ஃபேமிலி படம் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/ 5

உதய் கார்த்திக்,
விவேக் பிரசன்னா,
சபிக்ஷா,
காயரோகணம்,
பார்த்தீபன் குமார் ,
ஸ்ரீஜா ரவி ,
மோகனசுந்தரம்,
கவின், ஜனனி,
சந்தோஷ் கேசவன்,
அரவிந்த் ஜானகிராமன் ,

இவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள வெற்றி படம் தான் இந்த ஃபேமிலி படம்
,
கதை களம்
[உதவி இயக்குனராக இருக்கும் தமிழ்(உதய் கார்த்திக்)
எப்படியாவது திரைப்படத் துறையில் நுழைந்து இயக்குனராக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார் அதற்காக பல ஷார்ட் பிலிம்களை இயக்கி அவர் ஒவ்வொரு கம்பெனியாக ஏரி இறங்கி பல தயாரிப்பாளர்களை பார்த்து வாய்ப்பு கேட்டு இறுதியாக ஒரு தயாரிப்பாளர் அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறார்.

ஆனால் அவர் ஒரு கண்டிஷன் போடுகிறார் தன் தம்பியை நாயகன் ஆக இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ,

தயாரிப்பாளர் தம்பியிடம் கதை சொல்கிறார் நாயகன் கதையில் பல மாற்றங்களை செய்ய சொல்கிறார் அதற்கும் ஓகே என்று உதய் கார்த்திக் ஆபிஸ் போட்டு கதை டிஸ்கசன் செய்கிறார் .

ஆனால் ஒரு மாசத்தில் ஆபீஸ் மூடிவிட்டு காணாமல் போன தயாரிப்பாளர் பிறகு தானே இந்த படத்தை இயக்குவதாகவும் கதையை கொடுத்து விடு என்று கண்டிஷன் போடுகிறார்
இவரது மூத்த அண்ணன் வழக்கறிஞராக இருக்கும் விவேக் பிரசன்னா(சரத்குமார் )இரண்டாவது அண்ணன் பார்த்திபன் குமார் இவர்கள்எல்லோரும்
கதையை கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் தமிழ் கதையை கொடுக்க யோசிக்க, அப்பொழுது அந்த தயாரிப்பாளர் உன் அண்ணன்கள் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து உனக்கு உதவுவார்களா?
நான் கோடி கோடியாக பணம் செலவழித்து உன்னை இயக்குனரக்க நினைத்தேன் என்று சொல்கிறார் இதனால் கோபப்பட்ட விவேக் பிரசன்னா, தன் தம்பியை இயக்குனராக்க ,
படம் தயாரிப்பதாக சவால் விடுகிறார் அதன் பிறகு அந்த சவாலில் அந்த குடும்பம் ஜெயித்ததா? அந்த பேமிலி படம் எடுத்து முடித்தார்களா? அதன்பின் உதய் கார்த்திக் தன் காதலியுடன் இணைந்தாரா? எடுத்த படம் எப்படி ஓடியது? தல அஜித் படத்துக்கு டப் கொடுக்கும் வகையில் அந்த படம் ஓடியதா?

அதற்காக அந்த குடும்பம் பட்ட கஷ்டங்கள் என்ன? அண்ணன்கள் இருவரும் என்னென்ன அவமானங்களை பட்டார்கள்?
சினிமா ஆசை என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு சிரமப்படுத்துகிறாய் என்று மகனை வெளியே அனுப்பி ய தாய் !இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற உதய் எப்படி மீண்டும் அந்த குடும்பத்துடன் சேர்ந்தார் ?
என்பது எல்லாம் மிகவும் சுவாரசியமாக கலகலப்பாக ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லி இருக்கிறது இந்தபேமிலி படம்

படத்தின் ஹைலைட்ஸ்

மோகனசுந்தரம் நாயகனின் தாத்தாவாக வந்து படத்தின் திருப்ப த்தில் படம் எடுப்பதற்கு அவர் கொடுக்கும் பணம் மிக முக்கியத்துவமான காட்சியாக மாறுகிறது நயமான நடிப்பு அவர் இந்த படத்தில் கவனிக்க வேண்டிய கதாபாத்திரம்

