முஃபாஸா: தி லயன் கிங் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/ 5

தி லயன் கிங் படத்தில் முஃபாஸா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு படத்தில் இருந்த நேரம் என்பது குறைவுதான். அப்படி இருக்கும்போது, படத்தின் முதல் பாகத்தில் “சிம்பா” கதாபாத்திரத்தின் வளர்ச்சி, அதன் பின்னர் அது எப்படி தனது காட்டினை மீண்டும் அடைகின்றது என்பது குறித்துதான் இருந்தது

குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், `தி லயன் கிங்’. `டிமோன் அண்ட் பும்பா’ கார்ட்டூனில் இடம்பெறும் சிங்கத்தை மையமாக வைத்து உருவான `தி லயன் கிங்’ கதை 1994-ம் ஆண்டு அனிமேஷன் படமாகவும், அதன் ரீமேக் 2019-ம் ஆண்டு தத்ரூபமான வடிவமைப்பில் சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட அனிமேஷன் படமாகவும் (Photo realisitic) வெளியானது. வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிப்பில் வெளியானது

அதன் தொடர்ச்சியாகத் தற்போது ‘முபாசா: தி லயன் கிங்’ (Mufasa: The Lion King) வெளியாக இருக்கிறது.

கதை களம்

காட்டுக்கே ராஜாவான முஃபாசா கடந்து வந்த பாதையையும், அதன் சகோதரனான ஸ்காரையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
அது கடந்து வந்த பாதை ,அது சந்தித்த துரோகம், பலவற்றை இந்த முஃபாசா பேசியிருக்கிறது

: கியாராவிற்கு ரபிகி கதை சொல்வதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. குட்டி பையனாக இருக்கும் முபாசா ஒரு வெள்ளத்தால் தன் அப்பா அம்மாவை
பிரிந்து வேறு இடத்திற்கு செல்கிறான்.
ஆரம்பக் காட்சியிலேயே தாயையும் தந்தையும் பிரியும் ,முபாஸா செண்டிமெண்டாக நம் மனதில் இடம் பிடிக்கிறார்

அங்கு முபாசாவை அந்த ஊர் சிங்கராஜா ஏற்க மறுத்தாலும், அவருடைய மனைவி முபாசாவை தன் சொந்த மகன் போல் வளர்க்கிறார்.
முபா சாவுக்கு தாக்கா அன்பு காட்டி ஆதரவு காட்டுகிறார் ஆனால் கிங் கான ராஜா முபாஷா பெண் சிங்கங்களுடன் தான் விளையாட வேண்டும் என்று கட்டளையிடுகிறார் இதனால் முப்பாசா பெண் சிங்கங்களுடன் சேர்ந்து வேட்டைக்கு சென்று பெரிய வீரனாக மாறுகிறார் ஆண் சிங்கங்கள் தூங்க வேண்டும் பெண் சிங்கங்கள் வேட்டையாட வேண்டும் என்பதுதான் அங்கு நீதி

அந்த சமயத்தில் வெள்ளை சிங்கங்களின் தலைவன் கியார்க் மூலம் பெரும் ஆபாத்து வர, முபாசாவுடன் தன் சொந்த மகன் டாக்காவை ராஜா அனுப்பி வைக்கின்றார்.
முபாஸ்ஸாவும் டாக்காவும்
போகும் வழியில் சில நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் மிலல் என்ற இடத்தை நோக்கி செல்ல, பின்னே வெள்ளை சிங்கங்களும் துரத்தி வர
முபாஷாவும் டாக்காவும் வெள்ளை சிங்கங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் முபாஸ்ஸாவுக்கும் பெண் சிங்குக்கும் ஏற்பட்ட காதல், இதனால் டாக்காவின் மனதில் ஏற்பட்ட துரோகம், காதல் வலி ,இப்படி மனிதர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களாக சிங்கங்களின் வாழ்விலும் நடப்பதாக காட்டப்பட்டிருப்பது மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

சிம்பாவின் வாழ்க்கையை பார்த்த நாம் அவனின் அப்பா முபாசாவின் வரலாறையும் இதில் தெரிந்துக்கொள்வது
சுவாராஸ்யம்

முபாசா எப்படி தன் மிலல் இடத்தை அடைந்து ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கினான் என்பதை அத்தனை தத்ரூபமாக காட்டியுள்ளனர்.
கிளைமாக்ஸ் கட்சியில் வெள்ளை சிங்கமும், முபா சாபவும், மோதும் காட்சி மிரட்டலாக படமாக்கப்பட்டிருக்கிறது

