பிரதர் திரை விமர்சனம் – ரேட்டிங் 3-5/5

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, வி டிவி கணேஷ்,, ராவ் ரமேஷ் ,சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ், மாஸ்டர் அஸ்வின் , இவர்களின் அற்புதமான நடிப்பால் வெற்றிகரமான படமாக வந்து தீபாவளி நாளில் வெற்றி வாகை சூடி இருக்கிறது பிரதர்

கதை களம்

ஜெயம் ரவி சிறு வயதிலேயே பாய்ண்ட் பிடித்து பேசுவதால் அவருடைய அப்பா வக்கிலுக்கு படிக்க வைக்கிறார்.

ஆனால், போகிற இடத்தில் எல்லாம் லா பாயிண்ட் பேச அதுவே பெரிய பிரச்சினை ஆகிறது
ஏன்னா அவர் லா படித்தவர் என்பதால்

நல்லவனாக இருப்பதும் கூட ஒரு சமயத்தில் ஆபத்தாக முடிகிறது
தப்பை தட்டிக் கேட்க வேண்டும் பொய் பேசக்கூடாது என்று சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள் மகன் பெரியவனாகி உண்மையை பேசினால் அது இந்த உலகத்தோடு ஒத்துப் போகவில்லை என்று அவனை ஒதுக்கி வைக்கிறார்கள்

ஜெயம் ரவி செய்யும் செயல் அவருக்கு நலமாக பட்டாலும் அவரின் அப்பாவுக்கு அது சங்கடத்தில் முடிகிறது

அப்பாவிற்கு நெஞ்சு வலி வர, இதுக்கு மேல் நீ வீட்டில் இருக்காதே என்று திட்டுகிறார்.

உதகையில் கலெக்டர் வீட்டில் மருமகளாக இருக்கும் ஜெயம் ரவியின் அக்கா பூமிகா இனி நான் தம்பியை பார்த்துக்கொள்கிறேன், அவனை ஒரு நல்ல பையனாக மாற்றுகிறேன் என தன் குடும்பத்திற்கு அழைத்து செல்கிறார்.

ஆனால் ஜெயம் ரவியின் உண்மை பேசும் தன்மை எங்கு சென்றாலும் மாறுவதில்லை
அது யாராக இருந்தாலும் அவரின் சுயரூபம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது

உதகையில் சென்றதும் ஜெயம் ரவி திருந்தி விடுவார் என்று அவரது பெற்றோர்களும் அக்கா பூமிகாவும் நினைக்கிறார்கள் ஆனால் அப்படி நடக்கவில்லை

பூமிகா வின் குடும்பமே பிரியும் நிலை ஏற்பட காரணம் ஜெயம் ரவியின் நேர்மையான பேச்சு
ஆஸ்பத்திரிக்கு, பவுன்சராக போகிறார் ஆனால் அங்கு மூன்று மகன்கள் சொத்துக்காக தன் அப்பாவையே கோமா ஸ்டேஜில் வைத்துக் கொண்டு அவர் உயிரை தவணை முறையில் இழுத்தடிக்கும் நிலையை கண்டு கோபப்பட்டு ஆஸ்பத்திரியை அடித்து உதைக்கிறார் 8 லட்சம் அவரால் இழப்பு ஏற்படுகிறது அதையும் பூமிகா ஏற்றுக்கொள்கிறார்

அடுத்து ரமேஷ் ராவ் அதாவது பூமிகாவின் மாமனார் கலெக்டர் இவர் தன் அலுவலகத்திற்கு சும்மா இருக்க சொல்லி ஜெயம்ரவி அழைத்து செல்கிறார் அங்கே சென்று பண்ணைக்காடு மக்கள் விலங்குகளால் துன்புற்று வாடுவதைக் கண்டு மின்சார வேலி அமைப்பதற்கு ஜெயம் ரவி உதவுகிறார் அது பூமிகாவின் மாமனாருக்கு பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது இதனால் பூமிகாவை உன் அப்பா அம்மா வளர்ப்பு சரியில்லை என்று திட்டுகிறார் இதனால் பூமிகா கோபப்பட்டு தன் மாமனாரிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார் என் அப்பாவையே மன்னிப்பு கேட்க சொல்கிறாயா என்று நட்டி தன் மனைவி பூமிகாவை அடிக்கிறார் இதனால் கோபப்பட்டு வெளியேறுகிறார் பூமியா அவர் தம்பி ஜெயம் ரவியும் மற்றும் இரண்டு குழந்தைகளும் அதன் பின் அந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்ன ஆனது ?என்பது தான் ஒரு சுவாரசியமான கதை !

இன்றைய நாட்டு நடப்பு ஏற்ற கதை இன்றைய நாட்டில் நல்லவன் ஒருவன் இருந்தால் அவனை பைத்தியக்காரன் ஆகவும், ஏமாளியாகவும், மோசமானவனாகவும் தான் சித்தரிப்பார்கள் கெட்டதை பார்த்து பார்த்து பழகிப் போய்விட்ட இந்த சமுதாயம் நல்லவன் ஒருவனை அவன் சொல்லும் கருத்துக்களை எப்படி ஏற்கிறது என்பதை இயக்குனர் அற்புதமாக கதையாக எழுதி இருக்கிறார் வாழ்த்துக்கள்

ஜெயம் ரவி.

ஜெயம் ரவி-க்கு என்றே அளவு எடுத்து செய்த பேமிலி படம், அதை அவரும் திறம்பட செய்துள்ளார். பூமிகா குடும்பத்திற்குள் சென்ற பிறகு VTV கணேஷுடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது, எமோஷ்னல் காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்.
பால் டப்பாவின் எழுத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மக்கா மிஸ்கி பாடலுக்கு அவர் ஆடும் ஆட்டம் சூப்பர்

தான் செய்வது சரி ஆனால் ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று ஒவ்வொரு முறையும் குழம்பி வேதனைப்படும் காட்சியில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி

எது சரி எது தவறு, ஜெயம் ரவி செய்யும் செயல் நல்லதா? கெட்டதா? பொறுப்பே இல்லாதவராக இருக்கிறார். இது சரியா?தவறா?

நியாயம் வேண்டும் என்று நினைப்பது சரியா தவறா?. சென்னையில் இருக்கும் அடுக்குடிமாடி குடியிருப்பு சங்கத்திடம் சொல்லாமலேயே குடியிருப்பை இடிக்க கார்த்திக் உத்தரவு வாங்க
அது சரியா தவறா?

ஊட்டியில் இருக்கும் அக்கா ஆனந்தியின்(பூமிகா) வீட்டிற்கு சென்றும் அவர் செய்யும் செயல்கள் சரியா தவறா?

கார்த்திக்கின் வேலையிலும் பிரச்சனை தான். ஒரு கட்டத்தில் ஆனந்தியின் மாமனாருக்கும், கார்த்திக்கிற்கும் இடையே மோதல் ஆகிவிடுகிறது.

இதற்கு காரணம் ஜெயம் ரவி அவர் செய்தது சரியா தவறா?

ஆனந்தியின் மாமனார்(ரமேஷ் ராவ்) ஈகோ அதிகம் உள்ள கலெக்டர். அவருடன் கார்த்திக் மோத வாக்குவாதம் முற்றி குடும்பங்கள் பிரிகிறது.
அந்த பிரிவுக்கு காரணம் ஜெயம் ரவி அல்லது அவரது மாமனார் இதில் எது சரி தவறு?

இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகும் கூட கார்த்திக் திருந்தவில்லை. பிரச்சனையை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் நீ என் மகனே இல்லடா என அப்பா சொல்லும்போது தான் கார்த்திக் தன் குணத்தை மாற்றுகிறாரா?
இல்லை முதல் போலவே நடந்து கொள்கிறாரா?

