ஐந்தாம் வேதம் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/ 5

90களின் புகழ்பெற்ற புராண சாகச திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும், ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் அசத்தலான வெப் தொடர் ZEE5 வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமாகவுள்ளது.

ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

கதை களம்

அனு (சாய் தன்ஷிகா)தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்கு செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது. வழியில், ஒரு மர்மமான நபர் அவள் சந்திக்கிறார், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னமானபெட்டியை
அவரிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள அய்யங்கார் புறம் ஊரில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் – ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது. தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள்.
அந்த பெட்டியை அடுத்த வரிடம் கொடுக்கும் போது விபரீதம் நடக்கிறது

மேலும் பலருக்கும்அந்த பெட்டியால் பல ஆபத்துகளும் சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம

காலம் அவரை அய்யங்கார் புறத்தில் தள்ளினாலும் ஆனால் தன்ஷிகா பாண்டிச்சேரி செல்வதில் குறியாக இருக்கிறார்

ஆனால் சூழ் நிலை அவரை அய்யங்கார் புறத்தில் தள்ளுகிறது அது ஏன்?

அதனை ஒப்படைக்க சொல்லும் அவருக்கு நேரும் பிரச்சினைகளும், இடையூறுகளும் தான் கதை

அவரோடு மித்ரன்(விவேக் ராஜ கோபால்)எப்படி இணைந்தார் ?

வாரணாசியில் இருக்கும் சந்தோஷ் பிரதாப் (பதி)எதற்காக சாய் தன்சிகாவை சந்தித்தார் ?

அது காலத்தில் கட்டாயம்

சாய் தன்ஷிகாவின் அப்பா ஏன் அவரை பார்க்க வர மறுத்தார் ?
அவரின் அப்பா யார்?

சாய் தன்சி காவின் முன்னாள் வந்து அருள்வாக்கு சொல்லும் ராம்ஜி யார்?
ஏன் அவரை காப்பாற்ற நினைக்கிறார்?

ஐயங்கார் புறத்தில் இருக்கும் ஷாம்பு ஐயர் ஏன் தன்ஷிகா கொண்டு வரும் பெட்டியை வாங்க மறுக்கிறார் ?
அதனால் வரும் விளைவுகள் என்ன?

ஐந்தாம் வேதம் பற்றி அறிந்து வைத்திருக்கும் ஓய்.ஜி மகேந்திரன்
அந்த ஊர் மக்களை எப்படி ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றுகிறார்?

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஐயங்கார் புறத்தில் இருக்கும் மரகதம் என்ற கம்ப்யூட்டரை ஏன் பொன்வண்ணன் தேடி அலைகிறார்?

தேவதர்ஷினி ஆஸ்திரேலியா பெண்ணுடன் எப்படி உறவு ஏற்பட்டது ?

மித்ரன் என்ற கதாபாத்திரம் ஏ .ஐ செய்யப்பட்ட ராதிகாவுடன் எப்படிப்பட்ட உறவு முறையை வளர்க்கிறது?

முகுந்த் என்ற கதாபாத்திரம் ஆஸ்திரேலியா வில் இருந்து வந்து தன் அண்ணனை கொன்றது யார் என்று கண்டு பிடித்தாரா
இல்லையா?

ஐந்தாம் வேதம் இருக்கிறதா இல்லையா அந்த நான்கு வேதங்களில் நான்கு சிறிய மனிதர்கள் சொல்லும் செய்தி என்ன?

பூரணி என்ற கதாபாத்திரம் தன்ஷிகா கொண்டுவரும் பெட்டியை வாங்கி திறப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

புதிய டெக்னாலஜியுடன்
ஏ .ஐ முறையில் புதிய மனிதனை உருவாக்கும் முயற்சியில் எதிரிகள் கூட்டம் வெற்றி பெற்றார்களா இல்லையா?

ஏ ஐ என்ற புதிய தொழில் நுட்பம் மனிதர்கள் உடன் போட்டி போட்டு உருவாக்கினால்
மனித குலம் என்ன ஆகும்?

இப்படி பரபரப்பாக 8 எபிசோடுகளில் புரியாத புதிர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஒவ்வொரு எபிசோடு முடியும்போது அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் இயக்குனர்.

புராணம், புதிர் நடுவே ஏஐ, தொழில்நுட்பம் என பல்வேறு களங்களை தொட்டுச் செல்கிறது.
இந்த ஐந்தாம் வேதம் .

விறுவிறுப்பாக நகரும் 8 எபிசோடும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்
இந்த இணையத்தொடர் ஜீ5 ஓடிடியில் வரும் அக்.25-ம் தேதி வெளியாகிறது
.

