ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன், பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மாயன்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில், வெளியாகும் ‘மாயன்’
ஒரு வெற்றி சித்திரம்
பிரமாண்டமான திகில் படமாகஉருவாகி இருக்கிறது. ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் நடித்த வினோத் கதாநாயகனாக நடிக்க, பிந்து மாதவி, ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
ஜான் விஜய், தினா, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், கே.கே.மேனன் ஆகியோரும் சிறப்பாக
நடித்து இருக்கிறார்கள்
. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா
சிறப்பாக இருக்கிறது
விறுவிறுப்பாக இருக்கிறது
. பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
: ”மாயன் என்றால் காலபைரவனின் பிள்ளை என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும், அழிப்பவர்களும் மாயன்களே. அப்பேர்பட்ட மாயன்களுக்கும், நம் மூதாதையர்களுக்கும் புராண காலத்தில் ஒரு உறவு இருந்தது. இதுவே மாயன் படத்தின் கதைக்கரு ஆகும் .
இது ஒரு நிகழ் காலம் மற்றும் பீர்யட் காலக்கட்டத்தில் நடக்கக்கூடிய கதைக்களமாக அமைந்துள்ளது.
கதை களம்
பல யுகங்களாக தீய சக்திக்கும், தர்மத்திற்கும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. லெமூரிய கண்டம் கடலில் மூழ்கிய பிறகு, சிவன் நவீன யுகத்தில் நாயகன் வினோத் மோகன் மூலமாக சிவன் அவதரிக்கிறார்.
நாயகன் ஆதிக்கு இன்னும் 13 நாட்களில் உலகம் அழிந்து விடும் என்கிற உண்மை தெரிய வருகிறது. அதற்குள் மனித வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து வாழ முடிவு செய்கிறார்.
அந்த குறுஞ்செய்தியை படித்துவிட்டு முதலில் நம்ப மறுத்தாலும் பிறகு அதை உண்மையாக நினைக்கிறார்
வங்கியில் கடன் வாங்கி அதில் வீடு கட்டுகிறார். தனக்கு தெரிந்த உண்மையை வெளியே யாருக்கும் சொல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடத்துகிறார். அந்த 13 வது நாளும் வருகிறது.
உலகம் எப்படி அழிகிறதா? இல்லையா ?என்பதை படம் விளக்குகிறது.
தர்மத்திற்கும் தீய சக்திக்கும் நடக்கும் யுத்தத்தில் எப்படி தர்மம் ஜெயிக்கிறது என்பதை கிராபிக்ஸ் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் கண்ணா.
நான்கு வருட போராட்டம் கடுமையான உழைப்பு படத்தில் தெரிகிறது
படத்தில் யுகங்கள் மாறுவதையும் மாயன் என்ற இனம் மெக்ஸிக்கோ வரை பரவி மயன் என்று மாறி இருப்பதையும் விளக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக இருக்கிறது. அதோடு பூமி கடலில் மூழ்கும் அந்த காட்சியும், சிவனுக்கும் தீய சக்திக்கும் நடக்கும் சண்டையும் பிரமாண்டமாக காட்டப்பட்டிருக்கிறது. ஒரு வரி கதையை யோசித்த இயக்குனருக்கு அதை அடுத்தடுத்த
படம் பார்க்கும் நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து உள்ளார் இயக்குனர்
பிந்து மாதவி,
பாடலுக்கு வந்து போகிறார் நாயகனின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறார்
ஜான் விஜய்,
போலீஸ் அதிகாரியாக இடைவேளைக்குப் பிறகு வந்து தவறு செய்பவர்களை அழிப்பதற்காக நாயகனை பயன்படுத்திக் கொள்கிறார்
ஆடுகளம் நரேன்,
நாயகனின் முதலாளி வந்து நன்றாக நடித்திருக்கிறார்
ரஞ்சனா நாச்சியார்,
இவர்தான் வில்லி
சாய் தீனாவின் சகோதரியாக வந்து மிரட்டி இருக்கிறார்
கஞ்சா கருப்பு
டீக்கடை நடத்துகிறார் நாயகனுக்கு அவ்வப்போது அட்வைஸ் செய்கிறார்
க்ளைமேக்ஸ் காட்சி மிரட்டலாக இருக்கிறது.
அந்த எட்டு நிமிடம் சண்டைக் காட்சிகளில் வி எஃப் எக்ஸ் மற்றும் சிஜி ஒர்க் நன்றாக இருக்கிறது பணத்தை தண்ணீராக செலவு செய்து இருக்கிறார்கள்
. படத்தில் இசை பிரமாண்டமாக ஒலிக்கிறது. எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசையைத்திருக்கிறார்.
ஒரு பிரமாண்டமான படத்திற்கு இசையை தந்தது போல இந்த படத்திற்கும் பின்னணி இசையும் தந்திருக்கிறார்கள்
க்ளைமேக்ஸ் காட்சி முடிந்த பிறகு வரும் இசைகோர்வை சிறப்பாக இருக்கிறது.
அருண் பிரசாந்தின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.
பாடல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் கிராபிக்ஸ் காட்சிகளில்
குளிப்பதை வளர அசத்தியுள்ளார்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
ஆர்ட் டைரக்டர் தனது உழைப்பை அருமையாக பங்களிப்பு செய்துள்ளார்
நாயகன் வினோத் கண்ணா நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் மலேசியத் தமிழரான இவர் நல்ல உயரம் நல்ல முகபாவனை நல்ல ஆக்ஷன் காட்சிகள் சிவனாக தோன்றி தியானம் செய்யும் பொழுதும் கண்களை உருட்டி மிரட்டி வில்லன்களை அடித்து துவைக்கும் பொழுதும் காதலி பிந்து மாதவியுடன் டூயட் பாடும்போதும் நன்றாகவே நடிப்பை கொடுத்திருக்கிறார்
இயக்குனர் ராஜேஷ் கண்ணா நல்ல கதையை தேர்வு செய்து நாட்டுக்கு தேவையான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்றக்கூடிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் அடுத்த தலைமுறைக்கு நாம் நல்ல சுகாதாரமான தூய்மையான காற்றுகள் கூடிய பூமியை விட்டுச் செல்ல வேண்டும் எனவே இந்த யுகத்தில் வட்டிக்கு வாங்கி தொழில் செய்பவர்கள் மற்றும் உலகையே சுரண்ட நினைக்கும் மோசமான நபர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்ற அவரின் எழுத்து பேனா
ஒரு மறைமுக போராட்டமே நடத்தி இருக்கிறது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய கதை ஆனால் அறிமுக நாயகன் நடிக்கும் ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு இவ்வளவு பிரமாண்டமான செலவுகள் தேவையா கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமலேயே சாதாரண முறையிலேயே சமுதாயத்திற்கு தேவையான தீர்வை சொல்லி இருக்கலாமே
மொத்தத்தில் இந்த மாயன் எல்லோரையும் கவர்வான் ரசிக்க வைப்பான் தேவையான அத்தனை கமர்சியல் அம்சங்களும் இருக்கிறது கொண்டாட வேண்டிய படம்
