அஞ்சாமை திரை விமர்சனம் (2024)

எமோஷனல் டிராமா - ரேட்டிங் 3/ 5

திரையுலகின் மிகச்சிறந்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விதார்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அஞ்சாமை. மருத்துவ கல்வியில் சேர்வதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு அமல்படுத்தியதால் தமிழ் நாட்டில் மட்டும் போராடும் மாணவர்கள் பற்றி பேசும் படம் இது

அஞ்சாமை: படம் மருத்துவக்கல்வியையும், நீட் தேர்வையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது ரசிகர்களுக்கு உணர்த்துகிறது. அதை எவ்வாறு படமாக காட்சிப்படுத்தியுள்ளனர் என்பதை நாம் பார்க்கலாம். சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வு ஆதரவாக உத்தரவு போட்ட பிறகும் இப்படி எல்லாம் ஒரு படம் எடுப்பது கோமாளித்தனமாக இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு படம் எடுக்க பட்டுள்ளது

திண்டுக்கல் அருகே உள்ள சாதாரண கிராமத்தில் விவசாயியாக வாழ்பவர் சர்க்கார். பள்ளி படிக்கும்போது மருத்துவராக ஆசைப்படும் அவரது மகன். மத்திய அரசு அப்போது அமல்படுத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு. சாதாரண விவசாயியான சர்க்கார் தனது மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்ற எவ்வாறு எல்லாம் போராடுகிறார்? அவரது மகனை ஒரு தனியார் பள்ளி தங்கள் பள்ளியில் சேர்க்க ஒரு காசோலையும் கொடுத்து அவரை அழைக்கிறார்கள் வீம்புக்காக கதாநாயகன் அழைக்க வந்தவர்களை அடித்து அவமானப்படுத்துகிறார் அந்த இடத்திலேயே கதை படுத்து விட்டது அவர்கள் என்ன சொன்னார்கள் நல்ல மார்க் எடுத்திருக்கிறாய் எங்கள் தனியார் பள்ளியில் வந்து படித்து டாக்டராக மாறு என்றுதானே சொன்னார்கள் இதில் என்ன உங்களுக்கு வீம்பு வந்தது மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு அவர்களை எந்த சிரமத்திற்கு ஆளாக்குகிறது? அதனால் அவர்கள் படும் இன்னல்கள் என்ன? அந்த இன்னல்களை எதிர்த்து அவர்கள் எவ்வாறு போராடுகின்றனர்? அவர்களுக்கு சமூக பொறுப்புள்ள ரகுமான் எவ்வாறு உதவுகிறார்? என்பதே படத்தின் கதை. விதார்த் வீம்புக்காக மகனை தனியார் பள்ளியில் சேர்க்காத போதே இந்த படம் பப்படம் ஆகிவிட்டது அதற்குப் பிறகு அவர் என்னதான் தன் பூர்வீக சொத்தை வித்து தனியார் கோச்சிங் நடத்தும் சென்று பணத்தைக் கட்டி கஷ்டப்பட்டு என்ன மாயாஜாலம் பண்ணினாலும் படத்தின் திரைக்கதை நிமிரவே இல்லை

மிரட்டிய விதார்த்:

