மின்மினி” திரை விமர்சனம் (2024)

(பகைமை என்ற திரை விலகினால் அங்கே நட்பு ஆரம்பமாகும்) - ரேட்டிங் 4/ 5

ஒருவர் மீது நாம் பகைமை காட்டுவது எதனால் அங்கு அன்பு இல்லாததால் எனவே நாம் அனைவர் இடத்தில் அன்பு செலுத்த வேண்டும் எப்போதும் யார் வாழ்க்கை தொடங்கும் முடியும் என்று யாருக்கும் தெரியாதுஎன்பதை வலியுறுத்தும் கதை.,

கதை களம்

பள்ளியில் படிக்கும் சபரி கார்த்திகேயன், பாரி ,இருவரும் ஒன்றாக படிக்கிறார்கள் பாரிக்கு, சபரி மீது லைட்டா பொறாமை,
சபரி, பாரி செய்வது எல்லாம் பொறுத்துக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் பாரியின் செயல் அத்துமீறுகிறது: நண்பன் என்ற பெயரில் சபரி, அதையும் பொறுத்துக் கொள்கிறான். பகை விலகும் போது நட்பு அரங்கேறும் என்று ஒரு புத்தகத்தில் படிக்கிறான் அதே சமயம் பாரி செய்த செயலால் சபரி உடல் நிலை சரியில்லாமல் போக அதற்கு காரணம் தான் என்று சபரி மனம் வருந்தி சபரிக்கு அவன் நண்பன் மூலம் சாக்லெட் கொடுக்கிறான்.

அடுத்த நாள் பஸ்ஸில் போகும்போது பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடிக்கிறது
தீப்பிடித்த பஸ்ஸிலிருந்து அனைவரையும் காப்பாற்றி விட்டு, பாரி கீழே குதிக்கும் பொழுது, தலையில் அடிபட்டு இறந்து போகிறான். சபரியின் உயிரை காப்பாற்றிய பாரியின் நினைவாகவே வாழ்கிறான்
சபரி பாரியின் இலக்கு என்ன ,
என்று கண்டுபிடித்து நண்பனுக்காக தன் கடமையை நிறைவேற்ற புறப்படுகிறான்

: இன்னொரு புறம் எஸ்தர் மருத்துவமனையில் இருந்து உடல் நலமாகி, பாரி படித்த பள்ளியில் படிக்க வருகிறார்
அது ஏன் சஸ்பென்ஸ்
அதே பள்ளியில் படிக்க வருகிறார்

படிக்க வந்த பிறகு சபரியை பின் தொடர்கிறார் சபரி,பாரியின் மீது, அளவற்ற பாசம், வைத்திருப்பதைக் கண்டு அவனை சந்தித்து பேச பலமுறை முயற்சி செய்கிறார். ஆனால் முடியவில்லை காலம் மாறுகிறது எட்டு வருடங்கள் உருண்டு ஓடுகிறது.

இடைவேளைக்கு பிறகு படம் முழுக்க இம்ச்சலாவில் உள்ள மலை பிரதேசங்களில் நடக்கிறது 21 நாட்கள் அங்கு தங்கி படமாக்கி இருக்கிறார்கள் காட்சிகள் ஒவ்வொன்றும் கண்களுக்கு அவ்வளவு குளுமையாக இருக்கிறது. எஸ்தரும், நாயகனும் ஒருவரை ஒருவர் யார் என்றே தெரியாத சூழ்நிலையில் பயணம் செய்கிறார்கள் ஆனால் எஸ்தருக்கு சபரி ,யார் என்பது தெரியும் ஆனால் சபரிக்கு தெரியாது. ஒவ்வொரு முறையும் பிரச்சினை ஏற்படும் போது சபரி காப்பாற்றுவது, அந்த மலை மீது வாழும் மக்கள் மீது அன்பு செலுத்துவது, குழந்தைகளை கொஞ்சுவது, மூத்த குடிமக்கள் கொடுக்கும் டீயை அருந்துவது ,
அந்த மலை மீது கரடு முரடான பாதையில் செல்லும் பொழுது நாயகன் ,எஸ்தரை காப்பாற்றுவது, என பயனளிக்கிறது

எஸ்தருக்கு இதயமூச்சு அடிக்கடி வாங்குவது ஏன்? என்ற சஸ்பென்ஸோடு பயணம் செய் கிறார்கள்

