வாழ்க்கை யில் இரண்டே பாதைதான் இருக்கு
சொர்க்கத்தில் முட்டி போடுவது இரண்டாவது நரகத்தில் ராஜாவாக இருப்பது
இதில் எந்த பாதையை நாயகன் ஆர் ஜே பாலாஜி முடிவு செய்தார் என்பதை சொல்லும் படம் சொர்க்கவாசல்
தவறு செய்துவிட்டு சிறைச்சாலைக்குள் செல்லும் மனிதர்கள் ஒரு ரகம் தவறு செய்யாமலேயே சில நல்லவர்களும் பாதிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு செல்வது மற்றொரு ரகம் அந்த இரண்டாவது ரகத்தில் பாதிக்கப்படுகிறார் :
நாயகன் இதில்
RJ BALAJI (AS) பார்த்தீபன்
என்ற வேடத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார் என்றாவது ஒருநாள் சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு வெளியே வர முடியாதா?
என்று ஏங்கும் கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்
அம்மாவைக் கண்டு பாசத்தில் துடிப்பதும் காதலியிடம் கணிந்து உருகுவதும்
திருநங்கையான ரங்குவிடம் மனம் திறந்து பேசுவது அவன் தவறு செய்தான் என்று அவனை கண்டிப்பதும் இப்படி ஒவ்வொரு காட்சியிலும் பாலாஜி பார்த்திபனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் வித்யாசமான நடிப்பு வித்தியாசமான முறையில் இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து மீண்டும் வெற்றி நாயகனாக ஆகி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி
SELVARAGHAVAN (AS)
சிகாமணி
என்ற கேங்ஸ்டர்
வேடத்தில் பேசாமலே மௌனவிழிகளால் மிரட்டி இருக்கிறார்
தன் நண்பன் கேன்ரிங்
இறந்து போக அவர் எரிமலையாக வெடித்து சிதறுவது நடிப்பின் உச்சம்
டி.எஸ்.பி சுனில் குமார் உடன் மோதும் காட்சிகளில் அனல் தெரிகிறது
KARUNAAS (AS) கட்டபொம்மன் என்ற வேடத்தில் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார்
படத்தின் மைய புள்ளியே இவர்தான் தர்மத்தின் பக்கம் நின்று வாதாடுவது போல கடைசியில் இவரும் தன் சுயநலத்திற்காக சில தவறுகளை செய்து பதவி உயர்வு பெறுகிறார்
கருணாஸ் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது
NATTY (AS) இஸ்மாயில் என்ற பெயரில்
அஜீரண கோளாறுகளால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் போல் ஏப்பம் விட்டுக் கொண்டே ஒவ்வொரு வரையும் விசாரிக்கும் அந்த பாங்கு தனி
உண்மையை எல்லோரும் மறைக்கிறார்களே என்று அவர் தனக்குள் சலிப்பு தட்ட பேசிக் கொள்வது சிறப்பான நடிப்பு
SANIYA IYAPPAN (AS) ரேவதி யாக
நடிப்பின் மூலம் சாணியா ஐயப்பன் தனது நடிப்பை பதிவு செய்து இருக்கிறார் ஆர் .ஜே.பாலாஜி சிறையில் இருந்து வந்தபோது அழும் அந்த காட்சி மனதை உருக்குகிறது
சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும் வேடம்
SHARAF U DHEEN (AS)
சுனில் குமார்
ஜெயிலுக்குள், ஜெயலராக வந்து மிரட்டுகிறார் அடிக்கடி சிகாவை இவர்தான் கொல்லப் போகிறார் என்று
நம்ப வைக்கிறார்
நடிப்பின் மூலம் மிரட்டி இருக்கிறார் சுனில் குமார் திகார் சிறையில் இருந்து வந்தவர் எவ்வளவு கண்டிப்பாக நடந்து கொள்வாரோ அதேபோல இதிலும் ஜொலித்திருக்கிறார்