ஒரு சாதாரண கிராமத்து தந்தையாக விதார்த் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பிள்ளைகளின் வளர, வளர அவர்களின் ஆசைகளுக்காக தங்களை ஓடாய் தேய்த்து வருத்தி உழைக்கும் ஒவ்வொரு தந்தையையும் அப்படியே கண் முன் நிறுத்துகிறார் விதார்த். அவருடைய கதாபாத்திரம் மிகவும் கேலிக்குரியது கோமாளித்தனமானது தன் மகன் டாக்டராக வேண்டுமென்று நினைக்கும் அவருக்கு அந்த அளவுக்கு சக்தி இருக்கிறதா சொத்து இருக்கிறதா என்ன இருக்கிறது என்று ஆசைப்படுகிறாய் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு விட்டு மற்றவர்களை குறை சொல்லும் கதாபாத்திரம்அவரது நடிப்பிற்கு சற்றும் குறைவில்லாத நடிப்பை தந்திருக்கிறார் வாணி போஜன். மனைவியாக, தாயாக கிராமத்து பெண்ணாக மிரட்டலான நடிப்பை தந்துள்ளார் வாணி போஜன். படம் முழுக்க அழுவதை தவிர வாணி போஜன் ஒன்றும் செய்ய வில்லை என்ன நடக்கிறது தன் கணவன் என்ன சம்பாதிக்கிறான் தன் மகன் எப்படி டாக்டருக்கு படிக்க முடியும் என்று ஒரு குடும்பத் தலைவி கணிக்க முடியாமல் போனால் அந்த குடும்பம் என்னவாகும் என்பதற்கு வாணி போஜன் கதாபாத்திரம் ஒரு உதாரணம்
மகனாக நடித்துள்ள கிரித்திக் மோகன் நடிப்பும் சூப்பர் தன்னால் நன்றாக படிக்க முடியும் என்று தெரிந்த பிறகும் டாக்டருக்கு படிப்பதற்கு நீட் தேர்வு மற்றும் பணம் தேவை என்று தெரிந்து கொள்ளவும் தன் அப்பாவும் அம்மாவும் கஷ்டப்படுத்தும் இது போன்ற பிள்ளைகள் இருக்கும் வரை இப்படிப்பட்ட அவலங்கள் நடக்கத்தான் செய்யும்

நம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக பட்ட இன்னல்களையும், இந்த நீட் தேர்வை வைத்து கோச்சிங் சென்டர் மையங்கள் எப்படி பணம் சம்பாதித்தனர் என்பதை அப்படியே பட்டவர்த்தமாக, அதேசமயம் மிகவும் யதார்த்தமாக தோலுரித்து காட்டும் விதமாக முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் செதுக்கியுள்ளார். அது ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்கள் வட மாநிலங்களோ ஆந்திராவிலோ கர்நாடகாவில் கேரளாவில் இது ஏன் நடக்கவில்லை தவறு யார் மீது அரசாங்கத்தின் மீதுதான் அங்கு எல்லாம் நீட் தேர்வில் கவர்மெண்ட் மாணவர்களுக்கு பிட் பேப்பர் கொடுத்து பாஸ் செய்கிறார்கள் தமிழக அரசிடம் தான் வீம்பு பிடித்துக் கொண்டு மாணவர்களை வஞ்சிக்கிறது

முதல் பாதி அபத்தம்

படத்தின் மிகப்பெரிய பலமே முதல் பாதியில் தனது மகனுக்காக விதார்த் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகளின் காலில் விழும் காட்சிதான். அந்த காட்சி ரசிகர்கள் ஒவ்வொருவரின் கண்களையும் குளம்போல் ஆக்குவதுடன் நம் நெஞ்சை உலுக்குகிறது. அந்த காட்சி இப்படியெல்லாம் தமிழனை அவமானப்படுத்த முடியுமா இதுதான் காட்டுகிறதுஅந்த காட்சியை பார்க்கும்போது இவ்வாறுதானே நமது மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் நீட் தேர்வின் போது சிரமத்தை அனுபவித்திருப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இனிமேலாவது தன் குழந்தைகளுக்கு என்ன வருமோ அந்தப் பாடத்தை மட்டும் கொடுத்து படிக்க செய்யுங்கள் பெற்றோர்களே

படத்தின் இடைவேளை காட்சி எதிர்பாராதது. ஆனால், உண்மையில் நடந்த சம்பவம். விதார்த் தன் மகனுக்காக இறந்து போகிறார் என்று காட்டுவதெல்லாம் அழுத்தம் மிகுந்த காட்சிகள்

படத்தின் இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் ரகுமான் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும், இந்த மக்கள் நமது அரசாங்கத்தின் முன்வைக்கும் நியாயமான கேள்விகளாகவே உள்ளது. அதற்கு அதிகாரிகள் சொல்லும் பதில் யதார்த்த்தில் அந்த இன்னல்களை அனுபவித்தவர்களுக்கு வலியை உணர்த்தும். ரகுமான் போன்ற கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஹீரோவாக காட்டப்படும் ரகுமான் எந்த விதத்திலும் இந்த படத்திற்கு குறை வைக்கவில்லை

பலவீனம்:

படத்தின் பெரும் பலமாக உணர்வுப்பூர்வமாக முதல் பாதியை கொண்டு சென்ற இயக்குனர் இரண்டாம் பாதியை நீதிமன்ற காட்சிக்குள்ளே சுருக்கிவிட்டது படத்திற்கு பலவீனமாக அமைகிறது. ஆனாலும், அந்த காட்சிகளில் ரகுமான் கேட்கும் கேள்விகள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும் வண்ணமாகவே உள்ளது. காவல்துறை அதிகாரியாக இருக்கும் ரகுமான், பள்ளி சிறுவனுக்காக தனது பதவியை உதறிவிட்டு வருவது யதார்த்த மீறலாக இருக்கிறது. ஆனாலும், ஒரு சமூக பொறுப்புள்ள நபராக இதை பார்க்கும்போது அது படத்திற்கு பெரிய மைனசாக தென்படவில்லை.

படத்தின் இறுதிக்காட்சி இன்றும் தமிழகம் நீட் தேர்வுடன் எவ்வாறு போராடுகிறது? என்பதை அப்படியே காட்டியுள்ளது. சமூக பொறுப்புள்ள கதைகளை படமாக்கும் இயக்குனர்களை எப்போதும் பாராட்ட வேண்டும். அந்த வகையில் என்றுமே மக்கள் மறக்க முடியாத சமூக அவலத்தை படமாக இயக்கிய இயக்குனர் சுப்புராமனை மனதார பாராட்ட வேண்டும்.

கண் முன் வரும் யதார்த்தம்:

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு தந்தையாக விதார்த் நடித்த நடிப்பானது 90களில் பிறந்து வளர்ந்த கிராமத்து மாணவர்களின் தந்தையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. ஏனென்றால், 90-ஸில் பிறந்து வளர்ந்தவர்களின் தந்தைகளில் பெரும்பாலோனார் கூலித் தொழிலாளிகளாகவும், விவசாயிகளாகவும் இருந்தவர்கள். தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க அவர்கள் பட்ட இன்னல்களும், மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புக்கு நிலங்களையும், மாடுகளையும் விற்றதையும் கண் முன்னே காட்டிய இயக்குனருக்கும், அதை உயிரோட்டமாக்கிய விதார்த்திற்கும் மீண்டும் ஒரு முறை பாராட்டலாம்.

சமூக பொறுப்புள்ள அஞ்சாமை படம் நீட் தேர்வுக்கும், அதன் அவலங்களுக்கும் ஒரு சாட்டையடி. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் – திருச்சித்திரம் தயாரித்துள்ளனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமசுதர்சன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படி எல்லாம் ஒரு கல்வியறிவு பற்றிய வலியுறுத்தும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருந்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும் அந்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நாங்கள் தாக்கல் செய்யப் போகிறோம் என்று கடைசியில் கிளைமாக்ஸில் ரகுமானும் அந்த மாணவனும் புறப்படும் போது சிரிப்புதான் வருது

மொத்தத்தில் இந்த அஞ்சாமை நீட் தேர்வாள் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு சமர்ப்பணமாக அமையும் ஏழை மாணவர்களின் கனவு மருத்துவ கல்வி கனவு என் நினைவாகவே போகும் என்ற பயம் இந்த படம் பார்த்து அவர்களுக்கு ஏற்படுவது நிச்சயம் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக நீட் தேர்வை ஒழித்து விடுவேன் என்று முழக்கம் செய்யாமல் மாணவர்கள் மருத்துவத்தில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் அஞ்சாமை போன்ற படங்கள் வெற்றியை பெறும்