படம் முழுக்க மிரட்டி இருக்கிறார்கள்
VFX தொழில்நுட்ப கலைஞர்கள் அவர்களது சிறந்த வேலைப்பாடுகளுக்கு எழுந்து நின்று சல்யூட் அடிக்கலாம், அத்தனை அழகு
நீர் அருவி, பெருக்கெடுத்து ஓடி வருவது பனிப்புயலில் நடப்பது, மரங்களின் அடர்ந்த கிளைகள், ஒட்டகச்சிவிங்கி, காட்டு யானைகள், முதலை ,
இப்படி ஒவ்வொரு விலங்குகளையும் அற்புதமாக காட்டி ரசிக்க வைத்திருக்கிறார்கள்

ஒவ்வொரு Frame-ம்.
நம் கண்களுக்குள் அப்படியே நிற்கிறது
படம் பார்ப்பவர்கள் அந்த விலங்குகளுடன் ஒன்றி போய் விடுவது படத்தை எடுத்தவர்கள் சாமர்த்தியமான வியூகம்

ஆரம்பத்தில் யானை மோதி அணை உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லும் முபாசா கடைசி வரை தண்ணீருக்கு பயந்து கிளைமேக்ஸில் அதே தண்ணீரில் மீண்டு வருவது என ஒரு மாஸ் படம் போல் எடுத்துள்ளனர்.

டாக்கா காதல்
வலியால் ,பாடி திரிவது ,வெள்ளை சிங்கத்திற்கு துணையாக நின்று முபாஷாவுக்கு துரோகம் செய்வது
மீண்டும் மனம் திரும்புவது,
கிளைமாக்ஸ் காட்சியில்
தன் அம்மாவுடன் முபாஷா இணைவது
சுவாரசியம்

வெல்லவே முடியாத
வெள்ளை சிங்கத்தை எப்படி முபாஷா வீழ்த்தப் போகிறார் என்பது திரைக்கதையின் மாயாஜாலம்

தமிழ் ரசிகர்களுக்கு அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ் குரல்கள் மேலும் காட்சிகளை ஈர்க்க வைக்கிறது.
அதிலும் அர்ஜுன் தாஸ், நாசர், அசோக் செல்வன், குரல்கள் அற்புதமாக பொருந்தி இருக்கிறது.

அதிலும் கியார்க் வில்லனாக வரும் நாசர் குரல் அத்தனை மிரட்டல்.

இரண்டு நண்பர்கள் அண்ணன் தம்பி போல் வளர, ஒரு பெண் சிங்கம் மீது காதல் டாக்காவுக்கு வர, அந்த பெண் சிங்கம் முபாசாவை விரும்ப, டாக்கா ஸ்கார்க் ஆக எப்படி மாறுகிறான் என்பதை காட்டியுள்ளனர்,
அதுவும் சிறப்பாக வந்திருக்கிறது

படத்தின் பின்னணி இசை ,மற்றும் பாடல்கள் முழுப்படத்தையும் தாங்கி பிடிக்கிறது.
பாடல்களும் ரசிக்க வைக்கிறது

யானை கூட்டத்தில் வெள்ளை சிங்கங்கை அலைய விட்டு தப்பிக்கும் இடம்.

எல்லோரும் சமம் என்ற சமூகநீத வசனங்கள் விலங்குகள் படத்தில் வைத்தது பாராட்டுக்குரியது

தமிழ் பதிப்பில் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.
வசனம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது மதன் கார்த்திக்கு வாழ்த்துக்கள்

தெலுங்கில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு முபாசாவுக்கு குரல் கொடுத்துள்ளார்.

இந்தி வெர்ஷனுக்காக ஷாருக்கான், அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியிருக்கின்றனர்.

: மொத்தத்தில், முஃபாசா: லயன் கிங் அனிமேஷன் ஒரு காட்சி விருந்தாகும், அதிகப்படியான பார்வையாளர்களை தி லயன் கிங்
கவர்ந்தது
போலவே இந்த திரைப்படம் அதன் தகுதிகளைக் கொண்டிருக்கும் அதன் முதல் படம் போல் மாயாஜாலத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது

தமிழ் முபாஷாவின் அர்ஜுன் தாஸ், நாசர், அசோக் செல்வன், வாய்ஸே பலம்

இப்படி ஒரு அற்புதமான படத்தை உருவாக்கி தந்த டிஸ்னிக்கு வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர் சுரேஷந்திரா அவர்களுக்கும் அப்துல் நாசர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்