நிறங்கள் மூன்று விமர்சனம்

ரேட்டிங் 4/5

வாழ்க்கை ஒரு புதிர்

நாம் காணும் உலகின் பல நிறங்கள் அதில் மூன்று நிறங்களை மனிதர்களிடம் காண்கிறோம்

நண்மை செய்பவர்கள், தீமை செய்பவர்கள், நன்மை தீமை செய்வது போல் நடிப்பவர்கள்

என இந்த :மூன்று நிற மனிதர்கள் பற்றிய படம் தான் “நிறங்கள் மூன்று”

இந்த படத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எல்லோரின் பங்கும் சிறப்பாக இருக்கிறது

ஒளிப்பதிவு

.இந்த படத்திற்கு டிஜோ ஜாமி என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்
அவ்வளவு அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்
காவல் நிலையம், அதர்வாவின் வீடு, அம்மு அபிராமியின் வீடு, என எல்லா இடங்களிலும் ஒளிப்பதிவு ,
லைட்டிங் ,செம கச்சிதமாக இருக்கிறது.

மிரட்டல் இசை

ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசையும் ஆங்காங்கே வரும் ராஜா சார் பாடல்களும் தான் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்

தயாரிப்பாளர்

ஐயங்காரன் இன்டெர்நேஷ்னல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஒரு நல்ல கதையை தேர்வு செய்து இந்த படத்தை தயாரித்த ஐங்கரன் இன்டர்நேஷனல் கம்பெனிக்கு வாழ்த்துக்கள்

மனிதர்களின் இருண்ட பக்கம் மற்றும் ஆழமான உணர்வுகளை குறித்து இந்த‘நிறங்கள் மூன்று’ சொல்ல வருகிறது. இது ஒரு ஹைபர் லிங்க் திரில்லர் மூவி அடுத்து என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்லி விட முடியாது என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது இந்த படம்

அதர்வா(வெற்றி)

அதர்வா முரளி(வெற்றி ) என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பின் மூலம் புதிய உயரங்களைத் தொடுகிறார். இந்தப் படமும் நிச்சயம் அவரது நடிப்பு க்கு பாராட்டுக்கள் வாங்கி தரும் அம்மாவை இழந்த சோகம், உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக முடிய வில்லை என்ற ஏக்கம், கதை சொல்லப் போன இடத்தில் உதாசீனப்படுத்தும் தயாரிப்பாளர்கள் , இதனால் விரக்தி அடைந்து போதைக்கு அடிமையாகும் அதர்வா, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

இன்று சினிமா உலகில் இயக்குனராக முடியவில்லை என்று ஏங்கும் பல இளைஞர்களின் சினிமா கனவுகளை உதவி இயக்குனர்களின் மனக்குமுறல்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்

கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைத்திருக்கிறார் அவர் நடிப்பு இந்த படத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்

2024 ல் அவரது வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்

ரகுமான் (*வசந்த்)

. நடிகர் ரஹ்மானுக்கு இது வித்தியாசமான கதாபாத்திரம்.
ஆசிரியராக
வசந்த் என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கிறார்

மகள் அம்மு அபிராமி காணாமல் போனதிலிருந்து கலங்கும் பொழுதும் மனைவியிடம் கோபத்தை வெளிக்காட்டும் பொழுதும்
அவர் நடத்தும் பள்ளியில் மாணவர்களிடம் கண்டிப்பு காட்டும் பொழுதும் ரகுமான் நடிப்பு உயர்ந்து நிற்கிறது

துருவ நட்சத்திரம் படத்தில் எப்படி ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாரோ அதேபோல இந்த படத்திலும் அற்புதமான நடிப்பை
தந்து இருந்திருக்கிறார் ரஹ்மான்

சரத்குமார் (செல்வம்)

அடுத்து இந்த படத்தில் மிகவும் பேசக்கூடிய கதாபாத்திரம் நடிகர் சரத்குமார் செல்வம் என்ற போலிஸ் அதிகாரியாக பணத்திற்காக எதையும் செய்யும் அந்த கதாபாத்திரம் கடைசியில் மகனிடம் உருகும் பொழுது பாசத்தில் வென்று விடுகிறார்

அவர் வரும் இடம் எல்லாம் கம்பீரம் கம்பீரம் சரத்குமாருக்கு இது ஒரு திருப்புமுனையான படமாக இருக்கும்

அமைச்சர் மகனை காவல் நிலையத்தில் வெளுத்து வாங்கும் பொழுதும் ,அவரை விடுவிப்பதற்காக பேரம் பேசும் பொழுதும்
ஒரு கெட்ட போலீஸ் ஆக வாழ்ந்து காட்டி இருக்கிறார் ஆனால் அவரின் முடிவு பரிதாபமானது

அம்மு அபிராமி(பார்வதி)

படத்தின் மையப் புள்ளி இவர்தான் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் அழகாக வந்து
அம்சமாக நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்

முதல் பாடலில் துஷி யுடன் அழகாக பர்பாமன்ஸ் காட்டி அபிராமி ரசிக்க வைத்திருக்கிறார்

அவர் காணாமல் போன பிறகு கதையில் சூடு பிடிக்கிறது அபிராமி எங்கே? போனார் அவரை கடத்தியவர்கள் யார்? என்ற கோணத்தில் கதை செல்கிறது!

