தென் சென்னை திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5 /5

ரங்கா ,ரியா, நிதின் மெஹ்தா, இளங்கோ குமணன், வத்ஸன் நடராஜன், ராம், விஷால் சுமா, ஆறு பாலா,
திலீபன் இவர்கள் நடிப்பில்
உருவாகியுள்ள
விறுவிறுப்பான ஜானர் படம் “தென் சென்னை*

இந்த படம் ஹாலிவுட் மேக்கிங் போல உள்ளது.
கதை களம் விறுவிறுப்பாக இருக்கிறது

“கதை களம்

ஹோட்டல் நடத்தி வரும் நாயகன் ஜெய்சன்(ரங்கா)

அவரது மாமா இளங்கோ குமணன் (டோனி)

இவர்கள் நடத்தி வரும் ஹோட்டலுக்கு மேலே பார் நடத்தி வருகிறார் கள்

அங்கு தவறான வழியில் பணம் குவிகிறது
அந்த பணத்தால் நாயகனுக்கும் அவரது மாமாவுக்கு வரும் பிரச்சனைகளும் அங்கு செக்யூரிட்டி கேங்ஸ்டருக்கும், . நித்திஸ் மெஹ்தா (ருத்ரன்) வுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் அதனால் நடக்கும் விபரீதம்
குறித்து படம் பேசப்பட்டிருக்கிறது
அதே சமயம் தன்னுடைய சொத்து கைவிட்டுப் போகும் பொழுது அதை இழக்க நேரிடபவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்ற உண்மையை உரைத்திருக்கிறது
கொரோனா சமயத்தில்
பாதிக்கப்பட்ட மனிதர்களில் உணர்வை சொல்லி இருக்கிறது
மனிதம் பற்றி பேசி யிருக்கிறது

அதேபோல
தெருவில் ஆதரவற்று கிடக்கும் குழந்தை கிருஷ்ணா, நாயகன் கைக்கு கிடைக்க, அவரது அம்மா (சுமா)
இருவரும் அந்த குழந்தைக்கு சொந்தக்காரர்கள் யார்? என்று தேடும் போது அப்போது டாக்டர் மேகா (ரியா)
அங்கு வந்து குழந்தையை நானே ஆதரவற்ற இல்லத்தில் சேர்க்கிறேன் என்று
குழந்தை எடுத்து
போகிறார் அந்த குழந்தை கிருஷ்ணாவை
அடிக்கடி காண செல்லும் போது
நாயகனுக்கும் நாயகனுக்கு ஏற்படும் காதல் அந்த குழந்தை யார் ?
என்று தெரிய வரும் போது ஏற்படும் அதிர்ச்சி!
இன்னொரு சுவாரசியமான பகுதி
மென்மையான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது புத்தம் புது வானம் பாடல் வந்திருக்க மிகப்பெரிய பலம்

படம் 2019 மற்றும் 2020 காலகட்டத்தில் நடக்கும் கதை அப்பொழுது உலகையே ஆட்டி படைத்த கொரோனா தொற்று காலத்தில் தான் இந்த கதை நடக்கிறது

அந்த கொரோனாவால் நாயகியின் அக்கா தாரா இறந்து போக அவரது கணவர் எஸ். கே (வத்ஷன்)
நாயகன் ஜெய்சனுக்கு கொடுக்கும் தொல்லைகள் இப்படி முக்கோண சிக்கல்களில் கதை சுழல்கிறது

அதற்கெல்லாம் இடைவேளைக்கு பிறகு இறுதிக் கட்சியில் சரியான முடிச்சுகளை அவிழ்த்து விடை சொல்கிறார் இயக்குனர் ரங்கா

இந்திய காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை அதுபோலத்தான் இந்த படத்தின் கதைக்களம் ஒரு ஹோட்டல் பாரில் நடக்கும் சம்பவத்துப்பற்றி
கதை சென்று கொண்டிருந்தாலும் இடையிடையே ஒரு சிறு குழந்தை மூலம் மனிதநேயத்தை காட்டிருப்பது ரசிக்க வைக்கும் காட்சிகள்

அதே சமயம் செக்யூரிட்டி கேங் யார் அந்த மாஸ்டர் மைண்ட் என்று தேடும் போதும் விறுவிறுப்பு அதிகம்
தங்களை ஏமாற்றியவர்களை ஒவ்வொருவராக கண்டுபிடித்து அடித்து உதைத்து கடலுக்குள் தள்ளி சாகடிப்பது இது ஒரு தண்டனையை கொடூர உச்சம்!