அசல் ஒரு ஜெயிலரை
பார்த்த உணர்வு நமக்கு ஏற்படுகிறது வெல்டன் நடிப்பு
BALAJI SAKTHIVEL (AS)
குக்கர் பஷீர் என்ற வேடத்தில்
தன் பண்பட்ட நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தது இமயம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல் முடிவு பரிதாபம்
சிகா இறப்புக்கு
யார் காரணம் என்று அவர் சந்தேகப்படுவது முடிவில் ஆர்.ஜே பாலாஜி மீது சந்தேகப்படுவதும் படத்தின் திருப்பம்
HAKKIM SHAH (AS)
டைகர் மணியாக
இவர் வரும் காட்சிகளில் கொடூரமும் வில்லத்தனமும் உறைந்து போய் கிடக்க ஆர் ஜே பாலாஜி மற்றும் நடுங்கவில்லை படம் பார்ப்பவர்களும் நடுங்க வைத்திருக்கிறார்
சிறைக்குள் இவரின் ராஜாங்கம் தான் கொடி கட்டி பறக்கிறது இங்கே நான் சொல்வது தான் சட்டம் என்று மிரட்டி காவலர்களை அச்சுறுத்தும் அந்த கொடூரமான நடிப்பில் செம பாஸ் மார்க் வாங்குகிறார்
RAVI RAGHAVENDRA
மோகன்
மணப்பிறழ் நோயாளியாக
தன் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் செம்பருத்தி என்று பெயர் வைத்துவிட்டு ரோஜாவை நடிக்க வைத்திருப்பது முறையா? என்று ஆர்.ஜே பாலாஜியிடம் நக்கலாக பேசும் அந்த வசனம் ஒன்றே போதும் கைதட்டல் அள்ளுகிறது
JESUTHASAN (AS) சீலன்
ஈழத்தமிழராக நடித்திருக்கும்
இவர் நடிப்பு உச்சம் தொடுகிறது சிறைக்குள் கைதிகளுக்காக போராடுவது இலங்கை தமிழர்கள் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்று கேட்பது இப்படி எல்லா வகையிலும் சீலன் உயர்ந்து நிற்கிறார்
MAURISH (AS) ரங்கு
SAMUEL ROBINSON (AS) கேண்டி ரிக்
KAAKAGOPAL (AS) ஆனந்த்
PORKODI (AS) வேணியம்மாள்
PARAM (AS) சண்முகம்
SANTHANABARATHI (AS) ஹோம் மினிஸ்டர்
என எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
: இயக்குனர் சித்தார்த் விஸ்வநாதன்
பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விவரிக்கும்போது கொஞ்சம் ரத்தம் கசிய வலிக்கதான் செய்யும்,” என்று சொல்லும் படத்தின் இயக்குநராக அறிமுகமாகும் சித்தார்த் விஸ்வநாத்.
இவர் இயக்குநர் பா.ரஞ்சித்தின் முதன்மை உதவி இயக்குநராக ஆறு வருடங்களுக்கு மேலாக பணி புரிந்தவர்
“பொய் வழக்குகளின் மூலம் சிறை சென்ற ஒரு சாமானியனின் கதையை . வித்தியாசமான கோணத்தில் தந்து
நம் சமூகத்தில் தாங்கள் நிரபராதிகள் என உண்மையை நிரூபிக்க, முட்டி மோதி கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்
“சிறையில் அடைக்கப்படும் சாதாரண மனிதன் கூட அங்கே வாழ்ந்துதான ஆக வேண்டும் அது போல
“அங்கே உள்ள வார்டன்களின் மனநிலை தனி ரகமாக இருக்கும். வெளியில் உள்ள காவல்துறையினரைவிட சிறையில் உள்ள காவலர்களுக்கு கிடைக்கும் மரியாதை, வசதி ஆகிய அனைத்துமே குறைவாகத்தான் இருக்கும். கைதிகளைப்போலவே இந்தக் காவலர்களும்கூட எப்படியாவது சிறையை விட்டுப்போக வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்” என்ற கருத்தில் படமாக்கி இருக்கிறார் சித்தார்த் விஸ்வநாத்.
