புஷ்பா 1 அடுத்து அதிக எதிர்பார்ப்பு இருந்தது அது இந்த புஷ்பா 2 வில் பூர்த்தி செய்ய பட்டுள்ளதா வாங்க பார்க்கலாம்
: .
புஷ்பா 2 இந்திய சினிமா பெஸ்ட். மூவி அல்லுஅர்ஜுன், மற்றும் இயக்குனர் #சுகுமார் இருவரும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் ஒரு படத்தின் மூலம் பெரிய திரையில் முத்திரை பதித்து உள்ளனர்
படத்தின் ஸ்கிரிப்ட் சிறப்பானது, மேலும் சுகுமார் அதை பொழுதுபோக்கிலும், முற்றிலும் மாஸ் அப்பீலிங் செய்வதிலும் விட்டு வைக்கவில்லை. காட்சிக்கு காட்சி, திரைப்படம் மின்னூட்டும் தருணங்களை வழங்குகிறது, இது திரையரங்குகளை கைதட்டல்களால் வெடிக்க வைக்கும்- சினிமா உயரம் அதன் உச்சத்தில்.
அல்லு அர்ஜுன் நடிப்பு மறக்க முடியாதது, அவரது ஸ்வாக் மற்றும் தீவிரம் புஷ்பா 2 இன் ஜான்.. அவரது பழக்கவழக்கங்கள் மற்றும் டயலாக் டெலிவரி வைல்ட்ஃபயர், அவர் இந்த படத்தின் மூலம் மற்றொரு தேசிய விருதை வெல்லலாம் மற்றும் மிகப்பெரிய பான் இந்தியா நட்சத்திரமாக உருவாகலாம்.
சண்டைக் காட்சிகளில் அணல் தெறிக்க
ரசிர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்
ராஷ்மிகா மகளுடன் ரொமான்ஸ் வில்லன்களுடன் துவம்சம் செய்யும்
செயல் என எல்லாமே ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து

கதை களம்
: புஷ்பா 1 பாகம் முடிந்த இடத்தில் இருந்தே இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்).
பகத் பாசில் உடன் மோதும் உடன் படம் முடிகிறது அதன் பிறகு..
புஷ்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்).
ஆந்திர முதல்வரை சந்திக்க செல்லும் புஷ்பாவை, முதல்வருடன் ஒரு போட்டோ எடுத்து வரச் சொல்கிறார் ஸ்ரீவள்ளி. ஆனால் தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பும் புஷ்பா ஒரு கடத்தல்காரன் என்பதால் முதல்வர் (ஆடுகளம் நரேன்) மறுப்பு தெரிவிக்கின்றார்.
இப்போது கதை சூடு பிடிக்கிறது
இதனால் கோபமடையும் புஷ்பா, தன்னுடைய நெருங்கிய நட்பில் இருக்கும் எம்.பி சித்தப்பாவை (ரமேஷ் ராவ்) முதல்வர் ஆக்குவதாக சபதம் ஏற்கிறார்.
அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் மிரட்டல்
புஷ்பாவின் சபதம் நிறைவேறியதா? ஷெகாவத்துக்கும் புஷ்பாவுக்கும் இடையிலான பகை தீர்ந்ததா என்பதே திரை கதை
‘புஷ்பா’ முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றி . ஆனாலும், அது ஒரு ‘பான் இந்தியா’ படமாக வெற்றி பெற்றது அது போலவே புஷ்பா 2 படத்திற்கு வெற்றி மாலை சூடி உள்ளது
ஃபகத் பாசில் தனது கதாப்பாத்திரத்திற்கு ஆழம் கொடுக்கும் வகையில் நன்றாக நடித்துள்ளார்.
இடைவேளைக் காட்சியில் அவரது வசனங்களுக்கு சிரிப்பலைகள் அரங்கை நிறைக்கின்றன.
சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் கதைக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கின்றனர்

. சுனிலுக்கு முதல் பாகத்தைவிட இதில் நேரமும் முக்கியத்துவமும் அவரின் பல காட்சிகள் அழுத்தமாக உள்ளன.
நடிப்பு நன்றாக இருக்கிறது
இயக்குநர் சுகுமார்
இப் படத்தை மூன்று மணிநேரம் 20 நிமிடங்கள்
விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார்
அடுத்தது என்ன அடுத்தது என்ன என கேட்க வைக்கிறார் இயக்குநர்.
கதையை கொண்டு சென்ற விதத்திலும் அல்லு அர்ஜுனனிடம் வித்தியாசமான நடிப்பை தேர்வு செய்து நடிக்க வைத்தாலும் இயக்குனர் கவனம் பெறுகிறார் ஒரு பிரம்மாண்டமான படத்திற்கு இயக்குனரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை சுகுமார் உணர வைத்து இருக்கிறார் எந்த இடத்திலும் அலுப்பு தட்டாமல் மூன்று மணி நேரம் 20 படத்தை கொடுப்பது இந்த காலத்தில் சவாலான விஷயம் அந்த சவாலியில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர்
அதுவும்
ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக படமாக்கி இருக்கிறார் சீரியஸான கதையில் காமெடியை சரியாக கையாண்டிருக்கிறார் சுகுமார்.
தமிழ் நாட்டில் ஏ ஜி எஸ்
நிறுவனம் சுமார் 800 திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது புஷ்பா 2
ராஷ்மிகா மந்தனாவும் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார்.
அல்லு அர்ஜுனுக்காக அவர் ஒரு காட்சியில் பேசும் நீளமான வசனம் கைதட்டல்களை பெறுகிறது. ரொமான்ஸ் மற்றும் நடனம் என இரண்டிலுமே ராஷ்மிகா அசத்தியுள்ளார். பீலிங்ஸ் பாடல் இமைக்காமல் பார்க்க வைக்கும் அளவிற்கு அவரது ஆட்டம் உள்ளது
கிஸ்க் பாடலுக்கு வரும் ஸ்ரீலீலா நடனத்தில் அசர வைக்கிறார்
மிரோஸ்லாவ் குபா ப்ரொஸிக்கின் கேமெரா ஒர்க் மிரட்டியிருக்கிறது.
சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் காடு மலைகள் என மிகப் பிரமாண்டமாக உழைத்து இருக்கிறார்கள் ஒளிப்பதி வாளரும் அவரது டீமும்
கேமரா ஒர்க்
படத்தின் பிரம்மாண்டமான காட்சிக்கு காட்சி தெரிகிறது
வேகமான திரைக்கதை திரை அரங்கு களில் தீப்பிடிக்க வைக்கிறது
பரபரப்பான திரைக்கதை
படத்தின் பலம்
தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களும் பின்னணிஇசையில் சாம் சி எஸ் மிரட்டி இருக்கிறார்கள்
தெலுங்குக்கு சந்திர போஸ் பாடல் எழுதியுள்ள தமிழுக்கு விவேகா எழுதியிருக்கிறார்கள் இரண்டுமே அவ்வளவு ரசிக்க வைக்கிறது
கமல் கண்ணன்
வீ எப் எக் எஸ் சூப்பர்வைசராக பணிபுரிந்து இருக்கிறார் சூப்பராக இருக்கிறது
நவீன் நூலில் படத்தொகுப்பாளாராக பணிபுரிந்து இருக்கிறார் படம் விறுவிறுப்பாக சென்று இருந்தாலும் இன்னும் ஒரு 20 நிமிடங்களை குறைத்து இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது
தீபாளி நூர் மற்றும்
சீதல் சர்மா
கேஸ்டிங் டிசைனராக பணி புரிந்திருக்கிறார்கள் அல்லு அர்ஜுனன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப காஸ்ட்யூம் அமைந்திருக்கிறது ஸ்ரீ லீலா கவர்ச்சியான உடைகளும் பகத் பாசலின் உடைகளும் மற்ற கதாபாத்திரங்களின் உடைத்தேர்வும் சிறப்பாக இருக்கிறது

படத்தின் பலம் சன்டை காட்சிகள் இப்படத்தில் சன்டை பயிற்சியாளராக
பீட்டர் ஹெயின் ,
டிராகன் பிரகாஷ் ,
கீச நவகாந்த்
ஆகியோர் அருமையான விறுவிறுப்பான சண்டை காட்சிகளை கொடுத்திருக்கிறார்கள்
மக்கள் தொடர்பாளர்கள்
சுரேஷ் சந்திரா அவர்கள் மற்றும் அப்துல் நாசர் அவர்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தமைக்கு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த புஷ்பா 2மிகப்பெரிய வெற்றி படமாக வந்திருக்கிறது இரண்டு வருடமாக அல்லு அர்ஜுனனும் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் மற்ற டெக்னிஷீயன்களும் உழைத்த உழைப்புக்கு மாபெரும் படமாக வந்திருக்கிறது இப்படத்திற்கு அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
