பிளடி பெக்கர் திரை விமர்சனம் – ரேட்டிங் 3ஏ-5/ 5

இது தமிழ் சினிமாவின் இளைய தலைமுறைக்கான வாகை சூடும் படம்

ஒரு அவுட் அன் அவுட் என்டர்டெயின்னர் படமாகும், இது உங்களை முழுவதுமாக இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் அளவுக்கு திருப்பங்களைக் கொண்டிருக்கும் படம் என்பது உறுதி
அடுத்து என்ன நடக்கப் போகும் என்று நம் வாழ்க்கையில் யாருக்கும் தெரியாது அதே போல இந்த படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத அளவுக்கு திரைக்கதையில் மாயாஜாலம் காட்டியிருக்கிறார் இயக்குனர்

பிச்சைக்காரராக நடித்திருக்கிறார் கவின். ப்ளடி பெக்கரின் டார்க் காமெடி கை கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தனியாக இருக்கும் பெரிய அரண்மனைக்குள் செல்கிறார் கவின். அந்த அரண்மனையில் நிஜமான பேய் வேறு இருக்கிறது. இந்த காட்சியை வைத்து பில்ட்அப் செய்திருக்கிறார் இயக்குநர்.

பிச்சைக்காரனின் ஃபிளாஷ்பேக் அவ்வப்போது வந்து வந்து
அதுதான் படத்தின் மிகப்பெரிய பலமாகிறது

கதை களம்

கவின் மாற்றுத்திறனாளி, கண் பார்வையற்றவர் என ஒவ்வொரு நாளும் ஒரு வேஷம் போட்டு பிச்சையெடுக்கிறார்.

ஆனால் ஜேக் என்ற சிறுவன் உழைத்து வாழ வேண்டும் என, பள்ளிக்கு சென்றுகொண்டே இடையில் புத்தகம், பேனா என விற்று கவினுடன் சேர்ந்து வசிக்கிறார்.
இவர்கள் இருவரும் யார்?

இந்த இருவருக்குள்ளும் இருக்கும் பந்தம் என்ன?

என்பது கடைசியில் தெரிய வரும் பொழுது மனம் நெகழ்வாகி விடுகிறது
ஆதரவற்றவர்களுக்கு விருந்தளிக்கும் நாளில் பிச்சைக்காரர்களுள் ஒருவராக கவினும் ஆடம்பர மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மாளிகைக்குள் யாருக்கும் தெரியாமல் நுழையும் கவின்

அந்த பங்களாவுக்குள் சொத்தை அபகரிக்கும் திருட்டுக் கூட்டம் ஒன்று உலவி கொண்டிருக்கிறது அந்த திருட்டு கூட்டம் கவின் வெளியேற விட்டார்களா ?
அந்த வீட்டுக்கு காவல் காக்கும் நான்கு நாய்களிடம் இருந்து கவின் தப்பித்தாரா?

கவினுக்கு உதவி செய்யும் அந்தப் பெண் யார்? கவினுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு ?

ரெடின்கிங்ஸ்லி

கவினுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் என்னவாக வருகிறார் ?

படத்தின் முடிவில் வரும் டத்தோ ராதாரவி
எப்படியான விபரீதங்களை ஏற்படுத்துகிறார் ?

என்பதையெல்லாம் சுலராசிமாக சொல்லி இருக்கிறது இந்த படம்
அடுத்து என்ன அடுத்து என்ன என்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி படத்தின் முடிவில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவத்தடன் படம் முடிகிறது

கவின்

*படத்தின் ஆரம்பத்திலேயே பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் ஒன்றியிருக்கும் கவின், அவருடன் இருக்கும் சிறுவனை கலாய்ப்பது, மாளிகைக்குள் சென்றவுடன் எல்லாவற்றையும் வியந்து பார்ப்பது என நடிப்பில் ஈர்க்கிறார்.
அந்த மேக்கப் போடு ஒன்றே போய்விட்டு கவின் நடிப்பிலும் சிறப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்*

தன் மனைவியை எண்ணி கலங்கும் போது உருக வைக்கிறார் பெயர் இருந்தால் கூட கடைசி வரை என்னோடு இருந்திருப்பாளே என்று அவர் அழுது புலம்பும் போது படம் பார்ப்பவர்களுக்கு நெகழ்ச்சி

தினமும் மேக்கப் போட்டு ஊரை ஏமாற்றி பிழைக்கிறாயே என்று எதிர் வீட்டுக்காரர் கேட்க நீ மட்டும் என்ன பிச்சை காரன்வீட்டிற்கு
எதில் தானே குடி இருக்கிறாய் என்று கலாய்ப்பது ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா காமெடி
இதுபோல நிறைய குசும்புகள் படத்தில் கவினுக்கு

கால் இல்லை என்று சொல்லி பிச்சை எடுத்துவிட்டு இறுதி ஊர்வலத்தில் நடனமாடும் போது குசும்பு

படத்தை பற்றி அலசல்

சாதாரண கதைதான். ஆனால் கதாபாத்திரங்களின் உருவாக்கம், திரைக்கதையில் சட்சட்டென்று வரும் திருப்பங்கள், யார் அந்த திருட்டு கூட்டம் என நேரடியாக விமர்சிக்காமல் துகிலுரிக்கும் நேர்த்தி என கொண்டாட்டமான புத்துணர்ச்சிக்கு நூறு சதம் உத்தரவாதம்.

இதனை தமிழின் மூன்றாவது நியூ ஜெனரேஷன் ஃபிலிம் எனலாம் (ஹேட்ஸ் ஆஃப கவின்

படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள் அந்த சொத்தை அபகரிக்கும் ராதாரவியின் உறவுகள் ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார் கள்

படத்தின் திரைக்கதையைப் பொறுத்தவரையில் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாகவே நகர்கின்றது. ஆனால் கவினின் நடிப்பினாலே முதல் பாதி நிரம்பி இருக்கின்றது என்பதைவிடவும், கவினின் நடிப்பினால்தான் முதல்பாதியை கடக்கவே முடிகின்றது. படம் முழுக்க டார்க் – காமெடியில் ரசிகர்களை திருப்திபடுத்த படக்குழு முயற்சி செய்துள்ளது.
அது படம் பார்ப்பவர்களை ஒன்றி போக வைக்கிறது

. படம் முழுக்க புகைப்படங்களில் இருக்கும் ராதாரவி, கடைசி 10 நிமிடங்களுக்கு வருகின்றார். ஆனால் ராதாரவி வருவதற்கு முன்னரே படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

அறிமுக இயக்குநராக சிவபாலன முத்துக்குமார் சிஸ்சர் அடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்

பலவிதமான கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டது

இவர்களை அந்த மாளிகைக்குள் நடமாட விட்டு ரசிக்க வைத்திருக்கிறார்

கவினுக்கும் அந்த மாளிகைக்கும் அங்கு இருக்கும் காருக்கும் என்ன பிரச்சனை என்பதை முடிச்சு போட்டு கடைசியில் அவிழ்க்கும் விதம் அருமை

இசை அமைப்பாளர் ஜென் மார்டின்*

இசை படத்திற்கு பெரிய பலம் பாராட்டுக்குரியதாகும்
ஒரு டார்க் ஹியூமர் படத்திற்கு எந்த மாதிரியான இசை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று இசையமைப்பாளர் அருமையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார

ஒளிப்பதிவு- Sujith Sarang

படம் முழுக்க ஒரு அரண்மனைக்குள் நடக்கும் கதை என்பதால் ஒலிப்பதிவாளர் கேமரா கோணம், லைட்டிங்ஸ், எல்லாவற்றையும் சிறப்பாக செய்து நிறைவாக நம் கண்களுக்கு கொடுத்து இருக்கிறார்

எடிட்டர் – R.Nirmal

இந்த படத்தின் எடிட்டிங் மிகப்பெரிய பலம் காட்சிகளை கோர்வை படுத்தி நிறைவாக கொடுத்திருக்கிறார்

ஆர்ட் டைரக்டர்- Manimozhian Ramadurai @ Appu

இந்த படத்தின் ஆர்ட் டைரக்டர் உழைப்பு அருமையாக இருக்கிறது அந்த அரண்மனை காட்சிகள் ஆகட்டும் கவின் ஆரம்பத்தில் வசிக்கும் அந்த ஏழை குடிசையாகட்டும் எல்லா இடங்களிலும் ஆர் டைரக்டர் கைவண்ணம் அற்புதம்

சன்டை பயிற்சியாளர்- Action Santhosh, Metro Mahesh

ஆக்சன் காட்சிகள் படம் முழுக்க பரவி இருந்தாலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

ஆடை வடிவமைப்பாளர் r – Jai Shakthi

கவினுக்கு பிச்சைக்கார உடை தேர்வு செய்த உடைகளும் அரண்மனைக்குள் அட்டூழியம் செய்யும் அந்த திருட்டு கூட்டத்திற்கு ஆடை வடிவமைப்பும் ரெடின் கிங்சிலின்
உருவத்த ஓட்டத்துக்கு ஏற்ற ஆடை வடிவமைப்பும் கவினின் மனைவி மதிக்கு ஏற்ற உடை வடிவமைப்பு என கச்சிதமாக ஆடை வடிவமைப்பாளர் பணி செய்து இருக்கிறார்

மேக்கப் – Harinath.C

இந்த படத்தில் ஒப்பணையாளரின் கைவண்ணம் கச்சிதமாக இருக்கிறது

கவினுக்கு அவர் மகனுக்கு அவர் மனைவிக்கு அந்த மாளிகைக்குள் இருக்கும் அந்த நயவஞ்சக கும்பலுக்கு என ஒப்பனையாளர் வித்தியாசப்படுத்தி பரவாசை படுத்துகிறார்

தயாரிப்பாளர் நெல்சன்

இந்த படத்தை தயாரித்திருக்கிறார் புதுமையான வித்தியாசமான கதையை தேர்வு செய்தற்காக பாராட்டலாம்

மக்கள் தொடர்பாளர்

சுரேஷ் சந்திரா சார் அவர்களுக்கும், அப்துல் நாசர் அவர்களுக்கும் இந்த படத்தை சிறப்பான முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து அதற்காக பாராட்டலாம்

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெகிழ்வாக இருக்கிறது அப்பாவும் மகனும் பேசும் அந்த உரையாடல் மனதை தொடுகிறது

கவின் பிச்சைக்கார தொழிலை உதறிவிட்டு உழைப்பாளியாக மாற்றியது இயக்குனரின் வெற்றி சிந்தனை

மொத்தத்தில் இந்த பிளடி பக்கர் வெற்றிக்கு சொந்தக்காரர்

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதே உழைத்து வாழ் என்ற தத்துவத்தை ஓங்கி சொல்லி இருக்கிறது பிளடி பெக்கர்