RSSS பிக்சர்ஸ் தயாரிப்பில் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’

திரை விமர்சனம் - ரேட்டிங் 4/ 5

RSSS பிக்சர்ஸ் தயாரிப்பில் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’

சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” திரைப்படத்தின் இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் உருவான படம் ஒற்றை பனைமரம்

அவர் சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் கிளைமாக்ஸ் கட்சியில் உருக வைத்து விட்டார் என்று சொல்லும் அளவுக்கு இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்

கதை களம்

ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை,
அங்குள்ள மக்களின் வேதனையை வாழ்வாதாரத்தை சொல்கிறது.

சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கதையை 2012ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் .

யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடுகின்றன இப்படத்தில் வரும் காட்சிகள்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கிறார் இயக்குனர்.

நவயுகா (கஸ்தூரி)

என்ற முன்னாள் பெண் புலியாக நடித்திருக்கிறார் ஆரம்பக் காட்சியிலேயே சிங்களன் ஒருவன் அவரின் கற்பை சூறையாடும் அந்த காட்சி கண்களில் கண்ணீரை வர வைக்கிறது
வீர மரணம் அடைய நினைக்கும் கஸ்தூரியை ,சுந்தரம் தடுத்து அவரோடு கூட்டி வருகிறார் அப்பொழுது மூன்றாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு கிளி நொச்சி வருகிறார்கள்
மூவரும்

ஒரு யுத்தம் நடந்த சுவடே இல்லாமல் ஊரே வெறிச்சோடி கிடக்கிறது
அடுத்து என்ன செய்யப் போகிறோம் எப்படி வாழ போகிறோம் என்று சுந்தரமும், கஸ்தூரியும், இவர்களது மகளாக வரும் அஜாவும், நண்பர் மூலம் ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுகிறார்கள்

ஆனால் கஸ்தூரி அங்கு நடக்கும் துன்பங்களை கண்டு கலங்கி நிற்கிறார்

முன்னாள் பெண் போராளி விமலா என்பவர் இரண்டு குழந்தைகளின் பசியை தீர்க்க முடியாமல் விபச்சாரத்திற்கு போவதை கண்டு அழுகிறார்

தன்னோடு நாட்டுக்காக போராடிய சக கூட்டாளிகள் பெருமாள், மாற்றவர்கள் கேங்ஸராக இருப்பதைக் கண்டு துடிக்கிறார் .

நஸ்ரின் என்ற முஸ்லிம் பெண்ணை பார்த்து நாங்கள் முஸ்லிம்களுக்கு தவறு செய்து விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க கேட்கிறார்

வேலை கேட்டுட்டு போனால் அவர் முன்னாள் போராளியாக இருந்ததைக் கண்டு வேலை கொடுக்க மறுக்கிறார்கள் எதிரிகள் கூட பாசத்தோடு நடந்து கொள்கிறார்கள் ஆனால் நம்முடைய இனத்தை சேர்ந்தவர்கள் தான் நம்மை வாழ விட மாட்டார்கள் என்று குமுகிறார்

ஆறு மணிக்கு மேல் பெண்கள் நடமாட முடியவில்லை இளம் விதவைகள் 89 ஆயிரம் பேர் இதில் பல பேர் விபச்சாரியாக தள்ளப்படுகிறார்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது இதற்கு ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என்று கள்ளு குடிக்கும் இடத்தில் சுந்தரம் பேசுகிறார் அதில் ஒருவன் எதிரிகள் கைக்கூலி சுந்தரத்தை சிக்க வைத்து சரியான கவனிப்பு நடத்தி அனுப்புகிறார்கள்

ஒற்றை பண மரம் இருக்கும் இடத்தில் எல்லாம் சுந்தரம் மண்வெட்டியால் கிண்டிபார்க்கிறார்

ஏன் என்று கஸ்தூரி கேட்கும் பொழுது என் மலர்விழி இங்கு தான் பிணமாக கிடந்தாள் அதனால் அவளோடு ஆயிரக்கணக்கான பேர் இங்கு மாண்டு கிடந்தார்கள் அதனால் தான் ஒற்றை பண மரம் இருக்கும் இடத்துக்கெல்லாம் அவர்கள் சமர்ப்பணம் செய்வது போல் நான் இப்படி செய்கிறேன் என்று கூறுகிறார் அந்த இடத்திலும் மனது கணக்கிறது

விமலா என்ற கதாபாத்திரம் பசிக்காக விபச்சாரத்துக்கு போகும்போது தாங்க முடியாத வேதனை நாட்டுக்காக துப்பாக்கி எடுத்து போராடிய இவர்களுக்கு இந்த நிலைமையா
என்று படம் பார்ப்பவர்கள் பதறுகிறார்கள்