கொல்கத்தா தமிழச்சி சாய் தன்ஷிகா அணுவாக எப்படி நடித்திருக்கிறார்

சாய் தன்ஷிகா

(அனு)என்ற கதாபாத்திரத்தில் 8 எபிசோடுகளும் முழுமையாக வந்து நடித்திருக்கிறார்
தன் அம்மாவை அப்பா வந்து பார்க்கவில்லை என்று கோபப்படுவதும், தன்னிடம் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் எடுத்துக்கொண்டு ஐயங்கார் புறம் வருவதும் அந்த ஊரை விட்டு வெளியே போக முடியாமல் தவிப்பதும் என நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.
பஞ்சமா தேவி ஆக சூப்பரான நடிப்பை வழங்கியிருக்கிறார் சாய் தன்சிகாவுக்கு இந்த தொடர் நிச்சயம் நல்ல பேரை வாங்கிக் கொடுக்கும்

பதி “என்ற பெயரில் நடித்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப்

சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் சாய் தன்சிகாவுக்கு ஜோடி இல்லை என்றாலும் ஒரு அசாத்திய திறமை உள்ள ஒரு சிறுவனின் தந்தையாக நடித்திருக்கிறார்
தன் மனைவி நண்பனுடன் குடும்ப நடத்தி வந்தாலும் தன்னை விட்டு பிரிந்து விட்டாலும் மகனுக்காக வாழும் அந்த கதாபாத்திரம் சிறப்பாக வடிவம் வைக்கப்பட்டுள்ளது அவர் சிறுவனை அழைத்துக் கொண்டு ஐயங்கார் புறம் வருவது ஏன் என்பது சஸ்பென்சாக வைத்திருக்கிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

ஒய் ஜி மகேந்திரன்

ஐந்தாம் வேதம் என்றால் என்ன? நான்கு வேதம் தானே உலகில் இருக்கிறது ஐந்தாம் வேதம் எப்படி உருவாகும் என்பதற்கு ஒய் ஜி மகேந்திரன் நல்ல விளக்கம் தருகிறார் பிரம்மாவின் மடியில் அமர்ந்திருக்கும் அந்த குழந்தைதான் ஐந்தாம் வேதம் என்று அந்த கோயிலின் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் ஒய் ஜி மகேந்திரன் கதாபாத்திரம் எல்லா எபிசோடிலும் பரபரப்பாக இருக்கிறது தன் பேத்தியுடன் அவர் பேசும் வசனமும் தன் மகன் ஷாம்புவுடன் அவர் பேசும் வசனமும் ரசிக்க வைக்கிறது ஒய் ஜி மகேந்திரன் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்

: நாகராஜன் ஆக வரும் பொன்வண்ணன்

அமெரிக்காவில் இருந்து பல வருடங்களுக்கு முன் இருந்த தன்னுடைய கம்பியூட்டர்களை தேடி அலைகிறார் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து மரகதம் என்ற அந்த கம்ப்யூட்டரை தேடி அழலகிறார் அதில் என்ன இருக்கிறது அதை கண்டுபிடித்த பின் அவரின் கதாபாத்திரம் என்ன செய்கிறது என்பது சஸ்பென்ஸ் அடுத்த சீசனில் இவரின் கதாபாத்திரம் இன்னும் விரிவடையும் என்று நம்பலாம்

: மற்ற கலைஞர்கள்

(பிரங்ண ரவி) பூர்ணி
என்ற வேடத்தில் ஒய் ஜி மகேந்திரன் பேத்தியாக வருகிறார்
கதையின் மைய புள்ளியாக இவர்தான் இந்த ரகசிய பெட்டியை திறக்கிறார் கோலம் போடுவதும் காதலர்களை இணைத்து வைப்பதும் என கவனம் பெறுகிறார்

கிரூஷ்ஷா குரூப், ராதிகா ,என ஏ ஐ தொழில்நுட்ப பெண் , என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் அப்பாவுக்கு பயந்து கொண்டு மித்ரனை காதலிக்க பயப்படுவது மற்றும் ஏ ஐ ஆப்பில் ராதிகாவாக வந்து மித்திரனை சந்தோஷப்படுத்துவது என இரண்டு வேடங்களிலும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார்

கிராமத்துப் பெண்ணாக மிளிர்கிறது இவர் நடிப்பு

அஜீத் கோஷ் நாற்பது படங்களில் ஐ ஜி யாக நடித்தவர் இதில் திரில்லர் கலந்த வேடத்தில் நடித்துள்ளார் வெல்டன்

விவேக் ராஜகோபால் மித்ரன் என்ற கதாபாத்திரத்தில் காமமும், நகைச்சுவையும், கலந்த இளைஞனாக நடித்திருக்கிறார் இவர் வருமிடங்களில் கலகலப்பு புதிய டெக்னாலஜியான
ஏ .ஐ .யில்புதிய மனிதனாக வருகிறார் அந்த காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது அடுத்த பாகத்தில் அடுத்த சீசனில் இந்த ஏ ஐ டெக்னாலஜி யில் உருவாக்க பட்ட மனிதன் செம்மையாக மிரட்டுவான் என்று எதிர்பார்க்கலாம்

ஜெயசந்திரன் கார் டிரைவராக நடித்திருக்கிறார் சின்ன வேடம் என்றாலும் காரோட்டி யாக நடித்து கவர்கிறார்

: ஹாரிஷ் (முகுந்த்)

என்ற வேடத்தில் ஊர் தலைவரின் தம்பியாக வருகிறார் இவர் தான் இத்தனைக்கும் காரணம் என்று நம்ப வைத்து கதையின் போக்கை திருப்பும் கதாபாத்திரம் நன்றாக நடித்திருக்கிறார் இருக்கிறார்

தன்ஷிகா அப்பா (வர்கீஸ்)

விஸ்வேஸ்வரர் என்ற கதாபாத்திரத்தில் சஸ்பென்ஸ் கலந்த கதாபாத்திரத்தில் வருகிறார் கடைசியில் பரிதாபமான முடிவு இவருக்கு
தன்ஷிகா இவரை வெறுக்கும்போதெல்லாம் மகளுக்காக பரிந்து பேசும் அந்த கதாபாத்திரம் உண்மையில் மனதில் இடம் பிடிக்கும்

: ராம்ஜி ( பிச்சை) என்கிற ரோலில் நடித்திருக்கிறார். தன்ஷிகாவுக்கு
அறிவுரை கூறுவது, ஐந்தாம் வேதம் பற்றி எடுத்துச் சொல்வதுமாக 8 எபிசோடுகளிலும் மிரட்டி இருக்கிறார் ராம்ஜி

அவர் மகன் நிதின் நடிப்பு ஓகே ரகம்

தேவதர்ஷினி சென்னையில் உள்ள பிரபல வழக்கறிஞராக வந்து ஐயங்கார் புரம் வந்து ஒரு மர்மமான கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கிறார் ஆஸ்திரேலியா பெண்ணுடன் எப்படி உறவானதுஎன்றுசராயானவிளக்கம் இல்லை ஆனால் காட்சிகளில் வியப்பை ஏற்படுத்துகிறார்

அந்த சிறிய மனிதர்கள் செய்யும் சாகசங்கள் சிறப்பாக இருக்கிறது

கோபிநாத், தயாளன், இளம் பாரதி, சங்கரன், நால்வர் வரும் காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக இருக்கிறது

இவர்கள்தான் நான்கு வேதங்கள் புதிய ஐந்தாம் வேதம் உருவாவதற்கு இவர்கள் செய்யும் செயல் தொடரில் வியப்புகளை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

டெக்னிஷீயன்கள்பங்களிப்புஅசத்தலாக இருக்கிறது

ஒளிப்பதிவாளர் சீனிவாசன் வாரணாசியில் உள்ள அழகையும் டெல்லி, மற்றும் ஆஸ்திரேலியா, மதுரையில் உள்ள ஐயங்கார் புறம் ,என எல்லா இடங்களிலும் ஒளிப்பதிவை கச்சிதமாக படமாக்கி இருக்கிறார் காட்டுப்பகுதியில் ஒவ்வொரு தடவை பயணிக்கும்போது
பொழுது இவரின் ஒளிப்பதிவு மிரட்டலாக இருக்கிறது கிளைமாக்ஸ் கட்சியில் இந்த குகைக்குள் இருட்டில் படமாக்கப்பட்டு இருப்பதும் புதிய மனிதனை காட்டும் பொழுதும் ஒளி பதிவு பிறமிக்க வைக்கிறது
ஆரம்பக் கட்சிகளில் வாரணாசி கங்கை நதியை அழகாக படமாக்கி அற்புதமாக கண் முன் காட்டியிருக்கிறார்

CASTING DIRECTOR B. MANOJ KRISHNA

ஆடை வடிவமைப்பில் மெனக்கெட்டு இருக்கிறார் அதிலும் தன்சிகா உடை கவர்கிறது ஒய் ஜி மகேந்திரன் வடிவமைப்பு மற்றும் புதிய மனிதனின் தோற்றத்திற்காக மெனக்கெட்டு இருக்கிறார்

MUSIC DIRECTOR REVAA

இசை இந்த எட்டு தொடருக்கு பக்கபலமாக இருக்கிறது இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள்
அந்த வீணை சத்தமும் கோயிலுக்குள் நாமே இருப்பதைப் போல ஒரு இசையை கொடுத்திருப்பது புத்திசாலித்தனம் புதிய மனிதன் உருவாகி வெளியே வரும் பொழுது இசை மிரட்டலாக இருக்கிறது திரில்லிங் தொடருக்கு இசை பிரமாதமாக வந்திருக்கிறது

EDITOR REJEESH. M. R.

படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவி செய்துள்ளது

அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை படத்தொகுப்பில் கச்சிதமாக சரி செய்து விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர்

Art director Amaran

ஆர்ட் டைரக்டர் பங்கு மிகப் பெரிய அளவில் பாராட்ட வைக்கிறது கோவில் வாசற்படியில் இடித்த பிறகு அதற்குள் ஒரு குகை அந்த குகையில் ஒரு காமதேனு, பிரம்மதேவன் , கையில்
குழந்தை புதிய தொழில்நுட்பமான ஏ ஐ உருவாக்கத்திற்கு காட்டப்பட்ட அந்த அறை, இப்படி ஒவ்வொரு காட்சியிலும் ஆர்ட் டைரக்டர் அருமையாக உழைத்திருக்கிறார்
இந்த பழைய பெட்டி மற்றும் ஐயங்கார் புரம் அங்கு உள்ள
ஊர் தலைவரின் வீடு என எல்லாமே மிரட்டலாக இருக்கிறது

Co DIRECTOR RAJESH. S
2nd unit DIRECTOR ANAND BABU. S

DI REELBOYZ
EX. PRODUCER SARAVANAKUMAR
ASST. DIRECTOR GAUTHAM BASKER
ASST. DIRECTOR S. KADAPPAN
ASSO. DIRECTOR K. KRISHNAMURTHY

COSTUME DESIGNER BHARATHI DASAN – REMUN
SET WORK (T P ) ANANTHASAYANAN
Colorist Shyam
Sound engineer Harish
SOUND designer A. MANIKANDAN
CG Pixel Arts (DURAI)
Sub-Titling Rekhs

என அனைவரும் இந்த தொடருக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் நல்ல ஒரு வெற்றி தொடராக வந்திருக்கிறது

இயக்குனர் நாகா

மர்ம தேசம் மக்களால் கொண்டாடப்பட்ட சின்னத்திரை வெற்றித்தொடர். அது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மர்ம தேசம் 2 என்பதைப் போல ஐந்தாம் வேதத்தை உருவாக்கியிருக்கிறார் . இயக்குனர் வெறும் புராதான கதைகளை மட்டும் சொல்லாமல் இன்றைய தொழில்நுட்ப புதுமைகளை திரில்லர் ஆகவும் ஏ ஐ என்ற புதிய தொழில் நுட்பம் அதை ரசிக்கும் வண்ணம் திகில் அடையும் வண்ணம் உருவாகி இருக்கிறார் ஏ ஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புதிய மனிதன் வெற்றியடைவது போல் காட்சி படுத்தல்
அடுத்த சீசன் 2 வில் நிச்சயம் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நம்பலாம்

வாரணாசி ,டெல்லி, சென்னை ,ஐயங்கார் புரம் ,என பல இடங்களில் மெனக்கட்டு, படப்பிடிப்பு நடத்தி ரசிகர்களுக்கு ஒரு நல்ல புதிய அனுபவமான ஐந்தாம் வேதத்தை கொடுத்திருக்கிறார் நிச்சயம் இது விலங்கு ,அயலியை, போல் வெற்றி தொடராக அமையும்

மக்கள் தொடர்பாளர்AIM

டீமுக்கு வாழ்த்துக்கள் மக்களிடம் இந்த தொடரை கொண்டு சேர்த்ததற்கு ,

நிச்சயம் பேசப்படும் தொடராக இருக்கும் இந்த ஐந்தாம் வேதம்

இந்த வெற்றி தொடரான ஐந்தாம் வேதத்தை தயாரித்த அபிராமி ராமநாதன் அவர்களுக்கும்,

ஜி 5 நிர்வாகிகள் திரு. கௌசி திரு. சுஜு மற்றும் பணிபுரிந்த, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.