உடைந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க பாடுபடுகிறாரா?
அதை விட்டு காதல் டூயட் பாடி தன்னை மகிழ்வித்து கொள்கிறாரா?

இப்படி படம் முழுக்க எது சரி எது தவறு என்று ரசிகர்கள் முன்னால் கேள்வியை வைக்கிறார் இயக்குனர்

பதில் சொல்ல சிரமமான கேள்விகள்

ஜெயம் ரவியின் செயல்கள் ஊருக்கு நல்லது செய்யுமே தவிர ஒன்றாக இருக்கும் குடும்பத்தை திரிவைத்து வெடி வைத்து கொளுத்தி போட்டு குடும்பத்தை பிரிப்பது சரியா தவறா என்ற குழப்பம் நமக்குள் ஏற்படும்

பூமிகாவின் மாமனார் பூமிகா அவரது கணவர் நட்டி ஜெயம் ரவியின் பெற்றோர்கள் எல்லோரும் நினைப்பது சரிதான் என்று படத்தின் இறுதி வரை காட்டிவிட்டு இறுதியில் ஜெயம் ரவி செய்த அத்தனை விஷயங்களும் பாசிட்டிவாக நடக்கிறது என்று சொல்கிறார் இயக்குனர் என்னதான் பாசிட்டிவாக இருந்தாலும் அவர்கள் குடும்பம் நினைப்பது தானே சரி என்று சொல்லத் தோன்றுகிறது இந்த படத்திற்கு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் இந்த காலத்தில் இப்படி ஒருவன் இருந்தால் குடும்பத்தின் இமேஜ் என்ன ஆகும் குடும்பத்தில் இருப்பவர்கள் நிம்மதியாக வாழ முடியுமா ?சமூகத்தில் இருப்பவர்கள் அவனை ஏற்றுக் கொள்வார்களா? அவனால் எங்கு சென்றாலும் நிம்மதியாக பணி செய்ய முடியுமா? குடும்பத்தில் இருப்பவர்கள் நிம்மதியாக தூங்க விட முடியுமா? எல்லோரோடும் அனுசரித்து போகாமல் இப்படி ஒருவன் கோமாளி போல நடந்து கொண்டிருக்கிறான் என்று விவாதங்கள் நடத்தலாம் அந்த அளவுக்கு ஒரு அற்புதமான இந்த காலகட்டத்திற்கு ஏற்ப கதையை எந்த சமரசமும் இல்லாமல் எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் அந்த வகையில் பிரதர் வெற்றிக்கு சொந்தக்காரனாகிறார்

குடும்ப சென்டிமென்ட், அக்கா-தம்பி பாசம், ஜாலியான ஹீரோவின் சேட்டைகள், காமெடி காட்சிகள், பாடல் காட்சிகள் என குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடும் அனைத்து விஷயமும் பிரதர் படத்தில் இருக்கிறது.

முதல் பாதி சிரிக்க வைக்கிறது. குடும்ப பிரச்சனை பெரிதானதும் படம் லைட்டாக சீரியஸ் டோனுக்கு மாறுகிறது. எல்லா பிரச்சனையையும் பார்த்துவிட்டு கார்த்திக் திருந்துவதை விட்டு அந்த கதாபாத்திரம் எந்த சூழ்நிலையும் தன்னுடைய நேர்மையான எண்ணங்களை விட்டு விலகவில்லை என்று காட்டி இருந்தால் மற்றவர்களிடம் போய் கெஞ்சாமல் இருந்தால் இன்னுமே நன்றாக இருந்திருக்குமே
ஏன்னா அவர் பக்கம் நியாயம் இருக்கிறது

பூமிகா

அக்கா கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். தன் தம்பி மீது உயிரே வைத்திருக்கும் அந்த கதாபாத்திரம் தன் கணவன் மாமனார் மாமியார் என்ற உறவுகளை உதறிவிட்டு தம்பிக்காகவே வாழும் அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டவிதமும் பூமிகா நடிப்பும் சிறப்பு