மூன்று நிறங்களில் இவர் நிற கதை. இன்று தினந்தோறும் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் நாம் கேட்டுக் கொண்டிருப்பது தான்

துஷ் ஒரு பக்கம் அம்மு அபிராமியை தேட

ரகுமான் ஒரு பக்கம் தன் மகளைத் தேட

காவல்துறை ஒரு பக்கம் அம்மு அபிராமி தேட

விறுவிறுப்பாக போகிறது அடுத்து என்ன நடக்கும் அபிராமி எங்கே போயிருப்பார் அவருக்கு நேர்ந்தது என்ன என்று இந்த எபிசோடு செம விறுவிறுப்பு

துஷி(ஸ்ரீ)

நிறம் ஒன்று என்று அந்த எபிசோடில் ஆரம்பிக்கிறது இவரது பயணம்

தனக்கு செல்போன் வாங்கி தர வில்லை என்று அப்பாவிடம் கோபம் காட்டுவது, பாகுபாடு காட்டி, அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று வருத்தப்படுவது, தன் நண்பர்களுடன் அம்மு அபிராமி பற்றி கூறி சந்தோஷப்படுவது என் நன்றாக நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்

பள்ளியில் தன் புரபசர் வசந்த் ஆதரவு காட்டுவது கண்டு நெகிழ்ச்சி அடைவது தீர்க்கமான பார்வை,

காதலி தோளில் சாயும் போது ஆறுதல், அதர்வா தான் கடத்தி இருப்பார் என்று கோபத்தோடு அவர் வீட்டுக்கு போவது கிளைமாக்ஸ் இல் அப்பாவின் அருமை கண்டு அவரை கட்டிப்பிடித்து நெகிழ்ச்சி அடைவது என்ன பல காட்சிகளில் இவர் இந்தப் படத்தில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் பெற்றோர்கள் எப்பொழுதும் தன் குழந்தைகளுக்கு நல்லது தான் சொல்வார்கள் என்பதை இறுதியில் புரிந்து கொள்கிறார்

நடிப்பில் புதிய பரிமாணம் காட்டியிருக்கிறார்

துஷி ,இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

இயக்குனர்

.துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர். கார்த்திக்நரேன்
இவர் படத்துக்கு இளைஞர்கள் ஆதரவு பெருகிக்கொண்டே இருந்தது அடுத்த படம் எப்போது கொடுப்பார் என்று எதிர்பார்ப்பில் இளைஞர்கள் இருந்தார்கள் தமிழ் சினிமாவும் நல்ல ஒரு இயக்குனரை பெற்று விட்டோம் என்று சந்தோசத்தில் இருந்தது அந்த சந்தோஷம் இந்த நிறங்கள் மூன்று படம் மூலம் மீண்டும் நிறைவேறி இருக்கிறது

இவர் நாடக மேடை என்ற தலைப்பில் உருவான கதை எப்போது நிறங்கள் மூன்று என்ற கோணத்தில் வெளிவந்துள்ளது

ஒரு ஹைபர் லிங்க் திரில்லர் மூவி எப்படி கொடுத்தாள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை இவருடைய துப்பறியும் மூளை நிரூபித்து இருக்கிறது

கதை சொன்ன விதமும் அதை படமாக்கி விதமும் மிகவும் ரசிக்க வைக்கிறது

இதுபோன்ற கதை திரைக்கதையில் கொஞ்சம் சறுகினாலும் படத்தின் வெற்றி இலக்கு அடைய முடியாமல் போய்விடலாம் ஆனால் எந்த இடத்திலும் படத்தில் சோடை போகவிடாமல்
கொண்டு சென்றதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்

காட்சிகளை ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி பின்னிப்பிணைந்து உருவாக்கியதற்காக திரைக்கதை மன்னன் என்ற பட்டத்தை கொடுக்கலாம்
வாழ்த்துக்கள் இயக்குனரே

(ஒரு நாள் மூன்று கதைகள்)

தொடக்கத்தில் அதர்வா கதையை விவரிக்கிறார்.