இப்படிப்பட்ட கேள்விகளோடு இன்னும் பல சில கேள்விகள் நாயகன் படத்தில் வைத்திருக்கிறார்

நாயகனின் ஓட்டல் கைவிட்டுப் போகும் சூழலில் நாயகன் அதை மீட்டாரா?

குழந்தை கிருஷ்ணா யார் என்று தெரியவில்லை அதை உரியவரிடம் ஒப்படைத்தாரா நாயகன் ?

குழந்தையின் அப்பா அந்த குழந்தையை மீண்டும் வந்து அடைந்தாரா?

செக்யூரிட்டி கேங் தேடும் அந்த மாஸ்டர் மைண்ட் யார்? என்று நித்திஷ் மெஹ்தா கண்டுபிடித்தாரா?

என் காதலுக்கு குறுக்கே வரும் எஸ்.கே என்ற வில்லனுடன் மோதி இறுதியில் ஜெயித்தாரா நாயகன்?

என பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த * தென் சென்னை*

படத்தில் ஆரம்பத்தில் காட்டப்படும் அந்த தேவராஜ்’, அவர்கள் பூர்வீகம் ,அவரது வாரிசுகள் எப்படி சென்னைக்கு வந்தார்கள் என்பதை காட்டும் விதம் மிகவும் ரசிக்க வைத்தது*

: 2019மற்றும் 2020 காலகட்டங்களில் உலகத்தையே ஆட்டி வைத்த கொரோனா தொற்று காலத்தில் இந்த கதை நடப்பதாக காட்டப்படுகிறது

அந்த காட்சிகள் உண்மையில் அந்த காலகட்டத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது நிஜம்

சிவ பத்மயன் பாடல் இசையில், நரேஷ் ஐயர் குரலில் “புது வானம் புது பூமி” இனிமையான மெலடி பாடலாகவும் ,
ரசிக்க வைக்கிறது

தண்ணீருக்கு அடியில் சிலர் உடற்பயிற்சி செய்வது போன்ற சாகச காட்சிகள் வருகின்றன. இது கடற்படை கமாண்டோக்களின் பயிற்சி உத்திகளாகும், நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்று காட்சிகளை தத்ரூபமாக படமாக்கி உள்ளனர், இது ரசிகர்களை கவரும் வகையில் இருக்கிறது
தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”.
இதை
மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ரங்கா

படத்தின் நாயகி ரேகா ,மருத்துவராக வருகிறார்
அக்கா தாரா, கொரோனா காலகட்டத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடும்போது அழுகின்ற அந்த காட்சி நம் கொரோனா தொற்று காலத்தில் பல உயிர்கள் போன போது ஏற்பட்ட அதிர்ச்சி நினைவூட்டுகிறது
அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது

இதில் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தா
நடிப்பு நன்றாக இருக்கிறது

‘பொன்னியின் செல்வன்’ நாடக புகழ் இளங்கோ குமணன் டோனி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரணி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது

படத்தை
சென்னையிலும், பெங்களூரூவிலும் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளரான செந்தில் மோகன்,
அவரின் பங்களிப்பு அருமை

படத்தொகுப்பாளராக இளங்கோவன்
படத்தை கச்சிதமாக எடிட்டிங் செய்துள்ளார்

கதை வசனம் எழுதி படத்தை சிறப்பாக இயக்கி நடித்திருக்கிறார் ரங்கா
அவருக்கு வாழ்த்துக்கள்

படத்தின் இணை தயாரிப்பாளர்: செந்தில் உமா சங்கர் மற்றும் சுரேஷ் பி,

பின்னணி இசை ஜென்மார்ட்டின் இசையமைத்து இருக்கிறார்
சிறப்பாக இருக்கிறது

மற்றும் ஆர்ட் டைரக்டர் ,காஸ்டியூமர், ஒப்பனையாளர், என எல்லோரும்
படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்
இவர்கள் பங்களிப்பில் வெற்றி படைப்பாக வந்திருக்கிறது தென்சென்னை

*மக்கள் தொடர்பாளர்
ஹேமந்த் அவருக்கும் வாழ்த்துக்கள்*

ஒரு வெற்றி படத்தை கொடுத்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்

நிச்சயம் இந்தப் படம் உங்களுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்
புதிய முயற்சி! புதிய சிந்தனை! பாராட்டத்தக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது