கதை களம்
இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். மேஜர் முகுந்த் மற்றும் அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவருடைய வாழ்க்கையை மையமாக வைத்தும்
காஷ்மீரில் நடக்கும் தீவிரவாதம் அதை கட்டுப்படுத்தும் ராணுவ அதிகாரிகள் படும் கஷ்டங்களையும் சொல்லி இருக்கிறது இந்த படம்
பல இடங்களில் கண்ணீர் வர வைக்கும் நெகிழ்வான காட்சிகள் சிறப்பாக இருக்கிறது
முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) தனது சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார். கல்லூரியில் இந்து ரெபேக்கா வர்கீஸை (சாய் பல்லவி) சந்திக்கும் முகுந்த் காதலில் விழுகிறார்.
ஆனால் சாய் பல்லவி வீட்டில் ஏகப்பட்ட எதிர்ப்பு நான்கு வருடங்கள் காத்திருக்கிறார்கள்
காதல் ஒரு பக்கம் இருந்தாலும் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இராணுவ பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். அவர்களுடைய காதலிக்கு முகுந்த் வீட்டில் கிரீன் சிக்னல் கிடைத்து விட இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர்
ராணுவத்தில் கேப்டன் , மேஜர் என அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்கிறார் முகுந்த். 44 ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப்பிரிவின் கம்பேனி கமாண்டராக பொறுப்பேற்கிறார். காஷ்மீரில் தீவிரவாத கும்பலின் படைத்தலைவனான அல்தாஃப் வானியை பிடிக்கும் முயற்சியின் போது முகுந்த் உயிரிழக்கிறார். இது தான் அமரன் படத்தின் கதை
முதல் பாதி காதலும், இரண்டாம் பாதி தேச பக்தி உடன் சேர்ந்து வீரமும் சல்யூட் போட வைக்கிறது
சிவகார்த்திகேயன்
மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன். தொடக்கத்தில் தனக்கேயுரிய துறுதுறு உடல்மொழியால் கவரும் சிவகார்த்திகேயன், ராணுவ வீரராக உருவெடுக்கையில், மிடுக்கான உடல்மொழியாலும், கச்சிதமான ஆக்ஷன்களாலும் தன் தேர்வுக்கு நியாயம் செய்திருக்கிறார். ராணுவத்தில் இணைந்து மூன்று விதமான பொறுப்புகளின் போதும் அதற்கேற்ற உடல்மொழி, வசன உச்சரிப்பு என ஆச்சர்யப்படுத்துகிறார். கணவனாக, தந்தையாக, மகனாக உருகுமிடங்களில் ஒரு தேர்ந்த நடிகராக ஜொலிக்கிறார். வெல்டன் எஸ்.கே
சிவகார்த்திகேயன் படத்தில் இது ஒரு மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு அவர் நடிப்பு வியக்க வைக்கிறது
இது போன்ற கதை களை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் சூப்பர் ஸ்டார் ஆகலாம்!!

சாய் பல்லவி
இந்து ரெபேக்கா வர்க்கீஸாக சாய் பல்லவி. மொத்த படத்தையும் தன் அழுத்தமான நடிப்பால் தாங்கிப்பிடித்திருக்கிறார். நிறைய அழுகைக் காட்சிகள் வந்தாலும், அவை எல்லாவற்றையுமே படத்தின் உயிராக மாற்றியிருக்கிறது இவரின் நடிப்பு.
முக்கியமாக, ஓய்வறையில் அழும் காட்சி, இறுதிக்காட்சி, போனில் பதறும் காட்சி எனப் பல இடங்களில் சல்யூட் வாங்குகிறார்.
வெல்டன் மலர் டீச்சர்
கீதா கைலாசம்
பாசமும் கோபமும் கொண்ட அம்மாவாக கீதா கைலாசம், ராணுவ அதிகாரியாக ராகுல் போஸ், சக ராணுவ வீரராக புவன் அரோரா ஆகியோர் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்
நிஜமான அம்மா கூட இப்படி உருகி இருப்பாங்களா என்று சொல்லும் அளவுக்கு Geetha நடிப்பு நன்றாக இருக்கிறது
அசத்தல் ஒளிப்பதிவு
. சி.எச்.சாயின் ஒளிப்பதிவு காம்பேட் ஷாட்கள், லென்த்தான ஷாட்கள் போன்றவற்றால், தேவையான பதைபதைப்பைக் கொடுத்திருக்கிறது. கதைகளத்துக்கு ஏற்ற பிரமாண்டத்தையும் சேர்த்திருக்கிறது
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து இருக்கும் இந்திய மக்கள் இதனை மனதில் கொண்டு படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்
வெல்டன்
: இசை மிரட்டல்
ஜு: வி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு நியாயம் சேர்கின்ற்ன
ஆக்சன் காட்சிகளில் மிரட்டலான இசையை மற்றும் காதல் காட்சிகளில் உருக்கமான இசையை தந்து இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருதை தட்டி செல்வார் என்று எதிர்பார்க்கலாம்
இயக்குனர் ராஜ் குமார் பெரிய சாமி
: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, முகுந்தின் வாழ்க்கையை எவ்வளவு உண்மையாக காட்சி படுத்த முடியுமோ, அவ்வளவு உண்மையாக காட்சி படுத்தி இருக்கிறார். முகுந்த் ராணுவத்தில் இருந்த போது அவர் பணியாற்றிய இடங்களுக்கு சென்று நேரடியாக காட்சிகளை காட்சிப்படுத்தியது, நாமே அங்கு இருப்பது போன்ற உணர்வையும் பதபதப்பையும் கொடுத்து இருக்கிறார் குறிப்பாக காஷ்மீரில் ஏன் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்பதை காட்டியது சிறப்பாக இருக்கிறது இராணுவ வீரர்களின் தியாகம், அவர்கள் சந்திக்கும் ஆபத்துகள் உள்ளிட்ட வற்றை பதிவு செய்தது அல்டிமேட் ரகம்.
வாழ்க்கை வரலாறு என்று கதையை ஒரு அவார்ட் படமாக காட்டாமல் விறுவிறுப்பாக அவர் அமைத்த திரைக்கதை படத்தை போரடிக்காமல் பார்த்துக் கொண்டது.
பாராட்டுக்கள்.

மற்றும் படத்தின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
ஆர்ட் டைரக்டர் அபரிமிதமான உழைப்பு அற்புதம்
காஸ்ட்யூம் டிசைனர் மெனக்கட்டு ராணுவ உடைகளை நேர்த்தியான முறையில் வடிவமைத்து அதன் பெருமையை உயர்த்தி இருக்கிறார்
சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் மாபெரும் வெற்றி படமாக வந்திருக்கிறது நிச்சயம் இப்படம் பல வசூல் சாதனைகளையும் பல தேசிய விருதுகளையும் வெல்லும் என்பது உண்மை சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டில் தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் இயக்குனருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் வாழ்த்துக்கள் அற்புதமான படம் தந்தற்கு!
