**செம மிரட்டலாக வந்துள்ளபடம் “அந்த நாள்” படத்தின் விமர்சனம்*
கீரீன்மேஜிக் என்டர்டெயின்மென்ட் ஆர்.ரகுநந்தன் தயாரிப்பில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடித்த திரைப்படம் “அந்த நாள்”.
இந்த படத்தில் ஆதி பிரசாத், லீமா எஸ் பாபு, கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இந்த படத்தை வி.வி. கதிரேசன் இயக்கியுள்ளார்.படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஆர்யன் ஷ்யாம் எழுதியுள்ளார்.
மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது படம் பல காட்சிகள் மிரட்டி இருக்கிறார் இயக்குனர்.
நரபலி, மற்றும் பிளாக் மேஜிக்கை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் உலகமெங்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது மற்றும் பல்வேறு நாடுகளில் 8 அதிகாரப்பூர்வமான விருதுகளை பெற்றுள்ளது.
அதுவே படத்திற்கு மிகப்பெரிய பலம்
விருதுக்கு தகுதியான படம்
படத்தின் கதை களம்
படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண்ணை நரபலி கொடுப்பது போல் காட்டுகிறார்கள் அது ஏன்? எதற்கு? என்று புரியாவிட்டாலும் ஆரம்பக் காட்சிகளிலேயே திகிலாகவும், மிரட்டலாகவும்
இருந்தது
பிளாக் மேஜிக் படங்கள் பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் பட்டாளம் நிறையவே இருக்கிறார்கள் எனவே ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தை வரவேற்பார்கள் என்பது உறுதி
நாயகன் ஆரியன் சாம் ,மற்றும் ராஜ்குமார், ஆதிபிரசாத், லீமா எஸ் .பாபு, எல்லாரும் கதை வசனம் எழுதுவதற்காக தனியாக ஒரு பங்களாவுக்கு வருகிறார்கள் அந்த பங்களாவுக்குள் ஒரு அமானுஷ்யம் இருப்பது போல் உணர்கிறார்கள் அங்கு அமானுஷ்யம் இருக்கிறதா? இல்லையா?
என்று ஓஜா போர்டு மூலம் பேயை வரவழைத்து கேட்கலாம் என்று முயற்சி செய்கிறார்கள் அது மிகப்பெரிய விபரீதங்களை ஏற்படுத்துகிறது
அதன் பிறகு அங்கு உள்ள ஒரு கேமராவில் பதிவாகி யிருக்கும் சில வீடியோக்கள் அவர்கள் பார்வைக்கு வருகிறது அந்த வீடியோவில் தயாரிப்பாளர் சிவா மற்றும் அவர்கள் குடும்பம் அனைவரும் ஒரு மோசமான சைக்கோவால் கொல்லப்படுவதைப் போல வீடியோ பதிவாகி இருக்கிறது அந்த வீடியோவில் பார்த்த அதே மனிதன் இப்பொழுது அவர்கள் முன் நிற்கிறான்
இவர்கள் எல்லோரும் தப்பிக்க வேண்டும் வெளியே ஓடுகிறார்கள் அங்கு முடியவில்லை
சுவர் மீது ஏறி குதிக்கிறார்கள் அங்கு அபாயம் ஏற்படுகிறது மீண்டும் வீட்டுக்கு ஓடி வரும்போது கதவு பூட்டிக் கொள்கிறது இப்பொழுது பயத்தின் உச்சத்தை ஏற்படுத்துகிறது அந்த காட்சிகள்.
ஹாலிவுட் படம் போல படமாக்கப்பட்டது அந்த காட்சிகள்
அந்த கேமராவில் பதிவாகி இருக்கும் அந்த வீடியோவை இவர்கள் காட்சிகளாக காணும் பொழுது படம் பார்ப்பவர்களுக்கு பயத்தையும் ,அடுத்து என்ன நடக்குமோ? என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது இது திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி
அதன் பிறகு அந்த பங்காளாவில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா?
இவர்களை மிரட்டுவது அமானுஷ்யமா? அல்லது சைக்கோ மனிதனா?
: இவர்கள் பேயை வரவழைத்து தவறு செய்து விட்டார்களா? அல்லது ஓஜா போர்டு மூலம் வந்த அந்த பேய் இவர்களை காப்பாற்றியதா?
i: ஆரியன் சாம் நடிப்பு எப்படி? முதல் படம் போல் இருக்கிறதா? அல்லது மூன்று படங்கள் நடித்தவரை போல் அவரது முக பாவனை இருக்கிறதா?
என்பதையெல்லாம் மிகவும் வித்தியாசமாகவும், மிரட்டலாகவும் படமாக்கி இருக்கிறார்கள் இயக்குனரும் பட நாயகனும்…
திகில் திரைப்படங்கள் நமக்குக் கொடுக்கும் கூஸ்பம்ப்களையும் இந்த வகை உளவியல், ஜாம்பி, மாய, மாந்திரீகம், நாட்டுப்புற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திகில் போன்ற பல வகைகள் . ஒரு சுவாரஸ்ய த்தை உங்கள் மூளையில் வெவ்வேறு நாண்களைத் தாக்குதல் ஏற்படுத்தும்
சூனியம் என்பது பலர் ஆர்வமாக உள்ள ஒரு புதிரான வகையாகும். பில்லி சூனிய பொம்மைகள், பென்டாகிராம்கள் மற்றும் உடைமைகளால் நீங்கள் கவரப்பட்டால்,அதை இந்த “அந்த நாள்” படத்தை தாராளமாக பார்க்க லாம்
பிளாக் மேஜிக் படமான அருந்ததி (2009)ல் வெளி வந்த படம். அருந்ததி’ கட்வால் அரச வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதை.
இந்தப் படம் கூட ஒரு பிளாக் மேஜிக் படம் தான் இது எந்த அளவுக்கு வெற்றி பெற்றது அந்த அளவுக்கு அந்த நாள் படத்திலும் பிளாக் மேஜிக்கைவைத்து மிரட்டி இருக்கிறார்கள்
அருந்ததி படம் ராகுலின் ஓவர் பில்டப் கொடுத்து படமாக்கி இருந்தார்கள் ஆனால் இதில் எதார்த்தமாக படமாக்கி இருக்கிறார்கள்
இயக்குனர் வி வி கதிரேசன்
படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார் படத்தின் டிவிஸ்ட்
யாரும் எதிர்பாராதது நிச்சயம் ஷீட்டின் நுனிக்கி அழைத்து வரும் காட்சிகள் படத்தில் நிறைய இருக்கிறது.
ஓஜோ ஃபோர்டு மூலம் பேய் வருவது போல் காட்டுவார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் நடந்தது வேறு முடிவு எதிர் பார்ப்புடன் அடுத்து பாகத்திற்கு லீடு கொடுத்து உள்ளார்
ஆர்யன் ஷாம் க்கு இருள் சூழ்ந்த பயம் என்ன செய்ய போகிறீர்கள் என்று காத்திருக்கோம் சார்!
சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் 26 நாட்களும் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டு இருப்பது நன்றாக தெரிகிறது அவர் உழைப்பு படத்திற்கு பலம்
ராபர்ட் சற்குணத்தின்
இசை மிரட்டல் ஆக இருக்கிறது பாடல் பின்னணி இசை செம மிரட்டல்
மகேந்திரன் ஆர்ட் டைரக்டர் ஆக பணிபுரிந்து இருக்கிறார் இந்த வீட்டை சுற்றி தான் கதை என்பதால் வீட்டுக்கு தேவையான கலைப் பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்
ஆர்யன் ஷாம்
கிரியேட்டிவ் இயக்குனர், மற்றும்
கதை திரைக்கதை ,
எழுதி இருக்கிறார்
ஆர்யன் ஷாம்,
நடிப்பிலும் பாஸ் மார்க் வாங்கி, கதை திரைக்கதைகளுடன் சரியான ஒரு மிரட்டலான படத்தை கொடுத்திருக்கிறார்
சில காட்சிகளில் வித்தியாசமான மனிதராக கண் முன் நிற்கிறார். ஸ்டைலான ஒரு இயக்குனராக ரசிக்க வைக்கிறார். இந்த படத்தில் பாஸ் மார்க் வாங்கி விட்டார் அவருக்கு வெற்றி நிச்சயம்.
ரகு நந்தன்
இந்த படத்தை தயாரித்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு நல்ல கதைக்களம் உள்ள படத்தைக் கொடுத்ததற்காக
படத்தின் முடிவில் ஒரு நல்ல மெசேஜ் இருக்கிறது அது உண்மைதான் அதை யார் எதிர்கொண்டாலும் அதன் எதிர்வினை ஆற்றியாக வேண்டும் என்ற ஒரு நல்ல கருத்துக்கள் வைத்து படத்தை கொடுத்திருக்கிறார்கள்
Antha waaL
லீமா எஸ்.பாபு இருவரும் அமானுஷ்யத்தை கண்டு பயந்து நடுங்குவது அஞ்சி ஓடுவது என அவர்களுக்கு உண்டான பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்
இமான் அண்ணாச்சி கந்தன் என்ற வேடத்தில் காமெடியில் கலக்கி இருக்கிறார்
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் நடித்த ராஜ்குமார் இந்த படத்தில் அவரும் மிரட்டி இருக்கிறார்
கிஷோர் ராஜ்குமார் அவருடைய நடிப்பும் ரசிக்க வைக்கிறது
இந்த படத்தில் மக்கள் தொடர்பாளர் பெரு. துளசி பழனிவேல் மக்களிடம் கொண்டு போய் படத்தை நன்றாக சேர்த்து இருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்
: மற்றும் இப்படத்தில் பணிபுரிந்த காஸ்டியூமர், ஒப்பனையாளர், உதவி இயக்குனர்கள், உதவி கேமராமேன்கள், மற்றும் படத்திற்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் இந்த படம் ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள்💐