ஹீரோயின் ப்ரியங்கா

அழகாக வந்து போகிறார். அவருக்கு நடிப்பதற்கு நிறைய இடங்களில் நல்ல வாய்ப்பு ஜெயம் ரவி கதாபாத்திரத்திற்கு உதவும் கதாபாத்திரத்தில் பிரியங்கா மின்னுகிறார்

பூமிகாவின் கணவராக நடித்திருக்கும் நட்ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார்.

தலைக்கனம் பிடித்த கலெக்டராக வந்து கைதட்டல்களை பெறுகிறார் ராவ் ரமேஷ்.
சரண்யா பொன்வண்ணன் மற்றும் விடிவி கணேஷ் வந்து போகும் அளவுக்கு அவர்கள் கதாபாத்திரம் இருக்கிறது

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் மக்காமிஷி பாடல் மனதில் நிற்கிறது.பின்னணி
இசை நன்றாக இருக்கிறது

இப்படத்திற்காக உழைத்த டெக்னிஷியன்கள்
Cinematography : Vivekanand Santhosam

ஊட்டியின் குளு குளு அழகு அழகாக படமாக்கி இருக்கிறார் சென்னையில் நடக்கும் கதையிலும் கேமரா பளிச்சென்று இருக்கிறது

Editor : Ashish Joseph

படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது படம் விறுவிறுப்பாக செல்வதற்கு உதவி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர்

Art Director : R.Kishore

ஊட்டியில் ஜெயம் ரவியின் மாமனார் வீடு மற்றும் ஓட்டல் ஆஸ்பத்திரி என எல்லா இடங்களிலும் ஆட் டைரக்டரின் கைவண்ணம் அற்புதமாக இருக்கிறது

Choreography : Sandy , Sathish Krishnan

மக்கா மஸ்கி பாடலை நடனமாக்கிய சாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குழந்தைகள் என்று அந்த பாடலை விரும்பி கேட்டு குதூகலம் அடைந்து வருகிறார்கள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கும் மக்கா முஸ்கி 2024 மிகச் சிறந்த பாடலாகும் அதை படம் ஆக்கிய நடன இயக்குநருக்கு அவருக்கு வாழ்த்துக்கள்

Mumbai Dancers Coordinator : Sandra Coutinho

Lyricists : Thamarai, Parvathy Meera, Vignesh Ramakrishna, Paal Dabba

Production Controllers : S.Saravana Kumar, Karthick Anandhakrishnan

Costume Designers: Praveen Raja, Pallavi Singh

Sound Designer : T.UdayaKumar D.F.Tech

VFX : R.Harihara Sudhan

DI : Ashwini – Promoworks

Makeup : Prakash

Stills : Murugudoss

Designs : Raja (Design point)

Promo Cuts : Nadan Surya

PRO : Nikil Murukan

என அனைவரும் இந்த வெற்றி படத்திற்கு உழைத்திருக்கிறார்கள் மிகப்பெரிய பலம் எல்லோரின் பங்கும்

இயக்குனர் ராஜேஷ்

ஒரு வெற்றிக்காக சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் இயக்குனர் வித்தியாசமான கதையை கையில் எடுத்து இன்றைய நாட்டு நடப்புக்கு பொருந்துவது போல் அமைத்து குடும்ப பின்னணியில் அருமையான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்

படத்தில் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கிறது இயக்கியவிதம் நன்றாக இருக்கிறது கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது

பணம் இருப்பவர்களோ பணம் இல்லாதவர்களோ குடும்பத்தில் ஈகோ இருக்க கூடாது என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள்

பிரதர் படம் தீபாவளிக்கு குடும்பத்தோடு குழந்தைகளோடு பாரக்க வேண்டிய படம்