இடைவேளைக்குப் பிறகு பல வகையிலும் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறார் இயக்குனர் அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம் அவர்களின் அன்பு நாயகன் மீது நாயகம் மீது காட்டும் பாசம் எல்லாம் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒன்று
பொதுவாகவே தமிழ் சினிமாவில் இமாச்சல பிரதேசத்தில் படம் ஆக்கப்பட்டால் ஒரு பாடல் எடுப்பார்கள்அல்லது ஒரு சில காட்சிகள் எடுப்பார்கள் முதன்முதலாக இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க டாக்காவில் அபாயகரமான பள்ளத்தாக்கில் லொகேஷன் தேடித்தேடி ரசிகர்களுக்கு, எது பிடிக்குமோ அதை உள்வாங்கி சிரமப்பட்டு, இயக்குனர் இரண்டு வருடம் அங்கு ஆராய்ச்சி செய்து படக் குழுவை அழைத்து சென்று திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்.

அவருடைய திட்டமிடலுக்கு சரியான வெற்றி கிடைத்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஆங்காங்கே, சில துணை கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, அழகாக கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் .

அவருக்கு பக்கபலமாக இருந்து ஒளிப்பதிவில் ஸ்கோர் செய்திருக்கிறார் மனோஜ் பரமஹம்சா
படத்தின் ஆரம்பத்தில் சபரி மீது உள்ள பொறாமையால் பாரி, செய்யும் விஷயங்கள் ரசிக்க வைத்தாலும் என்ன இவன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. குளிக்கும் பொழுது பாத்ரூமுக்குள் வெண்ணீரை கொட்டுவது, கிளாஸ் ரூமில் ஸ்விங்கம் வைத்து சுண்டி விடுவது ,படுத்து இருக்கும் பொழுது சபரியை கொண்டு போய் பணி யில் படுக்க விட்டு விடுவது,
இப்படி ஒவ்வொரு காட்சியிலும் சிறுவர்கள் செய்யும் அந்த லூட்டி ரசிக்க வைக்கிறது.

படத்தின் நாயகன் பிரவீன் கிஷோர் சிறுவயதில் அழகாக இருக்கிறார். பொறுமை சாலியாக இருக்கிறார் .
பாரி கொடுக்கும் தொந்தரவுகளை தாங்கிக் கொண்டு, நண்பனுக்கு நல்லது செய், என்ற கோணத்தில் அமைதியாக இருக்கிறார் .
அது பார்ப்பதற்கு ரசிக்க வைக்கிறது .

எட்டு வருடம் கழித்து இளைஞனாகி, ஹிமாலயாவில் பைக் பயணம் செய்கிறார் படம் முழுக்க அதிகம் பேசாமலே நம்மை கவர்ந்து விடுகிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் அவரது மவுனம் எஸ்தர் யார் என்று அவர் தெரிந்து கொள்ள நினைக்கும் போது படம் பார்ப்பவர்களுக்கும் அந்த ஆம்பளை தூண்டி விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.

அடுத்து
கௌரவ காளை, இவர் தான் பாரி முகில் என்ற கதாபாத்திரத்தில் வந்து சின்ன வயதில் துருதுறுப்பாக நடித்தவர்
பெரிய வயதில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் முதல் பாதி முழுவதும் இவரை நம் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார். சபரிக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் போய் பார்த்து உருகுவது பிறகு சபரி பஸ்ஸில் மயங்கி கிடக்கும் பொழுது அவன் உயிரை காப்பாற்றுவது, இப்படி பல இடங்களில் மனதை தொடுகிறார் கௌரவ காளை
ஒரு ஸ்டைல் இவர் சல்யூட் யுவர் துருதுருப்பான நடிப்பு எல்லாமே ரசிக்க வைக்கிறது.