சிறையில் வேலை பார்க்க வேண்டுமென்று யாரும் ஆசைப்படுவதில்லை என்று குறிப்பிடுபவர், கைதிகளுக்கான தண்டனைக்காலம் போன்றுதான் இந்தக் காவலர்களின் பணிக்காலம் அமைகிறது.
இந்நிலையில், சிறையில் பணியாற்றும் காவல்துறையினரின் வரம்பு மீறிய அதிகார ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை இந்தப்படம் அலசும் என்று விரிவாகச் சொல்கிறார் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.
“கொலை செய்தவர்கள், கடத்தல் பேர்வழிகள், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பவர்கள், ‘பிக்பாக்கெட்’ அடிப்பவர்கள் எனப் பல்வேறு குற்றங்களைச் செய்யும் ஆசாமிகள் சிறைக்கு வருவதாக குறிப்பிடும் இவர், அப்படி வந்து சேரும் குற்றவாளிகளும் எந்தத் தவறும் செய்யாமல் இத்தகைய வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் அப்பாவிகளும்கூட சிறைக்கு வர நேரிடுகிறது. இந்தத் தனி உலகத்தை சரியான விதத்தில் காட்சிப்படுத்த மேற்கொண்ட முயற்சியாக ‘சொர்க்க வாசல்’ படத்தின் கதை,” அதை சிறப்பாக படமாக்கி விறுவிறுப்பு குறையாமல் தந்ததில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்
பாலாஜி யை காட்டிய விதமும் ஈடுபாடும் வியக்கத்தக்க வகையில் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை என நிரூபித்திருக்கிறார
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.
அற்புதமான பதிவு நின்று பேசும் வென்று காட்டும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் வித்யாசமான படப்பை தந்ததற்கு! இனி சிறந்த இயக்குனராக வலம் வருவார் என்பது உண்மை
இப்படத்தில் கேங்கஸ்டரின் வாழ்க்கை முறைகளை
‘மகாநதி’ படத்திற்கு பின்னர் அதிக ஜெயில் காட்சிகள் உள்ள படம் என்பதும், ஜெயில் காட்சிகள் அனைத்தும் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத காட்சிகள் என்பதும் படத்தின் இன்னொரு பிளஸ்
மொத்தத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பு, இயக்குனரின் திரைக்கதை, சுவாரஸ்யமான சிறை,
கேங்க்ஸ்டர் காட்சிகள், ஆகியவைகளுக்காக இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்
படத்தில் கதை சொன்ன விதமும் அது விரிகின்ற காட்சிகளும் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு வித்தியாசத்தை தரும் என்பது உறுதி நட்டி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழைத்து சிறைச்சாலைக்குள் அன்று நடந்தது என்ன? என்ற பாணியில் விசாரணை நடத்தும் பாணி கட்டபொம்மன் ஆக வரும் கருணாஸ் பார்த்தியாக வரும் ஆர் ஜே பாலாஜி இப்படி எல்லோரும் வந்து தங்களுக்கு தெரிந்த உண்மைகளை சொல்கிறார்கள் ஆனால் படத்தின் முடிவில் அது வேறு விதமாக தான் இருக்கிறது
கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது அது தான் வெற்றி
இப்பத்தை தயாரித்து இருப்பது
Produced by Swipe Right Studios
அவர்களுக்கு வாழ்த்துக்கள்
* தமிழ் பிரபாவின் எழுத்தும் வசனங்களையும் ரசிக்க வைக்கிறது
கிறிஸ்டோ சேவியர் இசை மிரட்டலாக இருக்கிறது படம் முழுக்க படத்தின் கதையோடு இணைந்து பயணிக்கிறது உயிரோட்டமான இசை
பிரிண்ட்ஸ் ஆண்டர்சன்
ஒளிப்பதிவு அசத்தல் ரகம் சிறைச்சாலைக்குள் அத்தனை கூட்டங்களையும் வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல சிறைச்சாலையை பிரமாண்டமாக காட்டி இருப்பது ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் காட்டிய அசத்தி இருக்கிறார் பல ஹெலிகாப்டர் சாட்டுகள் சிறைச்சாலைக்குள் வைத்திருக்கும் லைட்டிங்ஸ் மற்றும் வி. எப் .எக்ஸ் கலைஞர் உடன் இணைந்து அருமையாக ஒலி பதிவு செய்திருக்கிறார்
ஆர் கே செல்வாவின் படத்தொகுப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படா வண்ணம் படத்தை செதுக்கி இருக்கிறார் படத்தொகுப்பு தான் படத்தில் முதன்மை கதாபாத்திரம் என்று சொல்லலாம் கதையை விவரிக்கும் ஒவ்வொரு காட்சியும் படத்தொகுப்பாளர் கைகுலுக்கி பாராட்டலாம் அருமையான படத்தொகுப்பு வாழ்த்துக்கள் பிரின்ஸ்
கல இயக்குனராக ஜெயசந்திரன் பணிபுரிந்து இருக்கிறார் வாழ்த்துக்கள்
சிறைச்சாலை அரங்கம் இவ்வளவு பிரமாண்டமாக நேரில் இருப்பது போல் காட்டப்பட்டு இருப்பது ஆர்ட் டைரக்டரின் திறமை ஒரு சம்பவத்தை அதன் அருகே அதன் உள்ளேயே நாமும் சென்று பார்த்துவிட்டு அதோடு ஐக்கிய படுவது போல இருக்கிறது அவர் பணி வாழ்த்துக்கள் சார்
ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன்
தன் பங்குக்கு அருமையான ஆக்சன் காட்சிகளை கொடுத்திருக்கிறார் சிறைச்சாலைக்குள் நடக்கும் அந்த கைதிகளின் யுத்தம் எந்த இடத்திலும் செயற்கையாக தெரிந்து விடாத அளவுக்கு இயற்கையான வடிவமைப்பை கொடுத்திருக்கிறார் ஸ்டண்ட் இயக்குனர் படம் முழுக்க ஆக்சன் காட்சிகள் தான் என்பதற்கு அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்
ஸ்ருதி மஞ்சரி
காஸ்டியூம் டிசைனர் ஆகவும்
Chief Costumer : Anantha Nagu
வும் பணிபுரிந்து வருகிறார்கள்
விசாரணை கைதிகள் எந்த உடையில் இருப்பார்களோ அதைக் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்கள்
சபரி கிரிசனின் ஒப்பனை
உறுத்தவில்லை
மற்றும்..
..
Sound Design : Suren G and S Alagiakoothan
Audiography : Vinay Sridhar, Assisted by Vignesh Guru
Trailer Music Mix & Master : Abin Paul
VFX : Lorven Studios
என அனைவரும் படத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக பணி புரிந்து இருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Casting Director : Varsha Varadarajan
PRO: Nikil Murukan
Executive Producer : Vikrem Vybav R S
Co-Directors : Ranjini Ramesh, Karan, Thalabathi SS
Associate Directors : Ashwin Ravichandran, Arun Srinivasan, Jayasuriya S, Mohammed Maqdoom Y A
Associate Cinematographers : RJ Raghul, Vicky Anand
என திரை க்குப் பின்னால் கடுமையாக இந்த படத்தின் வெற்றி க்காக பணிபுரிந்த அத்தனை பேருக்கும் நமது வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்துக்கான கடுமையான உழைப்பு அனைவரிடமும் இருந்துள்ளது
மொத்தத்தில் இந்த சொர்க்கவாசல் கிரைம் திரில்லர் ஜானரிலில் எடுக்கப்பட்டுள்ளது நிச்சயம் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்
ஒரு உண்மை சம்பவத்தை மிக நெருக்கமாக நாம் நேரில் பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது இந்த படம்
