நடிகர் சத்ய தேவ், சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், நடித்துள்ள ‘ஜீப்ரா’ படத்தின் விமர்சனம்
ஆக்ஷன், காமெடி கலந்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் சத்யராஜின் கெட்டப் கவனம் ஈர்க்கிறது.
பாபா என்ற கேரக்டரில் அசத்தி இருக்கிறார் சத்யராஜ்
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது
ப்ரியா பவானி சங்கர்
நாயகியாக நடித்திருக்கிறார் வங்கியில் பணிபுரியும் கதாபாத்திரம் பட முழுக்க நாயகனுக்கு உதவி செய்கிறார்
ஒரு வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் நாயகி
சுனிலின் வில்லன் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது
அவர் பேசும் டயலாக் உடல் மொழி நக்கல், நையாண்டியமாக, மனுஷன் கலக்கி இருக்கிறார்
. படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களை ரசிக்கும்படியாக உருவாக்கியிருப்பது படத்தின் சிறப்பாக இருக்கிறது.
இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்
படம் மிகவும் விறுவிறுப்பாக போகிறது வங்கியில் நடக்கும் கொள்ளைகளும் வில்லன்கள் நடத்தும் அதிரடி ஆட்டமும் படத்திற்கு மிக சிறப்பு
மேலும்
சத்ய தேவ், தாலி தனஞ்செயா, பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில், சத்யராஜ், கருடா ராம். நடித்திருக்கிறார்கள் அனைவர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது
இப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது .
தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை
இயக்கி இருக்கிறார்
படத்தின் திரைக்கதையும் படமாக்கப்பட்ட விதம் வித்தியாசமும் புதுமையும் கலந்து பார்ப்பதற்கு ரசிக்க வைக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
படத்தின் கதை என்ன?
வங்கியில் பணிபுரியும் நாயகன் சூர்யா (சத்ய தேவ்)
அம்மாவுடன் புதிய வீடு வாங்குவதற்காக பிளாட் ஐ சுற்றிப் பார்க்கிறார் அப்போது அவரது காதலியான ப்ரீயா பவானிசங்கர் ,அங்கு வருகிறார் அவர்கள் இருவரும் காதலிப்பதை அம்மா அறிந்து கொள்ள வெட்கப்படுகிறார் சத்தியதேவ்
மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன சுனில் தன்னுடைய எதிரி ஆதியுடன் முதலமைச்சருக்கு விமானம் வாங்குவதற்காக பேரம் பேசுகிறார் அந்த நேரத்தில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று காய் நகர்த்தப்படுகிறது
இப்போது பிரியா பவானி சங்கர்
வங்கியில் பணிபுரியும் பொழுது தவறான அக்கவுண்டுக்கு நாலு லட்ச ரூபாயை டிரான்சர் செய்து விடுகிறார் இதனால் அவர் வேலை பறிபோகும் அபாயம் நாயகன் சூர்யா தலையிட்டு பிரியா பவானி சங்கரை காப்பாற்றுகிறார் ஆனால் அங்கு தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது
பென்னி என்ற குடிகாரன் ஒருவருக்கு அந்த பணம் போய்விட பெண்ணின் அக்கவுண்டில் இருந்து அந்த பணத்தை எடுப்பது என்று நாயகன் முடிவு செய்து சில வேலைகள் செய்கிறார் அது அந்த ஊரிலே மிகப்பெரிய டானாக இருக்கும் ஆதியின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படுகிறது இதனால்
ஆதி, நாயகன் சூர்யாவுக்கு ,ஒரு செக் வைக்கிறார் குறிப்பிட்ட நேரத்திற்குள் 5 கோடி அவருடைய அக்கவுண்டுக்கு
வர வேண்டும் என்று அதே சமயம் வங்கியில் நாயகனுக்கு பிரச்சனைகள் மேல் பிரச்சனை ஏற்படுகிறது
இது எல்லாம் சமாளிக்க நாயகனும்
அவரது நண்பரும் பாபா என்கிற சத்தியராஜை தேடிப் போகிறார்கள் அவர் ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதித்து தருகிறேன் என்று வாக்கு தருகிறார்
இதனால் ஆதியின் பிடியில் இருந்து சூர்யா தப்பித்தாரா ?
சூர்யாவின் அம்மாவுக்கு ஆதி யால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்ததா ?
சுனிலுக்கும் ஆதிக்கும்
நடக்கும் உச்சகட்ட போரில் யார் ஜெயித்தார்கள் ?
ஆதி ஒரு கிங்மேக்கர் ஆக வேண்டும் என்ற கனவு பலித்ததா?
சுனிலின் பாஸ் யார் அந்த பாஸை ஆதி சந்தித்தாரா ?
பெண்ணியின்
அக்கவுண்டுக்கு சென்ற ஐந்து கோடி ரூபாயை அடித்தது யார் ?
போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம்
படம் ஆரம்பம் முதல் முடிவு வரை செம விறுவிறுப்பு
செம டெக்னாலஜி,
என படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்
மீரான் எழுதிய வசனம் செம ஷார்ப் ரசிக்க வைக்கிறது
சத்ய பொன் மார்
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்
ரவி பசூர் இசையில் மிரட்டி இருக்கிறார்
படத்தொகுப்பு அனில் கிரிஷ் படத்தை விறுவிறுப்பாக செதுக்கி இருக்கிறார்
நடன பயிற்சி பாபா பாஸ்கர் நடன காட்சி ரசிக்க வைக்கிறது
சன்டை பயிற்சியாளர்
ராபின் சுப்பு
அனல் தெறிக்கும் சன்டை காட்சிகள்
சூப்பர் ரகம்
என அனைத்து கலைஞர்களும் தங்கள் பங்குக்கு படத்துக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்
மற்ற டெக்னீசியன் கள்
Production Designer : N.Chinna
Executive Producer : Ganesh Kumar V (Old Town Pictures)
Creative Producer : Indhu Lekha C (Old Town Pictures)
Production Executive : Satya Narayana Boddu
Production Designer : N.Chinna
Sound Effects & Final Mix : Nandhu. J (KGF)
Dolby Atmos & Master : RBM Studio – Basrur
Costume Designer : Aswini Mulpury
VFX Supervision : R.Mahi
Publicity Stills : V.S. Anandha Krishna
Director of posters : Debore K
மக்கள் தொடர்பாளர் சதீஷ் (AIM)
மொத்தத்தில் பான் இந்திய படமாக வந்துள்ள இந்த ஜிப்ரா என்னும் வரி குதிரை வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது
ப்ரீயா பவானிசங்கர் அதிர்ஷ்டம் மிக்க நாயகி என்பதை இந்த படத்தின் மூலமும் நிரூபித்திருக்கிறார்
மொத்தத்தில் இந்த படம் ஒரு வசூல்மழை பொழியும் படம்
புதிய டெக்னாலஜி, படமாக்கப்பட்ட விதம், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய விதம் ,காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு, என படம் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது மொத்தத்தில் இந்த படம் ஒரு வெற்றிக் குதிரை தான்