வீட்டில் குடியிருக்கும் போது வீட்டுக்காரர் கஸ்தூரியை வெளியேற்ற ரவுடிகளை அனுப்புவது அல்லது நானே உன்னை வைத்துக் கொள்கிறேன் என்று கேட்கும் பொழுது கஸ்தூரி சொல்லும் வசனமான “நாங்கள் போரில் உடைமைகளை இழந்தோம் , சுயத்தை இழக்கவில்லை என்று சொல்லும் பொழுது சபாஷ் போட வைக்கிறது

கஸ்தூரி தன் கணவன் வீரமரணம் அடைந்த பிறகு மாமனார் வீட்டுக்கு போகிறார் சாதி வெறி பிடித்த மாமனார் கஸ்தூரியை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பும்போது மனம் பத பதக்கிறது

கஸ்தூரிக்கு பக்கத்து வீட்டு பெண் இரவில் கள்ளு குடிப்பதும் பல ஆண்களுடன் தவறான வேலை செய்து கொண்டு கஸ்தூரியை தவறாக பேசும் பொழுது இந்த ஜென்மங்கள் எல்லாம் எல்லா ஊர்களிலும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று யோசிக்க வைக்கிறது

அஜா தன் மகளாக எண்ணி சுந்தரம் கடைசி வரை அந்த ரகசியத்தை காப்பாற்றி கிளைமாக்ஸ் கட்சியில் அவர் சொல்லும் பொழுது தியேட்டரில் எல்லோரும் கண்களிலும் கண்ணீர் தன் மனைவி மலர்வழி கற்ப்பினியாக இறந்து போனது குண்டுவெடிப்பில் என்று காட்டும் பொழுது இதயமே நொறுங்கிப் போகிறது

ஈழம் என்றால் அதில் நடந்த குண்டுவெடிப்பு இவைகள் தான் நமக்கு தெரியும் அதற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது என்று எதார்த்தமாக சொல்லி நடித்து கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர்

நல்ல படம் தந்த தயாரிப்பாளர்

திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றவர் ‘ஒற்றைப் பனை மரம்’ படத்தை தயாரித்த எஸ்.தணிகைவேல் .

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.
இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள் ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக

Director & Actor : Puthiyavan Rasaiyah*

படத்தை இயக்கி சுந்தரம் என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இயல்பான நடிப்பு துன்பப்பட்ட மக்களின் வலியை சொல்லும் இந்த கதாபாத்திரம்

தன் மனைவி மலர்விழியை, நினைத்து கதறும் போதும் ,ஆதரவற்ற அஜாவை அழைத்து வந்து அன்பு காட்டும் பொழுதும், கஸ்தூரிக்காக களங்கும் பொழுதும், தன் இனம் இன்னும் துன்பப்படுவதை கண்டு சகிக்காமல் மாற்று கருத்தை தேடும் பொழுதும், சுந்தரம் சொக்கத்தங்கமாக திரையில் தெரிகிறார்,

இயக்கத்திலும் பண்பட்ட இயக்கத்தை காட்டியிருக்கிறார் எந்த நாட்டிலும் போர் முடிவு ஏற்பட்ட பிறகு அங்கு நடக்கும் செயல்பாடுகள் பெரும் சோகத்தை தான் கொடுக்கும் என்பதை அற்புதமாக இயக்கியிருக்கிறார் அவருக்கு நமது வாழ்த்துக்கள்

Navaayugha,(கஸ்தூரி )

படத்தின் மைய புள்ளி இவர்தான் ஒரு பெண் போராளி சமூகத்தோடு வாழ வரும்பொழுது அவர் எப்படி நடத்தப்படுகிறார் என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதை தன் இயல்பான நடிப்பின் மூலம் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் நவ யுகா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ கதாபாத்திரத்தை உள்வாங்கி நிஜமான பென் போராளியாகவே தெரிகிறார் ஒவ்வொரு காட்சியிலும் அவர் நடிப்பு உயர்ந்து நிற்கிறது இதற்கு முன் ஆறாம் நிலம் என்ற படத்தில் நடித்திருந்தார் அடுத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் பட்டதாரியான இவர் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய நடிகை இவருக்கு நமது வாழ்த்துக்கள்
Ajathika Puthiyavan