: அடுத்து விவேக் பிரசன்னா இப்படி ஒரு காலத்தில் இப்படிப்பட்ட அண்ணன்கள் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவுக்கு அவர் சமுத்திரம் சரத்குமார் ஆக வழக்கறிஞராக வந்து தம்பிக்கு பக்கபலமாக இருக்கிறார் அவர் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்

அடுத்து இன்னொரு அண்ணன் பார்த்தி குமார் BBO வில் வேலை செய்து விட்டு இரவு முழுதும் கண்விழித்து பகலில் தூக்கம் இல்லாமல் தவிக்கும் கதாபாத்திரம் தம்பிக்கு ஒரு பிரச்சனை என்றதும் பொங்கி வரும் அந்த கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது

அம்மா வேடத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஸ்ரீஜா ரவிக்கு யார் முதலில் எழுகிறார்களோ அவர்தான் காபிபோட போட வேண்டும் என்று கண்டிஷன் போடுவதும், குடும்பத்திற்காக பொறுப்புகளை ஏற்று தன் மகனின் கனவுகளுக்காக போராடும் அந்த தாயின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது

: ஜிம் வைத்திருக்கும் அப்பா மகனுக்காக கடைசியில் அந்த ஜிம்மை விற்று பணத்தை கொடுத்து படம் எடுக்க சொல்லும் பொழுது ஆஹா! இப்படி ஒரு அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது

முகநூலில் பழகி நாயகனின்நட்பு கதாபாத்திரமாக மாறி பின் காதலியாக மாறும் நாயகி சுபிக்ஷா கதாபாத்திரம் மிகவும் ரசிக்க வைக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் பரபரப்புக்கும் திருப்பத்துக்கும் அவர்தான் மெயின் காரணம் ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதை இந்த படத்தின் நாயகி நிரூபிக்க க்கிறார்

அண்ணன் தம்பிகள் ஒன்றாக சரக்கடிப்பது தம்பிக்கு பிரச்சனை என்றவுடன் அண்ணன்கள் ஓடி வந்து உதவுவது தம்பியை எப்படியாவது இயக்குனர் ஆக்க வேண்டும் என்று அண்ணன்கள் துடிப்பது

இப்படி குடும்பமே ஒன்று சேர்ந்து நாயகனின் கனவு நனவாக துடிப்பது என இது நிச்சயமான ஒரு ஃபேமிலி சூப்பர் படம் தான்
எத்தனை குடும்பத்தில் இப்படி அண்ணன், தம்பிகள், அம்மா, அப்பா, தாத்தா, நாயகி எல்லோரும் ஒன்று சேர்ந்து நாயகனை முன்னேற்றத் துடிக்கிறார்கள்
என அதுவே ஒரு பாசிட்டிவான வித்தியாசமான சிந்தனை தான் இயக்குனர் இந்த வகையில் ஜெயித்திருக்கிறார்

நாயகன் உதய்

நாயகன் உதய் கார்த்திக் (தமிழ்) என்ற கதாபாத்திரத்தில் உதவி இயக்குனராக தன்னால் முடியாத இயலாத ஒன்றை தூக்கி கையில் சுமந்து கொண்டு அதை கனவாகக் கொண்டு அதை அடைய துடிக்கும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் தன் அண்ணன் களுடன் ஒன்றாக மது அருந்தும் பொழுது, அம்மாவிடம் பாசத்தை காட்டும் பொழுது, எல்லா காட்சிகளும் சிறப்பாக நடித்தி ருக்கிறார் உதயங கார்த்திக்
காதலியை உறுதியாக கைப்பிடிக்கும் அந்த கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.

