பராரி திரை விமர்சனம்

ரேட்டிங் 4/ 5

இது மானுடத்தைப் பற்றிபேசும் படம். திருவண்ணாமலை பகுதியில் இதன் கதைநடக்கிறது. ஒரே குலதெய்வத்தை வழிபடும் 2 சமூக மக்களின் கதையை பேசியிருக்கிறது இருதரப்பும் தினக் கூலியாகத்தான் இருக்கிறார்கள். இவர்களிடம் இந்த ஏற்ற தாழ்வுஎப்படி வந்தது? என்ற கேள்வியை படம் முன் வைக்கிறது.

அதோடு திராவிட அரசியலையும் பேசியிருக்கிறது. இங்கிருந்து புலம்பெயர்ந்து வேலைக்குச் செல்பவர்களை மற்ற மாநிலத்தவர்கள் எப்படி நடத்துகிறார்கள்? அங்கே மொழி ரீதியிலான அரசியல் எப்படி இருக்கிறது என்பதையும் சக மனிதனை நேசிப்பதுதான் அறம் என்பதையும் சொல்லி இருக்கிறது

பாண்டி சேரி நேஷனல் இன்ஸ்டிடியூட் டில் படித்த சுமார் 50 பேரை இதில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்
அனைவரும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு…

சிலருக்கு, செங்கல்சூளை, ஜூஸ் பேக்டரியில் 3 மாதம் பயிற்சி அளித்து இருக்கிறார்கள்
அதுவும் இயல்பாக இருக்கிறது

இயக்குநர் ராஜு முருகன் மற்றும் எஸ்பி சினிமாஸ் வழங்கும் ‘பராரி’. இப்படத்தை தயாரித்து வழங்கி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிபஸி போன்ற படங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதை இந்த படத்தில் ஏற்படுத்தியுள்ளது

நாயகன் ஹரி யின் அப் பா பெரியாரிஸ்டாக அவ்வப்போது திரியை கொழுத்தி போட்டு கொண்டே இருக்கிறார் கிராமத்தில் இப்படி சில பெருசுகள் இருப்பார்கள் என்று ஞாபகப்படுத்திக் கொண்டே. இருக்கிறார்

இயக்குனர் பற்றி

ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்

ராஜ் முருகன் இடம் இருந்த அரசியல் பார்வை இவரிடமும் அப்படியே இருக்கிறது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற பாகுபாடு தோலுரித்து காட்டி இருக்கிறார் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு படத்தை கொடுக்க முடியும் என்றால் அதற்கு உதாரணம் இந்த எழில் பெரிய வேடியைசொல்லலாம்
பல இடங்களில் ராஜ் முருகன் அவர்கள் பாதிப்பு இருந்தது உணர முடிந்தது

கதை களம்

பிழைப்பிற்காக தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரும் மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளார்.

ஆனால் உள்ளூரிலே நான் தான் வீரத்தமிழன் வம்சம் என்று சொல்லிக்கொண்டு திரியும் சில கூட்டங்கள் வெளியூருக்கு சென்று பெட்டிப் பாம்பாக அடங்கிப் போவதை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் காட்டி இருக்கிறார்

அதில் ஒரு காதல் கதை

அதில் கண்ணியமாக கையாண்டு இருக்கிறார்

சாதி வெறி கொண்டு அலையும் வீரத்தமிழர் வம்சம். காதலை சேர விடாது என்று நாயகன் ஒதுங்கி போவதும் நாயகி அந்த காதலை மறக்க முடியாமல் பின் தொடர்வதும் எதார்த்தமான
காட்சிகள்

இதில் கன்னட பெண் தமிழ் இளைஞனும் காதலிப்பது அது ஒரு சுவாரசியமான பகுதி

இப்படி படம் முழுக்க ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது எல்லாம் எதார்த்தமாக இயல்பாக இருக்கிறது

கதையை திரைக்கதையை சீராக கொண்டு சென்று படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்

இசை அமைப்பாளர்

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
பாடல்கள் ரசிக்க வைக்கிறது நான்கு பாடல்கள் நான்கும் ரசிக்க வைக்கிறது உமா தேவி பாடல் வரிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம்

