிஐடி என்று அடையாள அட்டையை காட்டுகிறார் அப்பொழுது படகுகள் ஒரு எலியும் வருகிறது
அந்த எலி யோகி பாபு பாசமாக வளர்க்க, படகுக்குள் ஓட்டை, விழுந்து தண்ணீர் உள்ளே வருகிறது.
அடிக்கடி சுறா வந்து இவர்களை பயபடுத்துகிறது மழைக்கால மேகம் திரண்டு கொண்டிருக்கிறது
இப்படி பல்வேறு சிக்கலுக்குள் சிக்கிய இந்த ஒன்பது பேரும் எப்படி மீண்டனர் என்பதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன்
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அவர் போடும் டைட்டில் கார்டு அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கதைக்களம் நகர்கிறது என்றால் அதற்கான திரைக்கதை வலுவாக இருந்தால் மட்டுமே படத்தை சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் சிம்புதேவன் இந்த சிக்கலான கதைக்களத்தில் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றுள்ளார்.
படத்தில் வசனங்கள் கைதட்ட வைக்கிறது யோகி பாபு சின்னி ஜெயந்த்தும் மாறி மாறி பேசிக் கொள்ளும்போது எம் எஸ் பாஸ்கர் இருவருக்கும் நாட்டாமையாக மாறி பஞ்சாயத்து தீர்ப்பு கூறுவது சுவாரசியம்
ஒரே ஒரு படகில் குமரனாக வந்து தனது அசத்தலான மற்றும் யதார்த்தமான நடிப்பால் யோகி பாபு நம்மை கவர்கிறார். நூலகராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் படத்தில் யோகிபாபுவிற்கு பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் ஆகும். நடுக்கடல், படகு என்ற ஒரே லொகேஷனில் சலிப்பு தட்டாமல் கதைக்களத்தை நகர்த்தியதில் வசனத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
கௌரி அழகாக இருக்கிறார் நன்றாக நடத்தி இருக்கிறார் இந்த சிறுவன் கூட நடிப்பில் ஸ்கோர் செய்கிறான்
1943 காலகட்டத்தில் நடைபெற்றாலும் அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் இன்றைய காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அலசியுள்ளது. படத்தின் முதல் பாதியில் படத்தை தாங்கி நிற்பதே வசனங்கள்தான். இன்று நாம் சந்திக்கும் சிக்கல்களை பேசியிருப்பதும், இன்றும் மனிதர்களிடம் இருக்கும் சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை விலாவரியாக அழகாக ரசிக்கும் வண்ணம் வசனமாக எழுதியுள்ளனர். கடல் அவ்வளவு அழகாக இருக்கிறது அதில் பறந்து செல்லும் பறவைகள் புதிதாக செல்லும் மீன்கள் என ரசிக்க வைக்கிறது
படம் ஆரம்பத்திலிருந்து ஒரு மணி நேரம் நான்கு மணி நேரம் 6 மணி நேரம் என்று டைட்டில் கார்டில் போடும் அந்த புதுவித யுத்தி கண்டிப்பாக ரசிக்கலாம் ஒன்பது பேரில் மூன்று பேர் படத்தை விட்டு கடலுக்குள் குதித்தால் மட்டுமே மீதமுள்ள ஆறு பேரும் தப்பிக்கலாம் இல்லையென்றால் எல்லோரும் கடலுக்குள் தான் செல்ல வேண்டும் என்று யோகி பாபு கூறும்போது யாரும் அதற்கு தயாராக இல்லை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்படுத்தி விருவிருப்பை கூட்டி இருக்கிறார் இயக்குனர்
: இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.படத்திற்கு மிகப்பெரிய பலம்
கௌரி கிஷான், எம் எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த். ஜெஸ்ஸி போஸ் ஆலன், சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா. ஷ்ரா என இவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது.
இயக்குனர் சிம்புதேவன்
இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், புலி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், கசடதபற உட்பட சில படங்களை இயக்கியவர் இந்த படத்தின் மூலம்
ஒரு வெற்றி இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்
இவர் இயக்கியுள்ள , ‘போட்’. ஐந்து மொழிகளில் வெளியாகிறது இந்தப் படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிக்கிறார்
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் ஒளிப்பதிவு சொல்லலாம் அந்த அளவுக்கு ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது. படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது சி ஜி ஒர்க் ,மற்றும் ஒப்பனை எல்லாமே படத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
எல்லோரும் படகில் ஒரே உடையில் இருக்க யோகி பாபு மட்டும் அடிக்கடி சட்டையை மாற்றிக் கொண்டு வருகிறார் இது ஏன் என்று புரியவில்லை
மொத்தத்தில் இந்த போட் அரசியல் பேசுகிறது சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டருக்கு அப்பால் கொண்டு போய் குடி வைக்கும் பூர்வீக மக்களை பற்றி பேசுகிறது
சுதந்திர த்திற்கு முன் நாடு எப்படி இருந்தது என்பதை பேசுகிறது
சுதந்திரப் போரில் நமது முன்னோர்கள் எப்படி பாடுபட்டார்கள் அவர்களை இப்போது எப்படி டெல்லியில் இருப்பவர்கள் மறக்கடிக்கப்படுகிறார்கள் என்பதையும் பேசுகிறது.
மொத்தத்தில் இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும்
CREW:
Production Company – Maali and Maanvi Movie Makers & Chimbudeven Entertainment
Producer – Prabha Premkumar
Co-Producer – C.Kalaivani
Writer & Director – Chimbudeven
Music – Ghibran
DOP – Madhesh manickam
Production Design – T.Santhanam
Editor – Dinesh Ponraj
Art director – S.Ayyappan
Executive Producer – Vel.Karuppasamy
Make up – Pattanam Rasheed
Costumer – Sai – Shiva
Colorist – G.Balaji
Vfx –DTM Lavan Kusan
Stunts- Sakthi Saravanan
Sound Design and Mixing – S.Alagiakoothan – Suren.G
Publicity Designer – Bharanidharan Natarajan
Co Directors – Vel.Karuppasamy – Bala Pandian – Yatra Srinivassan
Associate Director – Demurra
Assistant Directors – Naveen,Pa.Krish,Nishanth,Gangadharan, Siddharth
Production Executive – S.Krishnaraj
PRO – Nikil Murukan
