லைன் மேன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

சார்லி, ஜெகன் , சரண்யா, விநாயகம், அருள், தமிழ் செல்வன் ஆகியோர் நடித்திருக்கும் லைன்மேன் இந்த திரைப்படம் ஆஹா தமிழ் தளத்தில் வரும் நவம்பர் 22 முதல ஒளிபரப்பாகிறது

லைன் மேன் இப்படத்தின் கதை தூத்துக்குடி முள்ளக்காடு என்ற பகுதியில் நடக்கும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் அங்கு டெக்னிக்கல் இன்ஜினியரிங் படித்த செந்தில் என்ற ஒரு ஏழை மாணவன் அவன் தந்தை சுப்பையா இவர்களைப் பற்றி சொல்லும் கதை

இது ஒரு உண்மை சம்பவம் ஈரோடு அருகே ஒரு புரொஜக்டை கண்டு பிடித்து அதற்கு அங்கீகாரம் கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் செந்தில் என்பவரின் உண்மை கதையை படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் உதயகுமார்
அவரின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

இந்தப் படத்தை உதயகுமார், வினோத் சேகர் , தினகரன் பாபு, ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

விஷ்ணு கே ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு ஷாட்டும், படமாக்கி விதமும் பாராட்ட தோன்றுகிறது

தீபக் நந்த குமார் இசை அமைத்துள்ளார் கதையோடு பயணித்து உருக்கமான பின்னணி இசையும் பாடலும் கொடுத்திருக்கிறார்

சிவராஜ் படத்தை கச்சிதமாக எடிட்டிங் செய்திருக்கிறார் கதைக்கு தேவையான
காட்சிகளை மட்டும் சேர்த்து நல்ல படத்தை தந்திருக்கிறார்

OTT platform Aha has released some of the best Tamil films of this year, like Kottukkaali, Laandhar, Anjaamai, Birthmark, Pechi, Oru Nodi, and Sevappi, among others. If you are a lover of Tamil content
you can check out the list of films available on Aha in the time ahead of LINEMAN’s OTT debut.

என ஆஹாஓ டி டி நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து வெளியிட்டு வருகிறது அந்த வகையில் லைன் மேன் திரைப்படம் சாரும்.

படத்தின் கதை களம்
சார்லி(சுப்பையா)

தூத்துக்குடியில் உள்ள ஒரு கிராமத்தில் லைன் மேனாக வேலை செய்து வருகிறார் அந்த ஊரில் தாளமுத்து எனும் பணக்காரர் கந்துவட்டிக்கு விட்டு ஏழைகளை கசக்கி பிழிந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து வாழ்ந்து வருகிறார் அவர் அப்படி மின்சாரம் எடுக்கும் பொழுது சுப்பையாவின் மனைவி இறந்து போகிறார்

சுப்பையாவுக்கு செந்தில் என்கிற மகன் அவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு தன்னுடைய கண்டுபிடிப்புகளை உலகுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார்

அதே ஊரில் உப்பளத் தொழிலாளர்களுக்காக போராடும் தமிழ் என்னும் தமிழ்செல்வன் தாளமுத்துவுக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருப்பதால் தமிழை கொன்று விடுகிறார் தாளமுத்து

தாளமுத்து விடம் வேலை செய்யும் சேகர் என்பவர் அந்த ஊரிலே டீக்கடை வைத்திருக்கும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அவர் மனைவியை அடைய நினைத்து கர்ப்பிணியாக இருக்கும் பொழுது காலால் எட்டி உதைக்க கர்ப்பம் கலைந்து அந்த பெண் தீக்குளித்து இறக்கிறார்.

இதனால ஆத்திரப்பட்ட டீக்கடை பாண்டியன் சேகரை கொல்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்

தாளமுத்துக்கு இசக்கி என்ற ஒரு தம்பி அவர் மீது தாளமுத்துக்கு தீராத அன்பு ஆனால் தாளமுத்துவிடம் வேலை செய்யும் சேகர் இசக்கியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்

செந்திலுக்கு உதவி செய்யும் ஆட்டோ ஓட்டுனர் நண்பர் செந்திலை பல முறை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார்

அதேசமயம் செந்திலை காதலிக்கும் முத்துமாரி எப்படியாவது அவரை அடைய மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கிறார்

உப்பள பகுதியில் தனி வீடாக இருக்கும் செந்திலுக்கு தபால் கொண்டு வரும் தபால்காரர் இதுவரை 8 சைக்கிள் ஏழு செருப்பு மாற்றி விட்டேன் உனக்கு ஒருவனுக்கு மட்டும் நான் இவ்வளவு தூரம் வந்து கடிதம் கொடுக்க முடியாது தயவு செய்து நீ சென்னை சென்று முதல்வரை பார்த்து மனு கொடு என்கிறார்

அவர் ஆலோசனையின் படி செந்தில் சென்னை வந்து சக்தி மேன்ஷன் என்று விடுதியில் தங்குகிறார் அங்கு அவருடன் தங்கும் கைலாசம் அவர் ஒரு சென்னை ரவுடியாக செந்திலுக்கு இடைஞ்சலாக இருக்கிறார்

இதனால் அந்த விடுதியை விட்டு வெளியே வந்து ரோட்டில் படுத்து இருக்கும் பொழுது ஒரு ரவுடி அவனது பேக்கை திருடி போகிறார்

மனம் நொந்து போன செந்தில் அந்த பேக்கை திருடி கொண்டு ஓடும் அவனை பிடித்து அந்த பேக்கை மீண்டும் தனக்கானதாக தக்க வைக்கிறார் பிறகு தலைமை செயலகத்தின் முன் தூக்கி போட்டு எரிகிறார் அந்த பெட்டியை

இதனால் காவல்துறை அவரை கைது செய்து விசாரிக்கிறது

தலைமை நிலைய செயலாளர் ஆண்டனி செந்திலை விசாரித்து அவரை ஊருக்கு அனுப்பி இருக்கிறார்

ஊருக்கு வந்த பிறகு அவரின் கண்டுபிடிப்புக்கு மாவட்ட ஆட்சியிலரான அதீதீ அங்கீகாரம் கொடுக்கிறார்

அந்த சமயத்தில் சார்லிக்கு நடக்கும் விபத்து என்ன?

செந்திலின் கனவை அந்த ஊரின் வில்லன் தாளமுத்து நடக்க விட்டாரா ?

செந்தில் தனது இலக்கை அடைந்தாரா? அல்லது வேறு வேலைக்கு சேர்ந்தாரா?

முத்துமாரி தன் காதலனுடன் இணைந்தாரா?

இளைஞர்கள் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவு நலவானதா?

கடும் போராட்டத்திற்கு பிறகு செந்தில் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கும் ஜெகன் அவரது முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா?

என்பதை அவ்வளவு தத்துவமாக மனதை தொடும் வகையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் உதயகுமார்

இவர் ஹெச். வினோத் மற்றும் சீனு ராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தூத்துக்குடியை சேர்ந்தவர் சின்ன வயது என்றாலும் அனுபவமுள்ள
ஒருஇயக்குனராக நல்ல படத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார்
வாழ்த்துக்கள்

நடிகர் சார்லியின் பண்பட்ட நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது

அதிதி பாலன் ஒரு காட்சி வந்தாலும் மாவட்ட ஆட்சியராக அசத்தியிருக்கிறார்

படத்தொகுப்பாளர் ஆண்டனி ஓரிரு காட்சிகள் வந்தாலும் செந்திலின் கதையை கேட்டு உருகி போகிறார்

நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்

மற்றும் முத்துமாரியாக நடித்திருக்கும் சரண்யா உப்பளத்து பெண்ணாக ஒப்பனை இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்
அவரின் தோழி
செல்விக்காக அவரது குடிகார கணவனிடம்
எச்சரிக்கை விடுவதும்
தான் விரும்பிய செந்தில் சாதிக்க வேண்டும் என்று ஒரு வேடிக்கையான கனவை சுமப்பது என நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்

படத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை டெக்னீஷணங்களும், நடிகர்களும், தங்கள் பங்கை உணர்ந்து நல்லதொரு படத்தை கொடுத்திருக்கிறார்கள் .

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களில் லைன் மேன் படமும் இருக்கும்

ஆகா O T T யில் வெளியாகியுள்ள

இந்த லைன் மேன்
நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை

மக்கள் தொடர்பாளர்
நிகில் முருகன்