ஹரி சங்கர்

இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஹரிசங்கர் கிராமத்து இளைஞனாக ஒரு பொறுப்புள்ள கதா பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார் மேல் சாதியில் இருக்கும் இவரின் சாதிக்கும் சண்டை வரும் போதெல்லாம் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கதாபாத்திரம் காதலிசிறு வயது முதல் தன்னை விரும்பினாலும் அவர் மேல் சாதிக்காரர் என்பதால் இது ஒத்து வராது என்று ஒதுங்கி போகும் ஒரு அற்புதமான கதாபாத்திரம்

தங்கை அஞ்சு மீது அன்பு செலுத்தும் பாசக்கார அண்ணனாக நடித்திருக்கிறார்

கரும்பு காட்டிலும், ஜூஸ் பாக்டரியில் வேலை செய்யும் போது அசல் அந்த வேலையாட்களை ஞாபகப்படுத்துகிறார். காலமெல்லாம் தன்னை இழி சாதி என்று பேசிய வில்லன் ஜெயக்குமார் கன்னட வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டு ஆடை எதுவும் இன்றி கூனி குறுகி கிடக்கும் போது தன் வேட்டியை அவிழ்த்து அவருக்கு மனத்தை காப்பாற்றும் அந்த காட்சியில் இமயமலை அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் மாறன் என்னும் ஹரி

இப்படத்திற்கு இவருக்கு தேசிய விருது கிடைக்கலாம். அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்திருக்கிறார

மாறன் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனான ஹரி ஷங்கர் தான் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

தானே தயாரிக்கும் ஒரு படத்தில் பட்டியல் இன மக்களாக எல்லா விஷயங்களிலும் அமைதி காத்து தன் மக்களை பாதுகாக்கும் அந்த நல்ல கேரக்டரை தேர்வு செய்து நடித்திருக்கிறார்

வேடியப்பன் கோயிலில் நடக்கும் பஞ்சாயத்து அந்த பாறைக்காக மோதும் அந்த பஞ்சாயத்து மற்றும் தன் இன மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மேல் சாதியினர் தர மறுக்கும் பொழுது அங்கு அமைதி காக்கும் ஹரிசங்கர் இந்த படத்தின் மூலம் உயர்ந்து நிற்கிறார்

நாயகி தேவகி யாக

ஹீரோயினாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். என்ன ஒரு அற்புதமான நடிப்பு இந்த படத்தின் இயக்குனர் சொல்லும் பொழுது 2000 பெண்களில் இவரை தேர்வு செய்தேன் என்று சொன்னார்
அதற்கேற்ப நாயகி அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் கன்னட வெறியர்களால் தன்மானம் போகும் பொழுது கூட காதலனை கட்டி அணைத்து உயிரை காப்பாற்றி நடித்திருக்கும் அந்த நடிப்பு

அருமையான நடிப்பு நிச்சயம் கவனிக்க வேண்டிய இந்த நாயகி தமிழ் சினிமாவில் புது முகமாக வரவேற்க வேண்டியவர்

ஜெய் பீம் அளவுக்கு இப்படம் பேசப்படும் படைப்பாக இருக்குமா? என்று கேட்டால் நிச்சயம் ஜெய் பீம் படம் அளவுக்கு இந்த படம் பேசப்படும்

பராரி’ என்பதை, இயக்குனர். சமீப காலமாக தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி பேசும் படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவும் அப்படி பட்ட ஒரு படமாக உள்ளது

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உள்ளூரில் நடக்கும் அவலங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல குடிக்கும் தண்ணீரை கூட மேல் சாதியினரிடம் கெஞ்ச வேண்டிய சூழ்நிலை

ஒரு பன்றி குட்டி மேல் சாதியினர் தெருவுக்குள் ஓடினால் கூட அதை அவர்கள் கௌரவமாக எடுத்துக்கொண்டு கீழ் சாதியினரை வெறுத்தெடுக்கும் அந்த சூழ்நிலை

இருவருக்கும் ஒரே கோயில் என்றாலும் அதிலும் ஏற்றத்தாழ்வுகள்

இருவருக்கும் ஒரே பாறை என்றாலும் அதிலே கீழ் சாதியினர் புழங்கக்கூடாது என்று மேல் சாதியினர் அவர்களை அடித்து உதைக்கும் அந்த காட்சிகள்