தமிழ் சினிமாவில் டைரக்ட் பண்ணி ஜெயிப்பது எல்லாம் நடக்காத காரியம் இன்னைக்கு இருக்கிற சக்சஸ் டைரக்டர்கள் எத்தனை அவமானங்களையும் எத்தனை வலிகளையும் கடந்து வந்திருக்கிறார்கள் தெரியுமா? என்று நாயகன் மூலம் இன்றைய முன்னணி இயக்குனர்களை ஒரு சாம்பிளாக காட்டியிருக்கிறார் இயக்குனர்
வெல்டன் இயக்குனர் 👍🏿

நல்ல கதையை வைத்துக் கொண்டு தெருத்தெருவாய் அலைந்து கொண்டிருக்கும் உதவி இயக்குனர்களின் வலியை அருமையாக சொல்லி இருக்கிறது
இந்த பேமிலி படம்

தன் பிள்ளையை அக்கறையாக கவனிக்கும் அன்பான அம்மாவாக ஸ்ரீஜா ரவி நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்
[

அதோட நாயகி சுபிக்ஷா நாயகனின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அர்த்தமுள்ள நாயகியாக நடித்து மனதைக் கவர்கிறார் காவல்துறை அதிகாரியாக வரும் காயத்ரி இரண்டு காட்சிகள் வந்தாலும் செம கெத்து

இசையமைப்பாளர் அணிவியின் பின்னணி இசை யும், பாடல்களும், வேற ரகம்

: செல்வகுமார் திருமாறன் இயக்கம் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது நம் பக்கத்தில் இருந்து ஒருவரை பார்ப்பது போல உணர்வு ஏற்படுகிறது இன்று ஒவ்வொரு உதவி இயக்குனர்களும் அவர்கள் படும் துன்பங்களும் அதற்கு அந்த குடும்பத்தில் ஆதரவும் எதிர்ப்பும் எல்லாம் கண் முன் தெரிகிறது

நாயகன் நண்பனாக வரும் தல அஜித்தின் ரசிகராக வரும் அவரின் காமெடி ரசிக்க வைக்கிறது ஒரு பூங்கொத்து கொடுக்கலாம்

கடைசி அரைமணி நேரம் பரபரப்புக்கும், காமெடிக்கும், பஞ்சம் இல்லாமல் இருக்கிறது
இப்படி ஒரு அண்ணன்கள் இருந்தால் எந்த தம்பியும் சாதிக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு குடும்ப ஒற்றுமையை காட்டிய இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்
இயக்குனரின் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் வாழ்த்து சொல்லலாம் பேமிலி படம் ஒரு ரசிக்க வேண்டிய குடும்ப படம் இந்த காலத்துக்கு தேவையான படம் வெற்றி படமாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள் பட குழுவுக்கு

யூ கே கிரியேஷன்ஸ் சார்பில்
தயாரிப்பாளர் கே.பாலாஜி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் டெண்டு கொட்டாய் இப்படத்தை ரிலீஸ் செய்கிறது

கிரியேட்டிவ் புரொடியூஷர்
பார்த்திபன் குமார் அவரை படத்தில் நடித்திருக்கிறார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

அனிவ்யூ இப்படத்திற்கு
இசை அமைப்பாளராக
பணி புரிந்து இருக்கிறார் பின்னணி இசையும் பாடல்களும் பிரமாதம்

மகேந்திரன் இப்படத்திற்கு செய்துள்ளார்
ஒளிப்பதிவு
காட்சிகளை ரிச் ஆகவும் அதே சமயம் கண்ணுக்கு உருத்தல் இல்லாத லைட்டிங் கொடுத்து கவர்ந்திருக்கிறார்

சுதர்சன் இந்த படத்தை

படத்தொகுப்பு
செய்திருக்கிறார் கச்சிதமான படத்தொகுப்பு வேகம் விறுவிறுப்பு எல்லாமே இந்த படத்தில் இவரின் கைவண்ணம் தான்

கே .பி . நந்துவின்
ஆர்ட் டைரக்டர்
பணி சிறப்பாக இருக்கிறது நாயகனின் வீடு தயாரிப்பாளர் அலுவலகம் மற்றும் எல்லா இடங்களிலும் இவர் கைவண்ணம் பளிச்சென்று தெரிகிறது

:

பாடல்களை அகமத் எழுதி இருக்கிறார் பாடல்கள் ரசிக்க வைக்கிறது

அதேசமயம் அஜேஸ்
பேக் ரவுண்டு மியூசிக்
அமைத்திருக்கிறார் சிறப்பாக இருக்கிறது

மக்கள் தொடர்பாளர்
நிகில் முருகன்

என இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் பேமிலி படம் ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது