வீடு கட்ட வேண்டும் என்று போராடும் சீனு பூரணி,
பி ஆர் என்னும் விசா வாங்குவதற்காக போராடும் புலி யேந்திரன், அவனது காதலை தேவகி,
தன் மகன் மார்ட்டின் உடல் நலம் பெற வேண்டும் என்று போராடும் ஸ்டீபன்
ஆஸ்திரேலியாவில் கூட சாதி மதம் பார்க்கும் குள்ளநரியாக சுவாமி என்ற கதாபாத்திரம்
வெளிநாடுகளிலும் தமிழர்களை ஏமாற்றும் தில்லு முல்லு நிறைந்த ராகவன் என்ற கதாபாத்திரம்
பூரணி வேலை செய்யும் இடத்தில் அவருக்கு உதவி செய்யும் ஐரின் என்ற கதாபாத்திரம்
இவர்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு தரமான படைப்புதான் காழ்”
இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க
முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக காழ் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் பலரும் நினைப்பது போல வெளிநாட்டு வாழ்க்கை என்பது கார், பெரிய வீடு, வசதியான வாழ்க்கை என்பது போல் இல்லாமல், தினமும் பல சவால்களை எதிர்கொள்ளும் ஒரு போராட்ட களமாகவே உள்ளது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திரைப்படத்தை மோகன்ராஜ் என்பவர் எழுதி இயக்கியதுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். மேலும் காழ் திரைப்படத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஆஸ்திரேலியாவின் தமிழ் நடிகர்களான சித்தார்த்த அன்பரசு, மிமி லியோனார்டு, நித்யா பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்
[ ஆஸ்திரேலியாவில் சொந்த வீடு கட்ட துடிக்கும் சீனு, பேங்க் லோனுக்காக அலைந்து திரிந்து பேங்க் லோன் கிடைக்காமல் மனம் வேதனைப்படுகிறார் இலங்கையில் இருந்து வந்த ஈழத் தமிழச்சி பூரணி ,இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள் அடுத்து தேவகி, புலியேந்திரன், தேவகி சென்னையைச் சேர்ந்தவர் புலியேந்திரன் அவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக
புலி யேந்திரன் போராடி வருகிறார் 12000 டாலர் இருந்தால் பி ஆர் என்னும் விசா வாங்கி விடலாம் ஆனால் அவரிடம் அவ்வளவு பணம் இல்லை காதலி கொஞ்சம் கொடுத்து உதவுகிறார் ஒரே இடத்தில் வேலை செய்யும் புலியின் நண்பன் சுவாமி நரி குணம் கொண்டவன் ஜாதி வித்தியாசம் பார்ப்பவன் ஆழ்வார்பேட்டையில் பிறந்து ஆஸ்திரேலியா சென்றாலும் தன் ஜாதி பெருமையை விடாத அந்த குள்ளநரி தேவகியும் புலியையும் பிரிக்க முயற்சி செய்கிறார் இதனால் புலி மீது திருட்டு குற்றம் சுமத்தி கடையை விட்டு வெளியேற்றுகிறான்
அடுத்து ஸ்டீபன் தன் மகன் மார்ட்டின் உடல் நல பெற வேண்டி சிகிச்சைக்காக போராடி வருகிறார்
இதை அடுத்து பூரணிக்கு உதவி செய்யும் ஐரின் சீனு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தையும் பேங்க் லோனையும் சுருட்டிக்கொண்டு ஓடிப் போகும் ராகவன் இப்படி எல்லா கதாபாத்திரங்களையும் ஒன்றிணைக்க வைத்து ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்
[
இயக்குனர் மோகன்ராஜ் இயக்கி தயாரித்து உள்ள இந்த படம் ஒரு தரமான படம்
வெளிநாட்டில் வாழ்பவர்கள் வசதியாக இருக்கிறார்கள் என்ற மாயத் தோற்றத்தை
உடைத்து எறிந்து இருக்கிறார் மெல்போர்னில்
நடக்கும் இந்த கதை ஜாதியை பத்தி பேசுகிறது
சமூக அவலங்களை பற்றி பேசுகிறது தனிமனித ஒழுக்கத்தை பேசுகிறது
ஈழத் தமிழர்களின் வலியைப் பற்றி பேசுகிறது
சீனு வீடு கட்ட முடியாமல் ராகவன் என்ற குள்ளநரியால் ஏமாற்றப்பட்டு மனம் உடைந்து கிடக்கும் போது பூரணி நாங்கள் இதையெல்லாம் கடந்து எத்தனையோ வலிகளை பார்த்து விட்டோம் இதையும் கடந்து விடலாம் என்று ஆறுதல் சொல்லும் போது ஈழத் தமிழர்கள் பட்ட வேதனையை சொல்கிறது இந்த படம்
அதேசமயம் புலி யேந்திரன், சுவாமி என்ற குள்ளநரியால் ஏமாற்றப்பட்டு துரோகம் செய்யப்பட்டு திருட்டு பட்டம் சுமத்தி வெளியேற்றப்பட்ட பிறகு அந்த சுவாமிக்கு நல்ல பாடம் கற்பித்து கொடுக்க புலி எடுக்கும் முடிவு பாராட்டத்தக்கதாக இருக்கிறது
அவர் எப்படி ஒரு கொலையை செய்து விட்டு புத்திசாலித்தனமாக அதிலிருந்து தப்பிக்கிறார் என்பதற்கு அவர் அந்த போலீஸ் டிபார்ட்மெண்டில் பாரேன்சி வேலை க்கு படித்திருக்கிறார் என்று காட்டுவது 100 சதவீதம் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது
ஆஸ்திரேலியாவின் தமிழ் நடிகர்களான சித்தார்த்த அன்பரசு, மிமி லியோனார்டு, நித்யா பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடிப்பு இயல்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் .
யுகேந்திரன் வாசுதேவன் நடிப்பு நன்றாக இருக்கிறது பக்குவப்பட்ட நடிப்பாக அருமையாக நடித்திருக்கிறார் சோகக் காட்சிகளையும் சந்தோஷமான காட்சியிலும் ஒரு நல்ல நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
[
இசையமைப்பாளர் புதிராய் ,பாடலும் எனக்குள் மழையாய், பாடலும் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை நன்றாக இருக்கிறது
]
ஒளிப்பதிவாளரின் கேமரா கோணம் துல்லியமாக ஆஸ்திரேலியாவின் அழகை அள்ளி வந்துள்ளது சில காட்சிகளில் இருள்மயமாக இருக்கிறது கதைக்காக அப்படி வைத்திருப்பாரோ
படத்தொகுப்பாளர் கட்சிதமாக படத்தை செதுக்கியிருக்கிறார் கதையைத் தவிர வேறு எங்குமே கவனம் போகாத அளவுக்கு படத்தொகுப்பு உள்ளது
: படத்தில் இடம்பெற்ற வசனங்கள் நன்றாக இருக்கிறது ஈழ தமிழச்சியான
பூரணி பேசும் போதும் ஆஸ்திரேலியா சேர்ந்த நண்பர்கள் பேசும் போதும் டயலாக் நன்றாக எழுதப்பட்டுள்ளது
மற்றும் இப்படத்தில் நடித்த நடிகைகள், அழகான தேர்வாக இருக்கிறது
நடிகர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்
இயக்குனர் ஒரு வெற்றி படத்தை தரமான பட்ஜெட்டில் தரமான படமாக கொடுத்திருக்கிறார் காழ்” அனைவரும் காண வேண்டிய நல்ல படைப்பு