தாய் தந்தையற்ற போரில் இழந்து பட்டாசு சத்தம் வெடித்தால் கூட
ஓடி வந்து தந்தையை கட்டிக் கொள்ளும் அந்த பெண் குழந்தை அற்புதமாக நடித்திருக்கிறார் பேச முடியாமல் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு தன் வலியை சொல்லும் அந்த கதாபாத்திரம் யாழ்ப்பாண குழந்தைகள் பற்றி
உண்மையை சொல்லும் கசப்பான உண்மைகள்
நன்றாக நடித்திருக்கிறார்

Kasi perumal

படத்திலும் போராளிகளின் அடுத்த கட்ட நிகழ்வுகளை பிரதிபலிக்கும் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக ஜொலித்திருக்கிறார் கஸ்தூரியை தவறாக பேசும் அந்த வீட்டுக்காரை புரட்டி எடுக்கும் காட்சியாகட்டும் தன் இன சகோதரிகளுக்காக ஒன்றுபட நினைக்கும் அந்த கதாபாத்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது காசி பெருமாள் நன்றாக நடித்திருக்கிறார

Cinematographer : Mahinda Abesinche (Srilanka) ,

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார் தமிழர்களின் துன்பங்களை படம் பிடித்து கண்களில் கண்ணீரை வரவழைத்து இருக்கிறார் பெண்கள் படும் சோகம் அந்த காடுகள் எதிரிகளின் குண்டுகளுக்கு பலியாகி மாண்டு போன இந்த அப்பாவி மக்கள் இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் சிறப்பாக தெரிகிறது கஸ்தூரியும் ,சுந்தரம், தங்கி இருக்கும் அந்த இடம் அந்த காடுகள் பல கதைகள் சொல்கிறது மாண்டுபோன மனிதர்களின் வலிகளை சொல்கிறது ஒளிப்பதிவு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்

Editor : Suresh URS

தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் படத்தை கச்சிதமாக எடிட் செய்துள்ளார் குறைந்த மணித்துளிகள் என்றாலும் மனதில் பதியும் அளவுக்கு படத்தை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார் படத் தொகுப்பாளர்

Music : Ashwamithra

தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் புல்லாங்குழல் இசை அந்த மக்களின் வலிகளை சொல்கிறது தன் தந்தை எதிரிகளிடம் அடி வாங்கிக் கொண்டு வந்து காயப்பட்டு கிடக்கும் போது மடியில் கடத்திக்கொண்டு வாசிக்கும் அந்த புல்லாங்குழலின் இசை பல கதைகளை சொல்லும் இசையமைப்பாளர் அருமையாக அமைத்திருக்கிறார் வாழ்த்துக்கள்

Costume : Kalaiselvi

கஸ்தூரியின் ,உடை அமைப்பு
சுந்தரத்தின் ,உடை அமைப்பு மற்றும் அஜாவின் உடை அமைப்பு எதிரிகள் உடைஅமைப்பு
என்று உடை அமைப்பில் நன்றாக ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார் கலைச்செல்வி

Makeup : K Hasan Lakthara

ஒப்பனை இருக்கா என்று கேட்கும் அளவுக்கு நிஜமான முகத்தை கொடுத்திருக்கிறார் ஒப்பனையாளர் நிஜம் எது ஒப்பனை எது என்று தெரியாத அளவுக்கு கஸ்தூரியின் ஒப்பனையும் சுந்தரம் மற்றும் விமலா ஒப்பனையும் பாவப்பட்ட மக்கள் குண்டு வெடிப்பில் இறந்து போகும் பொழுது காட்டப்படும் அந்த ஒப்பனையும் விருதுக்கான வேலைபாடு

Executive Producer : Perumal Kasi

படத்தில் பெருமாளாக நடித்து படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார் காசி இவர் பணி
பாராட்ட தக்கது

PRO : Kumaresan

படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் மக்கள் தொடர்பாளர் குமரேசன் அவர்கள் அவருக்கு நமது வாழ்த்துக்கள்

Producer : . Thanigaivel

ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் தணிகை தமிழ் சமுதாயம் நிச்சயம் பாராட்டும்

Digital promotions :Meesaya Murrukku

படத்திற்கு சரியான ப்ரமோசனை கொடுத்திருக்கிறது மீசையை முறுக்கு பிரமோஷன் குழு

மொத்தத்தில் இந்த படம் ஈழப் போருக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்லும் படம்

கஸ்தூரி நவயுகா வாக, சுந்தரமாக நடித்திருக்கும் புதியவன் ராசையா மற்றும் அஜாதிகா அவர்களுக்கு எவ்வளவு விருதுகள் கொடுத்தாலும் தரும். ஏன் என்றால் அவர்கள் நடிக்க வில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்

நாற்பது விருதுகள் வாங்க தகுதி உள்ள படம்