படத்தின் நாயகி எஸ்தர் அணில், இவர் இடைவேளைக்கு பிறகு இவர் வரும் காட்சிகள் அவ்வளவு கவித்துமாக இருக்கிறது. சபரியை பின் தொடரும் இவரது நடிப்பு, டயலாக் டெலிவரி ,காஸ்டியூம் எல்லாமே நன்றாக இருக்கிறது. 220 கிலோ கொண்ட பைக்கை இவர் ஓட்டி செல்வது ,அங்கங்கே இவருக்கு ட்ரெயினிங் கொடுத்து பக்கபலமாக ட்ரெயினர்கள் இருந்திருக்கிறார்கள். குளிர் பிரதேசம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். எஸ்தர்

21 நாட்கள் மழை பிரதேசங்களில், பைக் சவாரி செய்து நடித்திருக்கிறார்.
சபரி, பாரிக்காக தான் இந்த பயணம் முடிவில்லா பயணம் மேற்கொள்கிறார் என்று கண் கலங்குவது, பட்டர்ஃபிளை ஆராய்ச்சிக்காக வந்திருக்கிறேன் என்று சொல்வது, மலையாளி ஒருவர் தன்னிடம் தவறாக நடக்கும் பொழுது அவன் முகத்தில் வெண்ணீரை ஊற்றிவிட்டு தப்பிப்பது, சபரி நன்றாக ஓவியம் வரைவான் என்று சொல்லி அவனை மீண்டும் ஓவியம் வரைய சொல்வது, மின்மினி பூச்சிகளை கண்டு சபரி உடன் ரசித்து லயிப்பது, என எஸ்தர் ஒவ்வொரு காட்சிகளிலும் நம் மனதில் நிற்கிறார் அற்புதமான நடிப்பு

படத்தில் கடைசியில் பேசும் இவரது வசனம் மிகவும் திருப்முனையானது கண்களை குளமாக்கி விடுகிறார் எஸ்தர்.

சிந்து என்ற கதாபாத்திரம் பெங்களூரில் இருந்து நண்பர்களுடன் பைக் சவாரி வந்து, எஸ்தருக்கும், சபரிக்கும் ,பாலமாக இருக்கிறார் அவர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

மிக உயர்ந்த எல்லைப் பகுதிகளில் சூப்பர் லொக்கேஷன்களில் படமாக்கியிருக்கிறார்
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருப்பதுடன் முரளி கிருஷ்ணனுடன் இணைந்து .ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பாய் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்

ஏ ஆர் ரஹ்மான் மகள் கதிஜா
இசை அமைத்துள்ளார். பாடல்கள் மெலோடி பாடல்கள் ரசிக்க வைக்கிறது
படம் முழுக்கவே நட்பை பற்றியும் அன்பைப் பற்றியும் பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறது படத்தோட இசையும் இசையோடு பாடலும் மனதுக்கு இதமாக ரசிக்கும்படி வந்திருக்கிறது

இயக்குனர் ஹலிதா ஷமீம் சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ போன்ற படங்களை இயக்கியவர். கடந்த 2015ம் ஆண்டில் இவரது இயக்கத்தில் ‘மின்மினி’ என்ற திரைப்படத்தை தொடங்கி. குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதைகளத்தை என்பதால் படம் என்பதால், 2015-ம் ஆண்டு அந்த குழந்தைகளின் குழந்தைப் பருவம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கிவிட்டார். அதன் பிறகு அந்த குழந்தைகள் கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் இளம் பருவத்தின் தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டில் மீண்டும் ‘மின்மினி’ படத்தை எடுத்து உள்ளார்

இவரது சொந்த ஊர் தாராபுரம். கொடைக்கானலில் பள்ளிப்படிப்பையும் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். இவர் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்திரி மற்றும் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
ஒரு தரமான இயக்குனர் என்பதை படம் முழுக்க தன்னுடைய எதார்த்தமான பாணியில், இயக்கி உள்ளார்
பள்ளியில் ஏற்படும் நட்பு ,பொறாமை, மற்றும் ஈகோ, சக மாணவர்களிடம் ஏற்படும் அந்த கதைக்களமும் சரி அதற்கு பிறகு இமாச்சலப் பிரதேசத்தில் பைக் டூரிசம் செய்பவர்கள் மனநிலை, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை, இவை எல்லாம் கையில் தேர்ந்த இயக்குனராக அலசி இயக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு நல்ல கதை எடுத்துக்கொண்டு திரைக்கதை, எழுதி வெற்றி பெற்று இருக்கிறார் வாழ்த்துக்கள் மேம்

அவரின் இந்த முயற்சிக்கு திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்தது என்று சொல்லும் அளவுக்கு தெளிவாக இயக்கி இருக்கிறார்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில
ஆரம்ப காலத்தில் வரும் பள்ளிக்காட்சிகளாகட்டும், இடைவேளைக்கு பிறகு வரும் இமாச்சலப் பிரதேச மலை பிரதேச காட்சிகள் ஆகட்டும் எல்லாமே ரசிக்க வைக்கிறது ஒவ்வொரு லொகேஷன் தேடிச்சென்று ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதை கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் வாழ்த்துக்கள் சார்!