3 கதைகளுடன் விரியும் காட்சிகளை கதையை கணிக்க முடியாத வகையில் கச்சிதமாக கட் செய்யப்பட்டுள்ளது. சினிமா ஆசை கொண்டுள்ள ஒருவன்,

ஊழல் செய்யும் காவல் துறை அதிகாரி, காதலியை தேடும் மாணவர், மூவரையும் மையப்படுத்தி ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக இந்த கதாபாத்திரம் வடிவமைப்பு செய்ய பட்டுள்ளது.

வாழ்க்கை ஒரு புதிர் நாம் காணும் உலகின் பல நிறங்கள் அதில் மூன்று நிறங்களில் மனிதர்கள் காண்கிறோம் என்ற பாணியில்

நண்மை செய்பவர்கள் தீமை செய்பவர்கள் நன்மை தீமை செய்வது போல் நடிப்பவர்கள் என மூன்று நிறங்களில் மனிதர்கள் உணர்வை சொல்கிறது படம்

படம் பார்க்கும் பொழுது பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கிறது அதர்வா யார் அம்மு அபிராமி என்ன நடந்தது ரகுமான் வாழ்க்கையில் என்ன
சரத்குமார் மனைவியை பிரிந்த சோகத்தில் செய்வது என்ன
உதவி இயக்குனர்கள் வாழ்க்கையில் கதை திருட்டு என்பது இந்த சாதாரணமாக போய்விட்டதா

சின்னி ஜெயந்துக்கும் இந்த மூன்று மையப்புள்ளிகளுக்கும் என்ன சம்பந்தம்

காரில் ஏறி சென்ற அபிராமியை கடத்தினார்கள் அல்லது அவரே காதலனுடன் ஓடி விட்டாரா

இப்படி பல கேள்விகளுக்கு படத்தின் இறுதியில் இயக்குனர் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் பொழுது அடடா
என்ன ஒரு அருமையான திரைக்கதை என்று எழுந்து நின்று பாராட்ட தோன்றுகிறது

சமீப காலமாக
இதுபோன்ற திரில்லர் படங்களில் மலையாள சினிமா வெற்றிப் படிக்கட்டுகளில் உயரமாக ஏறிக் கொண்டிருக்கிறது அவர்களின் கதை அம்சம் திரைக்கதை அமைப்பது கதை சொல்லும் பாணி என எல்லாத்திலும் அசத்தி வருகிறார்கள்

தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட த்ரில்லர் படம் மூலம் ஒரு நல்ல படம் கொடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்

படத்தொகுப்பு மற்றும் டி ஐ செய்துள்ள ஸ்ரீஜித் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் ஒரு வெற்றி படத்துக்கான படத்தொகை கவனம் சேர்த்து இருக்கிறார் படத்தொகுப்பு இந்த படத்திற்கு மிகப் பெரிய பலம்

காஸ்ட்யூம் டிசைனராக அசோக்குமார் பணி புரிந்து இருக்கிறார் அவரது பணி சிறப்பாக இருக்கிறது

சண்டை பயிற்சியிளாராக டான் அசோக் பணத்திற்கு பணி புரிந்திருக்கிறார்
ஒரு வித்தியாசமான சண்டை காட்சிகளை இந்த படத்தில் நாம் காணலாம் போதையில் இருக்கும் அதர்வா சண்டை போடும் பொழுது பறந்து பறந்து வித்தியாசமாக அந்த பயிற்சி அமைத்திருக்கிறார் வாழ்த்துக்கள்

மற்றும் படத்தின் பணி புரிந்த டெக்னிஷுயன்கள்

VFX supervisor – Monesh H
Sound design – SYNC CINEMA – Sachin Sudhakaran & Hariharan
Stills – Karthick Srinevasan & Suresh
Designs – Kabilan
Chief associate director – Sivaram Ramanathan
Associate directors – Harish Durairaj & Lokesh Gurunat
Executive producer – Sundarrajan K
Creative producer – Dr. Manoj Beno

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ் சந்த்ரா அவர்களுக்கும் அப்துல் நாசர் அவர்களுக்கும்
வாழ்த்துக்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு

இன்று தமிழ் சினிமாவுக்கு புதிய ரத்தம் தேவைப்படுகிறது கதை சொல்வதில் புதிய பாணி தேவைப்படுகிறது இளைஞர்கள் இன்று உலக சினிமா பார்த்து தமிழ் சினிமாவும் அதுபோல இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தியேட்டருக்கு வருகிறது அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த நிறங்கள் மூன்று வெளி வந்திருக்கிறது இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நடித்த நடிகர்களுக்கும் பணிபுரிந்த டெக்னீசியன்களுக்கும் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய வித்தியாசமான ஹைபர் லிங்க் திரில்லர் படமான நிறங்கள் மூன்று வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்
 –