இப்படி படம் முழுக்க கீழ் சாதியினர் அனுபவிக்கும் அந்த காட்சிகளை மனம் உருகும்முறையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர்

மேல் சாதியினரும் கரும்பு வெட்டும் கூலிக்கும் ஜூஸ் பாக்டரியில் வேலை செய்யும் கடனாளிகள் தான் ஆனால் கீழ் சாதியினரை என்றால் அவர்கள் வெட்ட துடிக்கும் குத்தத் துடிப்பது ஏன்?

நாயகன் அப்பா ஜெமினி கணேசனின் ரசிகராக படம் முழுக்க வந்து கடவுள் இல்லை என்று அற்புதமான தத்துவத்தை கூறியிருக்கிறார்

மேல் சாதியினர் பிரதிநிதியாக வரும் அந்த தோழர் இரண்டு சாதிகளுக்கும் சண்டை வராமல் தடுக்கும் அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது

புகழ்

புகழ் கன்னட வெறியராக வந்து தமிழ் மக்கள் பெங்களூருவில் வந்து தொழில் செய்பவரை இவர் ஊரை விட்டு துரத்த வெறியாட்டம் கொண்டு அடித்து துவைக்கும் காட்சி கொடூரமாக இருக்கிறது

கன்னட மக்கள் தங்களுக்கு வரும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தாமல் மக்களின் குடிநீருக்காக பயன்படுத்தாமல் அங்கு இருக்கும் சர்க்கரை ஆலைக்கும் ஜூஸ் பாக்டரிக்கும் பயன்படுத்தும் அந்த அவலம் நன்றாக காட்டப்பட்டு இருக்கிறது

பெங்களூரில் இருக்கும் அரசியல் தலைவர்கள் தமிழர்கள் மீது எவ்வளவு வன்முறை கொண்டு வெறியாட்டம் நடத்துகிறார்கள் என்பதை அற்புதமாக இந்த படம் காட்டி இருக்கிறது

படத்தில் இயக்குனரின் கைவண்ணம் நிறைய காட்சிகளில் தெரிகிறது

ஏண்டா உள்ளூரில் வீரத்தமிழர்கள் என்று வசனம் பேசிக்கொண்டு அப்பாவி பட்டியலின மக்களை அடித்து துவைத்து அவர்கள் உரிமையை பறிக்கும் நீங்கள் கர்நாடக மாநிலம் சென்றால் கையாளாகாத நிலைமையை தவிக்கும் வண்ணம் கேள்வி எழுப்ப்பி உள்ளார்

நீயும் கூலி நானும் கூலி எதுடா மேலே எதுடா கீழே

மரத்தை எல்லாம் அழிச்சிட்டு மழை வருமா என்று சேவல் கிடடகேக்குறீங்களா
என்று வசனங்கள் சூப்பர்

கன்னடர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல என்பதை குறிக்கும் விதமாக கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனும் நாயகியும் அடிபட்டு கிடக்கும் பொழுது ஒரு கன்னட சிறுமி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து நீங்கள் அருந்துங்கள் என்று சொல்லும் பொழுது ஆஹா வென பாராட்ட தோன்றுகிறது

அதேபோல ஜூஸ் பாக்டரி ஓனர் தமிழர்களுக்காக ஆதரவு காட்டும் பொழுது கன்னடர்களும் நல்லவர்கள் என்று இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்

நாயகனும் நாயகியும் அடிபட்டு உயிருக்கு போராடும் பொழுது கன்னட மக்கள் கூட்டமாக ஓடி வந்து வில்லன் கும்பலை அடித்து துரத்தி அவருடைய அரவணைக்கும் காட்சி சூப்பர் இந்த மனித நேயம் எல்லோருக்கும் வேண்டும் என்பதை இயக்குனர் வலியுறுத்தி இருக்கிறார்

உள்ளூரில் வில்லனாக நடித்திருக்கும் பிரேம் கர்நாடக சென்ற பிறகு கன்னட வெறியர்களால் அவமானப்படுத்தும் பொழுது கூனிக்குறுகி படுத்து கிடக்கும் பொழுது ஹரிசங்கர் அவருக்கு வேட்டி கொடுத்து அவர் மானத்தை காப்பாற்றுகிறார் இது எவ்வளவு அற்புதமான காட்சி
பிரேம் நாத் ஜெயக்குமார் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் இனி இவரை நிறைய வில்லன் கதாபாத்திரங்களில் பார்க்கலாம் அந்த அளவுக்கு அருமையான நடிப்பு

படத்தின் வெற்றிக்கு எடிட்டர் மிகப்பெரிய பலம் எடிட்டர் சாம் அருமையான முறையில் எடிட்டிங் செய்துள்ளார்

ஆர்ட் டைரக்டர்

ஆர்ட் டைரக்டர் எந்த இடத்திலும் படத்திற்கு செட்டு போட்டது போல இருக்க கூடாது என்று தெளிவாக லைவாக ஆப் செய்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்

இந்த படம் சமுதாயத்திற்கு எந்த வகையில் பயன்படும் என்று நினைப்பவர்களுக்கு உள்ளூருக்குள் நாங்கள் ஆண்ட பரம்பரை ராஜ பரம்பரை என்று சொல்லிக் கொள்ளும் சில உயர்ந்த ஜாதிக்காரர்கள் இந்த படத்தை பார்த்தால் கூனிக்குறுகிப் போய் விடுவார்கள் ஏனென்றால் இவர்களது ஆட்டமெல்லாம் உள்ளூருக்குள் தான் வெளியே மாநிலம் விட்டு மாநிலம் சென்றால் இவர்களும் ஒரு கொத்தடிமைகள் தான் இவர்களும் மற்ற மொழி காரரிடம் கையேந்திதான் நிற்க வேண்டும் இவரும் கடனாளிகள் தான் இவர்கள் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது.

அற்புதமான படைப்பு நிச்சயம் தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய படைப்பு

இப்படத்தை தயாரித்திருக்கும் நாயகன் ஹரிசங்கருக்கும் அதற்கு துணையாக நின்று உதவிய இயக்குனர் ராஜமுருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

சவுண்ட் டிசைன் செய்து இருக்கும் அழகிய கூத்தனுக்கும் சவுண்ட் மிக்சிங் செய்திருக்கும் சூரியன் அவர்களின் உழைப்பு சிறப்பு

சவுண்ட் ஒலி அவ்வளவு கச்சிதமாக இருக்கிறது

பயர் கார்த்தியின் சண்டை பயிற்சி மிக இயல்பாக இருக்கிறது பாறை மீது நடக்கும் சண்டை காட்சிகளும் கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் சண்டை காட்சிகளில் அனல் தெரிக்கிறது

அபிநயா கார்த்திக்கின் நடன அமைப்பு நன்றாக இருக்கிறது படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சிகளிலும் மற்றும் ஜூஸ் பாக்டரியல் தேம்மாங்கு என்ற பாடலுக்கு நடனம் அமைத்த வகையிலும் கவனம் பெறுகிறார் நடன இயக்குனர்

முத்துக் கனியின் ஒப்பனை கூலித்தொழிலாளர்களின் எப்படி காட்ட முடியுமோ அப்படி இயல்பாக ஒப்பனை செய்திருக்கிறார் எந்த இடத்திலும் ஒப்பனையை மிகை படுத்தாத அளவுக்கு ஒப்பனையாளரின் திறமையை வெளிப்படுத்துகிறது

காஸ்டிங் சண்முகம் சுகுமார்

படம் முழுக்க எட்டாயிரம் ரூபாய் தான் செலவு செய்தோம் என்று இயக்குனர் கூறி இருந்தார்
அவர் அவர்கள் அணிந்து வந்த அந்த ஆடையை வைத்து படம் முழுக்க ஒரு எதார்த்தமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார் காஸ்டிங் டிசைனர் எந்த இடத்திலும் கதைக்கு காஸ்டியூம் பொருத்தமாக இருக்கிறது

மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ் சந்திரா அவர்கள் அப்துல் நாசர் அவர்கள்

நல்ல படம் தரமான படமாக வந்துள்ளது வாழ்த்துக்கள்