இப்படத்தில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் படத்தை ஒவ்வொரு காட்சியாக செதுக்கியிருக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும் படத்தொகுப்பாளரின் கைவண்ணம் நன்றாக தெரிகிறது படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு பாளரும் காரணம் என்பது உண்மை.
‘மின்மினி ‘இது தனது கனவுத்திரைப்படம்’ என்கிறார் ஹலிதா ஷமீம் எட்டு வருடங்கள் காத்திருப்பு என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று ஆறு மாதம் ஒரு வருடத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு போய் விடுவார்கள் தனது கனவு படம் என்பதால் இயக்குனரும் தயாரிப்பாளரும் மிகுந்த கவனம் எடுத்து பொருட் செலவு செய்து அதிக பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள் நிச்சயம் இப்படிப்பட்ட . படங்கள் வெற்றி பெற வேண்டும் அப்போது தான் தமிழ் சினிமாவில் தரமான பல படங்கள் உருவாகும்.
வடகிழக்கு மாநிலங்களில் நடப்பது போல காதலர்களுக்கிடையிலான கண்ணீரையும் சொல்கிறது
நாயகன் சபரி, பாரியின் நினைவாகவே இருக்க
சந்தோஷ் பிரதாப் தன் காதலியை தன்னோடு பைக்கில் பயணிக்கும் பொழுது கண் முன்னே இறந்து விடுகிறார் எனவே நான் இயற்கையிடம் என்னை ஒப்படைத்து விட்டேன் அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறேன் என்பார்
அந்த காட்சி சூப்பராக இருந்தது

அதைப் போலவே சபரியும் ,பாரியின் நினைவில் இருந்து மீண்டு வர நாயகி எஸ்தர் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவ்வளவு ரசனையாக இருந்தது.
படம் முழுக்க இயக்குனர் ரசித்து ரசித்து படம் ஆக்கி இருக்கிறார்
மனித உணர்வுகளை மென்மையான மயிலிறகால் தடவி விட்டிருக்கிறார். படத்தில் வன்முறை இல்லை
ஆபாசம் இல்லை படத்தின் தரம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக காமெடி வைக்கவில்லை ஆனாலும் படம் கமர்சியலாக இருக்கிறது கலகலப்பாக இருக்கிறது
இரண்டு மணி நேரம் 23 நிமிடம் போனதே தெரியாமல் படம் ரசிக்க வைக்கிறது மெல்லிய உணர்வுகளை மனித பாசங்களை சொல்லும் இந்த படம் ஒரு தரமான படம் நட்பின் வலியை சொல்லும் படம் முடிவில்லா பயணங்களை சொல்லும் படம் எங்கோ ஒரு மூலையில் நண்பர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நட்புகளை பற்றி சொல்லும் படம் நிச்சயம் கண்டு களிக்கலாம்

இந்த படத்தில் பங்கு பெற்ற தொழில் நுட்ப கலைஞர்கள்..
.. அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள் வாழ்த்துக்கள்!

: Writer & Director : Halitha Shameem
Starring : Esther Anil, Praveen Kishore, C.Gaurav Kaalai
Cinematographer : Manoj Paramahamsa ISC
Music Composer : Khatija Rahman
Editor : Raymond Derrick Crasta
Art Director : Tsering Gurmet Kungyam
Production Sound Mixer : Raghav Ramesh
VFX Supervisor : Linkin Livi
Sound Design : Alagiakoothan , Suren.G
Colorist : Nesikaa Rajakimaran
Re – Recording Mixers : S.Sivakumar , Krishnan Subramanian
Line Producer : Stanzin Dorjai Gya
PRO : Suresh Chandra & Abdul Nasar
Executive Producer : K.Jeyaseelan
Producers : Manoj Paramahamsa ISC , R. Murali Krishnan

இளம் நெஞ்சங்களில் இடம் பிடிக்கும் மின்மினி